RightClick

திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரரின் பெருமைகள்!!!

நவக்கிரக நாயகர்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் அருளால் செயல்பட்டு வருபவர் சூரியன் என்ற ரவி! இவரது வெப்பம் தாங்கமுடியாமல் இவரது மனைவி உஷத்தேவி தவித்தபோது,சந்தர்ப்ப சூழ்நிலையால் சாயாதேவியைத் திருமணம் செய்யும் சூழ்நிலை உருவானது;சாயாதேவியாலும் ரவியின் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை;

எனவே,சூரியனாகிய ரவி தனது மனைவியர் உஷத்,சாயாதேவியுடன் சேர்ந்து அக்னி பகவானிடம் ஆலோசனைக் கேட்டார்கள்;அதற்கு அவர், “பூலோகத்தில் திருக்கொள்ளிக்காடு என்ற அக்னிபுரிக்குச் சென்று,அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத ஸ்ரீகொள்ளிக்காடர் என்ற அக்னீஸ்வரரை வழிபட்டால் இல்வாழ்க்கை சுகமளிக்கும்”என்று உபதேசித்தார்.

உடனே,மூவரும் திருக்கொள்ளிக்காடு வருகை தந்து,தொடர்ந்து சிவவழிபாடு செய்தனர்;இறைவன் அருகில்    அமைந்திருக்கும் சனி தீர்த்தத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி,சூரியனை நீராட வைத்தனர்;இதனால் ரவியின் வெப்பம் தணிந்தது;ரவியின் இல்லறம் சிறப்பாக இருக்கத்துவங்கியது;

உஷத் மூலமாக எமதர்மராஜா பிறந்தார்;சாயாதேவியின் மூலமாக சனீஸ்வரர் பிறந்தார்;

எமதர்மராஜாவும்,சனீஸ்வரனும் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்து சிவனருள் பெற்றனர்;இதன்படி,எமதர்ம ராஜாவுக்கு மனிதர்களுக்கு மரணம் தரும் பொறுப்பு கிட்டியது;சனீஸ்வரருக்கு அந்த மரண கர்த்தாவாகும் பொறுப்பும்,கர்மக்காரகனாக வான மண்டலத்தில் நவக்கிரகங்களில் ஒருவராகவும் செயல்படும் வரம் கிட்டியது;நம் ஒவ்வொருவரின் ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பவர் சனீஸ்வரர் ஆவார்.

யார் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்கிறார்களோ,அவர்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன் என்று பைரவப்பெருமானிடன் சனீஸ்வரர் சத்தியம் செய்தப்பின்னரே,நவக்கிரகமாக செயல்பட அனுமதித்தார் ஸ்ரீகாலபைரவப்பெருமான்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்,(முப்பத்துமுக்கோடி தேவர்கள்,மனிதர்கள்,ரிஷிகள்,துறவிகள்) உரிய தண்டனையை அவமானமாக,நோயாக,கடன்களாக,எதிரிகளாக,வழக்குகளாக வழங்குவதில் சனீஸ்வரர் பாரபட்சம் பார்ப்பதேயில்லை;நாம் இப்பிறவியில் செய்யும் தப்புக்களின் விளைவுகளை ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனியில் அனுபவிக்கிறோம்;இதனால்,ஈரேழு பதினான்கு உலகங்களிலும் சனீஸ்வரரின் பெயர் புகழ் பெற்றதோடு,அவரை நினைத்து அனைவருமே நடுங்கத் துவங்கினர்;சனீஸ்வரரை பாவக் கிரகம் என்றும்,தோஷக் கிரகம் என்றும் அனைவரும் தூற்றத் துவங்கினர்;

இதனால்,பைரவப் பெருமானிடம் சனீஸ்வரர் தனது நிலையை நேரில் சென்று முறையிட்டார்;தன்னை அனைத்து உலகத்தாரும் தூற்றுகிறார்கள்;தன்னை நினைத்து அனைவருமே பயப்படுகிறார்கள் எனவே எனக்கு நவக்கிரகப் பதவியும் வேண்டாம்;நீதிமான் பதவியும் வேண்டாம் என்று புலம்பினார்;

அவரிடம் பைரவப் பெருமான்,சனீஸ்வரரின் அவதாரநோக்கத்தை எடுத்துரைத்து,அந்தப்பதவிக்கு பொருத்தமான ஆள் நீ மட்டுமே என்று ஆறுதல் கூறினார்;அவரது பொறுப்புணர்ச்சியைப் பாராட்டினார்;தொடர்ந்து அவரை நவக்கிரகமாகச் செயல்படுத்திட ஊக்கப்படுத்தினார்;

உயிர்களைத் தண்டிக்க வேண்டியிருப்பதை பொறுக்காத சனீஸ்வரர்,வசிஷ்ட மகரிஷியை சந்தித்தார்;அவரின் ஆலோசனைப்படி,திருக்கொள்ளிக்காடு வந்தடைந்தார்;அங்கே இருக்கும் அக்னீஸ்வரரை நினைத்து கடும் தவம் புரிந்தார்;மனிதர்கள் தொடர்ந்து சிவவழிபாடு/சிவமந்திரஜபம் செய்து வந்தால்,குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்குரிய வரத்தை சிவகணங்கள் சூட்சுமமாக வந்து தரும்;நவக்கிரகத்தில் முக்கியமானவரான சனிபகவான்,சிவ வழிபாடு செய்தமையால் பைரவப் பெருமானே நேரடியாக வந்து அவரை பொங்குசனியாக  மாற்றி அருள் புரிந்தார்;

இங்கே ஸ்ரீகாலபைரவப் பெருமானின் நேராக பொங்கு சனீஸ்வரர் அருள்புரிந்து வருகிறார்;ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருளாசியால் சனியானவர்,நன்மைகளை மட்டுமே தரும் பொங்கு சனீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார்;ஒவ்வொரு நொடியும் இங்கே இருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருளாற்றல் பொங்குசனீஸ்வரருக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.சனிக்கிழமை சனி ஓரையில் அல்லது ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு பொங்கு சனீஸ்வரரின் அருள் முழுமையாகக் கிடைத்து வருகிறது.

சனீஸ்வரரின் கையில் இருக்கும் ஆயுதங்களை நீக்கிவிட்டு,ஏர்க்கலப்பையையும்,காகக்கொடியையும்,அருகில் காகத்தை வாகனமாகவும் ஆக்கி அருள்புரிந்திருக்கிறார்;கருநீல ஆடை அணிந்து,சனியால் ஏற்படும் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி தோஷங்களை நிவர்த்தி செய்யும் பொங்குசனியாக,சுபச்சனியாக அருள்பாலிக்கத் துவங்கியிருக்கிறார்.

சனிக்கிழமைகளில் இவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன;இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் நிரப்பி அதை தானம் செய்யலாம்;கருப்பு ஆடையை பொங்கு சனீஸ்வரருக்கு அணிவிக்கலாம்;நல்லெண்ணெய் தீபம் ஏற்றி,எள் சாதம் தானம் செய்யலாம்;கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்;

சனீஸ்வரரின் அம்சமான உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்யலாம்;எள் உருண்டை தானம் செய்யலாம்;கருப்புத் துணிகளை தானம் செய்யலாம்;

சனீஸ்வரரின் சுபாவங்களான விரக்தி,தனிமை,தனது இப்போதைய நிலையை நினைத்து தன்னிரக்கப்படுதல்,எதிலும் சுறுசுறுப்பு இல்லாத சூழ்நிலை போன்றவைகள் ஏழரைச்சனி நடைபெறுபவர்களுக்கு இருக்கும்;

16.12.2014 வரை கன்னி ராசிக்கு வாக்குச் சனியும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும்,விருச்சிகராசிக்கு விரையச் சனியும்,மீன ராசிக்கு அஷ்டமச்சனியும்,கடகராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியும்,மேஷ ராசிக்கு கண்டச்சனியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

17.12.2014 முதல் 11.2.2018 வரை

விருச்சிகராசிக்கு ஜன்மச்சனியும்

துலாம் ராசிக்கு வாக்குச்சனியும்

தனுசுராசிக்கு விரையச்சனியும்

மேஷ ராசிக்கு அஷ்டமச்சனியும்

ரிஷபராசிக்கு கண்டச்சனியும்

சிம்மராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியும் நடைபெற இருக்கிறது.இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒரே ஒருமுறை ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரை தரிசித்து வந்தால்,சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவர்;

திருக்கொள்ளிக்காடு சென்றடைந்து,உடல் மற்றும் உள்ளத்தூய்மையோடு, சுத்தமான ஆடை அணிந்து கொண்டு,கோபுர தரிசனம் செய்து,ஓம்சிவசக்திஓம் தொடர்ந்து ஜபித்தவாறு,சனிதீர்த்தத்தில் நீராட வேண்டும்;முடியாதவர்கள் சனிதீர்த்த நீரை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும்;பிறகு விநாயகரை வழிபட்டுவிட்டு,பொங்கு சனீஸ்வரை வழிபட்டால் அனைத்து தடைகளும் நீங்கிவிடும்;

உங்கள் ஊரில் இருந்து நேராக திருக்கொள்ளிக்காடு வந்து,பொங்குசனீஸ்வரை வழிபட்டுவிட்டு,வேறு எந்தக்  கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்;அப்படிச் செய்தால் தான் பலன் உண்டாகும்.

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உத்தரங்குடி என்ற இடத்தில் இறங்க வேண்டும்;அங்கிருந்து ஏழு கி.மீ.தொலைவில் திருக்கொள்ளிக்காடு அமைந்திருக்கிறது.

 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

 

 

நமது தலையெழுத்தையே மாற்றும் ஆன்மீக முயற்சிகள்!!!

விதியை மதியால் வெல்லலாம் என்பது ஜோதிடப் பழமொழி! மனிதன் நாகரீகமடையத் துவங்கி,சுமாராக 5,00,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;ஒவ்வொரு தலைமுறையிலும்(ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகள் என்று வரையறுத்துக் கொண்டால்) மன வைராக்கியம் நிறைந்த மக்கள் பெரும்பாலானவர்கள் அவரவரின் தலைவிதியையே மாற்றியிருக்கின்றனர்;அதே போல,நம் ஒவ்வொருவராலும் நமது தலையெழுத்தை மாற்றியமைக்க முடியும்;

அதற்குத் தேவை:

1.நம்மால் நமது தலையெழுத்தை மாற்றிவிட முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு

2.தகுந்த ஆன்மீக குருவைக் கண்டறிந்து,அவரது வழிகாட்டுதலை முறையாகவும்,முழுமையாகவும் பின்பற்றிக் கொண்டே வருவது;

3.நாள் ஒன்று;கல் ஒன்று என்ற பழமொழிக்கு ஏற்ப தினசரி ஒரு மணிநேரம் வரை உரிய பைரவ வழிபாடு அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திர ஜபம் செய்து வருதல்

4.அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரையிலாவது விடாப்பிடியாக குருவின் வழிகாட்டுதலை தொடர்ந்து பின்பற்றி வருவது;

இந்த நான்கு விதிமுறைகளையும் பின்பற்றுபவர்களே நமது சகஸ்ர வடுகர் ஐயா அவர்களை சந்திக்கிறார்கள்;சகஸ்ர வடுகர் அவர்களின் ஆலோசனையை அப்படியே பின்பற்றி தனது சோகங்களை,வேதனைகளை,சொத்துப் பிரச்னைகளை,துயரங்களைத் தீர்த்துள்ளனர்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் எவரும் முன் வந்து நமது வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்கள் என்று நம்புவது தவறு;நாம் தான் கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இருக்க வேண்டும்;

ஏன் தெரியுமா?

1      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சூரியன் ஒவ்வொருநாளும் இயங்கி வருகிறது;

2      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை சந்திரனின் இயக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது;

3      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை குருவும்,

4      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை ராகுவும்

5      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை புதனும்

6      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை சுக்கிரனும்

7      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை கேதுவும்

8      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை சனியும்

9      ஆம் எண்ணின் ஆதிக்கத்தை செவ்வாயும் கிழமைகள் மூலமாகவும்,ஓரைகள் மூலமாகவும்,இந்த தேதியில் பிறக்கும் மனிதர்கள் மூலமாகவும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன;

அப்படி வெளிப்படுத்தும்போது,4 ஆம் எண் ஆதிக்கத்துக்குரிய ராகுவும், 7 ஆம் எண் ஆதிக்கத்துக்குரிய கேதுவும் வான்வெளியில் எதிர் கடிகாரச்சுற்றுப்படி சுற்றி வருகின்றன;ஒவ்வொரு நாளும் வரும் ராகு காலத்தில் அந்த கிழமைக்குரிய கிரகத்தின் தன்மையை ஈர்த்து,அதன் எதிர்ச் சுபாவங்களைத் தருகின்றன;இந்த எதிர்ச்சுபாவங்களே மனிதர்களின் சிந்தனையில் வக்கிர சிந்தனைகளையும்,தேவையற்ற ஆசைகளையும் உருவாக்கி பாவங்கள் செய்யத் தூண்டுகின்றன;மனதை அலைபாயச் செய்கிறது;

நாம் விரும்பும் சித்தரை தரிசித்துவிட்டாலோ, தினமும் ஏதாவது ஒரு மகானை வழிபட்டு விட்டாலோ நமது கோரிக்கைகள் நிறைவேறிவிடும் என்று நம்புகிறோம்;அந்த பிரார்த்தனையோடு, தினசரி நாம் தான் நமது லட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்;உழைக்க வேண்டும்;போராட வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது லட்சியத்தை சில மாதங்கள்,வருடங்களில் அடைய முடியும்.

ஒருவேளை நமது லட்சியம் ஆன்மீகரீதியாக இருந்தால்,நமது லட்சியத்தை அடைய சில பிறவிகளும் ஆகும்;ஆமாம்! தொடர்ந்து சில ஜன்மங்களாக விடாமுயற்சி செய்தால் மட்டுமே நமது ஆன்மீக லட்சியத்தை அடைய முடியும்.சித்தர்களின் பாடல்களை ஊன்றி வாசித்தால் அவர்கள் திரும்பத் திரும்பக்கூறுவது இதைத் தான்;சித்தர்களின் சித்த வைத்திய பாடல்களிலும்,சித்தர்களின் மந்திரங்களைப் பற்றிய நூல்களிலும்,சித்தர்களின் தியானம்  சார்ந்த நூல்களிலும் கூறியிருப்பது இவைகளைத் தான்;

ஒவ்வொரு மாதமும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை ஏராளமானவர்கள் நேரில் வந்து சந்தித்து வருகிறார்கள்;யாரெல்லாம் ஐயா அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றுகிறார்களோ,அவர்கள் மட்டுமே அடுத்த சில நாட்கள்/மாதங்களில் அவர்களுடைய சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட்டு வருகிறார்கள்;

கடந்த 25 ஆண்டுகளாக இவ்வாறு ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆலோசனைப்படி    அக வாழ்க்கையிலும்( ஆன்மீகம் சார்ந்த முன்னேற்றங்கள்)

புற வாழ்க்கையிலும்(தொழில் முன்னேற்றம்,குடும்ப ஒற்றுமை,கடன் அடைத்தல்,நோய்கள் தீர்தல்,சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள்);

முன்னேறியவர்கள் சில ஆயிரங்களைத் தொடும்;

நீங்கள் ஐயா சகஸ்ர வடுகர் அவர்களை சந்திக்க விருப்பமா?

 aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு உங்கள் போட்டோ,செல் எண்,வசிக்கும் ஊர்,ஜாதக நகலை அனுப்பி வைக்கவும்.Subject இல் Like to Meet to Ayya என்று குறிப்பிட்டு அனுப்பவும்.

மூன்று நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு அழைப்பு வரும்;தமிழ்நாட்டின் எந்த ஊருக்கும் வந்து சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்;

மேலே கூறியுள்ளபடி போட்டோ,ஜாதகம்,செல் எண்,வசிக்கும் ஊர் இவைகளை குறிப்பிட வேண்டும்;ஏதாவது ஒன்றை அனுப்பாமல் விட்டாலும்,அவர்களின் கோரிக்கை மின் அஞ்சல் நிராகரிக்கப்படும்;(ஜாதகம் இல்லாதவர்களும் முன்பதிவு செய்யலாம்;அவர்கள் ஜாதகம் இல்லை என்று குறிப்பிட்டு அனுப்பவும்)

ஒரு மின் அஞ்சல் மூலமாக ஒருவர் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்;

 

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நம

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 23


 

எந்த ஒரு மந்திரத்தையும் நடக்கும்போதோ,பயணிக்கும் போதோ ஜபிக்கவே கூடாது;மந்திரங்களில் இல்லறத்தார் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்,துறவறத்தார் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் என்று ஏராளமான உட்பிரிவுகள் இருக்கின்றன;

நாம் ஜபிக்கும் மந்திரமானது நமக்கு பலன் தர வேண்டும் எனில்,அதை நமது வீட்டு பூஜையறையில் மஞ்சள் துண்டு விரித்து அதன் மீது அமர்ந்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்;வேறு எந்த விதத்திலும் ஜபிக்கக் கூடாது;அப்படி அமர்ந்து ஜபிக்கும்போது,நமது உடல் பகுதி மஞ்சள் துண்டைத் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டு(தரையில் படுமாறு) இருக்கக்கூடாது;அப்படி இருந்தால்,நாம் ஜபிக்கும் ஜபத்திற்கான பலன் நமது சூட்சும உடலில் சேகரம் ஆகாமல் பூமிக்குள் போய்விடும்;

 

நாம் ஜபிக்கும் மந்திரத்தை முறைப்படி,குருவின் தீட்சை பெற்றப்பின்பே ஜபிக்க வேண்டும்;மனதைத் திற(ட)ப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்.மந்திரம் என்ற வார்த்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன.வீட்டிற்கும் மந்திரம் என்ற அர்த்தம் உண்டு;

ஒருபோதும் நாம் இன்னொரு மனிதனை தாண்டிச் செல்லக் கூடாது;மிதிக்கக் கூடாது;தெரியாமல் நமது கால் அடுத்தவர் மீது பட்டாலும்,உடனே அவர் உடலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக,நாம் அவரது ஆத்மாவிடமும்,அந்த ஆத்மாவுக்குள் சூட்சும ஒளியாக இருந்து இயக்கும் சிவசக்தியிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்றே பொருள்;

 

இன்னொருவர் பயன்படுத்திய ஆடை,செருப்பு போன்றவைகளைப்பயன்படுத்தக் கூடாது;

 

குமரி,நெல்லை மாவட்டங்களில் சாப்பிட்டதும்,அந்தத் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் கிடையாது;ஏனெனில்,அன்னத்தை சுமக்கும் தட்டும் மஹாலக்ஷ்மியின் அம்சமாக இருப்பதால்,அதிலேயே கை கழுவினால் மஹாலஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம்;முடிந்தால் நாமும் இந்தப்பழக்கத்தைப் பின்பற்றலாமே!

தென்மாவட்டங்களில் அண்டைவீட்டினர்,தனது பக்கத்துவீட்டினரிடம் ஒரு மளிகைப்  பொருளைக் கேட்கும்போது,அது இல்லையெனில்,அந்த பக்கத்து வீட்டினர் இல்லை என்று கூறமாட்டார்கள்;நிறைஞ்சிருக்கு என்று கூறுவார்கள்;என்ன ஒரு உயர்வான சிந்தனை!

 

அடிக்கடி இல்லை;முடியாது;தெரியாது;பிரச்னை என்று நாம் பேசினால் அது நமது ஆழ்மனதினுள் புகுந்து வேலை செய்யத் துவங்கும்;அதனால் தான் ஒருபோதும் கெட்ட சொல் சொல்லாமலிருக்க நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்;

 

புதிய கோவில்கள் கட்டுவதை விடவும்,பழைமையான ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்;ஒருவருக்கு சிவாலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உண்டாவது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அரிதிலும் அரிதானதாகும்;சிவமஹாபுராணம் வாசிக்கும் எண்ணம் வருவதும் அரிதிலும் அரிதாகும்;சிவாலயத்தின் உழவாரப்பணியைச் செய்தாலே நமது பலகர்மவினைகள் நீங்கும்;தோஷங்களைச் சரி செய்யவே துல்லியமான பரிகாரத்தை நாமே செய்ய வேண்டும்;பரிகாரம் என்பது நமது சிரமம் நிறைந்த வாழ்க்கையைச் சீரமைக்க உருவாக்கப்பட்டவை;(சிவாலயத்தினுள் இருக்கும் குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கோவிலுக்கு வெளியே வெகுதூரத்தில் கொட்டுவதும் ஒருவிதத்தில் புண்ணியத்தைத் தரும்; பிரதோஷ நேரத்தில் சிவமந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை இலவசமாக விநியோகம் செய்வதும் ஒருவித புண்ணியமே! வளர்பிறை அஷ்டமி பற்றிய விழிப்புணர்ச்சியை கோவிலுக்கு வருபவர்களிடம் உருவாக்குவதும் ஒருவித புண்ணியச் செயலே!!)

 

ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப நூலகம் ஒன்றை அமைப்பது அவசியம்;சில பத்தாண்டுகள் முன்புவரையிலும்,ஒவ்வொரு குடும்பத்திலும் ஆன்மீக நூலகம் இருந்திருக்கிறது;அதில் பழமையான ஆன்மீக,ஜோதிட,மருத்துவ நூல்கள் இருந்திருக்கின்றன;இந்த நூல்கள்,பரம்பரையாக அந்தக் குடும்பத்தில் ஒருவரை ஜோதிடராகவும்,ஒருவரை வைத்தியராகவும் ஆக்கியிருக்கின்றன;(இந்த நூற்றாண்டுக்கு முன்பு,ஒவ்வொரு குடும்பத்திலும் ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன)தற்காலத்தில் அப்படிப்பட்ட புராதனமான நூல்கள் அனைத்துமே பழைய புத்தகக்கடைகளில் புதைந்து இருக்கின்றன;இதுபற்றிய அடிப்படை ஞானம் கூட நம்மில் பலருக்கு இப்போது இல்லை;

 

அவதானம் என்றால்,கவனக் குவிப்பு என்று அர்த்தம்;த்ரி அவதானம் என்றால்,ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று அர்த்தம்;அதாவது நீங்கள் இந்த கட்டுரை வாசிப்பது ஒரு கவனக் குவிப்பு;அவ்வாறு வாசித்துக் கொண்டே உங்கள் செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ்ஸை டைப் அடிப்பது இரண்டாவது கவனக் குவிப்பு;அவ்வாறு செய்து கொண்டே பக்கத்துவிட்டில்/அடுத்த அறையில் இருக்கும் டிவி சப்தத்தைக் கவனிப்பது மூன்றாவது கவனக் குவிப்பு;இப்படி ஒரே நேரத்தில் முன்று விஷயங்களில் கவனம் செலுத்துதல் த்ரி அவதானம் என்று பெயர்;

 

அஷ்ட அவதானம் என்றால் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று பெயர்;போராளி என்ற திரைப்படத்தில் இதை காட்சிப் படுத்தியுள்ளனர்;தச அவதானம் என்றால் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று பெயர்;இதே போல சோடேச அவதானம் என்றும்,சத அவதானம் என்றும் நமது முன்னோர்களிடம் மனத் திறமைகள் இருந்திருக்கின்றன;சோடேச அவதானம் என்றால் ஒரே நேரத்தில் 16 விஷயங்களில் கவனம் செலுத்துதல்;சத அவதானம் என்றால் ஒரே நேரத்தில் 100 விஷயங்களில் கவனம் செலுத்துதல்;நமது தமிழ்நாட்டில் 1950 வரையிலும் சத அவதானிகளும்,சகஸ்ர அவதானிகளும் வாழ்ந்திருக்கிறார்கள்;(சகஸ்ர என்றால் ஆயிரம் என்று பெயர்)

 

அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு,மஞ்சள் நிற பட்டு ஆடையை வாரம் ஒருமுறை அணிபவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டுவிடுவார்கள்;


 

சைவ அடியார் :திருநாவுக்கரசரின் வாழ்க்கை பகுதி 1

சிவலோகத்தில் சிவபெருமானுக்கு உறுதுணையாக இருந்து வந்த சிவகணங்களில் ஒருவர் வாகீசர்.ராவணன் இன்றைய மீரட்டில் பிராமண வம்சத்தில் பிறந்தவன்;மனிதர்கள் அனைவருக்கும் கதி மோட்சம் தரக்கூடியவர் சிவபெருமான் என்பதை உணர்ந்து,பல நூற்றாண்டுகளாக சிவவழிபாடு செய்து வந்தான்;அவனது காலத்தில் இலங்கை செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது;அதனால்,அங்கே சென்று,மன்னன் ஆனான்;தனது சிவபக்தியால் நவக்கிரகங்களையே தனது படிக்கட்டுக்களாக்கி,அந்த படிக்கட்டுக்களின் மீது ஏறி அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிவதை வழக்கமாக்கி வைத்திருந்தான்ஒருமுறை தனது புஷ்பக விமானத்தின் மூலமாக ஆகாய சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான்;அப்போது வழியில் சிவபெருமான் வசித்து வரும் திருக்கையிலாயம் எதிர்ப்பட்டது;புஷ்பகவிமானத்தில் வந்த ராவணனிடம்,திருக்கையிலாயத்தின் தலைமை பாதுகாப்பு காவலரான நந்திதேவர்,திருக்கையிலாயத்தை சுற்றிச் செல்லும்படி அறிவுறுத்தினார்;ராவணன் நந்திதேவரின் பேச்சை மதிக்காமல்,தனது அகங்காரத்தினால்,திருக்கையிலாய மலையையே தூக்கிட முயற்சித்தான்;இதை உணர்ந்த சிவபெருமான் தனது கால் பெருவிரலால் திருக்கையிலாய மலையை அழுத்தினார்;இதனால்,திருக்கையிலாய மலையின் அடியில் ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டன;வலி தாங்காமல் அழுது புலம்பினான்;எவ்வளவு காலமாகத் தெரியுமா? ஆயிரம் யுகங்கள் வரையிலும்!அவனது அழுகுரலுக்கு இரக்கப்பட்டார் ஒரு சிவகணம்! அவர் பெயர் வாகீசர்!! ராவணனிடம் சென்று, “நீ சிவபெருமானைப் புகழ்ந்து பாடினால்,அவர் மனம் இரங்கி உன்னை விடுவித்துவிடுவார்” என்றார்.


அதன்படி,தனது உடலில் இருக்கும் நரம்புகளால் யாழ் செய்து,சிவபெருமானை நினைத்து மனம் உருகப் பாடினான் ராவணன்.சில யுகங்களில் சிவபெருமானின் மனதில் ராவணனின் கீர்த்தனைகள் இரக்கத்தைத் தூண்டியது;சிவபெருமானும் ராவணனை மன்னித்து,திருக்கையிலாய மலைக்கு அடியில் சிக்கியிருந்த அவனது கைகளை விடுவிக்கச் செய்தார்;ராவணனும் அங்கிருந்து புறப்பட்டான்;அதே சமயம்,சிவகணமாகிய வாகீசரை அழைத்து, “தவறு செய்த ராவணனின் விடுதலைக்கு நீ காரணமாகிவிட்டாய்;இதற்குப் பரிகாரமாக நீ பூலோகத்திற்குப் போய் மனிதனாகப் பிறப்பாயாக” என்று சாபமிட்டார் சிவபெருமான்.


அந்த வாகீசரே சைவக் குரவர்கள்(பக்தியினால் சிவனை அடைந்தவர்களுக்கு குரவர் என்று பெயர்) நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் ஆவார்;

ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தேவையான முதல் தகுதி எது?

எத்தனையோ கோவில்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறோம்;எத்தனையோ பரிகாரங்கள் செய்திருக்கிறோம்;இருந்தும் ஏன் அவை நமக்கு பலன்களைத் தரவில்லை? என்று  சிந்தித்திருக்கிறோமா. . .?

1990கள் வரையிலும் எவையெல்லாம் நமது இந்து தர்மத்தின் கடமைகளாக இருந்தனவோ,அவைகள் இன்று கேலி செய்யப்படுகின்றன;எவையெல்லாம் தீயப் பழக்கம் என்று நம்பப் பட்டனவோ, அவையெல்லாம் இன்று கவுரவமாகக் கருதப்படுகின்றன;(உதாரணம் மது அருந்துவது;உடன் பிறந்தவர்களுக்கு உதவுவது; பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடுவது போன்றவை தீயப் பழக்கங்களாக இருந்தவை இன்று கவுரவமாகக் கருதப்படுகின்றன)ஏன் இந்த இழிநிலை?

நான்கு யுகங்களில் துன்பத்தை மட்டுமே மனிதர்களுக்குத் தரும் யுகம் நாம் வாழ்ந்து வரும் கலியுகம்;இந்த கலியுகத்தில் நமது இல்லற வாழ்க்கையோடு ஆன்மீக முன்னேற்றத்தை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை ஏராளமான ஆன்மீக அமைப்புகள்,ஜோதிட அமைப்புகள் பயிற்சி வகுப்புகள்,போதனை முகாம்கள் மூலமாக பரப்பிக்கொண்டே இருக்கின்றன;

ஆனால்,இவைகள் மூலமாக கிடைக்கும் ஆன்மீக முன்னேற்றத்தை தக்க வைக்க நாம் செய்ய வேண்டிய சுயக் கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?

1.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்துவது

2.மது,குட்கா போன்றவைகள் நுகர்வதை நிரந்தரமாக நிறுத்துவது

3.நமது ஆன்மீக லட்சியங்கள்,நோக்கங்களை ஒருபோதும் வெளிக்காட்டாமல் இருப்பது

4.நமக்குத் தகுந்த ஆன்மீக குருவைத் தேடி கண்டறிதலும்;கண்டறிந்தப் பின்னர் அவரின் வழிகாட்டுதல் படி மட்டும் நமது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளுதலும்;குருவின் மனதில் நீங்காத இடம் பிடித்தலும்;

5.தமிழ்ப்பண்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்றி வருவது;

 

முட்டை முழு அசைவமே;செயற்கையாக உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே;முட்டையை ஒரு பொருளாகக் கலக்கும் பொருட்களும்(கேக்,புரோட்டா மற்றும் பல உணவுப் பொருட்கள்) அசைவமே! மனிதர்களாகிய நமக்கு பிறந்த ஜாதகம் இருப்பது போல,ஆடு,மாடு,கோழி,மீன்,நண்டு போன்ற உயிரினங்களுக்கும் பிறந்த ஜாதகம் உண்டு;அதன்படி,அவைகளுக்கு வேதனைகளும்,சுகங்களும் அவைகளின் வாழ்நாளில் மாறி மாறி உருவாகும்;ஆனால்,நாம் சுவைக்காக அவைகளை கொன்று,உணவாக்கிக் கொள்கிறோம்;அதன் மூலமாக அவைகளின் ஜாதகங்களில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நம்மை,நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்களை தடுத்து நிறுத்திவிடும்;

மிருகங்களுக்கு ஜாதகம் கணிக்கும் பழக்கம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் இருந்துள்ளது;உதாரணமாக,அரபு நாடுகளில் இருந்து நமது மன்னர்களின் படைகளுக்கு குதிரைகள் வாங்குவதுண்டு;குதிரைகள் அரண்மனைக்குரிய பகுதிக்குள் கொண்டு வந்ததும்,அந்த நேரத்தை வைத்து ஜோதிடம் கணிப்பதுண்டு;சிறந்த கிரகநிலையில் அரண்மனைக்குள் வந்திருக்கும் குதிரைகளை மன்னருக்காக பயிற்சியளிப்பது பல காலமாக நடைமுறையில் இருந்திருக்கிறது; தற்போது இந்தப் பழக்கம் இல்லை;

நாம் ஒரு பெட்டிக் கடை நடத்தினாலும் சரி;நமது ஊரிலேயே பெரிய சூப்பர் மார்கெட் நடத்தினாலும் சரி;நமக்கு என்று தொழில் போட்டியாளர்  ஒருவராவது இருக்கவே செய்வார்;

அல்லது

நாம் ஒரு தனியார் நிறுவனத்தில் க்ளார்க்காக பணிபுரிந்தாலும் சரி;அரசுத் துறையில் அதிகாரம் மிக்கப் பதவியில் இருந்தாலும் சரி;நம்மைப் பிடிக்காதவர்கள் இருக்கவே செய்வர்;

இவர்களால் நம்மை நேரடியாக கட்டுப்படுத்த முடியாத போது,இவர்கள் செய்யும் முதல் செயல் என்னதெரியுமா? நமது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திட குறுக்கு வழியைப் பின்பற்றுவதே;இந்த குறுக்கு வழியானது சூட்சுமமாக இருக்கும்;இந்த குறுக்கு வழியானது,நாம் அசைவம் சாப்பிடத் துவங்கியதும் ‘வேலை’ செய்ய ஆரம்பிக்கும்;இந்த குறுக்கு வழியானது,சில சமயம் நமது உடல்நிலையைச் சீர்குலைக்கலாம்;டாக்டரிடம் ஆலோசித்தாலும் இன்றைய ஆங்கில மருத்துவத்தால் கண்டறிய முடியாது;நமது தொழில் ஸ்தானத்தை சீரழிக்கலாம்;காரணத்தை நமது ‘பகுத்தறிவினால்’ கண்டுபிடிக்கவே முடியாது;

நாம் சொந்த வீடு கட்ட அல்லது நமது கடன்கள் விரைவாகத் தீர ஒரு பரிகாரத்தை இத்தனை வாரம்,இந்தக் கோவிலுக்குச் சென்று இன்னின்ன பொருட்களுடன் செய்கிறோம்;அப்படிச் செய்து முடித்தப் பின்னரும் கூட அந்த பரிகாரம் நமக்குப் பலன்கள் தருவதில்லை;நாம் தான் வாரம் ஒருமுறை சிக்கன்,மட்டன் என்று வெளுத்துக் கட்டும் போது எப்படி அந்த பரிகாரம் நமக்குப் பலன்களைத் தரும்? ஒருபோதும் அது நமக்குத் தராது;

சைவ உணவு சாப்பிடும் பழக்கமே நம்மை தகுந்த குருவிடம் அறிமுகப்படுத்தும்;சைவ உணவு சாப்பிடுபவர்களின் சுவாசத்தில் ஒரு ‘லயம்’ இருக்கும்; ஆனால்,அசைவ உணவு சாப்பிடுபவர்களின் சுவாசத்தில் ஒருவிதமான பதற்ற நிலையே இருக்கும்;யோகாசனம் கற்றுத் தரும் மாஸ்டர்களாலோ அல்லது தினசரி ப்ராணயாமம் செய்பவர்களாலோ மட்டுமே இந்த வித்தியாசத்தை அறியமுடியும்;அசைவ உணவு சாப்பிடுபவர்களின் சுவாச எண்ணிக்கையை கவனித்துப்பார்த்தால்,விரைவாக இருக்கும்;இதனால்,அவர்களின் ஆயுட்காலம் குறைவதை மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகள் கண்டறிந்துள்ளனர்;

 

இல்லறத்தில் இருந்துகொண்டே ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்வதே நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அனைவராலும் இயன்ற காரியம் ஆகும்;தமிழ்ப் பண்பாட்டை விடாப்பிடியாக பின்பற்றுவதால் மட்டுமே நம்மால் ஆன்மீகத்தில் பலநிலைகளை இப்பிறவியிலேயே கடக்க முடியும்.ஏனெனில்,பல யுகங்களாக இந்த வழிமுறைப்படியே ஏராளமான பாமர மக்கள்,ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து சித்தர்களாகவும்,சிவகணங்களாகவும் ஆகியிருக்கின்றனர்;

 

ஓம்சிவசக்திஓ