விஜயவருடம்,தை மாதம் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமையும்,பூச நட்சத்திரமும்
கூடிய சுபயோக சுபநாளில் சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் புதுமனை புகுவிழா காலை 9 மணியளவில்
அன்னதானத்துடன் துவங்கியது;காலை 10.30க்குத் துவங்கிய ஞான சத்சங்கம் மதியம் 1.30 மணி
வரை நடைபெற்றது.
இந்த ஞான சத்சங்கத்தில் உலக வரலாற்றிலேயே இதுவரை எவரும் வெளிப்படுத்தத்
தயங்கிய ஐந்து ஆன்மீக ரகசியங்களை சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு போதித்தார்;
இந்த புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தனது நெருங்கிய உறவினர்கள்
என்ற கண்ணோட்டத்தில்,எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றியும்,எந்த வித லாபநோக்கமின்றியும்
ஐந்து ஆன்மீக ரகசியங்களை எப்படி செயல்படுத்த வேண்டும்? என்பதை படிப்படியாகச் சொல்லிக்
கொடுத்தார்.
இந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்,இந்த ஆன்மீக
ரகசியங்களை பின்பற்றி வந்தால்,அடுத்த சில மாதங்களில் ஒவ்வொருவருமே ஆன்மீக வழிகாட்டி
என்ற நிலைக்கு உயரமுடியும் என்பது சர்வநிச்சயம்.
நிறைவாக மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மதிய நேர அன்னதானத்துடன்
நிகழ்ச்சி நிறைவடைந்தது;
இந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து
நல் ஆத்மாக்களுக்கும் மிக்க நன்றிகள்!!!
இப்படிக்கு
கை.வீரமுனி,ஆன்மீகக்கடல்