RightClick

கழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த சித்தர்களின் ஆசிகள்!!! பாகம் 1


16.12.2013 திங்கட்கிழமை அன்று மதியம் 3 மணிக்கு அபூர்வமான கிரிவலம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் துவங்கியது; மீண்டும் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு 18 சித்தர்களும் ஒன்றாக கழுகுமலைக்கு சூட்சுமமாக வருகைபுரிந்து கிரிவலம் வந்தனர்;தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள்,வளைகுடா நாடுகள்,தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் பலர் இந்த அரிய அபூர்வ கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்;

இந்த கிரிவலத்தில் கலந்துகொண்டவர்களுக்குக் கிடைத்த சித்தர்களின் ஆசிகள் பற்றிய ஒரு சில உதாரணங்கள்:

அந்த பெற்றோருக்கு ஒரே ஒரு மகள்! சுமாராக பத்து ஆண்டுகளாக வரன் பார்த்து பார்த்து சலித்துப் போனார்கள்;இந்த கிரிவலநிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு,வீடு திரும்பினர்;அன்று இரவு நேரத்தில் ஒரு வரன் வந்து பெண் பார்த்தனர்;பார்த்ததுமே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது;அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் இன்னும் இந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை;


தமிழ்நாட்டில் கடலோர மாநகரத்தில் இருந்து அந்த தம்பதியினர் கழுகுமலை 18 சித்தர்கள் கிரிவலநிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்;6 மாதங்களுக்கு முன்பு,ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றனர்;செல்லும் போது திருமண நிகழ்வில் அணிவதற்காக ஒரு மஞ்சள் பையில் குடும்பத்தார் அனைவரது நகைகளையும் போட்டு கொண்டு போயிருந்தனர்;திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பி வரும் போது பயணத்திலேயே அத்தனை நகைகளையும் காணவில்லை;மொத்த நகைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை வரும்;கடந்த ஆறு மாதமாக அவர்கள் அதீத மன உளைச்சலில் இருந்து வந்தனர்;குடும்பத்தில் யாரும் ஒருவரோடு ஒருவர் சரியாகக் கூட பேசவில்லை;எதிர்காலம் பற்றிய அச்சம் அவர்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில்,கழுகுமலை 18 சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினர்;மறுநாள்,அவர்களின் பீரோவில் அவர்கள் பயணத்தின் போது தொலைத்த அந்த நகைகள் அடங்கிய மஞ்சள் பை இருந்திருக்கிறது.அவர்களுக்கு ஆச்சரியமும் பெருமிதமும் நிம்மதியும் தாங்கவில்லை;
மொத்த குடும்பமும் கிரிவலம் வரும்போது,தொலைந்த நகைகள் கிடைத்தால் போதும்; என்ற எண்ணத்தில் வந்தனர்;அவர்களின் கோரிக்கைகளை சித்தர்கள் நிறைவேற்றிவிட்டனர்;
நமது பகுத்தறிவாலும்,எதற்கெடுத்தாலும் நம்பாத சுபாவத்தாலும் சித்தர்களின் அருளாற்றலை உணர முடியுமா?அந்த மூன்று சகோதரர்களின் வயது முறையே 45,42,39 ஆகும்.அவர்களுக்குரிய பூர்வீகச் சொத்து எங்கே இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை;ஏனெனில்,அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்களின் பெற்றோர்கள் மறைந்துவிட்டனர்;உறவினர்கள் தங்குவதற்கு மட்டுமே புகலிடம் கொடுத்தனர்;சுமாராக 35 ஆண்டுகளாக உழைத்து,தாமாகவே திருமணம் செய்து,தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்;இந்த சகோதரர்கள் தமது குடும்பத்தாருடன் இந்த கழுகுமலை 18 சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டனர்;மறுநாளே இவர்களின் பூர்வீக வீட்டில் ஒரு பழைய ட்ரங்குப் பெட்டியை திறக்கும் சூழ்நிலை உருவானது;அதில் இவர்களின் பெற்றோர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கான பத்திரங்கள் இருந்தன;அவைகளின் மதிப்பைப் பார்க்கும் போது நான்கு தலைமுறை வரை சகல வசதிகளோடு வாழும் அளவுக்கு சொத்துக்களின் அளவு அதில் இருந்திருக்கிறது.இந்த 35 ஆண்டுகளாக அந்த சொத்துக்களை எவரும் ஆக்கிரமிக்கவில்லை;என்பதும் கூடுதல் ஆச்சரியம்!! மூன்று சகோதரர்களும் கழுகுமலை கழுகாசலமூர்த்திக்கு நன்றிகலந்த வணக்கத்தை ஒவ்வொரு நொடியும் செலுத்திக் கொண்டே இருக்கின்றனர்;அந்த இளைஞரின் நோக்கம் ஆன்மீக முன்னேற்றம்! தியானம் செய்து இப்பிறவியிலேயே சித்தராக வேண்டும் என்பதே!! இதுவரை சுமாராக 12 வெவ்வேறு தியான அமைப்புக்களில் சேர்ந்து தியானம் கற்றிருக்கிறார்;அவர்களின் போதனை இவருக்குப் புரியவேயில்லை;அவர் இந்த கழுகுமலை 18 சித்தர்கள் கிரிவலநிகழ்ச்சிக்கு வந்திருந்தார்;கிரிவலம் துவங்கும் முன்பாக ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவினை கேட்டிருக்கிறார்.அப்போது ஐயா அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை இவரது மனதினுள் ஊடுருவியிருக்கிறது. ‘நான் உங்களுக்கு குரு அல்ல;உங்கள் மூச்சுதான் உங்களுக்கு குரு’ என்ற வாசகத்தில்,அவருக்கு ‘உங்கள் மூச்சுதான்’ என்று பேசியதுமே,அந்த வார்த்தையால் இவரது மனதினுள் ஒரு அதிர்ச்சி அலை தோன்றியிருக்கிறது.
கிரிவலம் வரும் போது மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் யாக நீரை தெளித்தார் அல்லவா? அந்த யாக தண்ணீர் இந்த இளைஞர் மீது பட்டதுமே இவருக்குள் ஒரு மின்னல் தோன்றியிருக்கிறது;உடல் சில நிமிடங்களுக்கு விடாமல் சிலிர்த்துக் கொண்டே இருந்தது;கிரிவலம் தொடர்ந்து செல்லும் போது  யாரோ பேசிக் கொண்டு வருவது போல இவர் உணர்ந்திருக்கிறார்.கிரிவலம் நிறைவடைந்ததும்,இவர் கழுகாசல மூர்த்தியின் கோவிலுக்குள் வந்து ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார்.சுவாசம் பற்றிய அறிமுகத்தை(சரக்கலையின் ஆரம்ப நிலை போதனை) உணர்ந்திருக்கிறார்.


இதே போல உங்களுக்கும் சித்தர்கள் ஆசி கிடைத்திருந்தால்,மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.உரியவர்களின் அனுமதி இருந்தால் மட்டும் அவை பதிவாக வெளிவரும்;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ