RightClick

வராக்கடனை வசூல் செய்து தந்த பைரவ மந்திர எழுத்து உரு!!!
அந்தக் குடும்பத்தில் பெற்றோர்களையும் சேர்த்து ஏழு பேர்கள்.இருபது ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியாக தமிழ்நாட்டின் அண்டை மாநிலத்துக்கு சம்பாதிப்பதற்காகச் சென்றவர்கள்,அங்கே ஐந்து குழந்தைகளாகப் பிறந்து பெரிய குடும்பமாக வளர்ந்தது.பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தாலே ஒன்று சுயநலமாகவும்,மற்றது பொது நலமாகவும் பிறக்கும்;அல்லது ஒவ்வொரு குழந்தையுமே சுயநல நட்சத்திரத்தில் பிறக்கும்.அந்தக் குழந்தையின் வளர்ச்சியால் அந்தக் குடும்பமே அந்த குழந்தையின் கட்டுப்பாடுக்கு வந்துவிடும்.ஆனால்,இந்தக்குடும்பத்தில் அனைவருமே பொதுநலவாதிகளாக இருந்தார்கள்;பெற்றோர்கள்,குழந்தைகள் அனைவருமே தம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நன்றாக இருந்தால் தான் தாமும்,தமது குடும்பமும் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதால்,சில வருடங்களிலேயே பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளானார்கள்;ஆமாம்! 


இவர்களது சுபாவத்தைப் புரிந்து கொண்டு இந்த குடும்பத்தலைவர் பிறரின் கஷ்டத்தைச் சகிக்காமல் தனது சொந்த ஜாமீனில் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.இவரைப் போலவே,இவருக்குத் தெரியாமல் இவரது மனைவி,மகன்களும் அதே காலகட்டத்தில் தமது நட்பு வட்டத்திற்கு கடன் வாங்கித் தந்துள்ளனர்.உதவி செய்பவர்கள் தான் இக்கால கட்டத்தில் சிரமமும்,அவமானமும் படுகிறார்கள்.கடன் வாங்கிக் கொடுத்த சில மாதங்களிலேயே இவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்க ஆரம்பித்துள்ளனர்.இவர்களிடம் அல்லது இவர்களால் கடன் வாங்கியவர்கள் கடனுக்குரிய வட்டியைக் கூட ஒழுங்காகக் கட்டவில்லை;நெருக்கடி ஒரே வருடத்தில் இந்தக் குடும்பத்தை அவமானம் என்ற சேற்றில் சிக்க வைத்துவிட்டது;இந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் ஊரும்,உலகமும் எப்படிப் பட்ட ஏமாற்றுபவர்கள் என்பது புரிந்து போனது;குடும்பத்தில் இருக்கும் அனைவருமே வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கியும் கடன்களுக்குரிய வட்டித் தொகைகளைக் கட்ட முடியவில்லை;ஒரே இரவில் அங்கே இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டது இந்தக் குடும்பம்.அவர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்?

இங்கே வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்,ஆன்மீகக்கடல் வாசிக்க ஆரம்பித்தார்;ஆன்மீகக்கடலின் பதிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் கொடுத்திருக்கிறார்.அனைவரும் கூடிப் பேசி ஒரு முடிவு எடுத்துள்ளனர்.அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று தினமும் 108 முறை எழுதினாலே அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு வர வேண்டிய சிக்கல்கள் விலகிச் சென்றுவிடும்;அல்லது தானாகவே தீர்ந்துவிடும்;(((பல நூற்றுக்கணக்கான அனுபவங்களை ஆன்மீகக்கடல் வாசகர்கள் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர்.அவைகளில் இந்த சம்பவத்தை மட்டுமே உரிய குடும்பத்தாரின் அனுமதியோடு வெளியிடுகிறோம்.)))ஒரு குடும்பத்தில் அனைவருமே ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று தினமும் 108 முறை எழுதினால்?

ஓம் தோணுகால் மாடசாமி நமஹ(ஒருமுறை அவர்களின் குலதெய்வத்தின் பெயரை எழுதினார்கள்)
ஓம் கணபதி நமஹ(விநாயகரின் அனுமதி!)
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறை எழுதிவந்தனர்.

(நாம் ஒவ்வொருவருமே மேலே கூறியது போல,முதலில் நமது குலதெய்வத்தின் பெயரை ஒருமுறை எழுத வேண்டும்;பிறகு ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறை எழுத வேண்டும்;பிறகு 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுத வேண்டும்.அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் எழுதுவது மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டிற்குச் சமம்;இதைச் செய்ய முடியாதவர்கள் மாலை 5 முதல் 7 மணிக்குள் எழுதலாம்)

இந்தக்குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருமே தனித்தனியாக மேலே கூறியது போல, எழுதத் துவங்கினர்.சரியாக 93 வது நாளில் இவர்களிடம் கடன் வாங்கிய ஒருவர் எப்படியோ இவர்களைத் தேடி வந்துவிட்டார்.ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடும்பத் தலைவரிடம் வாங்கிய ரூ.2,00,000/-கடனில் பாதியை வட்டியோடு கொடுத்துவிட்டு,உணர்வு பொங்கப் பேசினார்;

“நீங்கள்  அப்போது எனக்கு கொடுத்த கடனால் தான் இன்றும் என் குடும்பம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது;அப்போது,என்னால் இந்த பணத்திற்கு வட்டி கூட தர முடியவில்லை; இன்று எனக்கு அந்த கஷ்ட நிலை இல்லை; எனது குடும்பத்தை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் இங்கே தான் வாழ்ந்து வருகிறீர்கள் என்று எவரிடமும் சொல்ல மாட்டேன்.இன்னும் மூன்று மாதத்தில் மீதிப்பணத்தையும் நேரிலேயே வந்து கொடுத்துவிடுகிறேன்”
பேசிவிட்டு,உடனே புறப்பட்டுவிட்டார்.இந்தக் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீரால் பைரவப் பெருமானின் மீதான பக்தி பெருகியது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ