ஒரு கணவனின் இடத்தில் அறிவு அம்சமும், மனைவியின் இடத்தில் உணர்ச்சி அம்சமும்
இருந்து இயங்குகிறது;(சில தம்பதியரிடம் இதுவே மாறியும் இயங்கும்)ஒருவரை ஒருவர் புரிந்து
கொள்வதும்,புரிந்து கொண்டப் பின்னர் விட்டுக் கொடுத்துச் செல்வதுமே கணவன் மனைவி தத்துவம்;இதன்
மூலமாக மட்டுமே குழந்தைகளை பொறுப்புள்ளவர்களாக உருவாக்கிட முடியும்.கணவனும்,மனைவியும்
ஒருவருக்கொருவர் ஆலோசனை வழங்கியும்,கேட்டும் ஒரு பொதுவான முடிவை எடுத்துச் செயல்பட்டால்
அதுவே முன்னுதாரணமான குடும்பம் ஆகும்.
மாறாக ஒருவரை மற்றவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,தனது வழிகாட்டுதலின்
படியே அனைத்து நடக்க வேண்டும் என்று கருதினால் அங்கே வாழ்க்கை நடக்காது;வழக்காடு மன்றமாக
தம்பதியர் வாழும் வீடு மாறி,வழக்கிற்காக வருடக்கணக்கில் நீதிமன்றத்திற்கு மன உளைச்சலோடு
அலையவேண்டியிருக்கும்;
காலில் முள் தைத்துவிட்டது; அதைப் பிடுங்கி எறிந்தாக வேண்டும்; பெரும்பாலும்
சிறுவர்களுக்கு தான் இப்படி நடக்கும்;காரணம் அவர்கள் தான் முட்புதர்கள் பக்கம் விளையாடச்
செல்வார்கள்;காலில் முள் தைத்துவிடும்;சிறுவனோ வலியில் துடிப்பான்;எப்படியும் முள்ளை
எடுத்தாக வேண்டும்;முள்ளை எடுப்பதால் வலி இன்னும் அதிகமாகும்;விவரம் தெரிந்த பெரியவர்கள்
என்ன செய்வார்கள் தெரியுமா?
கவலைப்படாதே தம்பி! பச்சை மரத்தைப் பார்;முள் தானாக வெளிவந்துவிடும்
என்று கூறுவார்கள்;சிறுவனும் நம்பிக்கையுடன் பச்சை மரத்தை பார்ப்பான்;கவனம் பச்சைமரத்திற்குச்
சென்றதும் வெடுக்கென்று முள்ளைப் பிடுங்கி எடுத்துவிடுவார்கள்;
எப்படிப்பட்ட அற்புதமான அணுகுமுறை! இங்கு பிரச்னையின் ஒரு பகுதியய நம்பிக்கை
தீர்த்தது;மற்றொரு பகுதியை “அறிவு” சரி செய்தது;மேற்கண்ட அணுகுமுறை,நமது வாழ்க்கைப்
பிரச்னையின் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தும் போது வெற்றி பெற முடியும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ