RightClick

பித்ருக்கள் ஆசிகளோடு நிறைவடைந்த கழுகுமலை அன்னதானம்!!!மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது தமிழ்மக்களின் அனுபவ மொழி!
மாதா,பிதா அல்லது மாதா,பிதாக்களின் மாதா,பிதாக்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்தை குருவின் வழிகாட்டுதலோடு செய்தால். . .!!!அதுதான் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை கழுகுமலையில் நடைபெற்றது.

சுமாராக 10,000 ஆண்டுகள் பழமையானது கழுகாச்சலமூர்த்தி என்ற முருகன் கோவில்,கழுகுமலை ஆகும்.மூவேந்தர்கள் பேரரசுக்களாக வலிமையடையும் முன்பு, இந்த கழுகுமலைக்கு அருகில் பாண்டிய அரசின் தலைநகரம் அமைந்திருந்தது.இங்கிருந்தே தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் தமிழ்நாடெங்கும் பயணித்து குடியேறியிருக்கின்றனர்.தமிழ் இனம் முதன் முதலில் நாகரீகமடைந்து,முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தது இங்கே தான் என்றால் கழுகுமலையின் தொன்மையை என்னவென்று சொல்ல?!!

கபாடபுரம்,பஃறுளி ஆறு முதலான குமரிக்கண்டம் இருந்த காலத்திலேயே முன்னோர்களுக்குரிய வழிபாடு செய்ய பரதக்கண்டம் (இன்றைய இந்தியா) முழுவதுமிருந்து வந்துள்ளனர் என்று இங்கே வசிக்கும் முதியவர்கள் கர்ணபரம்பரை வரலாறாகத் தெரிவிக்கின்றனர்;பிற்காலத்தில்,சமணர்களின் கோவிலாகவும் சிறிது காலம் இந்த கழுகாச்சலமூர்த்தி ஆலயம் இருந்திருக்கிறது.இங்கே காணப்படும் ஸ்ரீகாலபைரவப் பெருமானும் மிகவும் பழமையானவராகக் காணப்படுகிறார்;

கழுகாச்சலமூர்த்தியுடன் சிவாலயம் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு;பெரும்பாலான முருக சன்னதிகளில் மயிலானது வலது பக்கம் நோக்கி இருக்கும்;இங்கே இடது பக்கம் அமைந்திருக்கிறது;முருக பக்தியைப் பரப்பிய அருணகிரி நாதர் தீர்த்தயாத்திரை செல்லும் போது அந்தந்த முருகஸ்தலங்களைக் கடக்கும்போது,உரிய முருகப் பெருமானின் சிறப்புகளை மட்டுமே வெளிப்படுத்தும்விதமாக பாடியிருக்கிறார்;

இங்கே=இந்த கழுகாச்சலமூர்த்தியைப் பாடும்போது மட்டுமே ‘இங்கே வீற்றிருக்கும் ராஜபதி(கழுகாச்சலமூர்த்தியின் புராதனப் பெயர்)யிடம் நாம் மனமுருகி வேண்டுவது ஒரு பங்கு எனில்,கிடைப்பதோ மூன்று பங்காக இருக்கும்’ என்று பாடியிருக்கிறார்.அதானாலேயே ராஜபாளையம்,கோவில்பட்டி,சங்கரன்கோவில்,தென்காசி,திருநெல்வேலி மக்களின் இதயத்தில் கழுகாச்சலமூர்த்தி ஆட்சி புரிந்து வருகிறார்;எல்லா முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் மரபு இருக்கும் போது இங்கே பஞ்சமியை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.ஆதாரம் மற்றும் நன்றிகள்:=11 தலைமுறையாக பூசாரியாக இருக்கும் கழுகாச்சலமூர்த்தியின் அர்ச்சகர் சொன்ன அரிய தகவல்கள் இவை!!!


தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள்,குடும்பத்தார்கள் அனைவரும் காலை 9 மணியளவில் நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் அணிவகுத்து,மகேஸ்வரபூஜையில் கலந்து கொண்டனர்;அது நிறைவடைந்ததும்,முருகக்கடவுளையும்,சிவலிங்கத்தையும் வழிபட்டுவிட்டு,கிரிவலம் புறப்பட்டனர்;கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் மிளகாய்பழ சித்தர் சன்னதியில் அனைவருக்கும் புரட்டாசி அமாவாசை யாகத்தின் பலன்களைப் பெற்றனர்.பிறகு,கிரிவலப்பாதையில் வந்திருந்த ஒவ்வொருவரும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் வழிகாட்டுதலின் படி,தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்;இதனால்,கடந்த 12 ஆண்டுகளாக செய்யாமல் விடுபட்டிருந்த முன்னோர்களுக்கான தர்ப்பணம் முறைப்படி ஒவ்வொருவருக்குமே செய்யப்பட்டது;அடுத்த சில நிமிடங்களிலேயே முன்னோர்கள் அந்த தர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டதற்கான சகுனங்கள் தென்பட்டன;

அதன் பிறகே,கிரிவலப்பயணம் தொடர்ந்தது;கிரிவலத்தின் முடிவில் கழுகாச்சலமூர்த்தியின் அபிஷேகமும்,உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனையும்,அர்ச்சனையும் செய்யப்பட்டது.நிறைவாக,கோவில் வளாகத்தில் அன்னதானம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் சரியாக மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றது.

யாருக்கெல்லாம் பூர்வபுண்ணியமும்,குலதெய்வத்தின் ஆசியும் இருந்ததோ அவர்களே இந்த அரிய ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்றால் அது மிகையாகாது;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ