கலியுகத்தின் கடைசி நாளன்று, பூமியில் ஒரு
செடிகொடியும் இராது;உண்ணும் உணவுக்காக மனிதன்,மற்ற உயிரினங்களை சாப்பிட்டு பூமியில்
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இல்லாத நிலை வந்து சில மாதங்கள் ஆகியிருக்கும்;எனவே,மனிதனின்
உணவாக இன்னொரு மனிதனே இருப்பான்;தன்னைத் தானே சிருஷ்டித்துக்கொள்ளும் சுபாவத்திற்காக
மட்டுமே திருமணம் என்பது நடைபெறும்.நவக்கிரகங்களின் செயல்பாடுகள் பூமியைப் பாதிக்காது;அந்த
அளவுக்கு விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றிணைந்து மனிதன் கடவுளின் சக்திகளை கருவிகள் மூலமாக
நினைக்கும் போதெல்லாம் பயன்படுத்தத் துவங்குவான்.
அன்பு,விட்டுக்கொடுத்தல்,பரிவுணர்ச்சி,பொறுமை,
பெருந்தன்மை,விசுவாசம்,உள்ளன்பு போன்ற உணர்ச்சிகள்
காணாமல் போயிருக்கும்;
கிராம தேவதைகள் பூமியை விட்டு இடம் பெயர்ந்து
போயிருக்கும்;கங்கை நதியின் பாதையில் மணல் துகள்கள் மட்டுமே இருக்கும்;இமயமலையும் அண்டார்டிகாவும்
உருகி இயற்கையான பனியை நேரில் பார்க்க முடியாது.சூரியன் மேற்கே உதிக்கும்;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ