சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தவாசி அருகே உள்ள தெள்ளாறு என்ற கிராமத்தின்
தலைவராக ‘பெருங்கருணை’ என்ற பெண்மணி இருந்தார்.அவரது கணவர் செய்த ஒரு தவறின் காரணமாக,அவரைப்
பிடித்து கிராமப்பஞ்சாயத்தின் முன்பாக நிறுத்தினார்கள்.குற்றவாளிக் கூண்டில் நின்றது
பஞ்சாயத்துத் தலைவியின் கணவன்! தீர்ப்பு எவ்வாறு இருக்கப் போகிறது? என எல்லோரும் ஆவலாக
எதிர்பார்த்தனர்.
குற்றவாளி தனது கணவனாக இருந்தாலும் கூட வழக்கை விசாரித்து, அவர் செய்தது
குற்றம் தான் என்பதை அறிந்தார்;அதற்குத் தண்டனையாக ஊரில் இருக்கும் திருமூலட்டானநாதர்
திருக்கோவிலை 48 நாட்களுக்குச் சுத்தப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தார் பெருங்கருணை.
மறுநாள் தண்டனை துவங்கியது;தனது கணவனுக்கு உதவியாக பெருங்கருணை வாளியில்
தண்ணீரும் கையில் துடைப்பமும் எடுத்துக் கொண்டு உடன் இருந்து சுத்தம் செய்ய உதவினார்.
இதுபற்றிக் கேட்டதற்கு, “நேற்று தண்டனை அளித்தது கிராமத் தலைவரின் கடமை!
ஆனால்,தண்டனை பெற்றவர் எனது கணவர் என்பதால் அவரின் துயரத்தில் பங்கேற்பது மனைவியின்
கடமை!!”என்றார்.
அந்த அம்மையாரின் செயலைப் பாராட்டிய தெள்ளாறு மக்கள், ‘குடிக்குறை தீர்த்த
நாச்சியார்’ என்று பட்டம் வழங்கினர்.அந்த திருமூலட்டானநாதர்கோவிலின் வாசலில் அவருக்கு
சிலை ஒன்றை நிறுவினார்கள்.இன்றும் தெள்ளாறு சிவாலயத்தில் அந்த சிலையைக்காணலாம்.
நன்றி:மகான்களின் வாழ்வில்,பக்கம் 2, 7/3/14