RightClick

நேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!!!

காலத்தை இயக்குபவராக ஸ்ரீகாலபைரவர் இருக்கிறார்;அவரது சுவாசமே வாக்கியப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணித பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது;

யாருக்கு லக்னத்துக்கு இரண்டாமிடத்து அதிபதி ஆட்சி அல்லது உச்சமாக இருக்கிறதோ அவர்களுக்கு ஜோதிடம் வரும்;
 
எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் குரு இருந்தாலே அவர் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்;
 
எந்த லக்னமாக இருந்தாலும் இரண்டாமிடத்து அதிபதியின் திசை வந்தால் அவர் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்;
 
எந்த லக்னமாக இருந்தாலும் அவருக்கு குரு மஹாதிசை அல்லது புதன் மஹாதிசை வந்தாலும் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்.
 
ஒரு மனிதன் நேரடியாகக் கற்றுக் கொடுத்து உணரக்கூடிய கலைகள் நமது நாட்டில் மட்டுமே தோன்றியவை;(இவைகளை தபால் மூலம் கற்றுக்கொண்டாலும்,அதன்மூலமாக ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க நிச்சயமாக ஒரு நேரடி குரு தேவை;புத்தக அறிவு ஒரு கட்டத்திற்கு மேல் கற்பதில் சோர்வையோ,தடுமாற்றத்தையோ தரும்;)அவைகளில் ஜோதிடம்,வாஸ்து,எண் கணிதம்,உச்சாடனம் என்ற ஆலய வழிபாட்டு மந்திரமுறைகள்,யாகங்கள் நடத்தும் கலை;சாமுத்ரிகா லட்சணம்,மூலிகை மருந்து தயாரித்தல்,மூச்சைக் கட்டுப்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்கவும்,நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தும் சரக்கலை,இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள வைக்க உதவும் பஞ்சபட்சி சாஸ்திரம்,கோவில்களை கட்டிட உதவும் சில்ப சாஸ்திரம்,சைவ வழிபாட்டு விதிமுறைகளை போதிக்கும் ஆகமங்கள்,மருந்தில்லாத மருத்துவமான வர்மக்கலை,அடுத்தவரின் எண்ணங்களை சில நொடிகளில் கட்டுப்படுத்தும் நோக்கு வர்மம் போன்றவை முக்கியமானவை ஆகும்.
 
 
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இவை அனைத்தையும் ஒருவரே கற்றுக் கொள்ள 12 ஆண்டுகள் ஆகும்;இவைகளைத் தான் குருகுல முறையில் ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டனர்;இதனால் உலகிலேயே சர்வ சக்தி வாய்ந்த சமுதாயமாக நமது இந்து சமுதாயம் விளங்கியது;அந்நியர் படையெடுப்புகள்,பிற மதங்களின் பரவலால் இவைகளில் பெரும்பாலானவை மறைந்து போய்விட்டன.
 
 
மெக்காலே கல்வித்திட்டத்தினால் நமது நாட்டு மக்களின் அபூர்வமான சுபாவங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவிட்டன;எனவே,தற்போது இந்தக் கலைகள் ஒவ்வொன்றுமே தனித்தனியாகவே போதிக்கப்பட்டுவருகின்றன;இந்தியர்களாகிய நமது அறிவாற்றல்,படைப்பாற்றல்,நினைவுத்திறன்,பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் போன்றவை மெக்காலே கல்வித்திட்டம்,தவறான உணவுப்பழக்கம்(மேல்நாட்டு உணவு வகைகளை மட்டும் சாப்பிடுவது),மேல்நாட்டு ஆடை அணிவது,கணினி,செல்போனை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் பெருமளவு குறைந்து போய்விட்டது.
 
 
ஜோதிடத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப கட்டத்தில் அது ஒரு வருமான வாய்ப்பு;அதுவும் புகழுடன் கூடிய வருமான வாய்ப்பாக/தொழிலாகவே மற்றவர்களுக்குப் புலப்படும்.
நிஜத்தில் பிறருக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டவும்,நமது ஆன்மீகவாழ்க்கையில் இப்பிறவியிலேயே பல மடங்கு முன்னேறவும் உதவும் ஒரு ஆன்மீக கைடு ஆகும்.
 
அப்பேர்ப்பட்ட ஜோதிடக்கலையை நேரடியாக கற்றுக் கொள்ள விரும்புவோர்  ராஜபாளையத்தில் தங்கி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்;விருதுநகர் மாவட்டம்,மதுரை மாவட்டம்,நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் பயணித்து கற்றுக் கொள்ளலாம்;ஜோதிடத்தை கற்க குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் வீதம் 45 நாட்கள் வரை தினமும் பயிற்சி வகுப்பு உண்டு;
 
ஜோதிடராக விரும்புவோர்,ஜோதிடத்தில் வல்லுநராக விரும்புவோர்,ஏற்கனவே அஞ்சல் வழியில் ஜோதிடம் கற்றுக் கொண்டிருப்போர்,ஜோதிட ஆராய்ச்சி செய்ய விரும்புவோர்,மேலே கூறிய கலைகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற விரும்புவோர் முதலில் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வது அவசியம்;எல்லோருக்கும் ஆன்மீக வழிகாட்டியாக விரும்புவோர் முதலில் ஜோதிடத்தை ஒரு பாடமாக கற்க வேண்டும்;ஜோதிடரான பின்னர் சுமார் 15 முதல் 25 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆன்மீக வழிகாட்டியாக முடியும்.
 
அடிப்படை ஜோதிடப் பாடங்கள்,ஜாதகம் கணிக்கும் முறை,ஜாதகத்திற்குப் பலன்கள் சொல்லும் முறை;ஜோதிடருக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்;அதை எதிர்கொள்ளும் அனுபவ வழிகாட்டுதல்கள்  இந்த 45 நாட்கள் பயிற்சியில் வழங்கப்படும்.
 
 
ஜோதிடத்தை நேரடியாக கற்றுக் கொள்ள விரும்புவோர் aanmigakkadal@gmail.comஎன்ற முகவரிக்கு(subjectஇல் Like to Learn Astrologyஎன்று குறிப்பிட்டு) தமது செல் எண்,ஜாதகம்,போட்டோவை அனுப்பி ஆலோசனை கேட்டுவிட்டு வரவும்.வகுப்புகளை நடத்துவது ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி!
 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ