காலையில் புதினா அல்லது கொத்தமல்லி அல்லது வெங்காயச் சட்னியுடன்
3 இட்லி அல்லது தோசை சாப்பிட எளிதில் ஜீரணமாகும்.
தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்பு: ஆப்பிள் அல்லது ஆரஞ்சு அல்லது கொய்யாப்பழம்
சாப்பிட புத்துணர்வுடன் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
தேர்வு முடிந்தவுடன்: சாதம் பருப்புடன் காய்கறிகள் நிறைந்த தயிருடன்
கூடிய முழுமையான மதிய உணவு சிறந்தது.ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின்னர் மறுநாள் தேர்வுக்குப்
படிக்கலாம்;
மாலை 4 மணி அளவில் ஒரு கப் பால் அருந்துவதும் மாலை 6 மணிக்கு வறுத்த
கடலை அல்லது பட்டாணி அல்லது வேர்க்கடலை சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தும்.இரவு 8 மணிக்கு
மதிய உணவைப் போலவே உணவை உண்டால் போதுமானது.
தேர்வுகள் முடிந்த பின்பு: ஊட்டச்சத்து பானத்துடன்(ராகி மால்ட் போன்றவை;டிவி
விளம்பரங்களில் வரும் ஊட்டச்சத்து பானங்களைத் தவிர்க்கவும்) பால்;இட்லி அல்லது தோசை
3,பொங்கல் ஒரு கப்;பழங்கள் ஒரு கப்;சாப்பாட்டுக்கு இடையிடையே இயற்கை விவசாயத்தின் மூலம்
விளைவிக்கப்பட்ட பழங்கள்;வறுத்த கடலைகள்;வேக வைத்த பயறு வகைகள்
பள்ளிக்கு மதியம் சாப்பிட எடுத்துச் செல்லும் உணவை ப்ளாஸ்டிக் டப்பாவில்
கொண்டு செல்ல வேண்டாம்.ஏனெனில்,உணவின் இயல்பான சுபாவத்தை அது மாற்றிவிடுகிறது.எவ்வளவு
தரமான ப்ளாஸ்டிக் டப்பாவாக இருந்தாலும்,காலையில் அதில் நிரப்பப்படும் சூடான உணவை அது
மெல்லக்கொல்லும் நஞ்சாக மாற்றிவிடுகிறது.எவர்சில்வர் பாத்திரங்களில்(எவர்சில்வர் டிபன்
பாக்ஸ்கள்) உணவைக் கொண்டு செல்லும் போது அதன் இயல்புத் தன்மை சிறிதும் மாறாமல் இருக்கும்;
நொறுக்குத்தீனிகளில் கடலை மிட்டாய்,கல்கோனா,முளை கட்டிய பயிறுகள்,சுண்டல்,பழங்கள்,நாவல்
பழங்கள்,வேர்க்கடலை போன்றவை சிறந்தது. குடிநீர் பாட்டிலையும் எவர்சில்வரில் பயன்படுத்துவது
ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
நன்றி:ஊட்டும் உணவில் ஊட்டம் உண்டா?பக்கங்கள் 6,7,8.9.