RightClick

உலகை வழிநடத்தும் ஸ்ரீகாலபைரவ சுவாசம்!!!வான சாஸ்திரமும்,ஜோதிட சாஸ்திரமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளாகவே இருந்திருக்கின்றன;விஞ்ஞானி சர்.ஐசக் நியூட்டன் தனது அலுவலகத்தில் அவர் ஆராய்ச்சிக்குரிய விஞ்ஞான புத்தகங்களுடன் ஏராளமான புராதன ஜோதிட நூல்களையும் வைத்திருந்தார்.இது அவரின் மாணவர் ஹாலிக்குப் பிடிக்கவில்லை;

ஒரு நாள், ‘விஞ்ஞான நூல்கள் இருக்கும் இந்த இடத்தில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் ஜோதிடபுத்தகங்கள் எதற்கு?’என்று ஹாலி, நியூட்டனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.
அதற்கு நியூட்டன், ‘ஜோதிடக் கலையை நான் முழுமையாகக் கற்றிருக்கிறேன்;அதனால் தான் அந்த மதிப்பு மிக்க ஜோதிட புத்தகங்களை இங்கே வைத்திருக்கிறேன்;உனக்கு ஜோதிடம் பற்றிய அடிப்படை ஞானம் இல்லாததால் அதன் மகிமை புரியாமல் ஜோதிடத்தை எதிர்த்துப்பேசுகிறாய்?’என்று விளக்கமளித்தார்.30 வயதிற்குள்ளாகவே ஆசியாவின் பெரும்பகுதியை(அக்காலத்தில் உலகத்தின் பெரும் பகுதியை) வென்ற வீரன் அலெக்ஸாண்டர்,தனது போர்ப்பயணத்தின் போது திறமையான ஜோதிடர்களுடனே பயணித்தான்;அவன் எகிப்தை வென்றபோது அங்கே இருந்த ஜோதிட நிபுணர்களையும் தன்னுடன் ராஜமரியாதையுடன் அழைத்துச் சென்றான்.  பாபிலோன் நகரில் அலெக்ஸாண்டர் விஷம் வைத்துக்கொல்லப்படுவார் என்று அலெக்ஸாண்டருடைய அரண்மனை ஜோதிடர்,அலெக்ஸாண்டருடைய பிறந்த ஜாதகத்தை கணித்து,முன் கூட்டியே அலெக்ஸாண்டரிடம் தெரிவித்திருந்தார்.அதனாலேயே,பாபிலோன் நகருக்குச் செல்வதையே தவிர்த்தார்.
மேலும்,ஸிந்து நதிக்கு கிழக்கே செல்லும்போது போரில் வெற்றி கிடைப்பதே மிகவும் கடினமாக இருக்கும் என்றும்,போரின் சூழ்நிலையே அசாதராணமானதாக இருக்கும் என்றும் கணித்திருந்தார்;அதன்படி, 4,00,000 போர் வீரர்களைக் கொண்ட அலெக்ஸாண்டரை,வெறும் 4,000 போர்வீரர்களைக் கொண்ட புருஷோத்தமன் வென்றார்.2000 யானைகளைக்கொண்ட யானைப்படையே அலெக்ஸாண்டரின் படையை சிதறடிக்கக் காரணமாக இருந்தது என்பதே நிஜ வரலாறு.மாவீரன் நெப்போலியன் ஒரு பெண் ஜோதிடரின் வழிகாட்டுதலின்படியே தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்;அந்த பெண் ஜோதிடரின் பெயர் லினோர்மாண்ட்!அவருக்கும் நெப்போலியனுக்கும் இடையே பேச முடியாத மனக்கசப்பை நெப்போலியனின் மந்திரி ஒருவர் உருவாக்கியப் பின்னரே,நெப்போலியனின் வீழ்ச்சி ஆரம்பமானது;லினோர்மாண்ட் சொன்னபடி மாஸ்கோவின்  மீது படையெடுத்தால் தோல்வி நிச்சயம் என்பதே நெப்போலியனுக்குக் கிடைத்த கடைசி ஜோதிட ஆலோசனை.ஜீலியஸ் சீசரின் ஆஸ்தான ஜோதிடர் ஸ்பூரினா என்பவர் ஆவார்.அவரது ஜோதிட ஆலோசனைப்படியே ஆட்சி புரிந்தார்.இவர் ஜீலியஸ் சீசரிடம் நண்பர்களால் கொல்லப்படுவதை முன்கூட்டியே கணித்துச் சொல்லி,அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் அடிக்கடி வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.ஆனால்,ஜீலியஸ் சீசரின் பிறவி சுபாவத்தால் அந்த வழிமுறைகளைப் பின்பற்ற முடியாமல் போய் நண்பர்களாலேயே கொல்லப்பட்டார்.


12 ராசிகளை தனது உடல் அங்கங்களாகக்கொண்டிருப்பவர்  ஸ்ரீகாலபைரவப்பெருமான்! அவரது சுவாசமே வாக்கியக் கணிதப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணிதப் பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது;காலத்தை தனது சுவாசத்தால் கட்டுப்படுத்துவதாலேயே பைரவப் பெருமான் ஸ்ரீகாலபைரவப்பெருமான் என்ற பெயரை பெற்றார்.உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் வழிபாடு இன்றும் தொடர்கிறது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ