நீங்கள் அல்லது உங்கள்
மகள்/ன் ஸர்ப்ப தோஷத்தால் திருமணம் தாமதமாகிக் கொண்டே போகிறதா?
ஆயில்யம்
நட்சத்திரத்தில் பிறந்ததாலேயே உங்களுக்குத் தகுந்த வரன் அமையாமல் தவித்துக்
கொண்டிருக்கிறீர்களா?
ஸர்ப்பதோஷம் அல்லது
மாங்கல்ய தோஷம் இருந்து அந்த தோஷத்தை நீக்கிட பலவிதமான பரிகாரங்கள் செய்தும்
தகுந்த வரன் அமையாமல் சிரமப்படுகிறீர்களா?
கரூர் நகரில் மையமாக
அமைந்திருக்கும் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்வரும் நாட்களில்
ஏதாவது ஒரு எட்டு நாட்களுக்கு காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் வருகை தர
வேண்டும்.பின்வரும் வழிமுறைப்படி,வழிபாடு செய்து முடித்தால் கருவூரார் சித்தர்
அருளால் திருமணத் தடை நீங்கி,சிறந்த வரன் அமைந்துவிடும்.
யாருக்கு ஸர்ப்ப தோஷம்
அல்லது திருமணத்தடை இருக்கிறதோ அவரே இந்த சுய வழிபாட்டைப் பின்பற்ற
வேண்டும்.அல்லது அவர்களின் ரத்த உறவுகளான பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் இந்த சுய
வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.திருமணத்தடை உள்ளவர்களே
பின்பற்றுவது சிறப்பு & அவசியம்.
முழுக்க முழுக்க
ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட ஒரு மாலை,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத
கறுப்பு திராட்சை அரைக்கிலோ(சீசன் சமயத்தில் மட்டுமே கிடைக்கும்;மற்ற நேரங்களில்
கிடைக்காது)விதை நீக்கப்பட்ட பேரீட்சை பாக்கெட் ஒன்று,ஆறு மஞ்சள்
வாழைப்பழங்கள்,வெற்றிலையும் கொட்டைப்பாக்கும்,தரமான பத்தி பாக்கெட்
ஒன்று,நெய்தீபம் இவைகளுடன் கருவூர் சித்தர் அமைந்திருக்கும் ஜீவசமாதிக்குச் செல்ல
வேண்டும்.பூசாரியிடம் இவைகளை ஒவ்வொன்றாகக் கொடுக்க வேண்டும்;கொடுத்து
ஸர்ப்பதோஷம்/திருமணத்தடை உள்ளவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;
பிறகு,பூசாரிக்கு
ரூ.101/-க்குக் குறையாமல் தட்சிணை தந்துவிட்டு,டயமண்டு கல்கண்டு,கறுப்புத்
திராட்சை,பேரீட்சை,மஞ்சள் நிற வாழைப்பழங்கள் இவைகளில் பாதியை கேட்டு வாங்க
வேண்டும்;வாங்கியவைகளை அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அவைகளை
சாப்பிடலாம்;வீட்டிற்கும் கொண்டு செல்லலாம்;
பிறகு அங்கிருந்து
சென்றால் சிறிது தொலைவிலேயே நாகர்கள் சிலைகள் இருக்கும்.அந்த நாகர்களின் சிலை
ஒவ்வொன்றின் மீதும் முதலில் (குறைந்தது அரைக்கிலோ மஞ்சள் பொடி வாங்கியிருக்க
வேண்டும்)மஞ்சள் பொடியைத் தூவ வேண்டும்;அடுத்த படியாக(குறைந்தது மூன்று லிட்டர்
பால் வாங்கியிருக்க வேண்டும்;பாக்கெட் பாலும் வாங்கிக் கொண்டு வரலாம்) பால் ஊற்ற
வேண்டும்;முடிவாக பசுபதீஸ்வரரையும்,அம்பாளையும் வழிபட்டுவிட்டு வேறு எவர்
வீட்டுக்கும் செல்லாமலும்,எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் நேராக அவரவர்
வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி ஒன்பது ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வழிபாடு
முடிக்க வேண்டும்.தொடர்ந்து முடியாவிட்டாலும்,விட்டுவிட்டாவது ஒன்பது ஆயில்யம்
நட்சத்திர நாட்களில் வழிபாடு முடித்துவிட்டால்,அடுத்த நூறு நாட்களுக்குள்
பொருத்தமான வரன்/வாழ்க்கைத் துணை அமையும்.
14.2.2014
வெள்ளி(ஆயில்யமும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாள்!)
13.3.2014 வியாழன்
காலை 6.23 முதல் 14.3.2014 வெள்ளி காலை 8.50 வரை
9.4.2014 புதன் மதியம்
1.42 முதல் 10.4.2014 வியாழன் மாலை 4.13 வரை
7.5.2014 புதன்
3.6.2014 செவ்வாய்
30.6.2014 திங்கள்
காலை 11.36 முதல் 1.7.2014 செவ்வாய் மதியம் 2.20 வரை;
24.8.2014 ஞாயிறு
20.9.2014 சனி காலை
9.16 முதல் 21.9.2014 ஞாயிறு காலை 11.49 வரை;
17.10.2014 வெள்ளி
மாலை 4.18 முதல் 18.10.2014 சனி மாலை 6.50 வரை;
14.11.2014 வெள்ளி
7.1.2015 புதன் மதியம்
1.32 முதல் 8.1.2015 வியாழன் மதியம் 3.58 வரை;
3.2.2015 செவ்வாய்
இரவு 8.49 முதல் 4.2.2015 புதன் இரவு 11.14 வரை;
3.3.2015 செவ்வாய்;
30.3.2015
திங்கள் காலை 11.38 முதல் 31.3.2015 செவ்வாய் மதியம் 1.54 வரை;
இந்த வழிபாட்டைப் பின்பற்றுவதற்கு
இரு கட்டுப்பாடுகள் உண்டு;அது அசைவம் ஒரு வருடம் வரையிலாவது சாப்பிடாமல் இருக்க
வேண்டும்.எதற்காக இந்த வழிபாட்டைச் செய்கிறோம் என்பதை நம்மைச்
சுற்றியிருப்பவர்கள்(பழகுபவர்கள்) அறியாமல் செய்வது அவசியம்;அவ்வாறு செய்தால்
மட்டுமே இதற்குரிய பலன்கள் கிட்டும்.இந்த அரிய தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய
நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய
நமஹ