RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 14


ஒவ்வொரு புத்தாண்டும்,கிறிஸ்தவ தேதிப்படி ஏப்ரல் 14 அன்று பிறக்கிறது;பாரத தேசத்தில் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே சித்திரை 1 தான் புத்தாண்டு! ஒரு போதும்  ஜனவரி 1 புத்தாண்டின் முதல் நாள் அல்ல;சித்திரை 1 முதல் பங்குனி 30 வரையிலான ஒருவருடத்தில் வரும் முக்கிய நாட்கள் பட்டியலை வருடம் தோறும் ஆன்மீகக்கடலில் வெளியிட்டுவருகிறோம்;

கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்

கடன்களைத் தீர்க்கவும்,வருமானம் அதிகரிக்கவும் நாம் செய்ய வேண்டிய தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு.எனவே,தேய்பிறை அஷ்டமி நாட்கள் பட்டியல்

பைரவப் பெருமானின் அருளோடு,சிவபெருமானின் அருளைப் பெற உதவும் திருவாதிரை நட்சத்திர நாள் வழிபாடு;எனவே,திருவாதிரை என்ற ஆருத்ரா தின பட்டியல்

நமது முன்னோர்கள் சாபத்தை நீக்கும் துவாதசி திதி வரும் நாட்கள் பட்டியல்

ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றால் கிடைக்கும் பலன்களை வெறும் ஒன்றரை மணி நேர வழிபாட்டின் மூலமாகவே தரும் சனிப்பிரதோஷம்.எனவே,சனிப்பிரதோஷ நாட்கள் பட்டியல்

சிவனுக்கும்,பைரவப் பெருமானுக்கும் உகந்த சோமவார(திங்கள் கிழமை) பிரதோஷ நாட்கள் பட்டியல்

பைரவப் பெருமானின் அவதார நட்சத்திரம் பரணி.பரணி நட்சத்திர நாளும் ராகு காலமும் சேர்ந்து வரும் நாளில் பைரவ வழிபாடு செய்தால் பைரவ அருள் விரைவாகக் கிட்டும்;எனவே,பரணி நட்சத்திரம் வரும் நாட்கள் பட்டியல்

அம்மன் வழிபாடு செய்பவர்கள்,அண்ணாமலையாரின் அருளைப் பெற விரும்புவோர்,அண்ணாமலை ஆலயத்தினுள் ஜீவசமாதியாக இருக்கும் இடைக்காட்டர் சித்தரின் அருளைப் பெற விரும்புவோர்,பில்லி சூனியத்திலிருந்து விடுபட விரும்புவோர் வழிபட வேண்டிய ஏதாவது ஏழு நாட்கள் பட்டியல்

ஆணும் இல்லாமல்,பெண்ணும் இல்லாமல் பிறந்திருக்கும் மனித ஆத்மாக்கள் ஸ்ரீரங்கம் சென்று வழிபட வேண்டிய நாட்கள் பட்டியல்

ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாட்களில் கரூரில் அமைந்திருக்கும் கருவூர் சித்தரை வழிபட்டால் கடுமையான ஸர்ப்ப தோஷங்கள் முழுமையாக விலகிவிடும்;கரூர் செல்ல முடியாதவர்கள் நாகர்கோவில் நாகராஜாகோவில் சென்றும் வழிபாடு செய்யலாம்;இந்த ஆயில்யம் நட்சத்திர நாட்கள் பட்டியல்

இது போன்ற பட்டியல்களை கடந்த மூன்று  ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறோம்.இந்தப் பட்டியல்கள் எதிர்வரும் கி.பி.(கிறிஸ்துவுக்குப் பின்) 2014 ஜனவரி மாதம் வெளிவர இருக்கிறது.இவைகளை பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்  கொள்ளுங்கள்.

இந்த 2014 ஆம் ஆண்டில் வரும் மார்கழி மாதம் முதல் நாளன்று (16.12.2014 அன்று) சனிபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகப் போகிறார்.

இதனால்,விருச்சிகராசிக்கு ஏழரைச்சனியில் முக்கிய காலகட்டமான ஜன்மச்சனி ஆரம்பமாகப்போகிறது;இதே விருச்சிகச் சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அஷ்டமச்சனியாகவும்,ரிஷபராசியினருக்கு கண்டச்சனியாகவும்,சிம்மராசியினருக்கு அர்த்தாஷ்டமச்சனியாகவும்,துலாம் ராசியினருக்கு கடுமையான காலகட்டமான ஜன்மச்சனி விலகி,சிரமங்களைக்குறைக்கும் வாக்குச் சனியாகவும்,தனுசு ராசியினருக்கு ஏழரைச்சனியின் முதல்பாகமான விரையச்சனியாகவும் பரிணமிக்க இருக்கிறது.

அதே சமயம் இந்த விருச்சிகச் சனிப்பெயர்ச்சியானது கன்னிராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனியை நிறைவுபெறச் செய்கிறது;மீன ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி விலகுகிறது;இதன்விளைவாக,இந்த ஒருவருடகாலத்திற்குள்(1.12.2013 முதல் 16.12.2014) கடகராசிக்காரர்கள் அனைத்து விதமான பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டுவிடுவார்கள்;நிரந்தரவேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்;அமைவதற்கு சூட்சுமமான காரண கர்த்தாவாக சனிபகவான் இருப்பார்;மீன ராசிக்காரர்கள் இதுவரை மாட்டியிருந்த இக்கட்டுகளில் இருந்து முழுமையாக விலகிவிடுவர்;கடன்கள் தீர்ந்துவிடும்;நீண்டகாலப் பிரச்னைகள்,ஏக்கங்கள் முடிவுக்கு வந்துவிடும்;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எல்லா நாட்களில் மாலை 4.30 முதல் 6 மணிவரையிலான நேரத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் நாம் சாப்பிடாமல் இருப்பது அவசியம்;இந்த நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு மட்டுமல்ல;அருந்தும் குடிநீர் கூட நமது உடலில் விஷகலையாக மாறி நமது உடல் ஆரோக்கியத்தைப் படிப்படியாக சீர்குலைக்கத் துவங்குகிறது;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!