RightClick

4.5.14 கோ வலம் நிகழ்ச்சி பற்றி ஓர் முக்கிய அறிவிப்பு

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை,அதாவது கி.பி.1894 ஆம் ஆண்டுக்குப்பிறகு,திருவாதிரை நட்சத்திரமும்,பஞ்சமி திதியும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை வந்திருக்கிறது.இந்த நன்னாளில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வாசலில் மாலை 4 மணி வாக்கில் கோ வலம் நிகழ்ச்சி துவங்குவதாக அறிவித்திருந்தோம்;

இதில் கலந்து கொள்வதால் குலதெய்வ வழிபாட்டினை செய்ய இயலாதவர்கள்,அந்தக் குறை நீங்கப் பெறுவார்கள்;

ஆன்மீகத்தின் வாசல்களான ஜோதிடம்,அருள்வாக்கு,எண்கணிதம்,வாஸ்து,நீரோட்டம் பார்ப்பவர்களுக்கு அளவற்ற தெய்வீக அருள் கிட்டும்;

குறிப்பிட்ட தேதிகளுக்குள் பிறந்திருப்பவர்கள் இந்த கோ வலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அவர்களுடைய அனைத்து கர்மவினைகளில் இருந்தும் மீண்டு நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்;

2014 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் நமது தமிழ்நாட்டில் 24.4.2014 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது;ஆனால்,வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் 16.5.2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.

பாராளுமன்றத்தேர்தல் ஏப்ரல் மாதமே நமது தமிழ்நாட்டில் முடிந்துவிட்டாலும்,வாக்கு எண்ணிக்கைக்கான தேதிக்குள் நமது அரிய “கோ”வலநாள் 4.5.2014 அமைந்திருக்கிறது;

இந்த “கோ”வல நிகழ்ச்சிக்குரிய ஒருங்கிணைப்பிற்கான அனுமதி கிட்டவில்லை என்பதை இதன் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.ஆன்மீக ஆர்வலர்கள்,நமது வாசக,வாசகிகள்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தவர்கள் அனைவரையும் பொறுத்தருளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எமது அடுத்த ஆன்மீக நிகழ்ச்சிக்கான அறிவிப்பு விரைவில். . .

இப்படிக்கு 

ஆன்மீக அரசு குழுமம்
www.aanmigakkadal.com

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள் அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப் பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள் மனிதன் மிருகம் போல உண்டு ,இனப்பெருக்கம் செய்த காலத்தில் இருந்து சற்றே மேம்பட்டு,சிந்திக்கத் தொடங்கிய காலத்தை பழைய கற்காலம் எனலாம்.இந்த பழைய கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக்கோயில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிஉற்ற நிலையில் காணப்படுகின்றன.டெல்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புசிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட திருவாசகம் ஓதப்படுகிறது.இங்கே இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியாததால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள்.மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன ,.

சுமத்ராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம் ,கணபதி சிலை,நந்தி சிலை,ஆகியவை இருக்கின்றன.போர்போநியாவில் உள்ள மலைகுகையில் சிவன் ,விநாயகர் சிலைகள் உள்ளன.

சியாம் நாட்டிலும் கம்போடியாவிலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன்கோயில் இருக்கிறது.இந்த கோவிலில் இப்போதும் பொங்கல் விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 6000 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட சிவாலயங்களும், அவற்றின் இடிபாடுகளும் கிடைத்துள்ளன.இங்கு கிடைத்த களிமண் எட்டில் சிவா என்ற பெயர் காணப்படுகிறது.

பாபிலோனியர்கள் தங்கள் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்ற பெயரும் உள்ளது. இச்சொல் சூரியனைப்போல சிவந்த சடையை உடையவன் என்று பொருள் தரும்.இரண்டு புறங்களிலும் முத்தலை சூலமும்,கையில் மழுவாயிதமும் கொண்ட சிவபெருமான் காளையின் மீது நிற்பதாக இருக்கின்ற சிலை ஒன்று கிடைத்திருக்கிறது.மேலும் பாபிலோனியர்களின் மாத பெயர்களில் ஒன்று சிவனின் பெயரைக் கொண்டதாக இருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன்சிலையும் ,சிவன் உருவம் பொறிக்கப்பட்ட வெண்கலத்தட்டும் கிடைத்திருக்கிறது. இந்தத் தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர்.இவ்வுருவம் வலக்கையில் மழுவும் ,இடக்கையில் ஆருமுனைகளைக் கொண்ட இடியேறுந்தாங்கியபடி இட பத்தின் மீது நிற்பதைப்போலப் பொறிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள பாலைவனம் ஒன்றுக்கு சிவன் என்று பெயர் வழங்கி வருகிறது.இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகிறார்கள்.அந்தக் கடவுளுக்கு நந்தி வாகனம் இருக்கிறது.கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களைப் பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்திருக்கின்றனர். பௌத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம் என்பதில் சிவலிங்கத்திற்குப் பெருமதிப்பு தரப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகிறது.

மேலே கூறப்பட்ட சான்றுகளின் மூலமாக உலகின் பல்வேறு இடங்களிலும் சிவன்கோயில்களும், சிவவழிபாடும்,சிவனின் பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும் விழாக்களும் நடந்து வந்தன என்பதை அறிந்து கொள்கிறோம்.உலகமெங்கும் சிவ வழிபாடு பரவிக் கிடந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன.

மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ச்சுனனைப் பார்த்து எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம் என்கிறார்.

"ஓம் நமசிவாய " என்ற சிவா நாமத்தை அன்போடு உச்சரித்தாலே பல பிறவிகளில் செய்த பாவம் விலகும்.சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற சாதாரண எலி,மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன.இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல வழியைப் பெறுவதற்கு துணையாக சிவமந்திரம் ,சிவதரிசனம் ,சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஆகும்.இவை மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் இன்றியமையதாவை.

எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன் சிவபெருமான் .எல்லாம் சிவமயம், எங்கும் சிவமயம்,எதிலும் சிவமயம் என்பதே ஆன்றோர் கொள்கை.

செல்வமே சிவபெருமானே - நூலிலிருந்து

ஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!! (அவசியமான மறுபதிவு)

கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.
2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.
இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.
விஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.1.2014 முதல் 13.4.2015 வரை)
9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;
6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;
22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;
5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;
21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;
1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;
12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;
18.4.14 வெள்ளி இரவு 8.01 முதல் 10.01 வரை;
26.4.14 சனி காலை 6.48 முதல் 7.48 வரை;காலை 11.48 முதல் 1.48 வரை;மாலை 5.48 முதல் 7.48 வரை;இரவு 11.48 முதல் 1.48 வரை;
29.4.14 செவ்வாய் காலை 4.55 முதல் 5.55 வரை;
15.5.14 வியாழன் மாலை 6.05 முதல் இரவு 8.05 வரை;
26.5.14 திங்கள் விடிகாலை 3.40 முதல் 5.40 வரை;
11.6.14 புதன் மாலை 4.15 முதல் 6.15 வரை;
22.6.14 ஞாயிறு விடிகாலை 2.32 முதல் 4.32 வரை;
9.7.14 புதன் மதியம் 2.36 முதல் 4.36 வரை;
19.7.14 சனி இரவு 12.10 முதல் 2.10 வரை;
5.8.14 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;
15.8.14 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;
2.9.14 செவ்வாய் காலை 11.04 முதல் மதியம் 1.04வரை;
12.9.14 வெள்ளி இரவு 8.20 முதல் 10.20 வரை;
29.9.14 திங்கள் காலை 9.44 முதல் 11.44 வரை;
9.10.14 வியாழன் மாலை 6.30 முதல் 8.30 வரை;
26.10.14 ஞாயிறு காலை 7.34 முதல் 9.34 வரை;
5.11.14 புதன் மாலை 6.36 முதல் இரவு 8.36 வரை;
23.11.14 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை;
3.12.14 புதன் மதியம் 3.04 முதல் மாலை 5.04 வரை;
20.12.14 சனி காலை 4.16 முதல் 6.16 வரை;
30.12.14 செவ்வாய் மதியம் 1 முதல் 3 வரை;
16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;
27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;
13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;
23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;
11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;
23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;
8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விரக்தியைப் போக்கிய சிவானந்த மகரிஷி!!!

ஒரு விமான ஓட்டியாவதை லட்சியமாகக் கொண்ட அப்துல்கலாம் பி.இ.முடித்து,பி.டெக் முடித்தப் பின்னர் டெல்லியில் அதற்கான ஒரு எழுத்துத் தேர்வைச் சந்தித்தார்;எட்டு பணியிடங்களுக்காக 23 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது;கழுத்தை நீட்டிக் கொண்டு கலாம் பெயர் வரிசையில் தன் பெயரைக் காணத் துடித்தார்; எட்டு பெயர்களிலும் தன் பெயர் இல்லை;ஒன்பதாவது பெயராக அவர் பெயர் இருந்தது;மனம் வெறுத்துப்போனார்;வாழ்கை சூனியமானதாகத் தோன்றியது.

செய்வதறியாது கால் போன போக்கில் நடக்கலானார்;டெல்லி ரயில் நிலையம் வந்தது;ஒரு ரயிலில் பயணித்து,ஹரித்வார் சென்றடைந்தார்;அங்கே கங்கையில் குளித்துவிட்டு,அருகில் இருந்த சிவானந்தா ஆஸ்ரமம் சென்றார்;அங்கே இருந்த சிவானந்தமகரிஷியை சந்தித்தார்.

 ‘அப்பனே,நீ விரும்பிய ஒன்று கிடைக்கவில்லை; அதனால் மனமுடைந்துள்ளாய்;கவனமாய் கேள்.நீ விரும்புவது வாழ்வில் ஒரு போதும் கிடைக்காது;ஆனால் வேறொரு துறையில் நீ பெயரும் புகழும் ஈட்டும் வகையில் பெரும் சாதனை படைப்பாய்’ என்று சிவானந்தமகரிஷி ஆசியளித்தார்.

ஓரிரு நாட்கள் ஆசிரமத்தில் தங்கிவிட்டு கலாம் டெல்லிக்குத்திரும்பினார்;ராணுவத்தில் அறிவியல் ஆலோசகருக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்ந்தார்;பின் ராணுவ விஞ்ஞானி,குடியரசுத்தலைவர் என்ற பெரும் பதவிகளை வகித்தார்;

அவர் குடியரசுத்தலைவராக பணியாற்றிய போது நாடு முழுவதும் இருக்கும் 30 மாநிலங்களிலும் பயணித்தார்;பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளைச் சந்தித்தார்;அவர்களிடையே தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் தூண்டினார்;இந்த இரண்டையும் கொண்டிருப்பவரே தன்னம்பிக்கை நிறைந்தவராக இருக்க முடியும்.


தன்னம்பிக்கை நிறைந்தவர்களால் மட்டுமே சாதனையாளராக முடியும்;சாதனையாளர்கள் நிறைந்த நாடுதான் வல்லரசு தேசமாக உயரும்.இந்தியா வல்லரசு நிலையை எட்டினால்,உலகத்தில் போர் என்பதே மறைந்து,அமைதி நிறைந்த பூமியாக நாம் வாழும் பூமி மாறிவிடும்.

 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

டாக்டரேட் பட்டம் வாங்க வைத்த பழையசோறு!!!

இரவில் இரண்டு கைப்பிடி அளவு சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்;காலையில் எழுந்ததும்,அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்க வேண்டும்;அத்துடன் சிறிய வெங்காயம்  மூன்றை நறுக்கிப் போட்டு கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்; இதற்குப்பெயரே நீராகாரம்! இதுதான் கோடை காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் காலை உணவு.இப்படி தினமும் ஒருவேளை நீராகாரத்தைப்பருகி வந்தால் என்ன நிகழும்?

ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும் 

என்ற பழமொழியினைச் செயல்படுத்துவோம்;ஆற்றுநீரும்,அருவி நீரும் இல்லாத ஊர் மக்களுக்கு வரப்பிரசாதமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட எளிய உணவே இந்த நீராகாரம்.

இந்த நீராகாரத்தை தினமும் அருந்தி வந்தால்,பக்கவாதம்,அசதி,முடக்குவாதம் போன்ற வாதநோய்கள் குணமாகிவிடும்;இதன் ஆரம்பக்கட்டமும் சீரடைந்துவிடும்;
பித்தநோய்களான வயிற்றுப்புண்,ரத்தமூலம்,சருமநோய்களும் வராது;மேலும் கோடை கால நோய்களான வயிற்றுவலி,சருமத்தில் தோன்றும் வேனல்கட்டி,வியர்க்குரு,தேக அனல்(வெளியே அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்குள் வந்ததும் உடலில் ஏற்படும் உணர்வு) போன்றவை ஒருபோதும் வராது.

சோற்றுநீரின் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச்சாலையில் ஆராய்ந்து பி.எச்.டி.பட்டம் பெற்றுவிட்டார்.இதே போல நமது பல பழக்கவழக்கங்கள்,மரபுகள் மேல்நாட்டினரால் விஞ்ஞான வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன;

நன்றி:தொழில் & பல்சுவை மாத இதழ்,பக்கம் 13,வெளியீடு டிசம்பர் 2013


கோடை காலத்தை சமாளிக்க டிவி விளம்பரங்களில் வரும் கலர் கலரான குளிர்பானங்களை அருந்தாதீர்கள்;அவைகளை அருந்தி முடித்ததும் நமக்கு தண்ணீர் தாக உணர்வுதான் ஏற்படும்.
அதற்குப்பதிலாக,இளநீர்,மோர்,தர்ப்பூசணி போன்றவைகளை தினமும் சாப்பிடலாம்;காதிபவன்கள் மற்றும் சித்தா மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கும் குல்கந்து வாங்கி தினமும் சாப்பிடலாம்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

நமது பழக்கவழக்கத்தை மாற்றிய காலனியாதிக்கம்!!!

இப்போதைய கல்விமுறை நமது வயிற்றுப்பசியை மட்டும் போக்கக் கூடிய கல்விமுறை;பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 120 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை மிரட்டி,கட்டாயப்படுத்தி நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விமுறை;அப்படி நடைமுறைப்படுத்திய போதே இதை,இதனால் ஏற்படும் சீரழிவுகளை அப்போதே சுவாமி விவேகானந்தர்,ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் எதிர்த்தார்கள்;அந்த எதிர்ப்பில் பொதிந்திருக்கும் ஆதங்கத்தை சுதந்திரம் பெற்றப் பிறகு,ஆட்சிக்கு வந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை;அதனால் தான் தற்காலத்தில் ஒழுக்க நெறிகள் பாடாவதியாகிவிட்டன;

மனிதனை மனிதனாக்கும் பாரம்பரியக் கல்வியானது தற்காலத்தில் சின்மயா மிஷன்,ராமக்ருஷ்ண மிஷன்,வித்யா பாரதி போன்ற ஒரு சில அமைப்புக்களால் நடத்தப்படும் பள்ளிகள்,கல்லூரிகளில் மட்டுமே இன்றும் கற்பிக்கப்பட்டுவருகின்றன;

ஆங்கிலேயன் தமது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக அவனது பழக்கத்தை நம்மிடையே திணித்தான்;தமிழர்களாகிய நம்மிடையே காபி,டீ அருந்தும் பழக்கம் இருந்ததில்லை;அது போல தமிழர்கள் இடையே ஒரு நாளுக்கு மூன்று வேளை உணவு உண்ணும் வழக்கமும் இல்லை;
காலையில் நீர் ஆகாரம் தான் உணவு.மதிய சாப்பாடு பகல் 12 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்கள்;இரவு உணவை மாலை 6 மணிக்குள் முடித்துவிடுவர்;ஒரு போதும் இரவு நேரத்தில் உணவில் தயிர்சேர்ப்பதில்லை;

நன்றி:தமிழ் மண்ணே வணக்கம்,9.2.14

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ