RightClick

சொர்ணாகர்ஷண கிரிவலநாளில்(30.11.13சனி) நாம் செய்ய வேண்டியவை:(புதுப்பிக்கப்பட்டவைகளுடன்)? அதென்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்?

நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் நமது தினசரி வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது;ஒரு நாளுக்கு 12 மணி நேரம் நாம் உழைத்தாலும்,நமது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் தவிப்பவர்களே நம்மில் அதிகம்;

இது போன்ற தெய்வீக ரகசியங்களை ஆன்மீகவாதிகள் அனனவருமே அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பூ/இணையதளம் மூலமாக வெளியிடுகிறார்களா?

அப்படியே வெளியிட்டாலும்,உரிய தெய்வீக நிகழ்ச்சிகளை தாமே தலைமை தாங்கி நடத்துகிறார்களா?

இந்தப் பதிவினை வாசிக்கும்  நாம் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;இதனால்,நமக்கு நியாயமான முறையில் வர வேண்டிய சம்பள உயர்வு,பதவி உயர்வு,வராக் கடன்கள்,கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து,நமது திறமைக்குரிய சம்பளம் தரும் வேலை அல்லது தொழில்.எட்ட வேண்டிய சேவை இலக்குகள்,நமது உழைப்புக்குரிய அங்கீகாரம் சித்தர்களின் ஆசியாலும்,அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தாலும் நம்மை வந்து சேரும்.

கடந்த 5 வருடங்களாக இது போன்ற  ஆன்மீக ரகசியங்களை பொது நிகழ்ச்சிகளாக ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடும்,அனுமதியோடும் நமது ஆன்மீகக்கடல் வெளியிட்டுக் கொண்டு வருகிறது;தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இந்த ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டே இருக்கின்றனர்;இப்படிக் கலந்து கொள்வதன்  மூலமாக,ஏராளமான வாசக,வாசகிகள் தமது நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்;விடுபட்டு வருகின்றனர்;

இன்று நிம்மதியாகவும்,பொருளாதாரத் தன்னிறைவோடும்,எந்த விதக் குறையின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்;

? எதற்காக இந்த சொர்ணாகர்ஷண கிரிவல நாளில் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்?

அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கே நமது முன்னோர்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளும் தேவை;
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற ஆடையை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும் என்ற தெய்வீக விதி இருக்கிறது. அது பற்றிய விளக்கமான பதிவு விரைவில் ஆன்மீகக்கடலில் வெளிவரும்.

இந்த மகத்தான நாளில்(30.11.13 சனிக்கிழமை) நாம் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து நமது சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் கிரிவலம் செல்வதால்,நமது கடுமையான கர்மவினைகள் கரைந்து காணாமல் போய்விடும்;இந்த கர்மவினைகளாலும்,சக ஊழியர்கள்/உடன்பழகுபவர்களின் பொறாமையாலும் பல வருடங்களாக நமது வருமான அளவு அதிகரிக்காமல் இருக்கும்;இந்த தடை நீங்கிவிடும்;பணரீதியான தன்னிறைவை எட்டியவர்கள்,இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டால்,அவர்கள் தமது ஆன்மீக முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எட்டுவார்கள்;கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த உண்மையை பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்;

? ஏன் முதல் நாளே(29.11.13 வெள்ளிக்கிழமை) அண்ணாமலைக்கு வர வேண்டும்?
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் சில மணி நேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;அதே சமயம்,தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,முதல் நாளே வந்து அண்ணாமலையில் தங்கிக் கொள்வது உத்தமம்.உதாரணமாக,திருநெல்வேலி,தேனி,ராமனாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு வந்தடைய குறைந்தது 16 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

? அண்ணாமலையில் எங்கே தங்குவது? எனது குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ளலாம்?

திரு அண்ணாமலையாரின் கோவில் பல கோடி வருடங்களாக இருந்து வருகிறது.அண்ணாமலையாரின் பெயரிலேயே இந்த ஊரும் இருக்கிறது.தவிர,மாவட்டத் தலைநகரமாகவும் இருக்கிறது.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சுமாராக ஒரு லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்;இதனால்,இந்த ஊர் முழுவதும் மகான்களின் ஆசிரமங்கள்,மடங்கள்,திருமண மண்டபங்கள் என்று அமைக்கப்பட்டிருக்கின்றன;தவிர,தங்கும் விடுதிகளும் கோவிலைச் சுற்றிலும் ஏராளமாக இருக்கின்றன.நாள் வாடகை ரூ.100/-முதல் ரூ.5000/-வரைக்கு லாட்ஜ்களும்,நட்சத்திர விடுதிகளும் இருக்கின்றன;

தாய்மார்கள் நான்காம் நாளாக இருந்தாலே கலந்து கொள்ளலாம்.

நமது குடும்பத்தில் யாரெல்லாம்  பக்தி உணர்வுடன் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து வரலாம்;நமது இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்;

? இட்லிதானம் செய்வது எப்படி?

இந்த விஜயவருடத்தில், துவாதசி திதி வரும் நாளில் சொர்ணாகர்ஷண கிரிவலநாள் அமைந்திருக்கிறது.இந்த நாளில் நாம் ஒவ்வொருவருமே காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் என்று அண்ணாமலையில் அன்னதானம் செய்வது நமது அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும்;கிரிவலப் பயண நேரம் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்;அதிக பட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்;ஆக,காலையிலும் மதிய நேரத்திலும் நாம் இந்த நாளில் கிரிவலப்பயணத்தில் இருப்போம்;

காலையிலும்,மதிய நேரத்திலும் கிரிவலப் பாதையில் நம்மால் எத்தனை சாதுக்களுக்கு இட்லி தானம் செய்ய முடியுமோ அத்தனை சாதுக்களுக்கு தானம் செய்வோம்;கூடவே,நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை ஒவ்வொரு இட்லிதானத்துடனும் சேர்த்தே கொடுப்போம்;

கிரிவலப்பாதையிலும் சில உணவகங்கள் இருக்கின்றன;எனவே,மதிய நேரத்திற்கு கிரிவலப் பாதையில் மதிய நேர அன்னதானத்திற்கு உணவு வாங்கிக் கொள்ளலாம்;அல்லது குபேர லிங்கம் வந்ததும்,நம்மில் ஒரு சிலர் ஆட்டோவில் நகருக்குள் பயணித்து உணவுப் பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தும் தானம் செய்யலாம்;

?எள்ளுப்பொடியைத் தயார் செய்வது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் மளிகைக்கடைகளில் ரெடிமேடாக எள்ளுப்பொடி கிடைக்கிறது;ஒருவர் ஐந்து இட்லிகள் சாப்பிடும் அளவுக்கு எள்ளுப்பொடியை ஒரு சிறு பாலிதீன் பையில் நிரப்பி அத்துடன் சுத்தமான நல்லெண்ணெயை கலந்து சிறு கயிற்றால் கட்டிக் கொண்டு வருவோம்;நாம் எத்தனை பேர்களுக்கு இட்லிதானம் செய்ய விரும்புகிறோமோ,அத்தனை பாலிதீன் பைகளில் எள்ளுப்பொடி+நல்லெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவது அவசியம்.(நமது ஊர்களில் மதிய உணவுவாங்குவோம் அல்லவா? அதில் மோர் பாக்கெட் எப்படி கட்டப்பட்டிருக்கும்;அதே போல கட்டிக் கொண்டு வரவும்)

பாரம்பரியம் மாறாத ஏராளமான குடும்பங்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றன;அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வரலாம்;
தனித்து வாழ்ந்து வருபவர்கள்,வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் முதலில் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது போதுமானது;
(இட்லிப்பொடி என்பது உளுந்துப்பொடி என்பதை நினைவிற் கொள்க)

ஏன் இட்லியுடன் எள்+நல்லெண்ணெய் கலந்த கலவையை தானம் செய்ய வேண்டும்?

அது தெய்வீக ரகசியம்! நமது கர்மவினைகள் தீரும் ரகசியம் இதனுள் தான் புதைந்திருக்கிறது.நீங்கள் எங்கெல்லாமோ அன்னதானம் செய்திருப்பீர்கள்;அரிசி தானம்,கோதுமை தானம்,பழ தானம்,ஆடை தானம்,ருத்ராட்ச தானம்,விஷய தானம் செய்திருப்பீர்கள்.அதைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கலவையுடன் இட்லி தானம் செய்வது!

இட்லி தானம் செய்வதற்கு எங்கே வாங்குவது?

29.11.13 வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்திற்குள் அண்ணமலைக்கு வந்துவிட்டாலே சரியான உணவகத்தை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.அங்கேயே கூட நாளைக் காலை எனக்கு ஐந்து இட்லிகள் கொண்ட பார்சல்கள் இத்தனை தேவை என்று கூட முன்பதிவு செய்து கொள்ளலாம்;
அண்ணாமலையில் ஒரு உணவகத்தில் ஒவ்வொரு வேளையும் சமையல் செய்து முடித்ததும்,அந்த உணவுகளின் முன்பாக சைவ முறைப்படி தேவாரம் முதலான பதிகங்கள் பாடியப்  பின்னரே பரிமாறுகிறார்கள்.இதனால்,அந்த உணவகத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும்(இட்லி,தோசை,பொங்கல்,புளியோதரை,மதியம் முழு உணவு) மிகுந்த சுவையுடன் இருக்கிறது.
துவாதசி திதியும்,சுவாதி நட்சத்திரமும்,சொர்ணாகர்ஷண கிரிவலமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து ஒன்றாக வருவதால் நாம் செய்யும் இட்லி தானத்திற்கான பலன்கள் அடுத்த சில நாட்களிலேயே நம்மை வந்து சேரும்;சிலருக்கு மட்டும் சில வாரங்களில் வந்து சேரும்.

? நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டையும் ஏன் வாங்க வேண்டும்?

நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றன;நமது கைகளால் நவதானியங்களை ஆதிசிவனின் பாதத்தில்  (அண்ணாமலை கிரிவலப் பாதையில்) தூவ வேண்டும்;நமது கைகள் பட்டு தூவுவதால்,அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்;அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே,நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நாம் தினசரி வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றியும்,பிரச்னைகள் இல்லாமலும் நிம்மதியாக வாழத் துவங்குவோம்;

கல்கண்டு சாப்பிடுவதால் சுகர் அதிகரிக்காது;அப்பேர்ப்பட்ட இயற்கை இனிப்பு கல்கண்டு ஆகும்.அதை இன்றைய நவீன காலகட்டத்தில் மோல்டிங் மெஷின்கள் மூலமாகத் தயாரிக்கிறார்கள்;அதனால்,தற்போது கல்கண்டு வைரக்கல் வடிவிற்கு மாறிவிட்டது;இதையே டயமண்டு கல்கண்டு என்று அழைக்கிறோம்.

? நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டையும் எங்கே வாங்குவது? எப்படித் தூவுவது?

29.11.13 வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குள் அண்ணாமலையை நாம் வந்தடைந்து விட்டால்,அண்ணாமலையிலேயே நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.
சிலபல வேலைகளால்,நம்மால் 30.11.13 சனிக்கிழமை காலையில் நேரடியாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்பவர்கள் அவரவர் ஊரிலிருந்தே இவைகளை வாங்கிக் கொண்டு வரவும்.

அக்னிலிங்கம் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம் ஆகும்;இதைக் கடந்ததும்,நகர்ப்பகுதி நிறைவடைந்துவிடும்;மலையும் காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்;இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் தூவ வேண்டும்;கொட்டக் கூடாது;இரு கைகளால் தூவிக் கொண்டு வருவது நன்று;சிறிது சிறிதாகத் தூவி வருவதே நன்று.

? கிரிவலத்தின் போது செருப்பு அணிந்து நடக்கலாமா?

செருப்பு அணியாமல் நடப்பதே நன்று.இதில் விதிவிலக்கும் உண்டு.மழைக்காலமாக இருப்பதால்,குடை,ரெயின்கோட்,(வயதானவர்கள்,நோய் உள்ளவர்கள்)உரிய மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்;
?கிரிவலத்தில் மட்டும் கலந்து கொள்ளலாமா?

கிரிவலம் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்துவிடும்;பிறகு,மாலை 4.30 முதல் 6 மணி வரை சனிப்பிரதோஷ அபிஷேகம் அண்ணாமலையார்கோவிலில் நடைபெறும்;அதில் கலந்து கொண்டு ஓம் அண்ணாமலையே நமஹ,ஓம் அருணாச்சலாய நமஹ என்ற மந்திரங்களை ஜபிப்பது நன்று;கூடவே,நாம் மட்டும் உபதேசம் பெற்ற சிவமந்திரங்களையும் அங்கே ஜபிப்பது அவசியம்.சுவாதி நட்சத்திரம் ராகுவின்(பாம்புவின்) நட்சத்திரமாக இருப்பதால்,நமது மந்திர ஜபத்தின் பலன்கள் விரைவாக ஆதிசிவனைச் சென்றடையும்;நாம் அமர்ந்திருப்பதே ஆதி சிவனின் பாதத்தில்(அண்ணாமலையாரின் கோவிலில்)! இதனால் விரைவான சிவனருளும்,சொர்ணாகர்ஷணமும் நமக்குக் கிட்டும்;

(சிலருக்கு மறுநாள் 1.12.13 ஞாயிறு அன்று அரசுத் தேர்வுகள் இருக்கின்றன;அவர்கள் பிரதோஷம் நிறைவடைந்ததும், கிழக்குக்  கோபுர வாசலில் இரவு நேர அன்னதானத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குள் அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுவிடலாம்;இரவுநேர அன்னதானத்திற்கு சைவ உணவாக நம்மால் முடிந்ததை வாங்கிக் கொடுத்துவிட்டுப் புறப்படலாம்)

பிரதோஷம் நிறைவடைந்ததும்,அண்ணாமலையாரை தரிசிப்பது நன்று.பிறகு இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்வது அவசியம்.

இத்துடன் சொர்ணாகர்ஷண கிரிவல நிகழ்ச்சிகள் நிறைவடையும்.சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு அதிகாலையில் நேராக நாம் வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.(சிலருக்கு சனிக்கிழமை இரவே பேருந்து/ரயில் கிட்டாமல் போகலாம்;அவர்கள் சனிக்கிழமை இரவு அண்ணாமலையில் தங்கிவிட்டுப்போவது நன்று.இதன் மூலமாக பலன்கள் வீணாகாது)


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹசொர்ணாகர்ஷண கிரிவலத்தின் (30.11.13 சனிப்பிரதோஷம்)முக்கியத்துவம்!!!(புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன்)கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார்.அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது.
துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலைமையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம்கோடி மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும்.
ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார்.
சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது.
30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு நமது ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுவோம்;பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;ஆண்களுக்கு வேட்டியும்,துண்டும் போதுமானது; அவ்வாறு புறப்படும்போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு புறப்படுவோம்;பெரும்பாலான சாதுக்கள் அக்னிலிங்கம் அருகிலும்,அதன் சுற்றுப் புறங்களிலும் தான் தங்குகின்றனர்;அதே சமயம்,6 வது,7 வது,8 வதாக இருக்கும் லிங்கங்களின் வாசலில் சாதுக்கள் இருப்பது அபூர்வம்.நாம் இந்த துவாதசி திதியில் ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒரு சாதுக்காவது இட்லி தானம் செய்யும் விதமாக நம்மைத் தயார் செய்து வருவோம்;
கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ மனதுக்குள் ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.எனவே,இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;
கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;ஒருபோதும் கொட்டக்கூடாது; கைகளால் தூவ வேண்டும்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்;கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை நிரூபிக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதே சமயம் எளிய பரிகாரம் இது!
நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!
மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;மாலை 6 மணிக்கு பிரதோஷம் நிறைவடந்ததும், கோவிலுக்கு வெளியே வந்து கிழக்குக் கோபுர வாசலிலோ அல்லது பேய்க் கோபுர வாசலிலோ அல்லது கோவிலின் வெளிப்புறத்தில் இருக்கும் சுற்றுச் சாலையிலோ அமர்ந்திருக்கும் சாதுக்களுக்கு இரவு நேரத்திற்குரிய உணவை வாங்கி தானம் செய்வோம்;இந்த தானமானது மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் செய்து விட வேண்டும்;தரமான உணவுப் பொருளை வாங்கித் தருவதும் அவசியம்;
இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்;
இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.
ஓம் அருணாச்சலாய நமஹ!!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!
பின்குறிப்பு:சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் முதல் நாள் 29.11.13 வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலேயே அண்ணாமலையை வந்தடைவது நன்று.அண்ணாமலை முழுவதும் தங்கும் விடுதிகளும்,மடங்களும்,உணவகத்துடன் கூடிய தங்கும் லாட்ஜ்களும் இருக்கின்றன.வெகுதொலைவில் இருப்பவர்கள் முதல் நாளே வருவதன் மூலமாக இங்கேயே நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டையும் வாங்கிக் கொள்ளலாம்;பக்கத்து மாவட்டங்களில்/மாநிலங்களில் இருப்பவர்கள் சொந்த ஊரில் இவைகளை வாங்கிக் கொண்டு 30.11.13 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்குள் இரட்டைப் பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்துவிடவும்.குறித்த நேரத்தில் சொர்ணாகர்ஷண கிரிவலம் துவங்கிவிடும்;தவிர,குளிரும் மழையும் ஒன்றாக வரும் பருவமாக இருப்பதால் உரிய முன்னேற்பாடுகளுடன்(ஸ்வெட்டர்,மருந்துகள் போன்றவை) வருவது அவசியம்.

இட்லிதானம் செய்ய விரும்புவோர் வீட்டில் இருந்தவாறே எள்ளும் நல்லெண்ணெயும் கலந்த கலவையை ஒரு கேரிபேக்கில் கட்டிக் கொண்டுவருவது நன்று.
எத்தனை இட்லி பார்சல்கள் வாங்கி தானம் செய்ய விரும்புகிறீர்களோ அத்தனை கேரிபேக் பாக்கெட்டுக்களைத் தயார் செய்து வருவது நன்று.உதாரணமாக,நீங்கள் கிரிவலப் பயணத்தின் போது 10 பேர்களுக்கு இட்லி தானம் செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால்,பத்து கேரிபேக்குகளில் எள்ளுப்பொடியும் நல்லெண்ணெயும் கலந்து கொண்டு வரவும்.இட்லி பார்சல்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்;வாங்கிக் கொண்டு,தானம் செய்யும் போது ஒவ்வொரு பார்சலுடனும் எள்ளும் எண்ணெயும் கலந்த கேரிபேக்கையும் மறவாமல் தர வேண்டும்;

குறிப்பு:அடுத்த பொதுநிகழ்ச்சியும்,மிகவும் அரிதான நிகழ்வான கழுகுமலை கிரிவலத்தில் 16.12.13 திங்கட்கிழமையன்று சந்திப்போம்;இது போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வதால் இந்த ஜன்மம் முழுவதும் நமது வாழ்க்கை ஸ்திரமாகவும்,அமைதியானதாகவும்,கடன்/நோய்/எதிரி/துயரங்கள்/கஷ்டங்கள்/வேதனைகள்/மன உளைச்சல்கள் இன்றியும் மாறிவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளில் பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்குக் கிடைத்த அனுபவங்கள் இவை!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

அசைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் சமுதாயச் சீர்குலைவு!!!


திருநீற்றின் வகைகள்!!!


நமது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் அன்னிய உணவுகள்!!!


காலபைரவாஷ்டமி: பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்!
Temple images
கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம். இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?
பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும். அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது. இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, வைக்கத்தஷ்டமி என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும். அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். ேமலும், சிவன் பைரவராக உருவெடுத்து, அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்த தால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். தேவர்களே... என்னை நீங்கள் அழிக்க முடியாதபடி வரம் பெற்றுள்ளேன். என் சேனைகளை நீங்கள் அழித்தால், அவர்கள், எங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் மந்திர சக்தியால், உயிர் பெற்று விடுவர். அதனால், தோல்வியை ஒப்புக் கொண்டு, பெண்களைப் போல உருவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உத்தரவை மீறினால், உங்களைக் கொன்று விடுவேன்... என்று மிரட்டினான். இதனால், தேவர்கள் பயந்து, தங்கள் உருவத்தை பெண் உருவாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையிலிருந்து மீள, சிவனை சரணடைந்தனர் தேவர்கள். தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, பைரவா... நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா... என்றார். வந்திருப்பது சிவஅம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். அழிந்து போன அசுரப்படைகளை, சுக்ராச்சாரியார், தன் மந்திர சக்தியால் காப்பாற்றி விட்டார். உடனே, சிவன், சுக்ராச்சாரியாரை விழுங்கி, வயிற்றில் அடக்கிக் கொண்டார். இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார். ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான். எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும்.

ஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா!

Temple images
ஊத்துக்கோட்டை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தொம்பரம்பேடு ஸ்ரீமகா கால பைரவர் கோவிலில் நடந்த, பைரவர் ஜெயந்தி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது ஸ்ரீமகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விடுமுறை நாட்கிளில் அதிகளவு பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஸ்ரீ பைரவர் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டிற்கான பூஜை இன்று, 25ம் தேதி திங்கட்கிழமை காலை, 5 மணிக்கு, 64 ஸ்ரீபைரவ கலச ஸ்தாபனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, கலச புறப்பாடு, கலச அபிஷேகம், ஸ்ரீபைரவர் ஹோமம், பீஜாட்சர ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்காப்பு சாற்றுதலுடன் மகா தீபாராதனை நடந்தது. காலை, முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, காலை, 11 மணிக்கு கிராமத்தில் உள்ள சிறுவர்கள், ஆண்கள், பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை!

தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா, இன்று (நவ., 25) நடக்கிறது. இதையொட்டி, காலை, 6 மணி முதல், 10.30 மணி வரை கணபதி ஹோமம், அஷ்ட பைரவ ஹோமம், கோ பூஜை, அஷ்டபூஜை, மஹா பூர்ணாஹூதியும், காலை, 10.30 மணிமுதல் லட்சார்ச்சனையும் நடக்கிறது. இரவு, 10.30 மணி முதல், 12 மணி வரை குருதி பூஜை, வரமிளகாய் யாகம், 108 லிட்டர் பால், தயிர், இளநீர், கரும்பு பால் கொண்ட மஹா அபிஷேகம், பைரவ அலங்காரம், மஹா தீபாராதனையும் நடக்கிறது. நாளை (நவ., 26) காலை, 6 மணிக்கு செண்டை மேளம், நாதஸ்வர கச்சேரியுடன் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் பிரபாகரன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

ஆரோக்கிய விழிப்புணர்வு
ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 25.11.13 திங்கட்கிழமை=ஸ்ரீகாலபைரவர் பிறந்த திதி) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு!!!நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;
பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர். 

33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம். 

34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்) 

35.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்=உற்சவராக!!! அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)

36.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
37.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

  கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=25.11.13 திங்கட்கிழமை காலை 9.06க்குத் துவங்கி 26.11.13 செவ்வாய்க்கிழமை காலை10.24 வரை அமைந்திருக்கிறது.இந்த மாதம் ராகு காலம் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் போது வரவில்லை;.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.பெரும்பாலான கோவில்களில் சனிக்கிழமை மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=25.12.13 புதன்கிழமை அன்று வருகிறது.இந்த தேய்பிறை அஷ்டமி திதியில் இராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை அமைந்திருக்கிறது.

$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்!!!


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

நாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து!!


தினமும் காலையில் நாம் சொல்ல வேண்டியது ஜெய் ஹிந்த்!!!

புதுடில்லி: வெள்ளைக்காரர்கள் சொல்லிக்கொடுத்த ' குட்மார்னிங் ' இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதிலாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என ராணுவத்திற்கு தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவத்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங்குக்கு குட்பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர்.
சுதந்திர போராட்டக்காலத்தின் போது முழங்கிய முழக்கம் இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் ' ஜெய் ஹிந்த் '. உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து வெள்ளையர்கள் எதிர்ப்பு குரலாக இந்த கோஷம் எழுப்பியபோது அனைவருக்கும் ஒரு உற்றசாகமும், அதேநேரத்தில் ஆங்கிலேயரை கிலியடைய செய்யவும் ' ஜெய் ஹிந்த் '-ஒலித்தது.

இந்த வாசகம் மீண்டும் உயிர்பெறுகிறது ராணுவத்தின் மூலம், அதாவது ராணுவ தளபதி பைக்ராம்சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்; ராணுவ ஊழியர்கள் அனைவரும் குட்மார்னிங், குட்ஆப்டர்னூன், போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இதற்கு பதிலியாக ' ஜெய் ஹிந்த் '- என்றே மரியாதை செலுத்த வேண்டும்.

எந்த வொரு பணி துவங்கும் போதும் ' ஜெய் ஹிந்த் '-என்று சொல்லிக்கொள்ள வேண்டும், இதே போல் எந்தவொரு பணி முடியும் போது பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போன்று நாம் உச்சரிக்கும்போது ஒருவருக்கொருவர் இடைய உள்ள கருத்து வேறுபாடுகள், மற்றும் மதச்சார்பின்மை உருவாகும். மேலும் இது தேசப்பற்றை வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது.வேறுபாடு இல்லாமல்:

நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும், மேலும் துறை ரீதியாக ராணுவ உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற வேறுபாட்டை களையப்பட வேண்டும். இதற்கென துறை சார்பில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பினரும் பங்குபெறுமாறு நடத்த வேண்டும். ராணுவ துறையினரின் குழந்தைகள் அதிகாரிகள், சாதாரண சிப்பாய்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இவ்வாறும் தளபதி கேட்டு கொண்டுள்ளார்.
இந்த தகவல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.

அப்போ., மக்களாகிய நாமும் இன்று முதல் குட்மார்னிங்க்கு குட்பை சொல்வோமே ! ' ஜெய் ஹிந்த் '-

தமிழ்வழிக் கல்வி:வீழ்ச்சியும்,மீட்சியும்

அடிப்படைக் கல்வி என்பது மூளையின் புலன் உணர்வு வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதும்,தாய்மொழிக் கல்வியில் தான் மூளை வளர்ச்சி பெறும் என்பதும்,தாய்மொழிப்பண்பாட்டுடன் அவ்வளர்ச்சி தொடர்புடையது என்பதும்,அடிப்படைக் கல்வி தொடர்பான ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளன.பின்னர் பிற மொழி வழியில் கல்வியைத் தொடர்வது எளிதாகி,அதிக பலன் தரும்.
உலகிலேயே இந்த பலனை தமிழ்நாடு மட்டுமே இழந்து வருகிறது.

ஆய்வுகளின் அறிவுரை:

விளையாட்டுப் பள்ளி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று உலக ஆய்வுகள் எல்லாம் உணர்த்துகின்றன.
சான்றுகளாக:1. www.ccsenet.org/ass&Asian Social Science Vol.7, No.12,December 2011 & Primery School Pupils’ Perception of the Efficacy of Mother Tongue Education in lbaden Metropolis by Dr.David O.Fakeye;
2.The Finding of a comprehensive research review carried out for the World Bank;Dutcher,N.in collaboration with Tucker,G.R.(1997);

The Use of First and Second Languages in Education;A Review of Educational Experience;Washington D.C.,World Bank;
3.Education for All;Policy Lessons From High & Achieving Countries;UNICEF Staff Working Papers;Mehrotra,S.(1998);New York,Unicef;
4.Expanding Educational Opportunity in Linguistically Diverse Societies & Dutcher,N:Center for Applied Linguistics,Washington D.C.,(2001)
5.Education in a multilingual world & Published in 2003 by UNESCO
இது போல் எண்ணற்ற உலக ஆய்வுகள் அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிபடுத்தியுள்ளன.
ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்புக்கேற்ற வகையில் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கவும் அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பது ஆய்வுகளின் அறிவுரையாகும்.

தமிழகத்தின் நிலை:

1970 களின் தொடக்கம் வரை,தமிழ் நாட்டில் மேலே சொன்ன ஆய்வுகளுக்கு ஏற்ப,உயர்நிலைப்பள்ளி வரை ஏறத்தாழ அனைத்து மாணவர்களும் (விதிவிலக்காக ஒரு சில ஆங்கில வழிப்பள்ளிகள்-ஆங்கிலோ இந்திய மற்றும் வட மாநிலக் குழந்தைகளுக்கானவை;)தமிழ் வழியில் படித்து,பின் கல்லூரிகளில் ஆங்கிலவழியில் படித்து,உலக அளவில் சாதனையாளர்கள் உருவானார்கள்.தமிழ்நாட்டில் ஆங்கில வழிப்பள்ளிகள் 1970களில் புற்றீசல் போல் தொடங்கப்பட்ட காலத்தில் ஆட்டு மந்தைகள் போல் ஏதோ நல்லவழி என்று நினைத்து அப்பள்ளிகளில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சேர்த்தார்கள்.உலக ஆய்வுகள் பற்றி தெரிந்து தாய்மொழி வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய படித்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்/திராவிட அறிஞர்கள் தலைவர்களும்,தமிழ்ப்பற்றாளர்களும் அந்த ஆட்டு மந்தை போக்கிலேயே தமது பிள்ளைகளையும் ஆங்கில வழியில் படிக்க வைத்தது பெரும் கொடுமையாகும்.

அந்த காலகட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால்,அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல,அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆங்கில வழி புற்றீசலை ஒழித்திருப்பார்.அந்த சமயத்தில் மொத்த மாணவர்களில் +2 தமிழ்வழியில் எத்தனை சதவீதமோ,அத்தனை சதவீதம் எம்.பி.பி.எஸ்., பி.ஈ.,படிப்புகளில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறைகளில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தவில்லை;அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் செல்ல ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசுப்பள்ளிகள் படிக்க ஆளின்றி மூடப்பட்டு வரும் சவாலை தமிழ்நாடு சந்திக்க நேர்ந்திருக்கிறது.அரசுப்பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்க,அங்கு கூடுதலாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு செய்துள்ள முடிவை தவிர்க்கவே முடியாத முடிவே! அதைவிட தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் ‘தமிழ்வழி ஆதரவாளர்களின்’ இரட்டை வேடம் அம்முடிவினால் அம்பலம் ஆனது மிகப்பெரிய பலனாகும். இனி தமிழ்வழியின் நேர்மையான ஆதரவாளர்களின் குரலுக்கு பெற்றோர்கள் செவி மடுக்க வாய்ப்பு வந்துள்ளது.

குழந்தைகளா, குரங்குகளா?

தற்போது கர்பமாக இருக்கும்போதே, எம்.பி.பி.எஸ்.,பி.ஈ.,கனவு காணும் தாய்,குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் முடியும்போதே விளையாட்டுப் பள்ளியில்(அதான் ப்ளே ஸ்கூல்) சேர்த்து,தமதுபிள்ளைகள் ‘அப்பா,அம்மா’ வைத் தெரிந்து கொள்ளாமல் ‘டாடி,மம்மி’ என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.பின் ஆங்கில நர்சரி பாடல்களை(அதன் பொருள்,பண்பாட்டுப் பின்னணி பற்றிய தெளிவின்றி0 பாடுவதைக் கேட்டு மகிழ்கிறார்கள்;தாய்மொழி,நமது பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களின் தொடர்பற்று, தமது இயல்புக்கும்,வாழும் மண்ணிற்கும்,சம்பந்தமற்ற திரிந்த மேற்கத்திய பண்பாடு ஒழுக்க வாழ்வியல் திணிக்கப்பட்டு,அக்குழந்தைகள் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் கொண்ட குரங்கைப் போல வளர்கிறார்கள்.நமது கனவுகளைக் குழந்தைகள் மீது திணித்து தாய்மார்கள் நம்மையுமறியாமல் குரங்காட்டிகளாக மாறும் போக்கும் கூடவே வளர்கிறது.
உடல்ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மகக்ளை நாம் அறிவோம்;ஆனால் தாய்மொழிக்கல்வியற்ற ஆங்கில வழிக்கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல்(Originally)/நல்லொழுக்க மதிப்பீடுகள் (values)ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையான கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக்கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப்பிராணிகளாகவோ (domesticated animals)அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs) வெளிப்படுகிறார்கள்.இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள்.

ஆங்கில வழிக்கல்வி

ஆங்கில வழிக்கலிவியின் காரணமாக குழந்தைகள் 10 வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது.அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக்கூடியவற்றை விடவும் குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது. அதிலும் அவர்களின் இயல்புக்கேற்ற துறையை அடையாளம் கண்டு,அதற்கான திறமைகளை வளர்த்து சாதிப்பதும் தடைபடுகிறது.பெற்றோர்களின் கனவுகளுக்காக அவர்களின் வாழ்வு ஒரு வகையிலான மனித ரோபோக்களாக அமைந்துவிடுகிறது.இந்த போராட்டத்தில் ‘தோல்வி’ யானவர்கள் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதை கடந்த 20 வருட மனோதத்துவ மற்றும் குற்றப்பின்னணிக்கான பாரத தேசியப் பண்பாட்டு ஆய்வு முகமை கண்டறிந்துள்ளது.


1970களுக்கு முன் தமிழ்நாடு முழுவதுமே பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலைக்கல்வி வரை தமிழ்வழியிலேயே படித்தார்கள்.ஆங்கிலத்தில் வலுவான இலக்கணத்துடன் மொழி அறிவும் பெற்றார்கள்.கலை,அறிவியல்,தொழில்நுட்பம்,மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரி படிப்புகள் முழுவதும் ஆங்கில வழியில் இருந்தும்,அவர்கள் அதிலும் நன்கு படித்தார்கள்.வெகுசில ஆங்கில வழிப்பள்ளிகளே இருந்தன;அதில் படித்த ஆங்கில வழி மாணவர்களை விட பெரும்பாலும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் ஆங்கில வழியில் கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள்.1970களில் தான் இது மாறத் தொடங்கி,இப்போது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட அன்று தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கிருந்த ஆங்கில அறிவு இல்லாமல் உள்ளது.
இன்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி,எழுதி,பேராசிரியர்களாக,விஞ்ஞானிகளாக,மருத்துவர்களாக,பொறியாளர்களாக பணிபுரியும்/பணி ஓய்வு பெற்ற சுமார் 50 வயதுக்கும் மேலான அனைவருமே 11 வது வரை தமிழ்வழியில் படித்து,அதன் பின் பி.யு.சி.,முதல் ஆங்கில வழியில் படித்தவர்கள் தான்.


தமது பிள்ளைகள் சரியான புலன் உணர்வுகளுடன் கூடிய மூளை வளர்ச்சி பெற்று,அவர்களின் இயல்புகளுக்கேற்ற திறமைகளை வளர்த்து அவர்கள் நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்ற அக்கறையுள்ள பெற்றோர்கள் அடிப்படைக்கல்வியை தமிழ்வழியில் பத்தாம் வகுப்பு வரையிலாவது தரவேண்டும்;மாநகரங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் வழியில் படிக்க வைத்துவிட்டு,ஆறாம் ஏழாம் வகுப்புக்கு ஆங்கில வழியில் சேர்ப்பது வழக்கமாகி வருகிறது.அந்த ஓரிரு ஆண்டுகளிலேயே மீண்டும் தமிழ்வழியில் சேர்ப்பதும் சகஜமாகிவருகிறது.இது தவறு;பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியிலேயே பயிலச் செய்வதே மிகவும் நன்று.இவ்வாறு செய்தாலே கல்லூரிக்கல்வியை/பாலிடெக்னிக் கல்வியை/ஐ.டி.ஐ.கல்வியை/ என் ஜினியரிங் கல்வியை/கலை மற்றும் கணினி டிகிரிப் படிப்பை தரமான ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சியின் மூலமாகவே சுலபமாக முடித்துவிட நமது பிள்ளைகளால் முடியும்.
ஓவர் ரிஸ்க்கால் ஒரு தலைமுறையைப் பாழாக்கிவிடாதீர்கள்;


எழுதியவர்:முனைவர்:வீரபாண்டியன்
நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள்20,21.,22;வெளியீடு அக்டோபர் 2013