இந்து தர்மக் காலக்
கணக்கின்படி யுகங்கள் நான்கு! அவை க்ருதயுகம்,திரோதா யுகம்,துவாபர
யுகம்,கலியுகம்.க்ருதயுகத்தில் மனிதனது உயரம் இருபத்து நான்கு அடிகள்! ஆயுளோ சில
லட்சம் ஆண்டுகள்!! திரோதாயுகத்தில் இந்த உயரம் பதினெட்டாக குறைந்துவிடும்;ஆயுளும்
சில ஆயிரம் ஆண்டுகளாகச் சுருங்கிவிடும்;இந்த இரண்டு யுகங்களிலும் பிறப்பவர்களை
ஐந்தே ஐந்து கிரகங்கள் மட்டுமே இயக்கும்;பாவக் கிரகங்களான செவ்வாய்,சனி,ராகு,கேது
இவைகளுக்கு வேலை இராது;துவாபரயுகத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில்
சனியும்,செவ்வாயும் சேரத் துவங்குகின்றன;நாம் வாழும் கலியுகத்தில் இவைகளுடன்
ராகுவும்,கேதுவும் சேர்ந்து செயல்படத் துவங்கும்;துவாபரயுகத்தில் மனித உயரம்
பனிரெண்டு அடி உயரங்கள் ஆகும்.ஆயுளோ சில நூறு ஆண்டுகள்! நாம் வாழ்ந்து வரும்
கலியுகத்தில் மனித உயரம் ஆறடியும்,அதைவிடவும் குறைவாகவும்
இருக்கும்;இவர்களின்(கலியுகத்தில் பிறக்கும் நமது) ஆயுளோ ஒரே ஒரு நூறு கூட
தொடுவதில்லை;
அதே சமயம்,கடந்த
மூன்று யுகங்களில் மனிதர்களாகப் பிறந்து நாம் செய்த கர்மவினைகளை மொத்தமாக கழிக்கவே
கலியுகத்தில் பிறப்பெடுக்கிறோம்;நீங்கள் நம்பாவிட்டால் சில நூற்றாண்டுகள்
காத்திருங்கள்;மேல்நாட்டு விஞ்ஞானம் இதை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தப் பின்னர்
நம்பினால் போதும்;ஆனால்,நீங்கள் நம்பாவிட்டாலும்,உங்களுக்கு ஏழரைச்சனி அல்லது
அஷ்டமச்சனி நடைபெறும்போது நம்மை மீறிய தெய்வசக்தி இருப்பதை உணருவீர்கள்;அதுவரை
வாய்ச்சவடால் தான்!
நமது கர்மவினையை
நீக்கும் சக்தி,கலியுகத்தில் மட்டும் அன்னதானத்திற்கு உண்டு;எனவே,விஜய வருடத்தின்
துவாதசி திதி வரும் நாட்களின் பட்டியலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அன்னதானத்தை ஒருபோதும்
நள்ளிரவில் செய்யக் கூடாது;அசைவ அன்னதானம் கூடவே கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம்
செய்யக் கூடாது;சிவாலயத்தின் வாசலில் அல்லது அதன் சுற்றுப்புறத்தில் செய்யப்படும்
அன்னதானத்திற்கு அளவற்ற சக்தி உண்டு;அதுவும் அண்ணாமலையில் செய்யப்படும்
அன்னதானத்தின் பெருமைகளை வாசித்திருப்பீர்கள்;
13.1.2014 திங்கள்
காலை 4.31 முதல் 14.1.2014 செவ்வாய் காலை 6 வரை;
28.1.2014 செவ்வாய்
காலை 10.26 முதல் 29.1.2014 புதன் காலை 8.11 வரை;
11.2.2014 செவ்வாய்
இரவு 111.39 முதல் 12.2.2014 புதன் நள்ளிரவு 1.45 வரை;
26.2.2014 புதன் இரவு
8.50 முதல் 27.2.2014 வியாழன் மாலை 6.30 வரை;
13.3.2014 வியாழன்
மாலை 6.41 முதல் 14.3.2014 வெள்ளி இரவு 8.33 வரை;
28.3.2014 வெள்ளி காலை
6.27 முதல் நள்ளிரவு 3.52 வரை;
12.4.2014 சனி காலை
11.58 முதல் 13.4.2014 ஞாயிறு மதியம் 1.03 வரை;
25.4.14 வெள்ளி மாலை 5.46 முதல் 26.4.14 சனி
மதியம் 3.53 வரை;
11.5.14 ஞாயிறு
25.5.14 ஞாயிறு
9.6.14 திங்கள் மதியம்
2.37 முதல் 10.6.14 செவ்வாய் மதியம் 2.09 வரை;
23.6.14 திங்கள்
மதியம் 12.34 முதல் 24.6.14 செவ்வாய் மதியம் 12.15 வரை;
9.7.14 புதன்
23.7.14 புதன்
7.8.14 வியாழன் காலை
9.42 முதல் 8.8.14 வெள்ளி காலை 7.14 வரை;
21.8.14 வியாழன்
மதியம் 1.10 முதல் 22.8.14 வெள்ளி மதியம் 2.42 வரை;
5.9.14 வெள்ளி மாலை
5.45 முதல் 6.9.14 சனி மதியம் 3.22 வரை;
20.9.14 சனி
5.10.14 ஞாயிறு
20.10.14 திங்கள்
3.11.14 திங்கள் காலை
11.05 முதல் 4.11.14 செவ்வாய் காலை 8.57 வரை;
18.11.14 செவ்வாய்
விடிகாலை 4.12 முதல் 19.11.14 புதன் மாலை 5.30 வரை;
2.12.14 செவ்வாய் இரவு
9.44 முதல் 3.12.14 புதன் இரவு 8.09 வரை;
18.12.14 வியாழன் காலை
9.22 முதல் 19.12.14 வெள்ளி காலை 9.36 வரை;
1.1.15 வியாழன் காலை
10.08 முதல் 2.1.15 வெள்ளி காலை 9.23 வரை;
17.1.15 சனி
31.1.15 சனி
15.2.15 ஞாயிறு மதியம்
1.52 முதல் 16.2.15 திங்கள் மதியம் 12.17 வரை;
1.3.15 ஞாயிறு மாலை
4.53 முதல் 2.3.15 திங்கள் மாலை 6.14 வரை;
17.3.15 செவ்வாய்
31.3.15 செவ்வாய் காலை
10.10 முதல் 1.4.15 புதன் மதியம் 12.08 வரை;
அண்ணாமலையில்
அன்னதானம் செய்வதால் நமது முன்னோர்கள் சொத்துக்காக சண்டையிட்ட சாபங்கள்
தீரும்;குறைந்தது ஆறு துவாதசி திதிகள் வரையிலும்,அதிகபட்சமாக இருபத்து நான்கு
துவாதசி திதிகள் வரையிலும் அன்னதானம் செய்ய வேண்டும்.
யார் இருபத்து நான்கு
துவாதசி திதிகள் வரையிலும் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதை அவரவர்
பிறந்த ஜாதகத்தைப்பார்த்த பின்னரே சொல்ல முடியும்.
அன்னதானத்தை
உள்ளன்போடும்,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் செய்ய வேண்டும்.ஏனோதானோ
என்றும்,கடமைக்கு என்றும் செய்வதால் பலன்கள் கிடைக்க தாமதமாகலாம்;அல்லது இந்தப்
பிறவியிலேயே கிடைக்காமலேயே போய்விடலாம்;அன்னதானம் செய்யப் போவதையும்,செய்தப்
பின்னர் இந்த காரணத்துக்காக இங்கேபோய் இப்படி அன்னதானம் செய்தேன் என்று பகிரங்கப்
படுத்தினாலும் பலன்கள் கிடைக்கத் தாமதமாகும்;இந்தக் கருத்துக்கள் கடந்த இரண்டு
ஆண்டுகளில் துவாதசி திதி அன்று அன்னதானம் செய்தவர்களின் மனோநிலை,சந்தர்ப்ப
சூழ்நிலையை ஆராய்ந்து கண்டுபிடித்து ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் நலனுக்காக
மட்டும் வெளியிடுகிறோம்.
ஒரு சூரிய
உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயத்துக்குள் மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால்
மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்பதை நினைவிற்கொள்ளவும்.அப்படிப் பார்த்தால்,இந்த
பட்டியலில் இருக்கும் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்ய இயலாது என்பதை மனதில்
நிறுத்தவும்;
அண்ணாமலையில் துவாதசி
திதியன்று அன்னதானம் செய்ய விரும்புவோர்,உரிய நாளில் காலை நேர அன்னதானத்தை ஒன்பது
மணிக்குள்ளும்,மதியம் ஒரு மணிக்குள்ளும்,இரவு எட்டு மணிக்குள்ளும் அன்னதானம்
செய்யவும்.ஒரு வேளைக்கு குறைந்த பட்சம் ஒன்பது பேர்களுக்கு அன்னதானம்
செய்வது நன்று;வசதியும்,ஆன்மீக ஆர்வமும் உடையவர்கள் ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும்
குறைந்தது மூன்று சாதுக்களுக்கு அன்னதானம் செய்வது திகைப்பூட்டும் பலன்களைத்
தரும்.
சென்ற வருடத்து
துவாதசி திதி பட்டியலை ஜனவரி 2013 இல் வெளியிட்டிருக்கிறோம்;
அன்னதானத்தின்
முக்கியத்துவத்தையும்,பெருமைகளையும் முதன்முதலில் எனக்கு உணர வைத்த நமது ஆன்மீக
குரு திரு.சகஸ்ரவடுகருக்கு கூகுள் கோடி நன்றிகள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ