RightClick

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய அண்ணாமலை சொர்ண பைரவர்!!!சைவ சமயத்தின் தலைநகரமாகவும்,கலியுகத்தில் பக்தியில்லாமல் வாழும் மனிதர்கள் அனைவருக்குமே கர்மவினைகளை கிரிவலத்தின் மூலமாக நீக்கும் மலையாகவும் இருக்கும் கோவில்நகரம் அண்ணாமலை ஆகும்.
நிலத்தின் ஸ்தலம் திருவாரூர்;நீரின் ஸ்தலம் திருச்சியின் ஒரு பகுதியான திரு ஆனைக்கா,வாயுவின் ஸ்தலம் திருக்காளஹஸ்தி,ஆகாயத்தின் ஸ்தலம் தில்லைசிதம்பரம் என்ற வரிசையில் நெருப்பின் ஸ்தலம் அண்ணாமலை ஆகும்.

பூமிக்கு மேலே ஏழு உலகங்கள் இருக்கின்றன;அவை போக உலகங்கள்;நாம் இங்கே செய்யும் புண்ணியச் செயல்களுக்கான பலன்களை அங்கே போய்தான் நாம் அனுபவிப்போம்;பூமிக்குக் கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன;நாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகளை அனுபவிக்கவே அந்த ஏழு உலகங்கள் இருக்கின்றன.இந்த அனைத்து உலகங்களும் அண்ணாமலை என்ற அச்சை மையமாகக்கொண்டே சுழன்று வருகின்றன;வேறு உலகங்களுக்கான புவி சூட்சுமத் தொடர்பு அண்ணாமலை மட்டுமே!


ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்;அளவோடு பயன்படுத்த வேண்டும்;அவ்வாறு இருந்தால் மட்டுமே இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு செல்ல முடியும்.ரத்தகாரகன் செவ்வாயின் முதல் ராசி மேஷம்,சுக்கிலத்தின் அதிபதி சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம்=இந்த இரண்டு ராசிகளையும் இணைப்பது கார்த்திகை நட்சத்திரம் ஆகும்.சூரியன் உச்சமாவதும் கார்த்திகை நட்சத்திரம் 1 ஆம் பாதமே! எனவேதான் தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கார்த்திகையை விடுமுறை நாளாக பின்பற்றிவருகின்றனர்;அந்த நாளில் ரத்தக் காரகன் செவ்வாயின் அதிதேவதை முருகக் கடவுளை வழிபட்டுவருகின்றனர்.இந்தச் சம்பிரதாயம் கடந்த 20,00,000 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.அப்பேர்ப்பட்ட கார்த்திகை நட்சத்திரத்தின் பைரவப்பெருமானாக இங்கே மூலவர் அண்ணாமலையாருக்கு அருகே உட்பிரகாரத்தில் மூன்றடி உயரத்தில் அமைந்திருக்கும் சொர்ண பைரவர் திகழ்ந்துவருகிறார்.கையில் உடுக்கை,பாசம்,சூலம்,கபாலம் ஆகியவைகளை ஏந்தியவாறு அருகே பைரவ வாகனம் ஒன்று இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.


கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமி அன்று,(பெரிய கார்த்திகை அன்று) யார் ஐந்து முறை கிரிவலம் செய்து முடிக்கிறார்களோ அவர்களுக்கு இப்பிறவியே இறுதிப்பிறவி ஆகும்;மேலும் அவர்களோடு நிறைவடையும் 75 தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவருக்கும் கதிமோட்சம் கிடைக்கும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.


ஒவ்வொரு சிவாலாயத்திலும் லிங்கோத்பவர் என்ற சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்;சிவனது அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பாதாளத்துக்குச் சென்ற மஹாவிஷ்ணுவையும்,முடியைக் காண அன்னப் பறவை எடுத்துச் சென்ற பிரம்மனைப் பற்றியும் எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரிவிக்கவே இந்த சன்னதி மூலவருக்கு நேர் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும்;விஷ்ணுவுக்கு ‘இனி உன்னையும் என்னைப் போலவே பூலோக மக்கள் வழிபடுவார்கள்’ என்று சதாசிவன் வரம் தந்ததும் இந்த கார்த்திகை நட்சத்திர நாளன்று தான்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது ஜன்ம நட்சத்திரம் வரும் நாட்களில் இங்கே வந்து சொர்ண பைரவரை வழிபட்டு வந்தால் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையை அடைவார்கள்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ 

படத்தில் காணப்படுவது அண்ணாமலையார் கோவிலுக்குள் எடுக்கப்பட்ட ஸ்ரீகால பைரவப் பெருமான்!