RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 22தினமும் ஒரு மணி நேரம் வீதம் 90 நாட்கள் வரையிலும் அல்லது அதற்குப் பிறகும் ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை நாம் ஜபித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபித்து வந்தாலும் சரி;அல்லது தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதி வந்தாலும் சரி; நமக்கு ஏதாவது ஒரு தெய்வீக அனுபவம் கிட்டும்;அப்படிக்கிட்டும் போது அந்த அனுபவத்தின் மூலமாக பைரவர் நமக்கு ஏதோ ஒரு செய்தியை தெரிவிக்கிறார் என்றே அர்த்தம்;அதை எப்படிப் புரிந்து கொள்வது?


அந்த தெய்வீக அனுபவத்தை எவரிடமும் தெரிவிக்காமல்,நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களிடம் மட்டும் தெரிவித்தால்(9677696967=தினமும் மாலை 5 மணி முதல் 8 மணிக்குள்) அதற்குரிய ‘அர்த்தத்தைத்’ தெரிந்து கொள்ளலாம்;அவ்வாறு தெரிந்தப் பின்பு,நமது ஜபம்/108 முறை எழுதுதல் போன்றவைகளை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்;அப்படி பின்பற்ற நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு கடமை;அந்த அனுபவத்தையும்,அனுபவத்திற்கு ஐயா அவர்கள் சொன்ன விளக்கத்தையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே.

உதாரணமாக,தம்பதியரில் கணவனுக்கு 180 நாட்களுக்குப் பிறகு,ஒரு தெய்வீக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.அதை ஐயா சகஸ்ரவடுகரிடம் கேட்டதில் அதற்குரிய ஆன்மீக விளக்கத்தை கேட்டறிந்திருக்கிறார்;உடனே மனதில் ஒரு பெருமையான உணர்வு ஏற்பட்டிருக்கிறது.தனது மனைவிடம் சொல்லலாமா? என்று தானே முடிவெடுக்கிறார்.ஆனால்,அவருக்கே தெரியும். .. எந்த ஒரு சாதாரண ரகசியத்தையும் தனது மனைவி மனதுக்குள் பூட்டி வைக்க மாட்டார் என்று.இருந்தும் கூட தன்னில் பாதி தனது மனைவி என்று எண்ணி இவர் தனது மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.இவர் மனைவியோ தனது தங்கையிடம் சொல்லியிருக்கிறார்.அந்தத் தங்கைக்கு நாக்கில் கறுப்பு மச்சம் உள்ளவர்;அன்றோடு சரி.இவரால் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்யவே முடியவில்லை;மூன்று மாதங்களுக்குப் பிறகு,ஐயாவை நேரில் சந்திக்கிறார்.நிகழ்ந்ததைச் சொல்லுகிறார்.பைரவ வழிபாடு நின்றதற்கான காரணத்தை கண்டுபிடித்ததும்,இப்போது அந்த கணவர் பைரவ வழிபாட்டைப்பற்றி மனைவியிடம் கூடச் சொல்வதில்லை;


நாம் வாழ்ந்து வரும் இந்தக் காலத்தில் நம்மைச் சுற்றி வசிப்பவர்கள்,நம்முடன் பழகுபவர்களில் பெரும்பாலானவர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும்,நெகடிவ் எனர்ஜி உள்ளவர்களாகவுமே இருக்கிறார்கள்;யாரையெல்லாம் நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்புகிறோமோ,அவர்களை விடவும் எதார்த்தமாக வாழ்பவர்களை,அவர்களின் உண்மையான சுபாவத்தை எவரும் மதிப்பதில்லை;ஏனெனில்,இந்த எதார்த்தவாதிகள்,தம்முடன் பழகுபவர்களை அவ்வளவாகப் புகழ்வதில்லை;தேவைப்படும் போது கண்டிப்பதும்,எப்போதாவது பாராட்டுவதும்,நீதி,நேர்மை என்றுபேசுவதுமாக இருக்கின்றனர்;


பெரும்பாலான தெய்வீக அனுபவம் கனவில் தெரிகிறது.அந்தக் கனவுக்கான அர்த்தத்தை,ஐயாவிடம் அவரது ஓய்வு நேரத்தில் கேட்டறிந்தால் நாம் பைரவப் பெருமானின் மனதில் இடம்பிடித்திருப்பதை உணர்வோம்;ஆனால்,ஆன்மீகத்தில் இது முதல் படி மட்டுமே! நாம் முன்னேறிச் செல்ல வேண்டியது இன்னும் பல நூற்றுக்கணக்கான படிகள் இருக்கின்றன;
***


பரணி நட்சத்திரத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் தோன்றினார்;அதனால்,பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் பைரவப் பெருமானின் அருளாசி கிட்டும்;நடைமுறையில்,லக்னம் பரணியில் இருக்கப் பிறந்தவர்களுக்கும்,லக்னாதிபதி பரணி நட்சத்திரத்தில் நிற்க பிறந்தவர்களுக்கும்,நடப்பில் பரணி நட்சத்திரத்தில் எந்த ஒருகிரகமும் நின்று,திசை நடத்தினாலும் அவர்களுக்கும் பைரவ வழிபாடு விரைவான பலன்களைத் தருகிறது;


சதாசிவன் என்ற ஆதிசிவனின் அவதார நட்சத்திரமாக திருவாதிரை இருக்கிறது.திருவாதிரையில் பிறந்தவர்கள்,தினமும் பைரவ வழிபாடு செய்து வந்தால்,ஒரே நேரத்தில் பைரவப்பெருமானின் அருளும்,சதாசிவனின் அருளையும் பெறலாம்;அவ்வாறு பெற மாதம் ஒருமுறை வரும் திருவாதிரை நட்சத்திரநாளன்று இராகு காலத்தில் பைரவ வழிபாடு செய்து வர வேண்டும்;ஒரு வருடத்திற்கான திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்கள் பட்டியலை ஆன்மீகக்கடல் ஜனவரி 2014 இல் வெளியிட்டிருக்கிறோம்;அதைத் தேடி பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்வது நன்று.(மின்வெட்டு தான் காரணம்)


எந்த ஒரு சித்தரையோ,மகானையோ தரிசித்துவிட்டால் நமது கர்மவினைகள் கரைந்து போய்விடும்;நாம் வளமுடன் வாழத் துவங்குவோம் என்று நம்புகிறோம்;அவர்களின் ஆசியால் நாம் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிப்போம்;அவ்வளவுதான்;நம்முடைய கர்மவினைகள் தீர வேண்டுமானால் நாம் தான் ஏதாவது ஒரு ஆன்மீக நடவடிக்கையை தினமும் பின்பற்ற வேண்டும்;
&&&&&&&&&&&&&&&&&


நாள் ஒன்று;கல் ஒன்று என்ற சொலவாடை இன்றும் கிராமத்தில் இருக்கிறது.


அது போல ஒவ்வொரு நாளும் நாம் ஏழு நிமிடங்கள் ஒதுக்கினால் ஸ்ரீகால பைரவர் 108 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றியை நிதானமாக ஜபித்துவிடலாம்;


ஒவ்வொரு நாளும் நாம் 60 நிமிடம் ஒதுக்கினால் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை ஜபித்துவிடலாம்;அல்லது பைரவ சஷ்டிக் கவசம் ஜபித்து முடித்துவிடலாம்;


ஒவ்வொரு நாளும் 25 நிமிடம் ஒதுக்கினால் 108 முறை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதி முடித்துவிடலாம்;


இதில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதுமானது;
அனைத்தையும் நானே தினமும் செய்வேன் என்று அடம்பிடித்தால் அது பேராசை! வெறும் பேராசை அல்ல;ஆன்மீகப் பேராசை!!! இது குழப்பத்தில் தான் முடியும்.


பதிலாக,தம்பதியாக இருப்பவர்கள் எனில்,ஒருவர் 108 போற்றியையும்,மற்றவர் 1008 போற்றியையும் ஜபிக்கலாம்;அல்லது இருவருமே ஒரே நேரத்தில் ஒரே ஒரு போற்றியை ஒன்றாக ஜபிக்கலாம்;அவ்வாறு ஜபித்தால் இன்னும் விரைவான பலன்களை பைரவப்பெருமான் அருளுவார்;

ஏனெனில்,தம்பதியாக பைரவப்பெருமானை வழிபடும் போது அந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு இன்னும் அதிகமான வலிமை உண்டு;
$$$$$$$$$$$$

பனிரெண்டாம் வகுப்புக்கு ஆண்டுவிடுமுறை ஆரம்பித்திருக்கிறது.வீட்டிலேயே இருக்கும் மாணவ,மாணவிகள் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதலாம்;வீட்டிற்கு அருகிலேயே பழமையான சிவாலயம் இருந்தால் அங்கே சென்று தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதலாம்;அவ்வாறு எழுதும் போது கால பைரவப்பெருமானின் சன்னதி முன்பாக அமர்ந்து  தான் எழுதவேண்டும் என்ற நியதி இல்லை;கோவிலில் எழுத கூச்சப்படுபவர்கள் வீட்டில் பூஜையறையில் தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் எழுதலாம்;ஆண்டுத்தேர்வு முடிவுகள் வரும் வரை தினமும் எழுதியதை எமக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்;


ஒரு நாளுக்கு  ஒரு 108 முறை மட்டுமே ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுத வேண்டும்.மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கட்டுரை நோட்டில் எழுதவும்.எழுத ஆரம்பித்தால்,108 முறை எழுதி முடிக்கும் வரை செல்போன் பேசக் கூடாது;டிவி பார்க்கக் கூடாது;பாதியிலேயே எழுந்து போகக் கூடாது;

மாணவிகள் ஒரு மாதத்தில் 25 நாட்கள் எழுதினால் போதுமானது;

மாணவ,மாணவிகள் அசைவம் சாப்பிடுவதை இந்த இரண்டு மாதங்கள் மட்டுமாவது நிறுத்தியப்பின்னர்( புரோட்டா,முட்டை,முட்டையில் இருந்து தயாராகும் அனைத்துமே அசைவமே) எழுதவும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ