1990 ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் ‘நாற்பது நிமிடங்கள்’ என்ற நிகழ்ச்சியில்
காட்டிய ஆக்ராவைச் சேர்ந்த டிட்டுசிங் என்ற சிறுவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்;
தன்னை,முற்பிறவியில் கொன்றவர்களைப் பெயருடன் அடையாளம் சொன்னான்.பிபிசி செய்திக்குழு
அவன் சொன்னதைத் தங்கள் பங்குக்கு ஆராய்ச்சி செய்து விவரங்களைக் கண்டறிந்தது.
வட இந்தியாவைச் சேர்ந்த டிட்டுசிங் இரண்டரை வயதுள்ள போதே தன் முற்பிறவி
நினைவுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்;அவனுடைய பெயர் சுரேஷ் வர்மா என்றும்,மனைவி பெயர்
உமா என்றும்,இரண்டு பிள்ளைகள் அவனுக்கு இருப்பதாகவும் சொன்ன அவன் அவர்களுடைய பெயர்களையும்
சொன்னான்.ஆக்ராவில் அவன் வசித்ததாகவும் ரேடியோ,டிவி விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்திருந்ததாகவும்
சொன்ன அவன், அதன் விலாசத்தைக் கூட சொன்னான்.ஆரம்பத்தில் அவனை அவ்வளவாகப் பொருட்படுத்தாத
பெற்றோர் நாளாவட்டத்தில் தங்கள் மூத்த மகனை எதற்கும் ஆக்ராவிற்குப்போய் விசாரிக்கும்படி
சொன்னார்கள்.
டிட்டுசிங்கின் மூத்த சகோதரன் தன் தம்பி சொன்ன விலாசத்தைத் தேடி கண்டுபிடித்தான்;நிஜமாகவே
அங்கு அப்படி ஒரு டிவி,ரேடியோ கடை இருந்தது;உள்ளே சென்ற போது கல்லாவில் ஒரு விதவைப்
பெண்மணி அமர்ந்திருந்தார்;அவர் பெயர் உமா என்றறிந்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இரண்டு
பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று அவருடைய கணவர் பெயர் சுரேஷ்வர்மாவா என்று கேட்க,அந்தப்
பெண்மணி ஆம் என்று சொன்னார்.கடைசியில் தன் தம்பி சொன்னதையெல்லாம் சொல்ல அந்தப் பெண்மணி
அதிர்ச்சியடைந்தார்;டிட்டுசிங் சொன்னதுபோல தன் கணவர் துப்பாக்கியால் தான் சுடப்பட்டு
இறந்தார் என்பதையும் தெரிவித்தார்.
மறுநாளே உமா,டிட்டுசிங்கைப் பார்க்கப் பயணம் செய்தார்;டிட்டு சிங் உமாவை
சரியாக அடையாளம் கண்டுபிடித்ததோடு வேறு சில தகவல்களையும் சொன்னான்.அவையும் சரியாக இருந்தன;இரண்டு
நாட்கள் கழித்து டிட்டுசிங் ஆக்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டான்;பல பிள்ளைகளுடன்
விளையாடிக்கொண்டிருந்த முற்பிறவியின் குழந்தைகளை அடையாளம் சொன்னான்.கடைக்குச் சென்று
தன் மரணத்திற்குப் பின் செய்த மாறுதல்களைச் சரியாகச் சொன்னான்.தன்னைக் கொன்றவர்களின்
பெயர்கள்,எப்படிச் சுட்டார்கள்,எங்கு சுட்டார்கள் என்பதையெல்லாம் சொன்னான்.
பிபிசி செய்திக்குழு ஆக்ரா காவல்நிலையத்தில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்
மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பார்த்தபோது அதில் இருந்த அனைத்து விபரங்களும் டிட்டுசிங்
சொன்னதற்கிணங்கவே இருந்தன;பிபிசி செய்திக்குழுவின் காமிரா அந்த ரிப்போர்ட்களைப் படம்
பிடித்துக் காட்டியதோடு,டிட்டுசிங்கின் மழித்த தலையையும் காட்டியது;சுரேஷ் வர்மாவின்
தலையில் துப்பாக்கிக்குண்டு துளைத்த அதே இடத்தில் டிட்டுசிங்கின் தலையில் ஒரு மச்சம்
இருந்ததைக் காட்டினார்கள்.
ஆச்சரியமாக உள்ளதா? பூர்வஜன்மம் பற்றிய நம்பிக்கை இந்து மதம்,புத்தமதம்
போன்ற மதங்களில் மட்டுமல்லாமல்,கிறிஸ்தவ மதத்திலும் பண்டைய காலத்தில் இருந்ததாக வரலாற்று
ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.அதை ஆதாரபூர்வமாக டாக்டர் ப்ரையன் வீஸ் என்ற அமெரிக்க மனோதத்துவ
நிபுணர் சுட்டிக் காட்டுகிறார்.ரோமானியப் பேரரசர் கான்ஸ்டண்டைனும் அவர் தாயும் ஹெலெனாவும்
தங்கள் காலத்தில் மறுபிறவிகள் குறித்துப் பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில்
அழிக்கச் செய்தார்கள் என்று கூறுகிறார்.பல பிறவிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை மோட்சம்
பெற பல காலம் இருக்கிறது என்ற அசட்டையை மக்களிடையே
ஏற்படுத்தும்;அது சர்ச்சு அமைப்பைப் பலவீனப்படுத்தும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்
என்கிறார் அவர்.
நன்றி:ஆவிகள் உலகம்,பக்கங்கள் 32,33.வெளியீடு ஜீன் 2013