RightClick

பாரம்பரிய உணவின் பெருமைகளை நாம் மறக்கலாமா?

முன்பெல்லாம் சர்க்கரை வியாதி என்றால் அது பணக்காரர்களுக்கு வரும் வியாதி என்று சொல்லப்பட்டது.ஆனால்,இன்று 40% பேர்களுக்கு இந்த வியாதி இருக்கிறது.டிவி விளம்பரங்களாலும்,சினிமா காட்சிகளாலும் மேல்நாட்டு உணவுகள் பிரபலப்படுத்தப்பட்டுவிட்டன;அதனால்,நமது பாரம்பரிய உணவுகள் சாப்பிடுவதை சிறுமையாக நினைக்கிறோம்.பாதுகாப்பு இல்லாத சூழல்,அக மகிழ்ச்சி இல்லாத மண வாழ்க்கை = இந்த மூன்றும் தான் அத்தனைபிரச்னைகளுக்கும் அடிப்படை. இதில் உணவைச் சரி செய்து கொண்டால் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களில் பொறுப்பானவர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன் படி குடும்பச் சிக்கல்களை எதிர்கொள்வதும்,குடும்பத்தோடு வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்வதும் முழுமையான நிம்மதி வாழ்க்கைக்கு அடிகோலிவிடும்.

துரித உணவுகள்(ஃபாஸ்ட் புட்ஸ்) சுவையாகவும்,கையில் ஒட்டாமலும் இருக்க 107 வகையான உப்புகள் சேர்க்கப்படுகின்றன.இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது அந்த உணவுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறோம்.இட்லி,சாதா தோசை,பழைய சோறு இவைகளை விட சிறந்த உணவுகள் உலகில் எந்த நாட்டிலும் உருவாக்கப்படவில்லை;இந்த உண்மையை பல சர்வதேச உணவு ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன;ஆனால்,நம்மில் பலர் இட்லி,தோசை என்றாலே ஏதோ தீண்டத்தகாத பொருளைப் போல பார்க்கிறோம்.

உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது வெளிநாட்டுப்பழங்களை அதிகவிலை கொடுத்து வாங்கிச் செல்கிறோம்.எல்லாச் சத்துக்களும் நிரம்பிய கொய்யாப்பழத்தை வாங்குவதால்,நம் கவுரவம் பாதிக்கப்படுவதாக நினைக்கிறோம்.பப்பாளிப்பழத்தைச் சாப்பிட கேவலமாக இருக்கிறது.அது கையில் ஒட்டுவது அருவெருப்பாக இருக்கிறது.அரிசி வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.மஞ்சளாக,லேசான கறுப்பாக இருந்தால் அது நல்ல அரிசி இல்லை என்று நினைக்கிறோம்.கறுப்பு என்றாலே பிடிக்கவில்லை என்ற மனோபாவம் கடந்த 25 ஆண்டுகளில் விளம்பரங்கள்,டிவி விளம்பரங்கள் மூலமாக நம்மிடையே உருவாக்கப்பட்டுள்ளன.இந்த எண்ணம் மாறினால் தான் கேன்சர்,ரத்தக்கொதிப்பு,சர்க்கரை போன்ற தொற்றாத வாழ்வியல் நோய்களில் இருந்து விடுபட முடியும். 

ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வராதுனு ஒருபக்கம் விளம்பரம் பண்றாங்க.நம்ம ஆட்களும் ஆலிவ் ஆயிலை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.அந்த ஆயில் நம்ம ஊரு ஆயில் கிடையாது.அது அந்நிய நாட்டுப் பொருள்.அவங்களோட சந்தைக்கு நம்மை இழுக்க இப்படி பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துறாங்க. உலகத்துலேயே நல்ல பொருட்கள் எது தெரியுமா?

நம்ம தாத்தா பாட்டிகள் பயன்படுத்திய உணவுப்பொருட்கள் தான்.அதுல வியாபார நோக்கம் கிடையாது.உங்க தாத்தாவுக்கும்,பாட்டிக்கும் நூடுல்ஸ் தெரியுமா? பீட்சா,பர்கர் தெரியுமா? வியாபாரத்துக்காகத் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை சாப்பிடாதீர்கள்.உங்கள் ஊரில் விளையும் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யுங்கள்.அதில் அத்தனை சத்துக்களும் இருக்கின்றன.நமது ஆரோக்கியமே அதில் தான் இருக்கின்றன.


தெரியாத உணவுகளை விட தெரிந்த பாரம்பரிய உணவுகளே நம் வாழ்க்கைக்கு உகந்தது.பாரம்பரிய உணவுகளை என்று கைவிட்டோமோ,அன்றே நம்மை எல்லா வியாதிகளும் இறுக்கமாக பிடித்துக் கொண்டுவிட்டன.

டெல்லியை ஆண்ட மொகலாய மன்னன் ஓளரங்கசீப்பின் மகள் குதிரை ஏறுவதற்கு ஆசைப்பட்டார்.அதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டதுதான் சுடிதார்.இப்போது அந்த உடைதான் உலகம் எங்கும் பரவி விட்டது.நமது தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக சினிமா ஹீரோயின்கள் சுடிதாரை அணிந்து நடித்தே நமது பாரம்பரிய உடையான தாவணியை மியூசியத்திற்கு அனுப்பிவிட்டனர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ