RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 15
1.கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி என்ற பாடலை இன்றைய ஜெனடிக் என் ஜினியரிங் ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபித்திருக்கிறது.உலகில் குரங்கு இனத்திலிருந்து மனிதனாக நாகரீகமடைந்தது நமது தமிழ்நாட்டில் தான்;அன்றைய தமிழ்நாடு இன்றைய திருப்பதியில் இருந்து இன்றைய இலங்கைக்கு தெற்கே 2000 சதுர கி.மீ.தூரம் வரை பரவியிருந்தது;அங்கே வாழ்ந்து வந்த நமது தமிழ் மூதாதையர்களுக்கு ஒரு விசேட வரம் இறைசக்தியால் வழங்கப்பட்டிருந்தது;தாம் விரும்பும் போது மரணமடையலாம்;அதுவரையிலும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வாழ்ந்து கொண்டே இருக்கலாம் என்பதே அந்த வரம்!நீங்கள் இந்தக் கருத்தை நம்பாவிட்டாலும்,உண்மை தான்!!!

2.நாம் நமது குழந்தைகளை வேறு மதத்தினர் நடத்தும் பள்ளிக்கு அனுப்புவதாக வைத்துக் கொள்வோம்;அங்கே தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறோம்;ஆனால்,நிஜத்தில் அங்கே பள்ளிக் கல்வி பயிலும் நமது மகனும்,மகளும் கற்பது என்ன? நாம் பிசாசைக் கும்பிடுகிறோம் என்று நம்மிடமே சொல்லும்;அங்கே பூவைப்பதும்,பொட்டு வைப்பதும் தடைசெய்யப்படுகிறது;வேறு மதத்தினர் பயிலும் பள்ளியில் பாடத்தைச் சொல்லித் தருகிறார்களோஇல்லையோ; நமது சனாதன தர்மத்தினை வெறுக்கவும்,அவர்கள் மதமே உயர்ந்தது என்ற எண்ணம் உருவாகும் விதமாகவும் ஐந்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் ‘தயார்’படுத்துகின்றனர்;

நமக்கோ காலையில் வேலைக்குச் சென்று இரவில் வீடு திரும்பவே நேரம் சரியாக இருக்கிறது.இதில் எங்கே நமது குழந்தைகளோடு குலதெய்வம் கோவிலுக்கும்,நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலுக்கும் செல்ல நேரம் இருக்கிறது? 

ஏழு வயதிற்குள் அடிக்கடி கோவிலுக்கு நமது குழந்தைகளை அழைத்துச் சென்றால் தான் அவர்களுக்கு பக்தியுணர்வு உருவாகும்;என்பது மனோதத்துவ ஆராய்ச்சியில் கிடைத்த உண்மை.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்தோடு குலதெய்வகோவிலுக்குச் சென்று வழிபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்;ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு செல்கிறோமா?

ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை அன்று சைவ வழிபாடு செய்பவர்கள் அம்மன்கோவிலுக்கு அல்லது

 பிரதோஷத்தன்று அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு அல்லது வைஷ்ணவர்கள் ஒவ்வொரு ஏகாதசியன்றும் அருகில் இருக்கும் பழமையான விஷ்ணு ஆலயத்திற்கும் செல்ல வேண்டும்;செல்கிறோமா?

வாரம் ஒரு நாள் செல்போனை அணைத்துவைத்துவிட்டு,குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்கிறோமா?
********************************************************************************
3.சரி,பள்ளியில் தான் நமது சனாதன தர்மத்தின் கருத்துகள் கிடைக்கவில்லை என்று பார்த்தால்,
வீட்டுக்குள்ளேயே விஷமான கருத்துக்களை பதிய வைக்கும் தொலைக்காட்சியும் அதன் சானல்களும் வரத் துவங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன;ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் வீதம் ஐந்து ஆண்டுகள் வரையிலும் ஒரு குழந்தை டிவி பார்த்தால் அதன் படைப்பாற்றல் சிதைந்துவிடும்;சிந்திக்கும் திறன் மங்கிவிடும்;எந்த ஒரு சிறு பிரச்னையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இல்லாமல் போய்விடும்;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

4.400 ஆண்டுகளுக்கு முன்பே ஆந்திரமாநிலத்தில் பிறந்த மகான் வீரபிரம்மம் சொன்ன கருத்துக்கள் இன்றும் அப்படியே பலிக்கின்றன;அவர் தனது காலஞானம் என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்;
கலியுகத்தில் பணம் சம்பாதிக்கும் கல்வியை மட்டுமே படிப்பார்கள்;கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஈஸ்வர பக்தியை மனிதன் கண்டுபிடிக்கும் நிழல்படமானது அழித்துவிடும்;
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
5.நமது தேசமானது புவிக்கோளத்தில் வெப்ப மண்டலத்தில் அமைந்திருக்கிறது.எனவே,இங்கே அனைவருக்கும் வியர்வை சுரப்பது சர்வசாதாரணச் சம்பவம்.அதுவும் தலையிலும்,நெற்றியிலும் சுரக்கும் வியர்வையானது நீர் சார்ந்த நோய்களை சுலபமாக உருவாக்கிவிடும்;இதைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் நெற்றி நிறைய விபூதி பூசும் பழக்கத்தை உருவாக்கினர்;இப்படி தினமும் நெற்றி நிறைய விபூதி பூசுவதால் தலை மற்றும் நெற்றியில் சுரக்கும் வியர்வையை விபூதியானது உள்வாங்கிக் கொண்டு,ஆவியாக்கிவிடும்;நமது தலைப்பகுதியின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்;

ஒரு வெளிநாட்டுக்காரர் நமது மதுரைக்கு சுற்றுலா வந்தார்;அவர் இங்கே இருக்கும் இந்துக்கள் நெற்றி நிறைய விபூதி பூசுவதைக் கண்டு,ஏன் சாம்பலை இப்படி நெற்றி நிறைய பூசுகிறீர்கள்? என்று கேட்டார்.

என்றைக்காவது இந்த உடல் எரிந்து இந்த சாம்பலாகப் போகிறது.எனவே,நான் என்ற அகங்காரம் இல்லாமல் அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதற்காக எங்கள் முன்னோர்கள் செய்து வைத்த ஆன்மீக கடமை இது என்று பதிலளித்தார் மதுரைக்காரர்.
இந்த பதிலால் அந்த வெளிநாட்டுக்காரர்,இந்து தர்மத்தை ஆராயத் துவங்கிவிட்டார்.நமது மதுரைக்காரர் சொன்னது உண்மைதானே?

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ