RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 181.சிந்திக்கும் திறன் இருப்பதாலேயே பூமியில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் உயர்ந்த நிலையை மனிதன் எட்டினான்;ஆமாம்! நாம் எட்டினோம்.சிந்தனையானது நமது மனதிலிருந்து உருவாகிக் கொண்டே இருக்கிறது.நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் நாம் தூங்கும் நேரம் தவிர எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.மனதைப் பற்றி ஆராய்ந்து அதை ஒரு துறையாக்கி மனோதத்துவம் என்ற துறையை உருவாக்கினார்கள்;பல கல்லூரிகளிலும்,பல்கலைக்கழகங்களிலும் ஒரு பாடமாக,பட்டப்படிப்பாக வைத்துள்ளனர்.

மனமானது மேல் மனம்,ஆழ்மனம் என்று இருவகைப்படுகிறது.மனதிற்கு வடிவம் கிடையாது;உருவம் இல்லை;தோற்றம் இல்லை;ஆனால்,இறைவனின் படைப்பில் மனம் என்ற ஒன்றுடன் பிறப்பதால் நமக்கு ‘பகுத்தறிவு’ உருவானது;காட்டிலிருந்து கிராமம்,நகரம்,நாடு,அரசியல் என்று நாமே நம்மை கடந்த ஐந்து கோடி ஆண்டுகளில் நாகரீகமடைந்துவிட்டோம்;

ஆழ்மனதின் சுபாவத்தை அறிந்து கொள்ள ஏராளமான புத்தகங்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன.மனம் தரும் பணம் என்ற பெயரில் கண்ணதாசன் பதிப்பகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்திக்கிறோம்?என்பதை எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகம் விவரிக்கிறது.நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்தித்தால் நமது வாழ்க்கையை சீரமைக்கலாம்? என்பதை அறிய ‘வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பலர் இந்த மாதிரியான புத்தகங்களை வாசித்திருப்பார்கள்;அவர்கள் ஆழ்மனதின் சக்திகள் என்ற பெயரில் ஒருசில பதிப்பகங்கள் புத்தகம் வெளியிட்டுள்ளன.அவைகளை வாங்கி திரும்பத் திரும்ப வாசிப்பது நன்று.இதன் மூலமாக நமது ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வித்தையை நாமே கற்றுக்  கொள்ளலாம்.ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால்,நாமே இப்பிறவியில் சிறந்த சாதனையாளராக நமது துறையில் உயரமுடியும்.

ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் உள்ளவர்கள் Power of Sub-Concius Mind,Creative Visuvalization, How do use our MindPower என்ற தலைப்புகளில் இணையத்தில் தேடினால் மின் நூல்களும்,வலைப்பூக்களும்,புத்தகங்களும் கிடைக்கும்;அதை திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமாக நமது மனநலத்தை வலுப்படுத்தமுடியும்.

2.வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டால்,கண்டிப்பாக வேப்பிலையை வாசலில் சொருகி வைக்க வேண்டும்;வேப்பிலையை அம்மை போட்ட குழந்தையின் கையில் தர வேண்டும்;தினமும் ஒரு வேளை மட்டுமாவது அந்த குழந்தையை இளநீர் அருந்த வைக்க வேண்டும்;முடிந்தால் மூன்று வேளைகளும் இளநீர் அருந்த வைக்கலாம்;ஆனால்,ஒரு போதும் செவ்விளநீர்(சிகப்பு இளநீர்) அருந்த தரவே கூடாது.

3.முட்டையை சைவத்தில் சேர்த்துவிட்டதாக ஒரு கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்கள்,வார இதழ்கள்,மாத இதழ்கள் மூலமாகப் பரப்பப் பட்டது;எக்காலத்திலும் முட்டையும் சரி,முட்டை கலந்த உணவுகளும் சரி;அசைவமே! செயற்கையான முறையில் உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே!! முட்டை சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்டதாகத்தான் அர்த்தம்.முட்டை சாப்பிட்டுவிட்டு பைரவ வழிபாடு செய்வது தவறு.பைரவ வழிபாடு மட்டுமல்ல;எந்த வழிபாடும் செய்வது தவறு.


4.மஹான்களின் போட்டோவையோ,சிலையையோ வைத்து வழிபடும் பழக்கம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பரவி வருகிறது;இதன் மூலமாக பக்தி உணர்வு இளம்பெண்கள்,இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவருகிறது; கொஞ்சம் உள்முகமாக சிந்திக்கும் திறனும்,மனதுக்குள் ஆன்மீகத் தூண்டலையும் இந்த வழிபாடுகள் உருவாக்குகின்றன;ஆனால்,ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றுகிறது.அப்படித் தோன்றும் போது பைரவ வழிபாட்டின் மூலமாக விரைவாகத் தீர்வு காணலாம்.வெறும் பாடல் பாடுவதன்மூலமாகவோ,நெய்தீபம் ஏற்றுவதன் மூலமாகவோ நமது பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.


கடன் தீர,திருமணத் தடை நீங்கிட,பிரிந்த கணவன் மனைவி சேர,பூர்வீகச் சொத்துக்களுக்கான பிரச்னை தீர,வழக்குகள் தீர,கல்வித் தடை நீங்கிட,குழந்தை படிப்பில் கவனம் வர,குடிப்பழக்கத்திலிருந்து மீள,வராத கடன் வசூலாக,சம்பளம் உயர,வருமானம் அதிகரிக்க,தொழில் சிறக்க,விற்காத சொத்துக்கள் விற்பனையாக,நீண்டகால நோய்கள் தீர, சகோதர சகோதரி ஒற்றுமை ஏற்பட,பித்ருதோஷம் விலக, செவ்வாய் தோஷம் நீங்கிட,ஸர்ப்பதோஷம் நீங்கிட,முன்னோர்கள் சாபம் தீர,பிரேத சாபம் விலக,சொந்த வீட்டில் குடியேற,சொந்தமாக வீடு கட்ட,மனம் சார்ந்த குழப்பங்கள் நீங்கிட,சினிமாத் துறை முதலான கலைத்துறையில் சாதிக்க,சொந்தத் தொழிலில் முன்னேற,அரசியலில் ஜெயிக்க,தகுந்த ஆன்மீக குரு அமைய,தகுந்த ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட,தியானம் கைகூட,சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைய,ஜோதிடத் துறையில் பிரபலமடைய,பதவி உயர்வு கிட்டிட,குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற என்று ஒவ்வொரு சிக்கல்களுக்கும் ஒவ்வொருவிதமான பைரவ வழிபாடுகள் இருக்கின்றன;இவைகளில் பொதுவான சிக்கல்கள் தீர www.ashtabairava.blogspot.in என்ற வலைப்பூவில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் பைரவப்பரிகாரங்களைத் விவரித்திருக்கிறோம்.தனிப்பட்டச் சிக்கல்கள் தீர ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திப்பதே நன்று.


4.ஒன்பது கிரகங்கள்,இருபத்தேழு நட்சத்திரங்கள்,பனிரெண்டு ராசிகள் இவைகள் தான் ஜோதிடத்தின்  ஆணிவேர்.நமது காலகட்டத்தில்,கோடிக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன;சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பது ஒரு தொழில்;காவல் துறையில் பயன்படுத்திய வாகனங்களை வாங்கி விற்பது ஒரு தொழில்;வெளிநாடுகளில் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அவைகளை சுத்தப்படுத்தி விற்பது ஒரு தொழில்;வீடு வாடகைக்குப்பிடித்துக் கொடுப்பதும் ஒரு தொழில்;கப்பலில் பயணிப்பவர்களுக்கு உணவு தயாரித்துத் தருவதும்(Marine Catering) ஒரு தொழில்;இப்படி கோடிக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன;இதில் எந்தத் தொழில் ஒருவர் பார்ப்பார் என்பதை வெறும் பனிரெண்டு ராசிக்கட்டங்களைக்கொண்டு சொல்வது எப்பேர்ப்பட்ட சாமர்த்தியம்!!!.ஒரு ஜோதிடர் மாதம் தோறும் வெளிவரும் ஜோதிட மாத இதழ்கள் அனைத்தையும் வாங்கி அவைகளை வாசிக்க வேண்டும்;வாசித்தப் பின்னர் அவைகளைப் பத்திரப்படுத்த வேண்டும்;தனது ஜோதிட சீடர்களுக்கு மட்டுமே அவைகளைத் தர வேண்டும்;பழமையான ஜோதிட நூல்களை நூலகத்தில் தேடித் தேடி வாசிக்க வேண்டும்;இவைகளைச் செய்யாதவர்கள் ஜோதிடத் துறையில் ஜெயிக்க முடியாது.இன்றைய காலகட்டத்தில் இதை Knowledge Update என்று கூறுகிறார்கள்.

5.ஜோதிடர் ஒருவரிடம் ஜோதிட ஆலோசனை கேட்கச் செல்லும் போது ஒருசிலர் தமது சிந்தனைக்குத் தகுந்தாற்போல பலன்களை அந்த ஜோதிடர் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்;இது தவறு. தவிர,ஜோதிடர் பொதுவான பலன்கள் சொல்லி முடிக்கும் வரை அமைதி காத்து,இறுதியில் தான் கேட்க வந்த கேள்விகளை கேட்கலாம்; ஜோதிடம் பார்க்கும் முறைகளில் இது ஒன்று.
சிலர்,ஜாதகத்தைக் கொடுத்த உடனே,கேள்வி கேட்டு,அதற்குரிய பதிலை மட்டும் தெரிந்து கொள்கின்றனர்;பொதுப்பலன்கள் கேட்பதில்லை;இதனால்,சில நிமிடங்களில் ஜோதிடம் பார்க்கும் வேலை நிறைவடைந்துவிடும்.


6.காலபைரவப்பெருமான் செய்த வீரதீரச் செயல்கள் நிகழ்ந்த இடங்களே அட்டவீரட்டானங்கள் ஆகும்.இந்த அட்டவீரட்டானங்களுக்கு ஒருவர் ஒருமுறை சென்று வர குறைந்தது நான்கு நாட்கள் ஆகும்;அவ்வாறு போய்விட்டு வந்தவர்கள் தனது முற்பிறப்பு சார்ந்த சிலபல ரகசியங்களை அறிந்து கொள்வார்;அதன் மூலமாக இப்பிறவியில் நமது வாழ்க்கையை இன்னும் வசதியாகவும்,நிம்மதியாகவும் அமைத்துக் கொள்ளலாம்;ஆனால்,நான் இப்படி அட்டவீரட்டானம் போய்விட்டு வந்துவிட்டேன்;எனக்கு எனது அனைத்து முற்பிறவி உண்மைகளும் தெரியப் போகிறது என்று ஒரே ஒருவரிடம் கூடச் சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்,அவர்களுக்கு முற்பிறப்பு சார்ந்த ரகசியம் கிடைக்க தாமதமாகும்;ஏனெனில்,தன்னைப்பற்றிய ரகசியத்தை காப்பாற்றத் தெரியாதவர்களால்,ஆன்மீகத்தில் சூட்சுமரகசியங்களை அடைய முடியாது;


7.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,ஒவ்வொரு செடியும்,மரங்களும் மனிதர்களைப்போல பேசியிருக்கின்றன;அப்போது அந்த மூலிகைகளிடம் பேசி தொகுக்கப்பட்டவையே இன்றைய மூலிகை மருத்துவக்களஞ்சியம் ஆகும்.சித்தர்களின் தலைவர் அகத்தியர் கலியுகத்தில் தவறான மனிதர்களுக்கு சரியான மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் சென்றடையக் கூடாது என்பதற்காக செடிகள்,மரங்களைப் பேசாமல் இருக்கும் விதமாக சாபமிட்டுள்ளார்;சித்த வைத்தியர்களிடம் நட்பு கொண்டு இது தொடர்பாக நீங்கள் ஏராளமான மூலிகை ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.

8.நாத்திகக்கொள்கைகளின் பரவலாலும்,பிற மதங்களின் வளர்ச்சியாலும் நம்மால் நம்ப முடியாத பல தெய்வீக ரகசியங்கள் இன்று வெகுசிலரிடம் மட்டுமே மறைமுகமாக இருக்கின்றன;உதாரணமாக,ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் நோக்கு வர்மக் கலையைப் பற்றி பார்ப்போம்;சில விநாடிகளிலேயே எதிரே இருக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் மனதை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நாம் விரும்பும் தகவலை அவனி/ளிடமிருந்து பெறலாம்;நாம் நினைப்பதை அவனை/ளைச் செய்ய வைக்க முடியும்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,அதாவது சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் நோக்கு வர்மப்படைப்பிரிவு என்று ஒரு பிரிவு இருந்திருக்கிறது.தற்காலத்தில் தமிழ்நாட்டில் இந்த நோக்கு வர்மக் கலை அறிந்தவர் மொத்தமே மூன்று ஆசான்கள் இருந்தால் அதுவே அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிட பூமி என்ற மாத இதழில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளிவந்தது.12 ஆண்டுகள் குருகுலத்தில் சித்த வைத்தியம்,பிராணயாமம் பயில வேண்டும்;அதற்குப்பிறகு,தகுதி உள்ளவர்களுக்கே இந்த நோக்கு வர்மக் கலையை பயிற்றுவித்துள்ளனர்;மற்றவர்கள் சித்த வைத்தியராகவோ,யோகா ஆசிரியராகவோ தனது வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த பாகத்தில் 1 ஆம் கருத்தில் கூறப்பட்டிருப்பது மனம் சார்ந்த உண்மைகளை அறிந்து கொள்வது தொடர்பானது;உலகில் இருக்கும் அனைத்து மனோதத்துவ நூல்களைக் கற்றாலும் நமது மனதின் சக்தியில் 1% மட்டுமே அறிந்தவராக முடியும்.நோக்கு வர்மம் கற்றால் நமது மன சக்தியில் 5% மட்டுமே அறிந்தவராக முடியும்.

9.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;மது அருந்துவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு,ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை வீதம் ஒரு வருடம் வரை மட்டுமாவது தினமும் எழுதி வர வேண்டும்.அவ்வாறு எழுதி வந்தால்,இது வரை நம்மைத் தாக்கி வந்த அனைத்து துன்பங்களும்,சோகங்களும் 90 வது நாளில் இருந்து குறையத் துவங்கும்;ஒரு வருடம் வரை எழுதினால், சராசரி மனிதனாக வாழத் துவங்கலாம்;

தினமும் ஒரே இடத்தில்,ஒரே நேரத்தில் எழுதுவதன் மூலமாக பைரவப்பெருமானின் அருள் விரைவாகக் கிடைக்கும்;இது அனுபவத்தில் கிடைத்த உண்மை!


10.அவதானம் என்றால் கவனக்குவிப்பு என்று பொருள்.1980 வரை அவதானிகள் நமது நாட்டில் வாழ்ந்துள்ளார்கள்.அஷ்ட அவதானி என்றால் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;தசவதானி என்றால் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;சத அவதானி என்றால் ஒரே நேரத்தில் 100 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பெயர்;சகஸ்ர அவதானி என்றால் ஒரே நேரத்தில் 1000 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்.நாம் இந்த அவதானிகளின் பரம்பரையில் வந்தவர்களே! நாமும் முயற்சித்தால் இந்தக்கலையை மீண்டும் நமது தமிழ்நாட்டில் உயிர்ப்பிக்கலாம்;இம்மாதிரியான அரிய,அபூர்வக்கலைகள் நமது நாட்டில் இருப்பதை அறிந்த ஆங்கிலேயன் நமது நம்மை நமது பண்பாட்டிலிருந்து பிரித்தான்;எப்படி ?
கல்வித் திட்டத்தில் கைவைத்தான்;குருகுலக் கல்வி,திண்ணைப் பள்ளிக்கூடம் போன்றவைகளை அழித்துவிட்டு,மெக்காலே கல்வித் திட்டத்தை நமது நாட்டில் கட்டாயப்படுத்தி திணித்தான்; அப்போது நமது நாடு முழுவதும் 3,75,000 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன;அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவ,மாணவியும் தனது 18 வயதிற்குள் 22 மொழிகளில் சரளமாகப்பேசும் ஆற்றலுடன் இருந்தார்கள்;சமஸ்க்ருதத்தில் பேசுவதை கவுரவமாக நினைத்தார்கள்;மெக்காலே நமது நாடு முழுவதும் சுற்றிவந்து நமது இந்து தர்மத்தின் ஆணிவேர் இந்த குருகுலக்கல்வியும்,திண்ணைப் பள்ளிக்கூடங்களுமே என்பதை உணர்ந்தான்.எனவே,இதை அழித்தால் தான் இந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்து தர்மத்தை அழிக்க முடியும் என்று இங்கிலாந்திற்கு அறிக்கை அனுப்பினான்;அப்படி அனுப்பிய போது இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் என்பது ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்தது;அதுவும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இருந்தது;ஆதாரம்: A Beautiful Tree