RightClick

ஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்!!!

மனிதன் நாகரீகமடைந்த காலமான கிருதயுகத்தில் உருவான இந்து தர்மம் ஆறு
வழிபாட்டுமுறைகளைக் கொண்டது;இதையே ஷண்மதச்சாரியம் என்று நமது தேசத்தில்
அழைத்தனர்;

கிருதயுகத்தில் இருந்த ஆறு வழிபாட்டுமுறையானது,அடுத்து வந்த
திரேதாயுகம்,துவாபரயுகங்களில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து
கலியுகத்தின் துவக்கத்தில் 76 பிரிவுகளாக நமது இந்தியா முழுவதும்
பிரிந்துவிட்டன;இந்த 76 வழிபாட்டுப்பிரிவுகளால் இந்து தர்மம்
உள்பூசல்களால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இதைச் சரி செய்ய காலத்தை
இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் திருவுளம் கொண்டார்;

 இந்தியாவின் காலடியில்     (கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் கிராமம்
இது!) பிறந்த ஆதி சங்கரர் இந்தியா முழுவதையும் தனது 30 வயதிற்குள் நான்கு
முறை நடந்தே சுற்றி வந்தார்;இந்து தர்மத்தின் 76 வழிபாட்டுப்பிரிவுத்
தலைவர்கள்,மடாதிபதிகள்,துறவிகள்,சாதுக்களை சந்தித்து உரையாடியும்,வாதம்
செய்தும்,ஆன்மீகப் போட்டியிட்டும் மீண்டும் ஆறு வழிபாட்டுமுறைகளாக
மாற்றினார்;மீண்டும் நமது சனாதன தர்மத்தில் இருந்து வந்த உள்பூசல்கள்
வழக்கொழிந்து உயிரோட்டமான நிலையை எட்டியது.

பைரவ பூமியான காசியில் ஆதிசங்கரர் சில காலம் வாழ்ந்து
வந்தார்;அப்போது,ஒருநாள்,ஆதிசங்கரர் புனித கங்கையில் நீராடிவிட்டு தனது
சீடர்களுடன் தமது இருப்பிடம் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

காசி நகரத்தின் குறுகலான சந்துகளில் ஒன்றில் அவர் நடந்து வந்து கொண்டு
இருந்தபோது,எதிர்த்திசையில் ஒருபுலையன் வந்து கொண்டு
இருந்தான்;அருவெறுப்பான தோற்றத்துடன்,கைகளில் நான்கு
நாய்களைக்(ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்) கயிற்றில் கட்டிப்பிடித்துக்கொண்டு
வந்தான்;ஆதிசங்கரரை நெருங்கிய போது,அவனிடம், “சற்றே விலகிச் செல்”என்று
கத்தினார்.

இதைக் கேட்ட புலையன், “துறவியே! எதிலிருந்து விலகிப் போகச் சொல்கிறீர்கள்?

உங்கள் உடலைவிட்டு என்னுடைய உடல் விலகிச் செல்ல வேண்டுமா?

இவ்விரண்டு சரீரங்களும்(உடல்களும்) அன்னமய கோசம் தானே?

ஆன்மாவை விலகிப் போகச் சொன்னீர்களா?

எனக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றுதானே?

எதிலிருந்து எது விலகுவது?

எங்கிருந்து எங்கு விலகும்?

எனக்குத் தயவு செய்து விளக்கவும்”என்று பணிவாகக் கேட்டான்.

மேலும் அந்தப் புலையன், “சூரியனின் பிம்பம் எனது கலயத்துக்குள் இருக்கும்
கள்ளிலும் தென்படுகிறது;
இங்கு சூரியன் பரமாத்மா; அதன் பிரதிபிம்பம் ஜீவாத்மா;அந்த ஜீவாத்மா எந்த
உடலில் இருந்தாலும் ஒன்றுதானே. . .
அதுபோலவே தங்கக்குடத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும்,இந்த என்னுடைய கள்
கலயத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும் இந்த இரண்டுக்கும் வெளியே
வியாபித்திருக்கின்ற ஆகாசமும் ஒன்றுதானே?

புலையனின் கணீர் குரலும்,அந்தக் குரலில் இருந்த கருத்தும் ஆதிசங்கரருக்கு
வந்திருப்பது யார் என்பது புரிந்துவிட்டது.உடனே,அந்தப் புலையனின் காலில்
விழுந்து வணங்கினார் ஆதிசங்கரர்.வணங்கியப் பின்னர்,ஐந்து சுலோகங்களால்
அந்தப் புலையன் வடிவில் இருந்த காசி காலபைரவப் பெருமானை வழிபட்டார்.அந்த
ஐந்து சுலோகங்களுக்கு மநீஷா பஞ்சகம் என்று பெயர்.இந்த ஐந்து சுலோகங்களைப்
பாடி முடித்ததும்,புலையன் மறைந்து,காசியின் தலைவனும்,மனிதர்களின்
தலையெழுத்தை மாற்றுபவருமாகிய காசி காலபைரவப் பெருமான் காட்சியளித்தார்;

இந்த மநீஷா பஞ்சகத்தின் சுருக்கம்: ஒருவன் பிறந்த குலத்தையும்,அவனது
தோற்றத்தையும் வைத்து எடைபோடக் கூடாது;அவனது ஞானத்தைக்கொண்டே அவனை
மதிப்பிட வேண்டும்;

ஓம்சிவசக்திஓம்