RightClick

நமது நாட்டின் இயற்கை வளங்களின் சமநிலை,குடும்ப அமைப்பு பாதுகாப்பாக இருக்க பசுவதையைத் தடைசெய்வோம்!!!

முகலாய சாம்ராஜ்ஜியத்தில் பாபர் முதல் அகமது ஷா வரை பசுவதை முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது.இஸ்லாத்தை உறுதியாகப் பின்பற்றுவதில் பெயர் பெற்ற பாபர்,தனது புத்தகத்தில்      முகலாய அரசர் யாரும் பசுவதையை ஆதரிக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியிருந்தார்.

மைசூர் சுல்தான்களான ஹைதரும்,திப்புவும் கூட பசுக்கள் கொல்லப்படுவதை தடைசெய்திருந்தார்கள்.மீறுபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்.

ராபர்ட் க்ளைவ்:பாரதநாட்டின் விவசாயத்தை ஆராய்ந்த க்ளைவ்,மாடுகள் தான் பாரதநாட்டின் உயிர்த்துடிப்பு விவசாயம்;விவசாயத்தின் முதுகெலும்பு மாடுகள் என்பதைக் கண்டறிந்தான்.எனவே,விவசாயத்தை நாசமாக்கிட பசுவதைக் கூடங்களை உருவாக்கினான்.இதனால் தான் தேசபக்தியும்,தெய்வபக்தியும் இந்தியர்களிடையே குறையத் துவங்கியது;நாட்டு நலன்,மக்கள் நலன்.குடும்ப நலன்,பெண்கள் நலன்களில் அக்கறை  கொண்ட தலைவர்கள் அரசியலை விட்டு விலகத்துவங்கினர்.பசுவதை அப்பேர்ப்பட்ட தீய சக்திகளை நமது தேசத்திற்குள் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது.

மஹாத்மா காந்தி: பசுவதையைத் தடுக்கும் சட்டம் இயற்றிட வலியுறுத்தினார்.

நேரு:சுதந்திர இந்தியாவில் முதல் நடவடிக்கை பசுவதைக்கூடங்களை மூடுவதே என்று சூளுரைத்துக் கொண்டிருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு,பின்னாளில் பிரதமர் பதவிக்கு வந்ததும்,பசுவதையை நிறுத்தச் சொன்னால் பதவி விலகுவேன் என்று மிரட்டி பசுவதையை ஆதரித்தார்.

இதனால்,உலகிலேயே நிம்மதியாக பெண் இனம் வாழ்ந்து வந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உருவாகத் துவங்கின;இயற்கையின் சமநிலை கெடத் துவங்கியது.நேரு இவ்வாறு மிரட்டிடக் காரணம் அவருக்கு ஆலோசனை சொன்னவர்கள் அப்போதே இங்கிலாந்தின் பேச்சைக் கேட்கத் துவங்கினர்.இந்துதர்மமும்,இந்திய மக்களும் நிம்மதியில்லாமல் இருக்க சர்வதேச கிறித்துவ சமுதாயம் செய்த இந்த ஆன்மீகச் சதியை இன்றுவரையிலும் எவரும் புரிந்துகொள்ளவில்லை;

இந்திரா:பசுவதைக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தில் மக்களை துப்பாக்கிச் சூடு மூலம் கொன்று அடக்குமுறையைக் கையாண்டார்.
மரபணு மாற்றப்பட்ட கலப்பினப்பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன.

நம்மாழ்வார்:பசுக்கள் நடமாடும் இயற்கைஉரத் தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வருகிறார்.விலைமதிப்பில்லாத பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களைத் தரும்,மரபுப் பசுக்கள் நமது பூர்வீகச் சொத்து;அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தி வருகிறார்.

இன்று: பணத்துக்காக தற்காலத்தில் மரபினப்பசுக்கள் பெருமளவில் கொல்லப்பட்டுவருகின்றன.பசுவதை என்பது வெளிநாட்டு கிறித்தவ சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீகச் சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கின்றனர்.
மனிதர்களின் எண்ணிக்கையை விடவும் நான்கு மடங்கு பசுக்கள் நமது தேசத்தில் கி.பி.1850 வரை இருந்தன;இந்த எண்ணிக்கையை பெருமளவு குறைக்கக் காரணம் கிழக்கிந்தியக் கம்பெனியே! இதன் மூலம் பாரதத்தின் சூட்சுமமான இயற்கைச் சமநிலையைக் கெடுக்கத் துவங்கியது கிறித்தவ பிரிட்டன்.பெண்களுக்கு எதிரான மனித நாகரீகமற்ற வன்முறைகள் இந்தியாவில் தோன்ற இவைகளே காரணம்.

கோமாதா எங்கள் குலமாதா என்ற பாடல் வரியின் அர்த்தத்தை நாம் பாதுகாத்துவருகிறோமா?

எல்லாவற்றிலும் இருக்கும் அசட்டை இதிலும். . .

ஆதாரம்:சங்கச் செய்தி,நவம்பர் 2012,பக்கம்2.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ