ஒரு விமான ஓட்டியாவதை லட்சியமாகக் கொண்ட அப்துல்கலாம் பி.இ.முடித்து,பி.டெக்
முடித்தப் பின்னர் டெல்லியில் அதற்கான ஒரு எழுத்துத் தேர்வைச் சந்தித்தார்;எட்டு பணியிடங்களுக்காக
23 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது;கழுத்தை
நீட்டிக் கொண்டு கலாம் பெயர் வரிசையில் தன் பெயரைக் காணத் துடித்தார்; எட்டு பெயர்களிலும்
தன் பெயர் இல்லை;ஒன்பதாவது பெயராக அவர் பெயர் இருந்தது;மனம் வெறுத்துப்போனார்;வாழ்கை
சூனியமானதாகத் தோன்றியது.
செய்வதறியாது கால் போன போக்கில் நடக்கலானார்;டெல்லி ரயில் நிலையம் வந்தது;ஒரு
ரயிலில் பயணித்து,ஹரித்வார் சென்றடைந்தார்;அங்கே கங்கையில் குளித்துவிட்டு,அருகில்
இருந்த சிவானந்தா ஆஸ்ரமம் சென்றார்;அங்கே இருந்த சிவானந்தமகரிஷியை சந்தித்தார்.
‘அப்பனே,நீ விரும்பிய ஒன்று
கிடைக்கவில்லை; அதனால் மனமுடைந்துள்ளாய்;கவனமாய் கேள்.நீ விரும்புவது வாழ்வில் ஒரு
போதும் கிடைக்காது;ஆனால் வேறொரு துறையில் நீ பெயரும் புகழும் ஈட்டும் வகையில் பெரும்
சாதனை படைப்பாய்’ என்று சிவானந்தமகரிஷி ஆசியளித்தார்.
ஓரிரு நாட்கள் ஆசிரமத்தில் தங்கிவிட்டு கலாம் டெல்லிக்குத்திரும்பினார்;ராணுவத்தில்
அறிவியல் ஆலோசகருக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்ந்தார்;பின் ராணுவ
விஞ்ஞானி,குடியரசுத்தலைவர் என்ற பெரும் பதவிகளை வகித்தார்;
அவர் குடியரசுத்தலைவராக பணியாற்றிய போது நாடு முழுவதும் இருக்கும்
30 மாநிலங்களிலும் பயணித்தார்;பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளைச் சந்தித்தார்;அவர்களிடையே
தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் தூண்டினார்;இந்த இரண்டையும் கொண்டிருப்பவரே தன்னம்பிக்கை
நிறைந்தவராக இருக்க முடியும்.
தன்னம்பிக்கை நிறைந்தவர்களால் மட்டுமே சாதனையாளராக முடியும்;சாதனையாளர்கள்
நிறைந்த நாடுதான் வல்லரசு தேசமாக உயரும்.இந்தியா வல்லரசு நிலையை எட்டினால்,உலகத்தில்
போர் என்பதே மறைந்து,அமைதி நிறைந்த பூமியாக நாம் வாழும் பூமி மாறிவிடும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ