RightClick

தை அமாவாசைப்பரிசாக உங்களுக்கு சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி


ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரிஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்ஸ்ரீபதஞ்சலி காயத்ரிஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி


ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி


ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி


ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி


ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி


ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்
இயற்கையின் நாயகி

உயிர் வாழத் தேவையான அத்தனை காரணிகளிலும் நச்சும், நஞ்சும் கலந்து, மனிதனை நிரந்தர நோயாளியாக்கி வரும், இக்காலத்தில் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு, விலைமதிப்பற்றது. வரும் தலைமுறையினருக்கு, இயற்கை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி, அழிவின் விளிம்பில்இருந்து மண்வளம் காப்பாற்ற முனைந்த நம்மாழ்வார், விதைத்த நல்விதைகளாக இன்றும் பலர் களம் இறங்கி, இயற்கையை கொண்டாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த கஜலட்சுமி.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் இருந்து இயற்கை உரங்களால் சாகுபடியாகும் மலை வாழைப்பழம், ஆரஞ்ச், பட்டர்புரூட், பலா என பழவகைகளை, கடந்த சில ஆண்டுகளாக, மதுரையில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாகஇந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்து, ஒவ்வொரு இடங்களிலும், கலப்படமே இல்லாமல் இயற்கை சார்ந்து கிடைக்கும் பொருட்களை அறிந்து, அவற்றையும் இங்கு கொண்டு வந்து "நவதானியா' என்ற பெயரில் அறிமுகம் செய்து உள்ளார். இதில் உணவு வகைகள் முதன்மையானவை. மசாலா பொருட்கள், அரிசி, சிறு தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் மண்ணில் தயாரிக்கும் பானைகள், சணல் பொருட்கள், கலைப்பொருட்கள் என பல வகையான தயாரிப்புகள், வரவேற்பை பெறத் துவங்கின.
நவதானியா:

தற்போது கோமதிபுரம் மூன்றாவது மெயின் ரோட்டில் இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் "நவதானியா' என்ற நவீன ஷோரூமை துவக்கியுள்ளார். இந்த இயற்கை பயணம் குறித்து கஜலட்சுமி சொல்கிறார்...
" விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அதனால் விவசாயம் என்பது என்ன, என எனக்கு சின்ன வயதிலேயே தெரியும். செயற்கை உரங்களின் பின் விளைவுகளால் மண் வளம் மட்டுமின்றி மனித வளம் பல விதங்களில் கெட்டுவிடுகிறது. குறிப்பாக செயற்கை உர தயாரிப்பு உணவுகளால் பெண்கள் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகின்றனர். அதை பல நிலைகளில் உணர்ந்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த "நவதானியா'.
கொடைக்கானல் வாழைகிரியில் உள்ள தோட்டத்தில் சாகுபடியாகும் காப்பி மற்றும் மலைப்பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் தான் பயிரிடப்படுகிறது.
தற்போது குறைந்த பரப்பில் தான் இந்த சாகுபடி நடக்கிறது. அதனால் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தும் தனியார் தோட்டங்களை தேர்வு செய்து அங்கிருந்து பழங்களை பெறுகிறோம்.
எக்கோ டூரிசம்:

கொடைக்கானல் பகுதியில் எக்கோ டூரிசம் துவங்க திட்டமிட்டுள்ளேன். கணவர் தீனதயாளன் எனது செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் வீடுகளில் சும்மா இருக்க கூடாது. தங்களிடம் உள்ள தனித்திறமைகள் மூலம் ஏதாவது ஒரு தொழிலை சிறு அளவில் துவங்கினால், படிப்படியாக முன்னேறலாம். அரசு மற்றும் தனியார் துறைகள் பல விதங்களில் இப்போது வழிகாட்டி வருகிறது", என்கிறார். நன்றி:தினமலர் 28.1.14

கிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு

சென்னையில் இருந்து 40 கி.மீ., சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 6 கி.மீ., உள்ளே சென்றால் குத்தம்பாக்கம் நம்மை வரவேற்கும். அழகான தார் சாலைகள், தூய்மையான வடிகால் வசதி, வயல்வெளிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நீர்நிறைந்த கண்மாய்கள், வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு என குடிசைகள் இல்லாத, குறைகள் இல்லாத கிராமம்.

இந்த கிராமத்தில், ஒரு குடும்பத்தின் மாத வருமானம் குறைந்தது 40 ஆயிரம். வீட்டில் ஒருவர் பட்டதாரி, எல்லோருக்கும் எதாவது வேலை உண்டு; பெண்களும் சம்பாதிக்கின்றனர். எல்லா ஜாதியினரும் ஒற்றுமையாய் வாழ்கின்றனர். இதில் அதிகம் பேர் ஆதிதிராவிடர்கள். இன்று தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு முன்மாதிரியாய் வழிகாட்டுகிறது, இந்த தன்னிறைவு பெற்ற கிராமம். "மாதிரி கிராமம்' என்று சர்வதேச கருத்தரங்குகளில் விவாதிக்கப்படுகிறது குத்தம்பாக்கம்! பஞ்சாயத்துராஜ் கருத்தரங்குகளில், "கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு' இந்த கிராமத்தையே உதாரணம் காட்டுகின்றனர்.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரு "பிளாஷ்பேக்'!
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு குத்தம்பாக்கம்... ஊரை இரண்டாக்கி ஓடிய சாக்கடை; தெருவெல்லாம் குப்பை. கழிவுநீர் சூழ்ந்த குடிசைகள். குடிநீர் வசதி இல்லை. விவசாய கூலிகளாய் வாழ்ந்து, கள்ளச்சாராயத்தில் வீழ்ந்து வாழ்வை இழந்த மக்கள். ஜாதிச்சண்டை, அடிதடி. தலைநகர் சென்னை அருகே இருந்தும் கல்வி கற்க யாருக்கும் மனமில்லை.இந்த கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இளங்கோ. யாரும் படிக்காத ஊரில், இவர் பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். கிராமத்தின் அவலத்தை கண்டு மனம் வெறுத்து, "விட்டால் போதும்' என இளங்கோவும் வேலை தேடி பயணம் ஆனார். காரைக்குடி "சிக்ரியில்' மத்திய அரசு வேலை. என்றாலும் மனதில் நிறைவு இல்லை. எந்த வசதியும் இல்லாத தான் பிறந்த கிராமமும், அங்குள்ள மக்களும் மனதில் வந்து போனார்கள்."இவர்களுக்காக நான் என்ன செய்வது?'மனம் அலைபாய்ந்தது.

மாற்றம் ஏற்படுத்திய சந்திப்பு :

குன்றக்குடி கிராமத்தில் சேவை செய்து கொண்டிருந்த குன்றக்குடி அடிகளாரை சந்தித்தார்.""ஐயா...நான் என் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்'' -இது இளங்கோ.""நீ கிராமத்து ஆள் தானே... முதலில் உன் கிராமத்திற்கு ஏதாவது செய். உன் ஊர்ல மாற்றம் செய்ய முடியாவிட்டால், நீ எந்த ஊர்லயும் செய்ய முடியாது. இந்தியாவைப்பற்றி கவலைப்பட்டால், முதலில் குத்தம்பாக்கத்தை பற்றி கவலைப்படு!''இவ் வார்த்தைகள் இளங்கோ மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. என்றாலும் அரசு வேலை, முயற்சிக்கு தடையாக தோன்றியது.அதற்கும் அடிகளாரின் வார்த்தைகள் தான் தீர்வு தந்தன.""சிக்ரிக்கு நீ இல்லை என்றால்இன்னொரு இன்ஜினியர். ஆனால் குத்தம்பாக்கத்திற்கு நீ இல்லை என்றால், இன்னொரு மனிதர் இல்லை''இந்த வார்த்தைகள் இளங்கோ வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, அரசுப்பணியை உதறினார்.1994ல் சமூக சேவகராக குத்தம்பாக்கத்தில் களம் குதித்தார். வேலையை விட்டதால், குடும்பத்தை கவனிக்க ஏதுவாக மனைவியை வேலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.மனைவி ஓ.என். ஜி.சி., அதிகாரி ஆனார். அவர் சென்னையில் இருந்து குழந்தைகளை கவனிக்க, குத்தம்பாக்கத்தில்ஒரு படுக்கை அறை, சமையலறை உள்ள வீட்டில் குடியேறினார் இளங்கோ.இதில் இருந்து தான், தனிமனிதன் நினைத்தால், இந்த சமூகத்தை மாற்றிக்காட்ட முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது.கள்ளச்சாராயம் ஒழிப்பு: இரண்டாண்டுகள் கடுமையாக போராடியதன் விளைவு, அதிகாரிகள் துணையோடு, கள்ளச்சாராயம் இந்த கிராமத்தில் இருந்து அடியோடு ஒழிக்கப்பட்டது. ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையானார்கள் கிராம மக்கள். 1996ல் பஞ்சாயத்து தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டினார். இதற்கான ஐடியா பெற, கேரளாவின் மாதிரி கிராம பஞ்சாயத்தான வள்ளிகுன்னுவிற்கு சென்று வந்தார் இளங்கோ.

முதன்முதலாக, பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுத்திய, 2 கி.மீ., நீளமுள்ள சாக்கடை ஓடை, கான்கிரீட் கால்வாயாக மாறியது. அரசு நிதி கொஞ்சம், பொதுமக்கள் நிதி, அவர்களின் பொருள் உதவி, உடல் உழைப்பு எனதிட்டங்கள் மளமளவென செயலாக்கம் பெற்றன. ரோடுகள் உருவாகின. குடிசைகள் மாறின. பன்றிகள், கொசுக்கள் ஒழிந்தன. மோசமான காலனி என்ற "இமேஜ்' தகர்ந்தது. மரங்கள் நடப்பட்டன. மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயலாக்கம் பெற்றன. பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு மாதந்தோறும் பொதுஇடத்தில் ஒட்டப்பட்டது.

சஸ்பெண்ட் என்ற பரிசு :

நடந்த வளர்ச்சிப்பணிகளில் திருப்தி அடைந்து, நடைமுறைகளை அரசு ஏற்றுக்கொண்டாலும், பணிகளை செயல்படுத்திய விதத்தில் அதிருப்தி அடைந்து, இவரை பஞ்., தலைவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இப்போது தான் முதன்முதலாய் துவண்டார் இளங்கோ.காந்திய புத்தகங்களை படிக்க தந்து, கணவனின் தன்னம்பிக்கை குறையாது காத்து உடனிருந்தார் மனைவி. கிராம மக்களும் இளங்கோவின் பக்கம் இருந்தனர். நேர்மையான அதிகாரிகள் நடத்திய மறுவிசாரணைக்கு பிறகு, சஸ்பெண்ட் ரத்தானது.""நேர்மையாக, தர்மத்தை உள்வாங்கி என்னை அர்ப்பணித்தேன். அற்புதங்கள் தோன்றி என்னை காப்பாற்றியது. வெற்றியோ, தோல்வியோ இதுவே என் பாதை என பயணித்தேன்,'' என்கிறார் எதிர்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்றிய இளங்கோ.அடுத்து நடந்த பஞ்., தேர்தலிலும் வென்றார். இம்முறை கடந்தமுறை பெற்ற அனுபவங்கள் கைகொடுத்தன. மக்கள் பங்களிப்போடு, கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன. இப்போது, நான்கு நாள் மழை பெய்தால் போதும்; எட்டு மாதத்திற்கு தண்ணீர் பஞ்சம் இருக்காதாம். இவரது முயற்சியில், அரசு துவக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளியாகியது.

இரண்டு ஜாதிக்காரர்கள் சேர்ந்து வாழும், 50 இரட்டை வீடுகளை, பஞ்., செலவில் கட்டினார். இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, தி.மு.க., ஆட்சியில் இதே மாதிரியில் மாநிலம் முழுவதும் "சமத்துவபுரங்கள்' உருவானது.முதலில் அடிப்படை வசதியில் மாற்றம் கொண்டு வந்தவர், பின்னர் தனிமனித மேம்பாட்டில், அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். விவசாயம் செய்யாதவர்கள் சுயதொழில் செய்ய, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தார். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்து, பெண்களின் பொருளாதார நிலை உயர வழிகாட்டினார்.இன்று குத்தம்பாக்கம், யாரும் குற்றம் சொல்லமுடியாத கிராமமாய் நிமிர்ந்து நிற்கிறது. ஐ.நா.,வின் "வசிப்பிட விருதுக்கு' 8 ம் இடத்தில் இந்த கிராமம் தேர்வானது.

சுழற்சிமுறையில் குத்தம்:

பாக்கம், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் பதவியில் இல்லாத இளங்கோ செயல்படுத்திய திட்டங்கள், இப்போதும் தொடர்கிறது. அதற்கு சிறந்த உதாரணம், இன்றும் வரவு, செலவு கணக்கு பொதுஇடத்தில் ஒட்டப்படுகிறது. இப்போதைய பணி: தற்போது கிராம தன்னாட்சி அறக்கட்டளை என்ற அமைப்பை துவங்கி, பிற பஞ்., தலைவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் இளங்கோ. சிறு தொழில் நிறுவனங்கள் துவங்கி, கிராமத்து மக்களுக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளார். சூரியஒளி சக்தியின் பயன்கள், சாமான்யனுக்கும் கிடைக்க, "டிசி'யில் ஓடும், குறைந்த விலை மின்விசிறி, விளக்குகள் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில், 1.5 எச்.பி., மெஷின் இயங்கும் வகையில், சூரிய சக்தியை பயன்படுத்தும் முயற்சி நடந்துவருகிறது. இந்த சேவைகள் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தொடர்கிறது.

இவர் முன்மாதிரி :


குத்தம்பாக்கத்தில், இரண்டு வவெ?வேறு ஜாதியினர் தங்கும் இரட்டை வீடுகள் கட்டப்பட்டதை பார்த்து தான், "சமத்துவபுரங்களை' தமிழகம் முழுவதும் அரசு உருவாக்கியது.டூ மக்கள் பங்களிப்போடு இங்கு சாலைகள் உருவானதை தொடர்ந்து தான், "நமக்கு நாமே' திட்டத்தை அரசு உருவாக்கியது.

தலை நிமிர்ந்து நிற்கும் பெண்கள் :எங்களுக்கு சேமிப்புன்னா என்னவென்றே தெரியாது. வெளிஉலகம் தெரியாம இருந்த எங்களை வழிநடத்தினார். இன்று நாங்க சம்பாதிக்கிறோம், சேமிக்கிறோம்.
இந்திரா, தாழம்பூ மகளிர் குழு

சுயதொழில் செய்து முன்னேறலாம் என்று வழிகாட்டினார். சோப் ஆயில், பேப்பர்
கப் உற்பத்தி என பல பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். இன்னைக்கு நாங்க தலை
நிமிர்ந்து நிற்கிறோம்.
லோகநாயகி, தாமரை மகளிர் குழு


இளங்கோவுடன் இணைந்த 4 ஆயிரம் இளைஞர்கள்

இளங்கோவுடன் நேர்காணல்...* "குத்தம்பாக்கம் மாதிரியை' பிற கிராமங்களுக்கும் எடுத்துச் செல்வீர்களா?
உறுதியாக. கிராம தன்னாட்சி அறக்கட்டளை மூலம், 2016 க்குள் 200 கிராமங்களையும், 2021 க்குள் ஆயிரம் கிராமங்களையும் தன்னிறைவு பெற செய்ய திட்டமிட்டு, செயலாற்றி வருகிறோம். இப்போது 600 கிராம பஞ்சாயத்துகளோடு தொடர்பு உள்ளது. என் "நெட்வொர்க்கில்', இன்ஜினியர், டாக்டர் என 4 ஆயிரம் இளைஞர்கள், இந்தியா முழுவதும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
* ஒரு கிராமத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை, இந்தியா முழுக்க கொண்டுவருவது சாத்தியமா?
ஒரு இந்தியன் தர்மத்தை பற்றி பேசும் போது, மற்றொரு இந்தியனால் கேட்டு விட்டு சும்மா இருக்க முடியாது. ஒரு ஊரில் மாற்றம் ஏற்பட்டால், அது பிற இடங்களிலும் எதிரொலிக்கும்.
* "கிராம சுயாட்சி'- ஏன் அவசியம்?
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பு, கிராம மக்கள் தான் வலுவாக இருந்தனர். அரசை நம்பி, மக்கள் வாழும் முறையை ஏற்படுத்தியது ஆங்கிலேயர்கள். மக்களை அடிமையாக வைக்க, மக்களின் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டது அரசு. முன்பு, மன்னர்கள்
வலுவாக செயல்பட மக்கள் உதவினர். இப்போது நிலைமை மாறி, இலவசங்களுக்காக மக்கள்
கையேந்துகின்றனர். பாதுகாப்பு, நிதிமேலாண்மையை தான் அரசுகள் கவனிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மக்கள் செய்து கொள்ள வேண்டும். இதற்கு கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும். அதற்கு தான் மக்களுக்கு அதிகாரம் தரவேண்டும் என்று மகாத்மா கூறினார்.
* கிராமங்கள் விவசாயத்தின் அடையாளத்தை இழந்து வருகிறதே...
பால், உணவு என உற்பத்தி செய்யும் கிராம மக்கள் ஏழையாக உள்ளனர். தக்காளி அதிகம் விளைந்தால், அழுகி குப்பைக்கு போகிறது. கிராமத்தில் தக்காளி ஜாம் தயாரித்தால், விவசாயி ஏன் கையேந்த வேண்டும்? கிராமங்களை வலுப்படுத்த, வலுப்படுத்த நகரங்களுக்கு சோறு போடலாம்.

வீழ்ந்தாலும் எழுவேன் :

நாட்டுக்கு நல்லது செய்யும் நல்ல இதயம் கொண்ட இளங்கோ, சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டது தான் சோகத்திலும் சோகம். இதய அறுவை சிகிச்சை செய்த போதும், கிராமத்தில் தனியாக வாழும் அவர்,""என் கிராமத்தில் செய்ததை, பிற கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற மன வைராக்கியம் தான் என்னை மீண்டு வரச் செய்திருக்கிறது. நான் குணமடைய பல லட்சங்களை இந்த சமூகம் தான் செலவு செய்தது. புது சக்தியோடு திரும்பி இருக்கிறேன். எனக்கு ஓய்வு இல்லை,'' என்றார்.

நன்றி:தினமலர் 26.1.14

அன்னதானம் பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்!!!

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்,நமது கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு;எளிமையான சுயபரிகாரம் இது;அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த சுயபரிகாரமும் இதேதான்! அன்னதானம் செய்வதால் நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் மட்டுமல்ல;நமது 14 வயது முதல் இன்று வரையிலும்  நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து நாம் பெற்ற சாபங்களும் நீங்கிவிடும்;
ஒருபோதும் அசைவ அன்னதானம் செய்யக் கூடாது;
ஒருபோதும் கட்டாய அன்னதானம் செய்யக் கூடாது;அன்னதான உணவுப்பொட்டலத்தை கோவில் வாசலில் தரும்போது ஏதாவது ஒரு துறவியோ,சாதுவோ எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.அவரிடம் நீங்கள் வாங்கித் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரிடம் உணவுப் பொட்டலத்தைத் திணிக்கக்கூடாது;
வீடு,வாசல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இலவசமாக தரும் உணவுக்கே அன்னதானம் என்று பெயர்;மகன்/மகள்களால் கைவிடப்பட்டு நிராதரவாக வாழ்ந்து வரும் வயதானவர்களுக்கு தரும் இலவச உணவும் அன்னதானக் கணக்கில் வரும்;
ஒருபோதும் அகால அன்னதானம் செய்யக் கூடாது;அதாவது இரவு 9 மணிக்கு மேல் விடிகாலை 5 மணி வரை அன்னதானம் செய்யக் கூடாது;அதனால் பலன்கள் கிட்டாது.
அனாதை இல்லங்களில் செய்யும் அன்னதானத்திற்கும் பலன் உண்டு;அதை விடவும் பழமையான சிவாலயங்கள், நமது ஊரில் இருக்கும் புராதனம் மிக்க சிவாலயங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கே தெய்வீக சக்தி அதிகம்!
ஒரே ஒரு துவாதசி திதியன்று அண்ணாமலையில் செய்யப்படும் மூன்று வேளை (காலை,மதியம்,இரவு)அன்னதானமானது காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள் வீதம் நமது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்தமைக்கான பலன்களை விடவும் அதிகமான பலன்களைத் தரக்கூடியது.யாருடைய பிறந்த ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும்;
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் பலருடைய பிறந்த ஜாதகத்தில் சனி+ராகு,செவ்வாய்+கேது; அல்லது செவ்வாய்+ராகு,சனி+கேது;அல்லது ராகுவுடன் சனி+செவ்வாய் அல்லது கேதுவுடன் செவ்வாய்+சனி என்று கிரகச் சேர்கைகள் இருந்தால் அவர்கள் கடுமையான கர்மவினைகளை அனுபவிக்கப்பிறந்துள்ளார்கள் என்றே அர்த்தம்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் பிறந்துள்ளவர்கள் சனி மஹாதிசை அல்லது செவ்வாய் மஹாதிசை அல்லது ராகு/கேது மஹாதிசை வருவதற்கு முன்பே அண்ணாமலையில் குறைந்தது 24 துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்வதால் கடுமையான கர்மவினைகளின் தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.
நம்மில் எல்லோருக்கும் ஒரே ஒரு முறை அண்ணாமலை செல்லும் சந்தர்ப்பம் கிட்டுமா?
அப்படிக் கிட்டாதவர்களுக்காக நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் ஒரு சுலபமான வழிமுறையை நமக்காக அருளியிருக்கிறார்.
ஒரு தமிழ் வருடத்தில் மூன்று முக்கியமான நாட்களில் அன்னதானம் செய்தாலே நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தமைக்கான பலன்கள் கிடைத்துவிடும்;நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகளின் வலிமையை குறைத்துவிடவும் முடியும்;நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக(நமது அம்மா+அப்பா,நமது தாத்தாக்கள்+பாட்டிகள்,நமது பாட்டனார்கள்+பாட்டிகள்,நமது முப்பாட்டன்கள்+முப்பாட்டிகள்)செய்த கர்மவினைகளையும் நீக்கிவிட முடியும்.
அதுதான் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை!
இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தின் வாசலில் காலை 7 மணிக்குள்ளாகவும்,மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 6 மணிக்கு மேல் 7மணிக்குள்ளாகவும் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.
காலையில் ஐந்து இட்லிகள்+சட்னி+சாம்பார்+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை அன்னதானமாகச் செய்வது மிகவும் சிறந்த புண்ணியம் தரும்;இதையே இரவு நேரத்திலும் செய்யலாம்;இரண்டு வேளைகளிலும் செய்யலாம்;
மதிய நேரத்தில் முழு உணவினை அன்னதானமாகச் செய்யலாம்;
விரைவான நிம்மதியையும்,தொழிலில் ஸ்திரத் தன்மையையும்,வேலையில் பதவி உயர்வையும்,குடும்பத்தில் கணவன்+மனைவி;பெற்றோர்+பிள்ளைகள்;ஒற்றுமை பெற விரும்புவோர் தை அமாவாசை(30.1.2014 வியாழக்கிழமை) வரும் நாளில் பின்வரும் சிவாலயங்களில் ஏதாவது ஓரிடத்தில் அன்னதானம் செய்வது அவசியம்.
அண்ணாமலை
சதுரகிரி
பர்வதமலை
கொல்லிமலை
இந்த இடங்களில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் சிவாலய வாசலிலேயே அன்னதானம் செய்யலாம்.நமது மனப்பூர்வமான அன்னதானமே முக்கியம்;இந்த அன்னதானம் செய்வதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது.
நாம் அன்னதானம் செய்வதோடு நமது மனம் நிறைவடைந்துவிடும்;நம்மிடமிருந்து அன்னதானத்தைப் பெற்றவர்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால்,அது நம்மைக் கட்டுப்படுத்தாது.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கும் . . .


நீங்கள் பத்தாம் வகுப்பு/+2/பட்டப்படிப்பு/டிப்ளமோ/ பொறியியல் படிப்பு என்று எதை முடித்தாலும் இந்த உலகத்தை,மனிதர்களைப் பற்றி மிகவும் குறுகிய காலத்தில் புரிந்து கொள்ள வேண்டுமா? குறைந்தது ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலும் நேரடி விற்பனையாளர் என்ற மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்ற வேலைக்குச் சென்றால் போதும்.

நமது கல்விக்கு நமது ஐந்தாம் வயது முதல் 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஒதுக்குகிறோம்;நாம் விரும்பும் படிப்பில் சேர்ப்பதோடும்,உரிய கட்டணங்கள் செலுத்துவதோடும் நமது பெற்றோர்களின் கடமை முடிந்துவிட்டது;ஆனால்,அந்த படிப்பில் அதிகமான கிரேடு வாங்க நாம் தான் படிக்க வேண்டும்;

படித்து முடித்த பல பட்டதாரிகள்,                               என் ஜினியர்கள்,டிப்ளமோதாரர்கள்,ஐ.டி.ஐ.,முடித்தவர்கள் அனைவருக்குமே வேலை காத்திருக்கிறது.ஆனால்,டிப்ளமோ முடித்த 1000 பேர்களில் 150 பேர்கள் தான் நல்ல வேலையில் சேருகிறார்கள்;பி.ஈ.,பி.டெக்., முடித்த 1,00,000 பேர்களில் 2000 பேர்கள் தான் தனது படிப்புக்குரிய வேலையில் சேருகிறார்கள்;காரணம்?
தனது படிப்பு படிக்கும் போது சாஃப்ட் ஸ்கில் எனப்படும் சிலபல மென் திறன்களை வளர்த்துக் கொள்வதைப் பற்றிய அடிப்படை ஞானம் கூட பலருக்கு இல்லை என்பதே!

அதென்ன சாஃப்ட் ஸ்கில்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்;கூடவே சரளமாக ஆங்கிலப் பேச்சுப்பயிற்சியும் கற்றுக் கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்களிலும் ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வரை சரளமாக ஆங்கிலம் பேசப் பழக வேண்டும்;(மாநகரங்களில் வசிப்பவர்கள் ஆங்கிலத்தோடு ஸமக்ஸ்க்ருதம் மற்றும் இன்னொரு ஐரோப்பிய மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்வது அவசியம்)பனிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வு எழுதிய அன்றே பைக் டிரைவிங்,கார் டிரைவிங் கற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும்;கற்றுக்கொண்டு,பயிற்சி முடித்தமைக்கான லைசென்ஸ்களை வாங்கியே ஆக வேண்டும்;

சில ஆன்மீக அமைப்புகள் நடத்தும் கோடைகால பண்புப்பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்;அவை குறைந்தபட்சம் ஏழு நாட்களில் இருந்து அதிகபட்சம் 30 நாட்கள் வரை இருக்கும்;இந்த நாட்களில் இப்பயிற்சி முகாம்களில் செல்போன் பேச அனுமதி இராது.உடல்பயிற்சியுடன் கூடிய தேசபக்தி சார்ந்த நாட்டு வரலாறு போதிக்கப்படும்.இதன் மூலமாக நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை இளவயதில் முழுமையாக உணரமுடியும்.தற்போது பெண்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள்.(தமிழ்நாட்டில் பெரும்பாலான மகன்கள்/மகள்கள் அம்மாகோண்டுகளாகவோ,அப்பாச்செல்லங்களாகவோ இருக்கிறார்கள்;இந்த நிலையை மாற்றி தனது வேலைகளை தாமாகவே செய்யப் பழகுவதற்கும்,எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்வதற்கும்,மாறி வரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்வதற்கும் இந்த முகாம்களுக்கு டீன் ஏஜ் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்).இதன் மூலமாக அளவற்ற தன்னம்பிக்கை உருவாகும்;

டிப்ளமோ/பட்டப்படிப்பின் ஒவ்வொரு வருட செமஸ்டர் விடுமுறையின் போதும் மார்கெட்டிங் எக்ஸிகுயூடிவாக உள்ளூரில் இருக்கும் வேலையில் இலவசமாகக்கூட பணிபுரிவது நன்று + அவசியம்.
ஏன் எனில்,நாம் படித்துப் பெறும் பட்டப்படிப்பு இந்த உலகத்தை எதிர்கொள்ள ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே! எது நிஜமான கல்வி தெரியுமா? சக மனிதர்களைப் புரிந்து கொள்வதை உணர வைக்கும் கல்வியே உண்மையான கல்வி! அது சந்தைப்படுத்துதல் என்ற மார்கெட்டிங் துறையில் மட்டுமே விரைவாக கிடைக்கிறது.
யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும்? என்ற அணுகுமுறை விஞ்ஞானம்(BEHAVIOUR SCIENCE) புத்தகங்களில் இல்லை;இருந்தாலும் அதை நம்மால் 30 வயது வரை பின்பற்றி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திட முடியாது.


அது மட்டுமல்ல;நமது பாரத தேசத்தில் ஒரு மனிதனது உண்மையான சொத்து என்பது அவரு/ளுடைய முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் வீடு,நகைகள்,சேமிப்புப் பத்திரங்கள்,தோட்டம் போன்றவை அல்ல;நம்பிக்கையும்,விசுவாசமும் மிக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கும் நண்பர்கள்/நண்பிகளே! மனித மனங்களில் இடம் பிடித்து,அந்த நட்பினை ஆயுள் முழுக்க பராமரிக்கும் லாவகமே! 


தனி மரம் ஒருபோதும் தோப்பாக முடியாது;மனிதனுக்கு உறவுகள் அவசியம்;உற்றார்,உறவினர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்;ஆனால்,நல்ல நட்பு கஷ்டகாலத்தில் கைகொடுக்கும்;ஆறுதல் கூறும்;சரியான விதத்தில் வழிகாட்டும்;
பழகும் போது நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்;அவ்வாறு இருப்பது மிகவும் அவசியம்;நல்லதொரு முன்மாதிரி நண்பர்கள்,தம்பதியர் குறைந்துவிட்டதால் தான் இன்றைய இளைஞர்கள் சின்னத்திரை நாயகர்களையும்,நாயகிகளையும்,திரைப்பட நாயகர்களையும்,நாயகிகளையும் முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்பத்தை அனுபவிக்க எத்தனை,எத்தனையோ உறவுகள் ஓடி வரும்;ஆனால்,துன்பத்தை,வேதனையை,அவமானத்தை,துயரத்தை,அவமதிப்பை பகிர்ந்து கொள்வதற்கு இந்த செல்போன் யுகத்தில் எத்தனை உறவுகள் முன்வருகின்றன?

1990 வரை ஒரு நிறுவனத்தில் மேனேஜராவதற்குத்தான் இந்த மாதிரியான திறமைகள் தேவைப்பட்டன;தற்போதைய வருடமே 2014! வேலையில் சேருவதற்கே இந்தத் தகுதிகள் தேவைப்படுகின்றன;பள்ளி,பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்;முதலில் திக்கித் திக்கித்தான் பேச முடியும்.யார் தன்னம்பிக்கை அதிகமாக  வைத்திருக்கிறார்களோ,யார் தனது எட்டாம் வகுப்பு முதல் தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம் வைத்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே மேடையில் கோர்வையாகப் பேச முடியும்.

பின்வரும் விதிமுறைகள்+ சந்தைப்படுத்துதல் அனுபவம் இரண்டுமே உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்திடவும்,தாழ்வு மனப்பான்மையின்றியும் வாழ கைகொடுக்கும்;

1.உங்களுக்கென்று இருக்கும் கொள்கைகளைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.

2.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் உலகம்;அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

3.உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றித் தெரியாவிடில்,உடனே தெரியாது என்று உரியவர்களிடம் ஒப்புக்கொள்ளுங்கள்.அதே சமயம்,அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒன்றும் அவமானகரமான செயல் அல்ல;

4.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு;அதற்காக அவர்களை வெறுக்க வேண்டாம்.

5.நீங்கள் ஒரு தவறு செய்து அதை மற்றவர்கள் கண்டுபிடித்து உங்களிடமே சொன்னால்,தயங்காமல் அந்தத் தவற்றை ஒப்புக் கொள்ளுங்கள்;

6.மற்றவர்களின் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களுக்கு உங்களை பிடித்துப்போகும்;

7.கோபப்படும் போதோ அல்லது குழப்பமான மனநிலையில் இருக்கும் போதோ செல்போனில் சம்பந்தப்படுபவர்களிடம் தொடர்பு கொள்ளாதீர்கள்.குறுந்தகவலும் அனுப்ப வேண்டாம்.

8.பணம்,நேரம்,பேச்சு இவைகளை அளவோடும்,தேவைப்படும் போதும் மட்டும் செலவிடப்பழகிக் கொள்ளுங்கள்.இந்த கருத்தை முறையாகப் பின்பற்றினால் அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் துறையில் நீங்கள் தான் முன்னோடியாகத் திகழுவீர்கள்.

9.ஒருவருடைய குறையை எப்போதும் எவரிடமும் கூறாதீர்கள்.உங்களைப் பற்றி யாராவது குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
10.எப்போதும் சுருக்கமாகப்பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

11.மனதைச் சலனப்படுத்தும்,கிளுகிளுப்புக்குள்ளாக்கும்,போதைக்குள்ளாக்கும் எந்த விஷயத்திற்கும் ஒரு போதும்,ஒரு தடவைகூட இடம் தராதீர்கள்.ஆரம்பத்தில் மன மகிழ்வூட்டுவதாகவும்,போகப் போக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அந்த ‘கிளுகிளுப்பு’ சீர்குலைத்துவிடும்;உங்கள் நினைவுத்திறனை அழித்துவிடும்;நோயாளியாக்கிவிடும்; போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் உங்கள் இடத்தை தக்க வைக்க முடியாமல் போய்விடும்.

12.இணையம்,செல்போன்,முகநூல்,டுவிட்டர் போன்றவை தகவல் தொழில்நுட்ப சாதனைகளின் உச்சம் தான்! ஆனால்,நேரடியாக சந்தித்து பேசி,பழகுவதைப் போல சிறந்த அணுகுகுறை(behaviour)யைப்போல வேறு எதுவும் இந்த உலகில் எந்த நூற்றாண்டிலும் தோன்றப்போவது கிடையாது.நேரடியாகப்பேசி,பழகுவதன் மூலமாகவே ஒரு சிறந்த நட்பையோ,வாழ்க்கைத்துணையையோ மதிப்பிட முடியும்.

13.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டுவிடவேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

14.பிற மனிதர்கள் பேசும் போது உன்னிப்பாக கவனிக்கப்பழகிக்கொள்ளுங்கள்.

15.பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்;அதே போல பிறர் உங்களுடைய நேரத்தை வீணடிக்க அனுமதிக்காதீர்கள்.

16.ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்வதில் சிறிது சந்தேகம் இருந்தாலும்,அதைச் செய்ய ஒப்புக் கொள்ளாதீர்கள்.

17.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

18.ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.

19.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள். மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

20.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நமது பாரத தேசம் வல்லரசாக நாம் செய்ய வேண்டியது என்ன? நமது வேலை/தொழிலை அக்கறையோடும்,நேர்மையாகவும் பார்ப்பது மட்டுமே!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹமரம் வளர்ப்பதன் மகிமைகள்!!!மரங்கள்,புதர்கள்,கொடிகள்,செடிகள்,மேல்பட்டை கடினமாக இருக்கும் மூங்கில் முதலியவை,புல்,பூண்டு வகைகள் என ஆறுவகைகள் தாவரங்களில் இருக்கின்றன;

மரங்கள் நட்டு வளர்ப்பவன் இவ்வுலகில் புகழடைகிறான்;
இறந்தப்பின்னர் புண்ணியப் பலன்களை அடைகிறான்;
பித்ருக்கள் உலகத்தில் முன்னோர்களும் அவனைக் கொண்டாடுவார்கள்;
தேவ உலகம் போன பின்னரும் அவன் பெயர் நிலைத்து நிற்கும்.
மரம் வைப்பவன் இறாந்த காலத்திலும்,எதிர்காலத்திலும் தனது வம்சத்தைக் கரையேற்றுவான்;

மரங்கள்,அவற்றை நடுபவனுக்குக் குழந்தைகள் ஆகின்றன;மரம் நடுபவன் மேல் உலகம் செல்லும்போது,சொர்க்கத்தையும் மற்றும் அழிவில்லாத உலகங்களையும் அடைகிறான்.

மரங்கள்,பூக்களால் தேவர்களையும்;பழங்களால் முன்னோர்களாகிய பித்ருக்களையும்,நிழலால் விருந்தினர்களையும் பூஜை செய்கின்றன;
மரங்கள் பூத்தும்,காய்த்தும் மனிதர்களுக்கு மகிழ்வை ஊட்டுகின்றன;மரங்களைத் தானமாகக்கொடுப்பவனை அந்த மரங்கள் பிள்ளைகளைப் போல மறுமையில் நரகத்தைத் தாண்டச் செய்கின்றன;


இம்மை,மறுமையில் நன்மைகளை அடைய விரும்புபவன் குளக்கரையில் நல்ல மரங்களை எப்போதும் வளர்க்கக்  வேண்டும்;பிள்ளைகளை காப்பாற்றுவதைப் போல,அவற்றைக் காப்பாற்ற வேண்டும்;மரங்கள் தங்கள் செய்கைகளால் பிள்ளைகளாகவே நினைக்கப்படுகின்றன;
இதனாலேயே தென்னையை ‘தென்னம்பிள்ளை’ என்று அழைக்கும் பழக்கம் கிராமத்தில் ஏற்பட்டுள்ளது.இளமையில் ஒரு தென்னை மரத்தை நட்டு வைப்பவனுக்கு,அவனது/அவளது முதுமைகாலத்தில் அம்மரம் காய்களைத் தந்து,கீற்று,மட்டை முதலானவைகளால் வருமானம் அடைய வைக்கிறது.

புரட்டாசி மாதத்தின் இறுதியில் இருந்து பங்குனி மாதத்தின் ஆரம்பம் வரையிலான காலகட்டமே மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்ற காலமாக தமிழ்நாடு,ஆந்திரப்பிரதேசம்,கேரளமாநிலம்,கர்னாடக மாநிலம்,ஸ்ரீலங்காவில் அமைந்திருக்கிறது.இந்த காலகட்டத்தில் ஒரு நாளுக்கு ஒரு மரக்கன்று என்ற விகிதத்தில் மரக்கன்றை நடுவது அவசியம்.குறிப்பாக,நமது ஜன்ம நட்சத்திரத்திற்குரிய மரக்கன்றை நடுவதும் அளவற்ற புண்ணியம் தரும்.

கோவில் சார்ந்த மலைப்பகுதிகளில்/வனப்பகுதிகளில் மரக்கன்று நடுவதன் மூலமாக அளவற்ற புண்ணியத்தைப் பெறமுடியும்.ஒரு மரக்கன்று நட நாம் இடத்தைத் தேர்வு செய்த பின்னர்,அந்த இடத்தில் முதல்நாளே பள்ளம் தோண்டி வைத்து விட வேண்டும்.மறு நாள் மாலை வரை அந்த பள்ளத்தில் வெப்பம் வெளியேறிவிடும்.அதன் மூலமாக நாம் நடும் மரக்கன்றின் வேர்கள் குளிர்ச்சியான சூழ்நிலையில் மண்பிடிப்புக்கு ஏதுவாக தயாராகிவிடும்.முறையாக வளரத்துவங்கிவிடும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!!!

காலத்தை இயக்குபவராக ஸ்ரீகாலபைரவர் இருக்கிறார்;அவரது சுவாசமே வாக்கியப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணித பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது;

யாருக்கு லக்னத்துக்கு இரண்டாமிடத்து அதிபதி ஆட்சி அல்லது உச்சமாக இருக்கிறதோ அவர்களுக்கு ஜோதிடம் வரும்;
 
எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் குரு இருந்தாலே அவர் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்;
 
எந்த லக்னமாக இருந்தாலும் இரண்டாமிடத்து அதிபதியின் திசை வந்தால் அவர் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்;
 
எந்த லக்னமாக இருந்தாலும் அவருக்கு குரு மஹாதிசை அல்லது புதன் மஹாதிசை வந்தாலும் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்.
 
ஒரு மனிதன் நேரடியாகக் கற்றுக் கொடுத்து உணரக்கூடிய கலைகள் நமது நாட்டில் மட்டுமே தோன்றியவை;(இவைகளை தபால் மூலம் கற்றுக்கொண்டாலும்,அதன்மூலமாக ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க நிச்சயமாக ஒரு நேரடி குரு தேவை;புத்தக அறிவு ஒரு கட்டத்திற்கு மேல் கற்பதில் சோர்வையோ,தடுமாற்றத்தையோ தரும்;)அவைகளில் ஜோதிடம்,வாஸ்து,எண் கணிதம்,உச்சாடனம் என்ற ஆலய வழிபாட்டு மந்திரமுறைகள்,யாகங்கள் நடத்தும் கலை;சாமுத்ரிகா லட்சணம்,மூலிகை மருந்து தயாரித்தல்,மூச்சைக் கட்டுப்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்கவும்,நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தும் சரக்கலை,இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள வைக்க உதவும் பஞ்சபட்சி சாஸ்திரம்,கோவில்களை கட்டிட உதவும் சில்ப சாஸ்திரம்,சைவ வழிபாட்டு விதிமுறைகளை போதிக்கும் ஆகமங்கள்,மருந்தில்லாத மருத்துவமான வர்மக்கலை,அடுத்தவரின் எண்ணங்களை சில நொடிகளில் கட்டுப்படுத்தும் நோக்கு வர்மம் போன்றவை முக்கியமானவை ஆகும்.
 
 
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இவை அனைத்தையும் ஒருவரே கற்றுக் கொள்ள 12 ஆண்டுகள் ஆகும்;இவைகளைத் தான் குருகுல முறையில் ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டனர்;இதனால் உலகிலேயே சர்வ சக்தி வாய்ந்த சமுதாயமாக நமது இந்து சமுதாயம் விளங்கியது;அந்நியர் படையெடுப்புகள்,பிற மதங்களின் பரவலால் இவைகளில் பெரும்பாலானவை மறைந்து போய்விட்டன.
 
 
மெக்காலே கல்வித்திட்டத்தினால் நமது நாட்டு மக்களின் அபூர்வமான சுபாவங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவிட்டன;எனவே,தற்போது இந்தக் கலைகள் ஒவ்வொன்றுமே தனித்தனியாகவே போதிக்கப்பட்டுவருகின்றன;இந்தியர்களாகிய நமது அறிவாற்றல்,படைப்பாற்றல்,நினைவுத்திறன்,பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் போன்றவை மெக்காலே கல்வித்திட்டம்,தவறான உணவுப்பழக்கம்(மேல்நாட்டு உணவு வகைகளை மட்டும் சாப்பிடுவது),மேல்நாட்டு ஆடை அணிவது,கணினி,செல்போனை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் பெருமளவு குறைந்து போய்விட்டது.
 
 
ஜோதிடத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப கட்டத்தில் அது ஒரு வருமான வாய்ப்பு;அதுவும் புகழுடன் கூடிய வருமான வாய்ப்பாக/தொழிலாகவே மற்றவர்களுக்குப் புலப்படும்.
நிஜத்தில் பிறருக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டவும்,நமது ஆன்மீகவாழ்க்கையில் இப்பிறவியிலேயே பல மடங்கு முன்னேறவும் உதவும் ஒரு ஆன்மீக கைடு ஆகும்.
 
அப்பேர்ப்பட்ட ஜோதிடக்கலையை நேரடியாக கற்றுக் கொள்ள விரும்புவோர்  ராஜபாளையத்தில் தங்கி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்;விருதுநகர் மாவட்டம்,மதுரை மாவட்டம்,நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் பயணித்து கற்றுக் கொள்ளலாம்;ஜோதிடத்தை கற்க குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் வீதம் 45 நாட்கள் வரை தினமும் பயிற்சி வகுப்பு உண்டு;
 
ஜோதிடராக விரும்புவோர்,ஜோதிடத்தில் வல்லுநராக விரும்புவோர்,ஏற்கனவே அஞ்சல் வழியில் ஜோதிடம் கற்றுக் கொண்டிருப்போர்,ஜோதிட ஆராய்ச்சி செய்ய விரும்புவோர்,மேலே கூறிய கலைகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற விரும்புவோர் முதலில் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வது அவசியம்;எல்லோருக்கும் ஆன்மீக வழிகாட்டியாக விரும்புவோர் முதலில் ஜோதிடத்தை ஒரு பாடமாக கற்க வேண்டும்;ஜோதிடரான பின்னர் சுமார் 15 முதல் 25 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆன்மீக வழிகாட்டியாக முடியும்.
 
அடிப்படை ஜோதிடப் பாடங்கள்,ஜாதகம் கணிக்கும் முறை,ஜாதகத்திற்குப் பலன்கள் சொல்லும் முறை;ஜோதிடருக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்;அதை எதிர்கொள்ளும் அனுபவ வழிகாட்டுதல்கள்  இந்த 45 நாட்கள் பயிற்சியில் வழங்கப்படும்.
 
 
ஜோதிடத்தை நேரடியாக கற்றுக் கொள்ள விரும்புவோர் aanmigakkadal@gmail.comஎன்ற முகவரிக்கு(subjectஇல் Like to Learn Astrologyஎன்று குறிப்பிட்டு) தமது செல் எண்,ஜாதகம்,போட்டோவை அனுப்பி ஆலோசனை கேட்டுவிட்டு வரவும்.வகுப்புகளை நடத்துவது ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி!
 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

குற்றாலத்தில் அகத்தியர் நிகழ்த்திய அதிசயம்!!!

அந்த மனிதர் மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்;மாதம் ஒருமுறை குற்றாலத்துக்கு வருகைதந்து,வழிபாடு செய்துவிட்டுத் திரும்புபவர்;ஒரு முறை,ஆர்வம் காரணமாக குற்றாலமலை மீது ஏறி இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்தார்;பல இடங்களில் இவ்வாறு சுற்றி அலைந்தவர்,ஓரிடத்தை அடைந்ததும்,சிறிது நேரத்தில் அங்கிருந்து அவரால் எங்கும் நகரமுடியவில்லை;அவர் நின்ற இடத்தில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை அட்டைப்பூச்சிகள் நான்குதிசைகளில் இருந்தும் அவரை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தன;மிரண்டே போனவர்,திகைத்துப் போனார்;(மம்மி ரிட்டன்ஸ் பகுதி 1 திரைப்படத்தின் இறுதிக் காட்சியினை கவனித்திருக்கிறீர்களா? அதேபோல)

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர், “டேய்,பயலே! இங்கே ஏண்டா வந்தாய்? கையை நீட்டு” என்று கத்திப் பேசினார்;அவரது குரலில் பாசம் நிறைந்த கோபம் வெளிப்பட்டது.இவர் கையை நீட்டியவுடன்,அந்த அட்டைப்பூச்சிகளின் கூட்டத்துக்கு வெளியே வெளியே போட்டார்;அப்படிப் போடும் போது அந்த முதியவரின் கைகள் இந்த மனிதரின் கைகளைத் தொடவில்லை;அவ்வளவு தொலைவில் நின்று கொண்டுதான் அந்த முதியவர் பேசவும்,அவரைத் தூக்கி வெகுதூரத்தில் ‘வைக்கவும்’ செய்தார்;

‘இனிமேல் இங்கே எல்லாம் வராதே;திரும்பிப் பார்க்காமல் ஓடு! சீக்கிரம்!!’ என்று கர்ஜித்தார்.இந்த மனிதரும் திரும்பிப் பார்க்காமல் பிரதான சாலை வரும் வரை ஓடியே போனார்.

சாலை வந்தடைந்ததும்,இவருக்கு பகுத்தறிவு வேலை செய்யத் துவங்கியது.அப்போது தன்னைக் காப்பாற்றியவரை நினைத்துப்பார்த்தார்;அந்த முதியவர் நான்கு அடி உயரமே இருந்ததும்,நீண்ட தாடி இருந்ததும் நினைவுக்கு வந்தது.அந்த  முதியவரைப் பார்க்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத நிம்மதியும்,மகிழ்ச்சியும் தோன்றியதையும் நினைவு கூர்ந்தார்.சித்தர்களின் தலைவர் அகத்தியர் தான் தன்னை தற்போது காப்பாற்றியிருக்கிறார் என்று அந்த மனிதர் நம்புகிறார்.

நன்றி:ஆவிகள் உலகம்,பக்கம் 22,வெளியீடு ஜனவரி 2014

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ