ராஜபாளையம்: ஒரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சங்களால் ஆன, ஏழுஅடி
ருத்ராட்சலிங்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காலை, ராஜபாளையம் மாயூரநாத
சுவாமி கோயிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு லிங்கத்திற்கு, சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது. நகர்வலம் வந்து சங்கரன்கோவில் செல்கிறது. ஏற்பாடுகளை,
மாயூரநாதசுவாமி கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன், பன்னிரு திருமுறை மன்ற
நிர்வாகிகள் சின்னுரெட்டி, கோவிந்தராஜ், தொழிலதிபர் ரவிராஜா மற்றும்
பளையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
நகர்வலத்திற்கான ஏற்பாடுகளை, மக்கள் விழிப்புணர்ச்சி பிரசார இயக்க தலைவர்
கார்மேகம், சங்கரன்கோவில் சக்தி பீட நிர்வாகி சந்திரா சுவாமிகள், ஓட்டுனர்
பயிற்சி பள்ளி நிர்வாகி சேதுராமலிங்க ராஜூ, சட்ட உரிமைகள் கழக மேற்கு
மாவட்ட செயலாளர் ரமேஷ் செய்துள்ளனர்.