RightClick

நவீன அடிமைத்தனத்தை உருவாக்கும் பன்னாட்டு உணவு அரசியல்!

உணவில் தான் உலகமே இயங்குகிறது;உணவே மருந்து;மருந்தே உணவு என்ற உன்னதமான மானுடக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது பாரத தேசத்தில் உணவு உற்பத்தியும்,உணவுப்பழக்கமும் இருந்து வருகிறது;உலகிலேயே முழு ஆரோக்கியம் நிறைந்த நாட்டு மக்கள் நமது பாரத தேச மக்கள் தான்;உலகிலேயே அழகும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நிரம்பிய இனம் நம் பாரத தேசத்தின் பெண் இனமே!


வைத்தியனுக்குத் தருவதற்குப் பதிலாக வாணிகனுக்குக் கொடு; என்ற பழமொழி உணவின் அடிப்படையைக் கொண்டே நமது தேசத்தில் உருவானது;இந்த பழமொழியை உல்டா அடிக்கும் விதமாக மேற்கு நாடுகள் நமது நாட்டினுள்(அந்த உணவை வைத்துத்தான்) இன்று ஒரு மிகப் பெரிய சுரண்டல் நடந்து வருகிறது;நாம் எதைச் சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்பதை இன்று நாம் நினைத்தாலும் செயல்படுத்த முடிவதில்லை;பன்னாட்டு நிறுவனங்கள் டிவி  விளம்பரங்கள் மூலமாகவும்,உணவு நிபுணர்கள் மூலமாக உருவாக்கப்படும் போலியான ‘சத்துணவு விழிப்புணர்வு’ கட்டுரைகளாலும்,மனோதத்துவ ரீதியாக உருவாக்கப்படும் டிவி விளம்பரங்கள்,எம்.எல்.எம்.நிறுவனத் தயாரிப்புகள் மூலமாகவும் நமது நாட்டின் உணவுப்பழக்கத்தை அடியோடு மாற்றி வருகின்றன;


மேல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் கேண்டீன்களில் வேண்டுமென்றே ஆரோக்கியம் தரும் நம் நாட்டு உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை;மாறாக,ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மேல்நாட்டு உணவுகளே பரிமாறப்படுகின்றன;இதன் மூலமாக நவீன அடிமைகளை மேற்கு நாடுகள் இந்தியாவிலும்,மூன்றாம் உலக நாடுகளிலும் உருவாக்கி வருகின்றன;


தீபாவளி,பொங்கல் என்று வந்தால்,நாம் நமது வீடுகளில் பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும்,நட்பு வட்டத்திற்கும் பகிர்ந்து கொடுப்போம்;இந்த வழக்கம் 1980 வரை இருந்தது; இப்போது ஸ்வீட்ஸ்டால்களின் வாசல்களில் நிற்கிறோம்;கோக்,பெப்ஸி இல்லாமல் உணவு இல்லை என்ற வழக்கத்தை நுகர்வோர் கலாச்சாரம் உருவாக்கிவிட்டதை நாம் இன்னும் உணரவேயில்லை;


பி.டி.கத்தரிக்காயை அறிமுகப்படுத்திய போது முகமூடி அணிந்து கொண்டு விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்தார்கள்;அப்படி இருந்தும் கூட அவர்களை புற்றுநோய் தாக்கியது;விதைகளுக்குள் மரபணு மாற்றம் செய்கிறார்கள்;இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்டு காப்புரிமை என்ற பெயரில்,நம் பாரம்பரிய உணவு வகைகளான சோளம்,ராகி,தக்காளி போன்ற 53 பயிர்வகைகளுக்கு பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை பெற்றுள்ளன;நம் நாட்டு பாரம்பரியத்தை நாம் அந்நிய நாடுகளிடம் அடகு வைத்துக்கொண்டிருக்கிறோம்.

கோலண்ட் புற்றுநோயை குணப்படுத்தும் முக்கிய மருந்தாக மஞ்சள் இருந்து வருகிறது;ஆனால்,அந்த மஞ்சளுக்கு இன்று அமெரிக்கர்கள் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்;மஞ்சளின் பூர்வீகம் நமது இந்தியா! இந்தியாவில் ஆயிரம் மரணங்களில் 826 மரணங்கள் சர்க்கரைநோய்,புற்றுநோய்,இதய நோய் ஆகியவற்றால் நிகழுகிறது;இதற்குக் காரணம் மேல்நாடுகள் நம் நாட்டில் பரப்பிவரும் தவறான உணவுப்பழக்கமே!

நன்றி:ஜீனியர் விகடன்,தமிழ் மண்ணே வணக்கம் பகுதி,பக்கம் 24,25;வெளியீடு 3.11.2013