RightClick

அட்சய திரிதியையின் சிறப்புகள

ஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சித்திரை ஆகும்;சித்திரை மாதத்தில் வரும்
வளர்பிறை திதியில் மூன்றாம் நாளை அட்சயத் திரிதியையாக நாம் பல
நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம்;

இந்த ஜய வருடத்தில் 2.5.2014 வெள்ளிக்கிழமையன்று(சித்திரை 19 ஆம் நாள்)
அட்சய திரிதியை அமைந்திருக்கிறது.

கிருதயுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகங்களில்
இரண்டாவது யுகமான திரோதாயுகம் பிறந்தது அட்சய திரிதியை நாளன்றுதான்!

வேதவியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல அதை முழு முதற்கடவுளாகிய விநாயகர்
எழுதத் துவங்கியதும் இந்த நாளன்றுதான்!!
தனது முன்னோர்கள் கதிமோட்சம் பெறுவதற்காக பகீரதன் வெகு காலமாகத் தவம்
செய்து சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு புனித நதியான கங்கையைக் கொண்டு
வந்தநாளும் இந்த அட்சய திரிதியை நாளன்றுதான்!!!

குருகுலத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள் கண்ணனும்,குசேலனும்.வளர்ந்து
பெரியவர்களாகி இருவரும் இல்லறத்தார்களானப் பின்னர்,குசேலன் கண்ணபிரானை
மீண்டும் சந்தித்தார்;கண்ணபிரானுக்கு குசேலன் தனது அன்புப் பரிசாக அவல்
கொடுத்து தனது வறுமை நீங்கியதும் இந்த நாளன்றுதான்!!
திருமாலின் தச அவதாரங்களில் பரசுராமர் பிறந்ததும் இந்த நாளில் தான்!!

அட்சய திரிதியை நாளன்று சாஸ்திரங்களைக் கற்க ஆரம்பித்தல் அல்லது
சாஸ்திரங்களை புகட்டிட(சொல்லிக் கொடுத்திட) ஆரம்பித்தல் நன்று என்று
வேதங்கள் தெரிவிக்கின்றன;

இந்த நாளில் உணவுதானம் செய்யத் துவங்குவதும் மிகவும் நன்மை
பயக்கும்;அருகில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்திற்கு காலை 7
மணிக்குள் செல்ல வேண்டும்; நல்லெண்ணெய் கலந்த எள்பொடியுடன் நான்கு
இட்லி+சாம்பார் தொகுதியை ஒவ்வொரு சாதுவுக்கும் வழங்குவது மிகுந்த
புண்ணியம் தரும் செயலாகும்;குறைந்தது ஒன்பது சாதுக்களுக்கு வழங்குவது
நன்று;

இந்த நன்னாளில் சூரியனின் பிராணதேவதையாகவும்,செல்வத்தின்
முழுமுதற்கடவுளாகவும் விளங்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை
வழிபடத் துவங்குவது நன்று.

ஓம்சிவசக்திஓ

தீபம் - சகஸ்ரவடுகர்.உலகில் உருவாகும் கலைநிலைகளில் இருவகைப்படும். அவை இருள் மற்றும் வெளிச்சம். இந்த இரண்டு காரணிகளை இயக்கும் சக்திகள் முறையே சந்திரன், சூரியன் ,இவர்கள் ஆட்சியில்தான் உலகில் அனைத்தும் ஜீவராசிகளும் ஜனிக்கிறது மற்றும் மறைகிறது. பகலவனும், சந்திரன் என இரு அரசர்கள் உலகில் உள்ள உயிரனங்களை ஆட்சி செய்து வந்தாலும் நமது பைரவரே குருவாக இருந்து அந்த பலம் பண்ணுகிறார். இவரின் அன்பையும், அருளையும் பெருவதற்காக பயன்படுவதே தீபம் ஆகும்.

பண்டைய காலங்களில் பைரவரின் சக்தியின் வெளிப்பாடு தீபமாகவே இருந்தது. அவரின் ஒளியாலே தீமைகளும், சாபங்களும் பிணியும் விலகி நிற்க வைத்தது. அந்த ஒளி ஆற்றல் உலகின் இருளை மீட்டு எடுத்து நன்மை சேர்த்தது. அந்த ஒளி ஜீவராசிகளையும் ஒளிர செய்தது உண்மை. இதன் சாட்சியாகவே சூரியனும், சந்திரனும் உயிரனங்கள் துயிலில் ஆழ்ந்தாலும் எழுந்தாலும் பிரபஞ்சத்தை விட்டு பிரியாமல் படர்ந்து வருகிறது.

தீபம் பற்றிய விஷயங்கள் இருளையும உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொது சில சித்தர்களின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக சொன்னால் வள்ளார் பெருமான் அன்பும் அருள் நினைவுக்கு வருகிறது. அவர் மொழியில், தீப வழியில் மட்டுமே இருளை நீக்க முடியும், அந்த ஒளி நம்மை அனைத்துவிதமான இருளையும் விளக்கி அழைத்து செல்லும், இதில் எந்த விதமான ஏற்றதாழ்வு இல்லை. இதன் பிரகாசம் அனைவருக்கும் சமம்.

தீபத்தின் நன்மைகள்வீட்டிலும், வியாபார தளத்திலும் தீமைகளை ஈர்த்து நன்மை மட்டுமே வெளியிடும் இயல்பு உடையது.

பக்தியின் உறுதுணையாக நின்று அனைத்துவிதமான வேண்டுதல்களுக்கும் சாட்சியாகவே நிற்கிறது.

நமது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தீபமே விருப்ப வழிபாடு என்பதில் சிரிதளவும் சந்ததேகம் கொள்ள வேண்டாம்.

நமக்கும் நடக்கவிருக்கும் அனைத்து நன்மைகளை ஊக்குவிக்கும் திறன் தீப ஒளியாலே சித்தம் ஆகும்.

நமது வேண்டுதலை இறைவனின் பாதத்தின் அருகில் கொண்டு சேர்க்கும் காரகனே தீபம்.

சித்தர்களின் வருகையும் மற்றும் பெரியோர்களின் அன்பையும் தீப வழிபடு முலமே ஈட்டமுடியும்.

மாயவழி துர் இடர்கள் போன்ற நிழல் நம்மை விட்டு விலக தீப வெளிச்சம் நமக்கு நண்பன் ஆகும்.

சில மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் இயக்கம் இந்த தீப பிம்பத்தை சேர்த்துக்கொள்கிறது.

இன்னும் எளிமையாக சொல்லப்போனால் நமது எல்லாவிதமான நிகழ்வுக்கு முழுமுதற் பொருள் தீபம் அமைந்திருப்பதை நீங்கள் அனைவரும் காணலாம்.

தீப வகைகள்

இறைவனின் அவதாதரத்திற்கு ஏற்றவாறு தீபத்தின் வகைகள் வேறுபடும் அவற்றில் முக்கியமான சில,

பிள்ளையார் – தேங்காய் எண்ணெய்

இலட்சமி - பசுநெய்

அம்மன் - இலுப்பை எண்ணெய்

பைரவர் - எள் தீபம்

இந்த முறையில் ஏற்றி வழிபட்டால் உங்கள் நியமான தேவைகள் மற்றும் பிரச்சனைகள் ஒரு மண்டத்தில் நிறைவேறும்.

-சகஸ்ரவடுகர்.இதிகாசங்கள்

இதிகாசங்கள் நடைபெற்றதை காலம் காலமாக நினைவூட்டும் விதமாக பெயர் வைத்து
நமது பண்பாட்டைப் பாதுகாத்து வருபவர்கள் நமது தமிழ் மக்களே!
இராவணனின் தம்பி திரிசரண் தவம் புரிந்து,சிவ வழிபாடு செய்த ஊரே
திரிசிரபுரம்;இதுவே தற்போது திரிந்து திருச்சிராப்பள்ளி என்று ஆனது;
சடாயுப் பறவை சிவவழிபாடு செய்த ஊரே இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர்
என்று அழைக்கப்படுகிறது.
வாலி,சுக்ரீவன் என்ற குரங்குகள் பரவலாக வாழ்ந்து வந்த ஊர் ஆதிகாலத்தில்
குரங்காடுதுறை என்று அழைக்கப்பட்டது;அதுவே இக்காலத்தில் ஆடுதுறை என்று
மாறியிருக்கிறது.
ஸ்ரீராமன் தர்ப்பைப் புல் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் செய்த ஊர்
திருப்புல்லாணி;
வருணன் மீது அம்பு தொடுக்க வில் பூட்டிய ஊரே தனுசுக் கோடி;
அர்சுனன் சிவபெருமானிடன் பாசுபத அஸ்திரம் பெற தவம் செய்த ஊரே திருவேட்களம் ஆகும்;
பஞ்சபாண்டவர்கள்,காளியை வெகுகாலமாக வழிபட்ட ஊரே ஐவர்மலை;இன்று ஐவர் மலையை
அயிரை மலையாக அழைத்து வருகிறோம்;
பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வெற்றி பெற பிரத்யங்கராதேவியை வணங்கி வரம்
பெற்ற ஊரே ஐவர் பாடி;அதுவே இன்று ஐயாவாடி என்று அழைக்கப்பட்டுவருகிறது.
மந்தைக்காடு என்பதே இக்காலத்தில் மண்டைக்காடு என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது.இந்த ஊர்க்கோவிலில் இருக்கும் மண்ணே பகவதியாக இவ்வூர்
மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஈ வடிவத்தில் வந்து அம்மையப்பனாகிய
சிவபெருமானை வழிபட்ட தலமே இக்காலத்தில் ஈங்கோய் மலை என்று
அழைக்கப்படுகிறது.
அர்ச்சுனா நதி,வைப்பாறு என்ற இரு நதிகள் பாயும் ஊரே இரு கங்கைக் குடி
என்று அழைக்கப்பட்டது;அந்த இரு கங்கை(நதியின் பொதுப்பெயராக அக்காலத்தில்
அழைக்கப்பட்டது)குடியே இன்று இருக்கன்குடியாக உருமாறியிருக்கிறது.
கவிச்சக்கரவர்த்தி  என்று போற்றப்பட்ட கம்பரின் சமாதி இருக்கும் ஊரை
முற்காலத்தில் பாட்டரசன் கோட்டை என்று அழைத்தார்கள்;அதுவே இக்காலத்தில்
நாட்டரசன்கோட்டையாக புழக்கத்தில் இருக்கிறது.
தஞ்சன் என்ற அசுரனை சதாசிவன் நேரில் வந்து அழித்த ஊரே இன்றைய தஞ்சாவூர்!
புன்னைமரங்கள் நிறைந்த இடமே புன்னைவனம் ஆகும்;புன்னைவனத்தின் நடுவே
விற்றிருந்து அருள்பவளே புன்னைநல்லூர் மாரியம்மாள்!
ஒரு பெண்ணின் கரு,சாபத்தால் கலைந்த போது,அந்தப் பெண்ணின் அருகில் இருந்து
காத்தவளே கர்ப்பரட்சாம்பிகை;அந்த அம்மன் வாழ்ந்து வரும் ஊரே
திருக்கருகாவூர்.
வக்கிராசுரனை திருமாலும்,வக்கிராசுரனின் தங்கை துன்முகியை
பார்வதிதேவியும் வதம் செய்த ஊரே திருவக்கரை;
புதுவை நாதர் என்ற வைத்தியநாதசுவாமி அருள்பாலிக்கும் ஊரே
புதுவைத்தலம்;இந்த புதுவைத்தலத்தை வில்லி என்ற மன்னன் ஆண்டு
வந்ததால்,அந்த மன்னனின் நினைவாக மாறியதே ஸ்ரீவில்லிபுத்தூர்.
மங்கலக்குடி,மங்கல விநாயகர்,மங்கல நாதர்,மங்கல நாயகி,மங்கல தீர்த்தம்
என்று ஐந்து மங்கலங்கள் நிரம்பி மக்களுக்கு மங்கலங்கள் அள்ளித்தரும் ஊரே
திருமங்கலக்குடி!
காய வைத்த நெல் மழையால் நனைந்துவிடுமோ என்று கோவில் அர்ச்சகர்
கவலைப்பட,அன்னை காந்திமதி நெல் மட்டும் நனையாமல் காத்துஅருளினாள்;அந்த
வரலாறை தன்னுள் வைத்து இன்றும் இருப்பதே திருநெல்வேலி ஆகும்.
நாகங்கள் சிவனை நினைத்து வழிபட்டு வரும் இடமே இக்காலத்தில் நாகர்கோவில்
என்ற மாநகரமாக வளர்ந்திருக்கிறது;
சிவனை மணம் முடிக்க நினைத்து மூன்று கடல்களும் சந்திக்கும் இடத்தில்
கன்னியாக பார்வதிதேவி (வடக்கே இருக்கும் இமய மலையை நோக்கி)தவம்
செய்தமையால்,அந்த இடம் இன்று கன்னியாக்குமரி என்று அழைக்கப்பட்டு
வருகிறது.
நன்றி:ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய “ஊரும் பேரும்”
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நம

சகஸ்ரவடுகர்

சகஸ்ரவடுகர்

25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!இவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;

சராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,

ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.

தொடர்பு கொள்ளும் முறைகள்

EMail : aanmigaarasoo.com@gmail.comThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Website : wwww.aanmigaarasoo.com

Videos : AanmigaArasoo Channel


திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.ருத்ராட்சம்

நம் நாடு ஆன்மீக பாரம்பரியங்களின் வேர்கள் என்பதை விளக்குவதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் எப்போதுமே நிருபிக்கிறார்.நமது மண்ணின் விதைகளாய் இருக்கிற ரிஷிகளும் சித்தர்களும் குருமார்களும் மற்றும் மருவத்துவர்களும் வழிபாட்டின் மகிமையை கொண்டு செல்லவும் அதன் பயனின் மகிமையை விளக்கியும் காட்டி இருக்கிறார்கள். அந்த விதையில் வந்த பூக்கள் தான் நாம்.அவர்கள் தங்கள் உபவாசங்களை மக்கள் முன் வைக்கும் போது இறைவனின் அருகினில் பல அரிய பொக்கிஷங்களையும் பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள். அவைகள் மலர்கள்,கனிகள்,தானியங்கள்,ருத்ராட்சம் மற்றும் திருநீறு என பலவகையான விஷயங்களை நம்மிடம் சொல்லி சென்றிருக்கிறார்கள். இதில் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள் என கருதப்படுவது மகா வில்வம் மற்றும் ருத்ராட்சம்.இந்த பொருளைப் பற்றிய விழிப்புணர்வையும், பயன் மற்றும் உபயோகிப்பதன் பற்றி நிறைய நூல்களின் மூலமாகவும், குருமார்களின் மூலமாகவும் நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் நீங்கள் உபயோகித்து பலன்களையும் பெற்றுக் கொண்டு இருக்கலாம். இந்த கட்டுரையில் சில முக்கியமான விஷயங்களை தெரிவிக்க உள்ளேன். அது என்னவென்றால் ருத்ராட்சம் மற்றும் பத்ராட்சம் என்பதன் வித்தியாசம். பத்ராட்சம் என்பது ருத்ராட்சத்தின் சாயலில் இருக்கும் நகல் வடிவம். இவற்றில் எந்தவித சக்தியும் இருக்காது. இது வழிபாட்டுக்கும் மற்றும் தியானம் போன்ற விஷயங்களுக்கும் உகந்தது அல்ல. அப்படி என்றால் இன்றைய கடைகளில் கிடைக்கும் போலிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறிர்களா? கவலை வேண்டாம் , இனிமேல் தைரியமாக நீங்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சத்தையும் சரி இனிமேல் அணிய இருப்பவர்கள், ருத்ராட்சத்தை சுடு நீரில் போடுங்கள் அது வெடித்தால் பத்ராட்சம், இல்லை என்றால் ருத்ராட்சம்.அடிப்படையில் ருத்ராட்சம் 1 முதல் 32 முகங்கள் இருக்கிறது.இதில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் போலிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.இந்த கட்டுரையை நம் ஆன்மீக நண்பர் ஒருவர் சில லட்சங்களை செலவு செய்தும் அதில் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து மிகவும் வருந்தினேன். அதன் வெளிப்பாடு இந்த கட்டுரையின் பிறப்பிடம்.யார் என்ன ருத்ராட்சம் அணியலாம் ?ஒரு முக ருத்ராட்சம் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களிடம் மட்டும் தான் உள்ளது. இதனால் இதை தேடும் முயற்சியில் பணங்களை விரயம் செய்ய வேண்டாம். வியாபாரம் செய்பவர்கள் ஏழு முகமும் , குழந்தைகள் கல்விக்காக நான்கு முகமும் அணிந்து கொள்ளலாம்.நடுத்தர வயதான அன்பர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவது சிறப்பு.ருத்ராட்சம் விளையும் இடம்நேபாளத்தில் ருத்ராட்சம் விளைகிறது.இதில் முக்கியமான ஒரு முக ருத்ராட்சமானது அங்குள்ள மன்னர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் மட்டுமே காணிக்கையாக்கப் படுகின்றன.இதை இவர்கள் மட்டும் அல்ல நம் சைவ சமய ஞானிகளும் ருத்ராட்சத்தை புண்ணிய ஸ்தலங்களிலும் வைத்து சீடர்களுக்கும் கொடுத்துள்ளார்கள் என்பது சிறப்பு.பயன்கள்சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது போன்று சித்தர்களின் அணிகலானது சிவனின் அணிகலன் ஆகும். அந்த அளவிற்கு சக்தியும் சிறப்பும் வாய்ந்தது ருத்ராட்சம். நேரடியாக ஆன்மீக பெரியோர்களின் கைகளில் இருந்து பெற்றோமாயின் நிச்சயம் சிவ பலத்தையும் சக்தி அருளையும் பெறலாம்.இதுவே நம் பைரவரின் விஷேச சக்தி வாய்ந்த அணிகலன். இதன் முலம் தங்கள் தகுதிகளையும் பொன் , பொருள் போன்ற தேவைகளையும் நியாயமான முறையில் பெற்றவர்கள் ஏராளம். இது சில அரிய பெரிய மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். நமது சித்தர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன

உணவே மருந்து - சகஸ்ரவடுகர்

அனைவருக்கும் வணக்கம் 

இன்றைய வளர்ந்த தலைமுறைகளுக்கும் சில முக்கியமான விசயங்களும், அதன் சார்ந்த மரபுகளையும் சொல்வதற்கான கடமை என்னுடையது. அது ஆன்மீகம் சார்ந்தவையாக மட்டும் அல்ல அனுபவமும் அறிவியலும் கலந்த கலவை. அந்த வகையில் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி உணவு உண்பது.

இத படித்தவுடன் இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இங்கு தான் நம் முன்னோர்களின் ஆரோக்கியம் என்னும் புதையலை விட்டு சென்றிருக்கிறார்கள். ஆம் இந்த உணவின் அடிப்படையிலே இந்த பிரபஞ்சம் அடக்கம் என்பது உண்மை. எனினும் நாம் உண்ணும் உணவில் பல வகையான மாற்றங்கள் நம் முன்னோர்களின் செய்முறைகளிலும், நம் பழக்கங்களிலும் மாறி வருகிறது. இது போன்ற மாற்றங்கள் பூவுலகில் தோன்றும் என்பதை உணர்ந்த மகான்கள் அதை சுவையின் தன்மையிலும் உள்ளிருப்பதை சொல்கிறார்கள் . அதைதான் அறுசுவை உணவு என்பதாகும் . இப்பொழுது ஒரு சந்தேகம் எழும் அப்படிஎன்றால் சுவைகளுக்கும் பஞ்ச பூதத்திற்கும் என்ன தொடர்பு என்று . ஆம் காற்று – காரம் , தண்ணீர் – உப்பு , ஆகாயம் – புளிப்பு, நெருப்பு – துவர்ப்பு / கசப்பு மற்றும் நிலம் இனிப்பின் அடையாளமாக இருக்கிறது. இவை அனைத்துமே கால நிலைகளின் அடிப்படையில் தான் உச்சம் பெற வேண்டும் . இந்த மாற்றத்தின் பெயரே பருவநிலை மாற்றம் ஆகும். இப்பொழுது உங்களுக்கு அண்டத்தின் இயல்புக்கும் நம்மை மனித பிண்டங்களுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பீர்கள்  

இன்று நம் உலகியல் மாற்றம் உடலில் ஏற்படும் நோய்க்கும் உண்டான தொடர்பை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் . இதற்கு மேலும் இரண்டு காரணிகளிலும் உடன் பிறந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள் . அவர்கள் திசைகள் மற்றும் நிறங்கள்.

திசைகள் 

நாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி,செல்வம்,நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது கடமை.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்

மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம்  வளரும்

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வளரும்

தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ்  வளரும்

 

இவை அனைத்துமே நம் வீட்டில் சாப்பிடும் போது மட்டுமே மேற்கொள்ள வேண்டிய விதிகள் தான் . வேறு எங்கும் இது பொருந்தாது. முடிந்தால் வடக்கு திசையை மட்டும் தவிர்ப்பது நலம்.

நிறங்கள் 

நான் முன்னர் கூறியது போல் பஞ்ச பூதங்களில் காற்று – வெள்ளை , தண்ணீர் – கருப்பு / சுடர் நீலம், ஆகாயம் –பச்சை , நெருப்பு – சிவப்பு , நிலம் – மஞ்சள் . இப்படி அறுசுவைகளை கொண்டு உலகை இயக்குகிறான் இறைவன். இதன் அடிப்படையில் எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் சுவைத்தன்மை மணக்கிறது.சற்று சிந்தித்துப் பார்த்தால் நமது உணவின் சுவையும், நமது செயல்பாடுகளையும் நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். இதில் சைவம் , அசைவம் பற்றி எண்ணம் அவர்களின் மனம் சார்ந்தது. ஆனால் இன்றைய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நோயின் முதல் நாடி உணவு என்று சொல்வதை யாரும் மறுக்க இயலாது. எனவே உணவில் கவனம் செலுத்துங்கள்.

-சகஸ்ரவடுகர்

பஞ்ச பட்சி

உலகில் இறைவனால் படைக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும் தமிழ் மாதத்தின் அடிப்படையில் இரண்டு காலங்களில் தான் தோற்றுவிக்கப்படுகின்றன. இதை நம் நடைமுறையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை என்று அழைக்கின்றோம். இதனை உறுதி செய்வதற்காக சந்திர பகவானே காரியக்காரராக அமைந்துள்ளார். இதையே நம் வழிபாட்டிற்கு ஏற்றவையாக தேய்பிறை மற்றும் வளர்பிறை என்று அழைத்து வருகின்றோம். இந்த காலத்தின் அமைப்பைப் பயன்படுத்தி தான் அகத்தியர், ரோமரிஷி மற்றும் காகபுஜண்டர் போன்ற சித்தர் பெருமக்கள் தம் சீடர்களின் ஜென்ம சாபங்களை களைந்து பூலோக வாழ்க்கைக்கும் ஆன்மிக பயணத்துக்கும் தயாராக்கினார்கள் , தயாராக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதைதான் பஞ்ச பட்சி என்று அழைக்கிறார்கள்.

விளக்கம் 

இந்த பஞ்ச என்ற சொல்லின் விளக்கம் நாம் அனைவரும் அறிந்த நீர் , நிலம் , காற்று மற்றும் நெருப்புதான். பட்சி என்பது இது மானிட பிறவிகளின் சூட்சும தொடர்புடைய உயிரினங்களைக் குறிக்கும். பஞ்ச பூதங்களின்  செயல்பாடுகளையும் அந்த பட்சியின் செயலையும் சேர்த்து இயக்க ஆற்றலாக மாற்றக் கூடிய ஒலியும் ஒளியும் குருவின் அன்பில்தான் இருக்கிறது.இதனால் ஒருவரின் பிறப்பின்  காலத்திற்கு ஏற்ப தேவையான அனுகூலங்களையும் திடத்தையும் குரு அருளாலே சாத்தியமாகும்

 

ஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்!!!

மனிதன் நாகரீகமடைந்த காலமான கிருதயுகத்தில் உருவான இந்து தர்மம் ஆறு
வழிபாட்டுமுறைகளைக் கொண்டது;இதையே ஷண்மதச்சாரியம் என்று நமது தேசத்தில்
அழைத்தனர்;

கிருதயுகத்தில் இருந்த ஆறு வழிபாட்டுமுறையானது,அடுத்து வந்த
திரேதாயுகம்,துவாபரயுகங்களில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து
கலியுகத்தின் துவக்கத்தில் 76 பிரிவுகளாக நமது இந்தியா முழுவதும்
பிரிந்துவிட்டன;இந்த 76 வழிபாட்டுப்பிரிவுகளால் இந்து தர்மம்
உள்பூசல்களால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இதைச் சரி செய்ய காலத்தை
இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் திருவுளம் கொண்டார்;

 இந்தியாவின் காலடியில்     (கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் கிராமம்
இது!) பிறந்த ஆதி சங்கரர் இந்தியா முழுவதையும் தனது 30 வயதிற்குள் நான்கு
முறை நடந்தே சுற்றி வந்தார்;இந்து தர்மத்தின் 76 வழிபாட்டுப்பிரிவுத்
தலைவர்கள்,மடாதிபதிகள்,துறவிகள்,சாதுக்களை சந்தித்து உரையாடியும்,வாதம்
செய்தும்,ஆன்மீகப் போட்டியிட்டும் மீண்டும் ஆறு வழிபாட்டுமுறைகளாக
மாற்றினார்;மீண்டும் நமது சனாதன தர்மத்தில் இருந்து வந்த உள்பூசல்கள்
வழக்கொழிந்து உயிரோட்டமான நிலையை எட்டியது.

பைரவ பூமியான காசியில் ஆதிசங்கரர் சில காலம் வாழ்ந்து
வந்தார்;அப்போது,ஒருநாள்,ஆதிசங்கரர் புனித கங்கையில் நீராடிவிட்டு தனது
சீடர்களுடன் தமது இருப்பிடம் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

காசி நகரத்தின் குறுகலான சந்துகளில் ஒன்றில் அவர் நடந்து வந்து கொண்டு
இருந்தபோது,எதிர்த்திசையில் ஒருபுலையன் வந்து கொண்டு
இருந்தான்;அருவெறுப்பான தோற்றத்துடன்,கைகளில் நான்கு
நாய்களைக்(ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்) கயிற்றில் கட்டிப்பிடித்துக்கொண்டு
வந்தான்;ஆதிசங்கரரை நெருங்கிய போது,அவனிடம், “சற்றே விலகிச் செல்”என்று
கத்தினார்.

இதைக் கேட்ட புலையன், “துறவியே! எதிலிருந்து விலகிப் போகச் சொல்கிறீர்கள்?

உங்கள் உடலைவிட்டு என்னுடைய உடல் விலகிச் செல்ல வேண்டுமா?

இவ்விரண்டு சரீரங்களும்(உடல்களும்) அன்னமய கோசம் தானே?

ஆன்மாவை விலகிப் போகச் சொன்னீர்களா?

எனக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றுதானே?

எதிலிருந்து எது விலகுவது?

எங்கிருந்து எங்கு விலகும்?

எனக்குத் தயவு செய்து விளக்கவும்”என்று பணிவாகக் கேட்டான்.

மேலும் அந்தப் புலையன், “சூரியனின் பிம்பம் எனது கலயத்துக்குள் இருக்கும்
கள்ளிலும் தென்படுகிறது;
இங்கு சூரியன் பரமாத்மா; அதன் பிரதிபிம்பம் ஜீவாத்மா;அந்த ஜீவாத்மா எந்த
உடலில் இருந்தாலும் ஒன்றுதானே. . .
அதுபோலவே தங்கக்குடத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும்,இந்த என்னுடைய கள்
கலயத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும் இந்த இரண்டுக்கும் வெளியே
வியாபித்திருக்கின்ற ஆகாசமும் ஒன்றுதானே?

புலையனின் கணீர் குரலும்,அந்தக் குரலில் இருந்த கருத்தும் ஆதிசங்கரருக்கு
வந்திருப்பது யார் என்பது புரிந்துவிட்டது.உடனே,அந்தப் புலையனின் காலில்
விழுந்து வணங்கினார் ஆதிசங்கரர்.வணங்கியப் பின்னர்,ஐந்து சுலோகங்களால்
அந்தப் புலையன் வடிவில் இருந்த காசி காலபைரவப் பெருமானை வழிபட்டார்.அந்த
ஐந்து சுலோகங்களுக்கு மநீஷா பஞ்சகம் என்று பெயர்.இந்த ஐந்து சுலோகங்களைப்
பாடி முடித்ததும்,புலையன் மறைந்து,காசியின் தலைவனும்,மனிதர்களின்
தலையெழுத்தை மாற்றுபவருமாகிய காசி காலபைரவப் பெருமான் காட்சியளித்தார்;

இந்த மநீஷா பஞ்சகத்தின் சுருக்கம்: ஒருவன் பிறந்த குலத்தையும்,அவனது
தோற்றத்தையும் வைத்து எடைபோடக் கூடாது;அவனது ஞானத்தைக்கொண்டே அவனை
மதிப்பிட வேண்டும்;

ஓம்சிவசக்திஓம்

சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு பற்றிய புத்தகம்

நமது ஐயா அவர்கள் ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறைகளை வீட்டிலேயே பின்பற்றும் விதமாக எளிமையான தமிழில் எழுதியிருக்கிறார்.
இதில்,பைரவர் ஓர் அறிமுகம்,பைரவ வழிபாட்டினால் கிடைத்த நற்பலன்கள்,எந்ததெந்த நாட்களில் எப்படி பைரவரை வழிபட வேண்டும்? பைரவர்களின் பட்டியல்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் எப்படி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் அதிலிருந்து முழுமையாக மீளலாம்? என்பதைப்பற்றியும் விவரித்திருக்கிறார்.பைரவ வழிபாடு பற்றிய முழுமையான விளக்கங்கள் இதில் இருக்கின்றன;வீட்டிலேயே எப்படி வழிபட வேண்டும் என்ற விளக்கங்களும் நிரம்பியிருக்கின்றன
விருப்பம் உள்ளவர்கள் aanmigaarasoo.com@gmail.com க்கு  மின் அஞ்சல் அனுப்பி வாங்கிக் கொள்ளலாம்.விலை மற்றும் இதர தகவல்கள் இ மெயிலில் தெரிவிக்கப்படும்.
இத்துடன் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் படம் கிடைக்கும்.
Subjectஇல் Wanted Bairavar Book என்று எழுதி,inbox இல் உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர்  போன்றவைகளை மட்டும் எழுதி அனுப்பினால் போதும்.
ஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன;அவைகளில் இல்லாத பல எளிய வழிபாட்டுமுறைகளை மக்கள் நலனுக்காகவும்,உலக நன்மைக்காகவும் சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தினால் மட்டுமே தொடர்ந்து ஸ்ரீகாலபைரவப்பெருமான் வழிபாடு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் வழிபாடு செய்ய முடியும்.தொடர்ந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே நமது கர்மவினைகள் விரைவாக தீரும்.

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 22.4.14செவ்வாய்) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு!!!நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;
பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர். 

33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம். 

34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்) 

35.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்=உற்சவராக!!! அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)
36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று!!! 

37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.


38.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
39.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

  சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=24.4.14 செவ்வாய்க்கிழமை  இருக்கிறது.
 
பெரும்பாலான (மாநகரங்களில் இருக்கும்)கோவில்களில்  மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.கோவில்களுக்குச் செல்ல இயலாமல் தவிப்பவர்கள் நமது ஆன்மீகக்கடல் மற்றும் அஷ்டபைரவா வலைப்பூக்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 108  போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிப்பது மிகுந்த பலன்களைத் தரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கவேண்டும்;


அடுத்த தேய்பிறை அஷ்டமி :ஜயவருடம்,சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=21.5.2014 புதன்கிழமை காலை 10.46 முதல் 22.5.2014 வியாழக்கிழமை காலை 8.28 வரை அமைந்திருக்கிறது.

$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்!!!
 
விரைவான பலன்கள் கிட்டிட வளர்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வது அவசியம்;இது தொடர்பான பதிவு நமது ஆன்மீக அரசு இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் வெளி வந்து கொண்டு இருக்கிறது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டும்!!!


நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளிவந்த,வெளிவந்துகொண்டிருக்கும் அத்தனை ஆன்மீக ரகசியங்களையும் வெளிப்படுத்தியவர்  ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள்! தமிழ் மக்களுக்காக இந்த தெய்வீக ரகசியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
இந்த ஆன்மீக ரகசியங்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வழிபாட்டுமுறையை குறிப்பிட்ட காலம் வரை பின்பற்றினாலே நிச்சயமாக உங்களின் நோக்கங்கள் நிறைவேறும்;அல்லது உங்களது நீண்டகால வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
 
இவை அனைத்து பொதுவானவையே! நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் பலருக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்களோ,பிரச்னைகளோ இருக்கத் தான் செய்கிறது;அதிலிருந்து விடுபட ஒரு ஆன்மீக ஆலோசனை தேவை.துல்லியமான ஆன்மீக ஆலோசனையைப் பெற ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்கலாம்.
 
பலருக்கு பல வருடங்களாக குடும்பச் சிக்கல்கள் அல்லது நீண்டகால ருணம் அல்லது தாங்க முடியாத சோகங்கள் இருக்கின்றன;அவர்கள் ஐயாவை சந்தித்து ஆன்மீக ஆலோசனை பெற வேண்டும்;அவ்வாறு பெற்ற ஆலோசனையை முறைப்படியும்,முழுமையாகவும் பின்பற்றினால் அவர்கள் விரும்பிய நிம்மதியான,சிக்கல்கள் தீர்ந்த வாழ்க்கையை பெறுவார்கள்.கடந்த 25 ஆண்டுகளாக ஐயாவை சந்தித்து தமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம்.


அதே போல உங்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களும் தீர ஐயா  அவர்களைச் சந்திக்க விருப்பமா? 

உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர்,போட்டோ,ஜாதக நகல் இவைகளுடன் என்ற aanmigakkadal@gmail.comமின் அஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யவும்.

Subject இல்Like to Meet என்ற வாசகங்களுடன் முன் பதிவு செய்யலாம்;ஒவ்வொரு மாதமும்  ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில்  சந்திக்கலாம்;தமிழ்நாட்டில் நீங்கள் எந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தாலும்,நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் பயணித்து சந்திக்க வேண்டியிருக்கும்;
 
யார் பெயர்,போட்டோ அனுப்பியிருக்கிறீர்களோ அவர்களுக்கு அனுமதிக்கான நேரமும்,சந்திக்கும் ஊரும் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவிக்கப்படும்;

யாருக்கு முன் அனுமதி கிடைத்திருக்கிறதோ, அவர்கள் மட்டுமே ஐயாவை சந்திக்க வர வேண்டும்;அவ்வாறு அனுமதி கிடைத்தவர்கள் தமது குடும்பத்தாரை அழைத்து வரலாம்;ஆருயிர் நண்பரை அழைத்து வர விருப்பம் எனில்,அவரையும் விண்ணப்பிக்கச் சொல்வதே நன்று.
போட்டோ,செல் எண்,வசிக்கும் ஊர் போன்ற தகவல்களை முழுமையாக தராதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்;ஏற்கனவே,முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்பாக அழைப்பு வரும்;
 
இதுவரை ஐயாவை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனைத்து சிக்கல்கள் தீரவும் சுலபமான வழி கிடைத்திருக்கின்றன;பலருக்கு பத்துவருடப் பிரச்னைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன;

சந்திப்பு ஒருங்கிணைப்பு
ஆன்மீகக்கடல்

சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?

பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)
இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.
 
ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.

தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.

முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)
ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!

உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!
(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)    

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.
3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.


ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008