பிரேசில் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜேண்டர் பெர்ணாண்டஸ் டி ஒலிவியரா.இவரது
வயது 48.பாதிரியாருக்குரிய பயிற்சிகளை கற்ற இவர்,கீழை நாட்டு மதங்கள் பற்றிய படிப்பையும்
பிரேசில் நாட்டில் பயின்றார்;(கடந்த 20 ஆண்டுகளாக இண்டாலஜி என்ற பெயரில் மேல்நாடுகள்
ஒரு டிகிரியை தனது பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.இண்டாலஜி என்றால் இந்துவியல்
என்று பெயர்!)
அவர் படித்த இண்டாலஜியில் இந்து தர்மத்தின் கொள்கைகள் அவரை ஈர்த்துள்ளன;எனவே,அவர்
ரிஷிகேஷில் வாழ்ந்து வரும் ஹன்ஸ்ராஜ் மஹாராஜ் அவர்களை 1999 இல் சந்தித்தார்;அவரது துறவு
ஆளுமைத்திறனால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தார்.
தனது பெயரை தற்போது ஸ்ரீபிரேம்பாபா என்று மாற்றிக்கொண்டார்.உலகம் முழுவதும்
இந்து தர்மத்தின் பெருமைகளைப்பரப்பி வருகிறார்.சமீபத்தில் நிகழ்ந்த கும்பமேளாவில் கலந்து
கொண்டார்.
ஆதாரம்:பசுத்தாய்,பக்கம் 14,மார்ச் 2013
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ