RightClick

தம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் நோய்களை குணப்படுத்தவும் செய்யும் அம்மன் வழிபாடு!!!


மெகாத் தொடர்களும்,நெடுந்தொடர்களும் ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி பிரிப்பது? பிரிந்தவர்களை எப்படி நோகடிப்பது? என்று சொல்லிக்கொடுக்கின்றன.இதன்விளைவாகவும்,தமிழ்நாட்டில் பல தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க விரும்பியும்(சுயமாக சிந்திக்கத் தெரியாமல்/சிந்திக்கத் தெரிந்தும் தெளிவான முடிவெடுக்க முடியாமல்) தனித்து வாழ்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.கணவன் மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும்;மனைவி கணவனின் பேச்சை மீறக்கூடாது;புரிந்து கொள்வதும்,விட்டுக்கொடுப்பதுமே ஒரு தம்பதியைச் சேர்ந்து வாழ வைக்கும்!
அரசியல்வாதிகள் அரசாங்கத்தைக் கெடுக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் அரசு இயந்திரத்தை கெடுத்து நாசமாக்கிவிட்டார்கள்.மக்கள் நலத்தை விடவும்,எப்படி தனது அதிகாரத்தையும்,தனது துறை மந்திரியின் அதிகாரத்தையும் பயன்படுத்தி பணம் பண்ணலாம்? என்ற நோக்கத்தில் செயல்படுவதால் தான் இன்று சராசரி மக்களின் தினசரி வாழ்க்கை மிகுந்த கஷ்டமும்,சோகமும்,விரக்தியும் நிரம்பியுள்ளதாக இருக்கிறது.
அதே போல,தொலைக்காட்சி ஓளிபரப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்ச்சியை உருவாக்குவதற்குப் பதிலாக வெறுப்பையும்,காம உணர்ச்சியைத் தூண்டி காமவெறியாகவும் மாற்றும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பதால் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகி தள்ளாடிக்கொண்டிருக்கிறது இந்து தர்மம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி ஒற்றுமையாக  இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததி சிறப்பாக வளரும்;எதிர்கால சந்ததியான குழந்தைகள் சிறந்த ஆளுமைத்திறன்களோடு வளர பெற்றோர்களின் அன்பும்,அரவணைப்பும் மிக அவசியம்.
எனவே,கணவன் மனைவி ஒற்றுமை வளரவும்,அவர்களின் கருத்து வேறுபாடு நீங்கவும் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் தாயுள்ளத்தோடு ஒரு எளிய அதே சமயம் சக்திவாய்ந்த சுயபரிகாரத்தை நமக்கு அருளியிருக்கிறார்.இந்த சுயபரிகாரத்தை பின்பற்றுவதால்,கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கி,மாங்கல்ய பலம் அதிகரிக்கும்;பல குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்கள் இருக்கும்;எத்தனையோ பரிகாரம் செய்து நோய்கள் சிறிதுகூட குணமாகாமல் இருக்கும்.
இந்த சுயபரிகாரத்தை காளியம்மன்கோவில்,மாரியம்மன் கோவில்,அம்மச்சியார் அம்மன்கோவில்,கோட்டை மாரியம்மன்கோவில்,செல்லியம்மன்கோவில்,அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில்,தண்டுமாரியம்மன்கோவில்,பட்டத்தரச்சி அம்மன்கோவில்,தங்கத்துரைச்சியம்மன் கோவில்,துர்கையம்மன் கோவில்,பெரிய நாயகி அம்மன்கோவில்,மஞ்சள் மாரியம்மன் கோவில்,செவ்வாடைக்காரியம்மன் கோவில்,முத்துமாரியம்மன் கோவில்,சக்தி மாரியம்மன் கோவில்,பூவாடைக்காரியம்மன்கோவில்,வனத்தாயி கோவில்,பேச்சியம்மன்கோவில்,வனபத்திரகாளியம்மன்கோவில்,ஆனந்தவல்லியம்மன்கோவில், பெரிய மாரியாத்தா கோவில்,சின்னத்தாயி கோவில்,ராஜேஸ்வரியம்மன்கோவில்,வேட்டுவம்மன் கோவில்,பண்ணாரியம்மன் கோவில்,பூங்கா காளியத்தா கோவில்,விஜயராஜேஸ்வரியம்மன் கோவில்,செங்கோட்டுவேலம்மன்கோவில்,செங்கோட்டையம்மாள் கோவில்,சங்கரேஸ்வரி கோவில்,புத்து மாரியம்மன் கோவில்,புற்றுக்காளியாத்தா கோவில்,பத்திரகாளியம்மன்கோவில் என்று எந்த உக்கிரமான அல்லது சாந்தமான அம்மன்கோவிலிலும் செய்யலாம்.

இதைச் செய்வதற்கு தேவையான ஒரே தகுதி:அசைவம் சாப்பிடக் கூடாது;தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளுக்கு மட்டும் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்து முடித்தப்பின்னர் நூறு நாட்களுக்குள் இந்த வழிபாட்டின் பலன்கள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.
 எலுமிச்சை சாதமும் சாம்பாரையும் வீட்டில் சமைத்து வைத்துக் கொண்டு,குறைந்தது கால் கிலோ விரலிமஞ்சள் வாங்கிக்  கொண்டு அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் செல்லுங்கள்;கோவில் பூசாரியிடம் இந்த விரலிமஞ்சளை காணிக்கையாகக் கொடுங்கள்;படையலாக வீட்டில் சமைத்த எலுமிச்சைச் சாதம்+சாம்பாரை அம்மன் பாதத்தில் கொஞ்சநேரம் வைக்கச் செய்யுங்கள்.அந்த நேரத்தில் நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும்(திருமணமாகி தனிக்குடும்பமாக வாழ்ந்து வந்தாலும்,அவர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொண்டு) சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூ.108/-தட்சிணை தர வேண்டும்.ஏனெனில்,பூசாரி மனம் மகிழ்ந்தால் தான் நமது கோரிக்கைக்கு அம்மன் நிறைவேற்றித்தருவாள்;
பிறகு,படையலை திரும்பப்பெற்றுக் கொண்டு அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.இப்படி எட்டு செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.எட்டாவது செவ்வாய்க்கிழமையன்று இத்துடன்,ரூ.1/-வீதம் 150 நாணயங்களையும் கொண்டு வர வேண்டும்.இந்த நாணயங்களால் பூசாரியிடம் சொல்லி அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின்  முடிவில்  அந்த ஒரு ரூபாய் நாணயங்களில் 140ஐ படையலை பகிர்ந்து கொடுக்கும்போது அனைவருக்கும் தர வேண்டும்;மீதி 10 ஐ நமது வீட்டுப்பூஜையறையில் பத்திரப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்வதால் நமது செல்வச் செழிப்பும் பலமடங்கு அதிகரிக்கும்.
சில கோவில்களில் நமது வழிபாடு நிறைவடையும்போது பக்தர்கள் வராமலிருக்க சந்தர்ப்பம் உண்டு;அந்த சமயத்தில் நமது படையலை நமது வீட்டுக்கு கொண்டு சென்று நமது ரத்த உறவினர்கள்,நண்பர்கள்,அண்டைவீட்டார்களுக்கும் தரலாம்.நாமும் சாப்பிடலாம்.ஆனால்,இந்த பரிகாரம் செய்வது பற்றி ,செய்யும்போதோ செய்தப்பின்னரோ பிறரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது;சொன்னால் இது பலிக்காது;

ஓம் ஆதிபராசக்தியே போற்றி!
 
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ