RightClick

நமது ஆரோக்கியத்தை காக்கும் பாரம்பரிய உணவுகள்

நம் உணவில் கலந்திருக்கும் கலப்படங்கள் பற்றி விழிப்புணர்வு மிக மிக குறைவாக இருக்கிறது;இன்று நமது தமிழ்நாட்டில் 75% பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்;இதற்குக் காரணம் கடந்த 20 ஆண்டுகளில் டிவி விளம்பரங்களால் கவரப்பட்டு சிறுவயதில் இருந்தே மேல்நாட்டு தின்பண்டங்களுக்கு அடிமையானதுதான்! இதன் தொடர்ச்சியாக இப்போது 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையே உருவாகிவிட்டது.மேல்நாட்டு உணவுகளை நாம் சாப்பிடப் பழகும் முன்பு இந்த சூழ்நிலை இருந்ததில்லை;


நமது சிறு தானிய உணவுகளை நாம் மறந்துவிட்டோம்; கம்பஞ்சோறு எல்லாம் ஏழைகள் தான் சாப்பிடுவார்கள் என்ற எண்ணம் பெரும்பாலானவர்கள் மனதில் இருக்கிறது.அந்தக் காலத்தில்(கிராமங்களில் 1980 வரை;மாநகரங்களில் 1970 வரை) சிறு தானிய உணவுகளை சாப்பிட்டதால் தான் ஆரோக்கியமாக இருந்தனர்;நம்மிடம் இருந்து அவல் டன்கணக்கில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு போய் வெளிநாட்டில் டயட் ஃபுட்(Diet Food) ஆகத் தயாரிக்கிறார்கள்.அதை பல மடங்கு விலைக்கு நமது நாட்டில் விற்பனை செய்கிறார்கள்.சரி! அதிலாவது சத்துக்கள் கிடைக்குமா? என்றால் அதுவும் இல்லை;சுவைக்காக நிறைய கெமிக்கல்கள் சேர்த்து பாக்கெட்ட்டில் அடைத்து விற்பனைக்கு வருகிறது.அதைச் சாப்பிட்டால் வியாதிதான் வரும்.ஒரிஜினல் மாம்பழத்தை விடப் பல மடங்கு இனிப்புதரும் என்ற பெயரில் மேங்கோ ஜீஸ் விற்கப்படுகிறது.எல்லாமே கெமிக்கல் எசன்ஸ்தான்.நிச்சயம் இது எல்லாமே உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை;


வாரத்துக்கு நான்கு நாட்களாவது சிறுதானியங்கள்,நெல்லிக்கனி,மாதுளை போன்றவற்றை அவசியம் சாப்பிட வேண்டும்.இதெல்லாம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கக் கூடியவை;உணவே மருந்தாக நமக்கு நமது பாரம்பரிய உணவுகள் இருக்கும்போது தனியாக எதற்கு மருந்து? என்பதை உணர்ந்தாலே பல கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்;இது தொடர்பான விபரங்களை அறிய உங்கள் பகுதியில் வசித்து வரும் நியூரோதெரபிஸ்டுகள்,சித்த மருத்துவர்கள்,ஆயுர்வேத மருத்துவர்கள்,நேச்சுரோபதி மருத்துவர்கள்,மூலிகை மருந்துகள்/மூலிகை அழகு சாதனப்பொருட்கள்/மூலிகை உணவுப்பொருட்கள் தயாரிப்பவர்கள்,அக்யூபஞ்சர் மருத்துவர்கள் இவர்களில் யாரையாவது நட்பு கொண்டால் அறிந்து கொள்ளலாம்.


மது அருந்துவது தவறான பழக்கம் என்ற மனோபாவத்தை தற்போதைய திரைப்படங்கள் அழித்துவிட்டன;இன்று மது அருந்துவது ஒரு நாகரீகச் செயலாக ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது;மது அருந்துவது இதயத்திற்கு நல்லது என்ற கருத்தும் பரப்பப்பட்டுவருகிறது.எந்த மதுவும் இதயத்திற்கு நல்லதல்ல;இதயத்திற்கு நல்லது எனில் முருங்கைக்கீரை சாப்பிடுங்கள்.

விருந்தோம்பல் என்பது மனிதன் நாகரீகமடைந்ததில் இருந்து இன்று வரையிலும் தமிழ்மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வரும் பண்பாடு;இதை தற்போது மெல்ல மெல்ல நாம் மறக்கத் துவங்கிவிட்டோம்;மற்றவர்களுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட உதவி செய்ய நாம் தயாராக இல்லை;சிக்னலில் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு ஒரு ரூபாய் கொடுக்கத் தயங்குகிறோம்;அதுவே ஹோட்டலில் சர்வசாதாரணமாக நூறு ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறோம்.காரணம் அதை கவுரவமாக நினைக்கிறோம்.

ஜப்பானில் ஒரு பழக்கம் இருக்கிறது.அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கையில் புத்தகங்கள் இருக்கும்;இரும்பு அடிக்கும் வேலை செய்யும் ஒரு ஜப்பானியராக இருந்தாலும் கூட,பயணிக்கும் போது புத்தகம் வாசிப்பார்.வாசிக்கும்பழக்கம் தான் ஒருவனை சிறந்த மனிதனாக்கும்;வாசிப்பு பழக்கம் உங்களை,உங்கள் ஆளுமைத்திறனை உயர்த்தும்;இந்த சமூகத்தையும் உயர்த்தும்.வாசிப்புப் பழக்கம் என்பது இலக்கில்லாத ஆனால் சுவாரசியமான நமது அறிவை விசாலமாக்கும் பயணம்........

நன்றி:தமிழ் மண்ணே வணக்கம்,26.2.14