RightClick

நமது ஆன்மீக குரு சிவநிறை.சகஸ்ரவடுகர் அவர்களின் தீபாவளி(2.11.13 சனி) வாழ்த்துக்கள்!!!விஜய வருடத்தின் தீபாவளி 2.11.2013 சனிக்கிழமை அன்று கொண்டாட இருக்கிறோம்;இந்த நன்னாளில் நாம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து,கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று மட்டும் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை நதி வரும் என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் லட்சக்கணக்கான ஆண்டு கால நம்பிக்கை!

சூரியன் உதயமாவதற்குள் காலைக் கடன்களை முடித்துவிடவேண்டும்;முதல் நாளே கடையில் வாங்கிய பிரட் பாக்கெட்டுகளை(இரண்டு) ஒரு தாம்பாளத்தில் கொட்டி சிறு சிறு துண்டுகளாக ஆக்க வேண்டும்;அத்துடன் கால் கிலோ பூந்தியை கலந்து கொள்ள வேண்டும்;வீட்டின் மொட்டை மாடி அல்லது வாசலில் மேடான பகுதியில் அல்லது வீட்டில் முன்பகுதியில் காக்கைக்கு சாதம் வைக்கும் இடத்தில் இந்த கலவையை வைக்க வேண்டும்;அதிகபட்சமாக காலை 7 மணிக்குள் வைக்க வேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதாக அர்த்தம்.அதுவும் தீபாவளித் திருநாள் அன்று செய்தால் முன்னோர்கள் மட்டுமல்ல;பித்ருக்கள் உலகத்தின் அதிதேவதைகளும்,தர்மராஜனும் மகிழ்ச்சியடைவார்கள்;நம்மை ஆசிர்வாதிப்பார்கள்!!!

பிறகு,சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்;
இதைச் செய்வதற்குள் ஐந்து இட்லிகள்+எள்ளுப்பொட்டலம் கலந்த பார்சல்கள் குறைந்தது ஐந்து(வீட்டில் அம்மா/மனைவியிடம் சொல்லி) தயார் செய்து கொள்ள வேண்டும்.காலை எட்டு மணிக்குள் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கே வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு தானமாகத் தர வேண்டும்;ஐந்து சாதுக்கள் அல்லது நிராதரவான குழந்தைகளுக்கு அல்லது தனித்து வாழும் முதியவர்களுக்கு அல்லது அனாதைகளுக்குத் தர வேண்டும்;அருகில் கோவில் இல்லாவிடில்,அனாதை இல்லங்களில் தரலாம்;அல்லது அனாதையாக இருப்பவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றும் தரலாம்.குறைந்தது ஐந்து பேர்களுக்கு(அதிகபட்சமாக ஐந்தின் மடங்குகளில்= 10 பேர்கள்/15 பேர்கள்/20 பேர்கள்/25 பேர்கள்)

காலல 10 மணி முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நமது குல தெய்வம் கோவிலுக்குச் சென்று,குலதெய்வத்தின் சன்னிதானத்தில் இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி மனப்பூர்வமாக நமது தேவைகளை/கோரிக்கைகளை/வேண்டுதல்களை வேண்டிக்கொண்டு வீடு திரும்ப வேண்டும்.
குலதெய்வம் வெகுதூரத்தில் இருந்தால் இஷ்ட தெய்வத்தின் சன்னதியில் இது போல வழிபாடு செய்ய வேண்டும்.
இதன் மூலமாக கங்கையின் ஆசி,முன்னோர்களின் ஆசி,குல தெய்வத்தின் ஆசி,குருவின் ஆசி கிட்டும்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு இந்த கணத்தில் கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்;

 "நீங்கள் ஒவ்வொருவரும் சகல வளங்களும்,அனைத்து நலங்களும் பெற்று வளமோடு வாழ்க! உங்கள் அனைவருக்கும் எமது தீபாவளி சிவவாழ்த்துக்கள்!!!"= சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை
சமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை.ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது.இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது.16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர்.

இந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர்.

“கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திருப்பதாகவும் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர்.
‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது.
ஆதாரம்:புத சங்கேத்,லக்னோ 25.12.2007

இந்தியாவின் சுயமரியாதையைக் கட்டிக் காத்த டாக்டர் & மேதகு அப்துல்கலாம்!!!

கி.பி.2006 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்,இந்தியாவுக்கு வருகை தருவதாக அறிவித்தார்.பாதுகாப்புக்காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகையின் வரவேற்பறை,வராந்தா பகுதி,தரைக் கம்பளங்களை மாற்ற வேண்டும் என்றனர் அமெரிக்க அதிகாரிகள்.அதோடு, ‘குடியரசுத் தலைவர் மாளிகையை புஷ்ஷின் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்தியப் பாதுகாப்பை நாங்கள் நம்ப மாட்டோம்’ என்றும் அமெரிக்கத் திமிர்த்தனத்தைக் காட்டினர்.

ஆனால்,நமது தேசத்தை நேசிக்கும் நமது நிரந்தர ஜனாதிபதி அப்துல் கலாம் மிகுந்த கண்ணியத்துடனும்,தெளிவான குரலுடனும் இரண்டையும் மறுத்துவிட்டார்.

“உலகப்புகழ் பெற்ற தலைவர்கள்,ஞானிகள் பலரின் பாதம்பட்ட ‘கார்பெட்’களில்,புஷ் அவர்களின் பாதம் படுவது பெருமைக்குரிய விஷயம்.எனவே,அதை மாற்ற இயலாது”என்று இந்தியாவின் சுயமரியாதையை அமெரிக்க அதிகாரிகளுக்கு உணர்த்தினார்.


அத்துடன்,இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் புஷ்ஷை,எங்கள் பாதுகாப்புப் படையினர்,உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பர்.வேண்டுமானால்,அமெரிக்க காவல் துறையிலிருந்து ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்து,மாளிகையின் மேலிருந்து கண்காணிக்கலாம்.அதுவும்,கையில் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என அப்துல் கலாம் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்

1.வானம் வசப்படும்=எழுதியவர் பிரபஞ்சன்(சாகித்ய அகாடமி விருது பெற்றது.தினமணியின் ஞாயிறு இணைப்பான தினமணிச்சுடரில் தொடராக வெளிவந்தது)

2.வந்தார்கள்,வென்றார்கள்=எழுதியவர் மதன்,விகடன் பிரசுரம் வெளியீடு

3.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்ரி,

சக்தி புத்தக நிலையம்,1,எம்.வி.தெரு,சேத்துப்பட்டு,சென்னை-31.

4.என்று காண்போம் எங்கள் சிந்துவை?=எழுதியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி

5.ஸ்ரீரங்கன் உலா(40 வருடங்களாக ஸ்ரீரங்கம் கோவில் பூட்டப்பட்டிருந்தது;ஏன்? எதற்காக? என்பதை நாவல் வடிவில் வெளிப்படுத்தும் புத்தகம்)

6.கோவா வரலாறு

7.மருது பாண்டியர் வாழ்க்கை வரலாறு=மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக வெளியீடு

8.வீரபாண்டியக் கட்ட பொம்மன் கதை

9.நாதுராம் விநாயக் கோட்சே=எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்,தமிழில் வெளியீடு:குமரிப் பதிப்பகம்,8,நீலா தெற்கு வீதி,நாகப்பட்டிணம்.

10.Lecters from Columbo to Almora=Swami Vivekananada

11.விவேகானந்தர் பாறை:நினைவுச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு

12.விழிமின்;எழுமின்;=வெளியீடு விவேகானந்த கேந்திரம்,விவேகானந்த புரம்,கன்னியாக்குமரி.

13.நான் நேசிக்கும் இந்தியா=எழுதியவர் ஓஷோ

14.விநாயக தாமோதர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு

15.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்(நமது நாட்டின் வரலாற்றை நமது கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும் நூல்கள் இவை)

ஸ்பைருலினாவின் மருத்துவ குணங்கள்
கி.பி.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமலியா மக்களைப் போல மெலிந்து போயினர்.இருந்தபோதிலும்,சார்டு என்ற என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்(மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும்,அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்க வில்லை;வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்திருந்தனர்.இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்களின் ஆய்வுமுடிவுப்படி,சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரிய வந்தது.அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால்,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா.சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.

முனைவர் எம்.பாபு ,1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ்.2;பக்கம் 197 முதல் 202 வரை.ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளாமாநிலம்.ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள்.இதில் ஸ்பைருலினாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.

அடுத்ததாக,டாக்டர் V.அன்னபூரணா,1991,தேசிய சத்துணவு ஆய்வகம்,ஹைதாரபாத்.வெளியீடு.பயோகெம்.சத்துக்கள் தொகுப்பு 10;பக்கம் 151 முதல் 165 வரை.இந்த ஆய்வில் பள்ளிசெல்வதற்கு முந்தைய பருவகுழந்தைகள் .தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.

சென்னையில் எ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர்.சி.வி.சேஷாத்திரி,1993.ஆய்வு 150 நாட்கள் நடத்தினார்.ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள்,சிறுமிகளுக்கு நாளென்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன.வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குக் கிடைத்தது.ஏற்பாடு இந்திய அரசு.

ஸ்பைருலினாவில் இருக்கு சத்துக்கள்:

வேறெந்த உணவுப்பொருளையும் விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது.இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத்திறன் கூடியது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.

பீட்டா கரோட்டின்: அனைத்துவிதமான புற்று நோய் அபாயத்தினைக் குறைக்கிறது.பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.செயற்கையான பீட்டா கரோட்டினைப்போல இராமல்,ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.

காமாலினோலெனிக் அமிலம்:ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது.இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம்,உடல்பருமன்,மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.மேலும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.

வைட்டமின்கள்:வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அதுவும் முழுமையாகவும் சமச்சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.ஊட்டச்சத்துகுறைந்த குழந்தைகளுக்கு உகந்தது.வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.

தாதுச்சத்துக்கள்:தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது.இரும்பு,துத்தநாகம்,கால்சியம்,மக்னீசியம்,செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது ஸ்பைருலினா.இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவதுடன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவுமற்றது.இரத்த சோகையை அடியோடு நீக்கும்.கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.

பாலிசாக்ரைடுகள்:ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.எனவே,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

உடலை தூய்மைப்படுத்தவும்,விஷத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்சைம்கள்:ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து,இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.

பாலி அமைன்கள்:செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.பலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.

80% ஆல்கலினும் 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு.

80% ஆல்கலின் உணவு:பழங்கள்,காய்கறிகள்,பாசிகள் போன்றவை.

20% அமில உணவு:இறைச்சி, கடல் உணவுகள்,கோதுமை போன்றவை.

ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.


ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு. . .ஜோதிடம் நேரடியாகக் கற்றுக் கொள்ள விரும்புவோர்  குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு ராஜபாளையம் வரவும்.இந்த 30 நாட்களுக்குள் நீங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடராக ஆகிவிடுவீர்கள்.நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புவோர் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பிறந்த ஜாதகத்தை அனுப்பி ஆலோசித்துவிட்டு வரவும்.

ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்
ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்.காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதும்,மது அருந்துவதும்,போதைப் பொருட்கள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும்;பெண்கள் தாலியுடன் சேர்த்து அணியலாம்;பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?

ருத்ராட்சம் அணியாதாவர்கள் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால் எவ்வளவு பங்கு புண்ணியம் வருமோ,அதைவிடவும் நூறு மடங்கு புண்ணியம் ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு ஜபித்தால் கிடைக்கும்;

ஒருபோதும் அடுத்தவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்திய ருத்ராட்சத்தைப் பயன்படுத்தக் கூடாது;இதில் விதிவிலக்குகள் உண்டு;அப்பா தனது வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த ருத்ராட்சத்தை தனது மகன் அல்லது மகளுக்குத் தரலாம்;குரு தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை தகுதி நிறைந்த சீடனுக்குத் தரலாம்;

உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ருத்ராட்சம் அணிவது பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் ருத்ராட்சம் அணியத்  தூண்டுங்கள்.


அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள்.வாங்கித் தருவது முக்கியமல்ல;அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.இது ரொம்ப முக்கியம்.உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும் ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.

பின்குறிப்பு:ருத்ராட்ச மாலை என்பது 21 ருத்ராட்சங்கள்,54 ருத்ராட்சங்கள்,108 ருத்ராட்சங்கள் கொண்டவை;ருத்ராட்ச மாலையை சாதாரண மனிதர்களாகிய நாம் எப்போதும் அணிவது தவறு;துறவிகள் அவைகளை அணிந்தாலும்,அதற்குத்தான் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன;ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை;ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தினமலர் தினசரியில் ஒரு புதிய பகுதி: லஞ்சம் தவிர்;நெஞ்சை நிமிர்!!!

 அரசு ஊழியர்களில் யாரெல்லாம் லஞ்சம் வாங்குவதில்லை என்ற கொள்கை உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இந்த பகுதியில் தம்மை இணைத்துக் கொள்ளலாம்;என்று தினமலர் அறிவித்துள்ளது.இந்தப் புதிய பகுதியின் நோக்கமே லஞ்சம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்;

தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் நேர்மையான(லஞ்சம் வாங்காத) ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பகுதியைச் சென்று பார்க்கும் போது உணர முடிந்தது;இவர்களைப் போல இன்னும் ஏராளமான நேர்மையான அரசு ஊழியர்கள் (தமிழ்நாடு அரசு &,இந்திய அரசு)அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்;அவர்களை பாராட்டவும்,நமது பகுதியில் இருப்பவர்களின் உதவியை பெறவும் தினமலர் இந்த பகுதியை துவக்கியுள்ளது.

 இந்தப் பகுதியில் அனைத்து அரசு ஊழியர்களும் இணைந்து நமது தேசத்தை வலிமை மிக்க நாடாக மாற்றிட நாம் பைரவப் பெருமானை வேண்டுவோம்!!!

இங்கே சொடுக்கவும்.

பெண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?வேலூர் மாவட்ட மக்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வயல்வெளி அஷ்டபுஜ பைரவப் பெருமான்!!!


வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெங்காபுரம்(அரசுப்போக்குவரத்து பணிமனை அருகில் செல்லும் சாலைவழியாக மலைச் சாலையில் பயணிக்கவும்) கிராமத்தில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.
இரண்டு அல்லது மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் இவரை அத்தர்,புனுகு,ஜவ்வாது,.சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,மரிக்கொழுந்து கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்;எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளுக்குள்ளாகவே தீர்ந்துவிடுகின்றன.(அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட்டவர்களுக்கும்,மது அருந்துவதை நிரந்தரமாக கைவிட்டவர்களுக்குமே உடனடியாக பலன்கள் கிட்டுகின்றன)

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

சுக்கிர பரிகார ஸ்தலம் முதல் வீரட்டானமாகிய திருக்கோவிலூர்!!!


நெய்தீபம் ஏற்றிவழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!


மதுரை மாநகரிலிருக்கும் ஜீவசமாதிகள்!!!


ஸ்ரீவில்லிபுத்தூர் மூவர் ஜீவசமாதி!!!விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில் சாலிய சமுதாய இடுகாட்டிற்கு அருகில்(மாவட்ட நீதி மன்ற வளாகத்தை அடைவதற்கும் முன்பாகவே) அமைந்திருப்பது இந்த மூவர் ஜீவசமாதி ஆகும்.

1970 வரை நிறைவடைந்த 200 ஆண்டுகளில்  வெவ்வேறு கால கட்டங்களில் சுமாராக 40 மகான்கள் இங்கே ஐக்கியமாகியிருக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த மகான்களின் ஆற்றலை அளவிட முடியாது;சுமாராக 100 சம்பவங்கள் இவர்களின் ஆசிகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.

படத்தில் நீங்கள் பார்ப்பது அந்த மகான்களில் ஒருவரது ஜீவசமாதி ஆகும்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!

ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ

பழனியில் கிரிவலப்பாதையில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.அருள் மழையை அளவின்றி அள்ளித்தரும் மகான்களில் இவரும் ஒருவர்!!!

இங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலேயின் பேச்சு!!!(இந்து தர்மத்தின் பெருமைகளை இந்தியர்களிடமிருந்து எப்படி மறைத்தார்கள்?)


பழைய சோற்றின் மகிமைகள்:-ஒரு உணவக வாசலில்!!!


நமது தேசத்தை சூட்சுமமாக காத்து வரும் மகான்கள்;போட்டோஷாப்பின் துணையுடன் ஒன்றாக....


பாவ புண்ணியம் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் உபதேசம்!!!


தமிழ் மொழி நமது அடையாளம் மட்டுமல்ல;மொழி ஆதர்ஷ் கார்டு!!!


உலகின் ஒரே இந்துதேசமான நமது இந்தியாவைக் காக்க சுவாமி விவேகானந்தரின் அறைகூவல்!!!


அண்ணாமலைக்கு மிஞ்சிய ஆன்மீகத்தலம் உண்டா?


நாத்திகம் என்றால் என்ன? என்பதை உணர வைத்த இந்துப் பேரொளி!!!


உலக வங்கியிடம் உலக நாடுகள் வாங்கியிருக்கும் கடன் மொத்தத் தொகையை விடவும்,உலக நாடுகளிடம் அமெரிக்கா வாங்கியிருக்கும் கடன் அளவு மிக அதிகம்!!! ஆதாரம் இதோ:-


காப்பாற்றப்பட்ட சைவ சமய படைப்புகள்!!!


நெல்லைக்கு வந்த கருவூர் சித்தர்!!!


சுவாமி சின்மயானந்தரின் போதனை=தியானம் என்றால் எது?


துறவும் தொண்டுமே நமது நாட்டின் ஆணிவேர்!! துறவுக்கு இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணம்!!!


சுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த ஞானம்!!!


முன்னோடித் தொழிலதிபருக்கு வழிகாட்டிய முன்னோடித் துறவி!!!


காந்திஜியின் சிந்தனையைத் தூண்டிய மதுரைச் சம்பவம்!!!


ரமணமரிஷியின் வாழ்வில். . .


தற்கொலை செய்வது மஹாபாவம் என்பதை குறிப்பால் உணர்த்திய ரமண மகரிஷி!!!நெய்மணம் கமழும் மிளகாய்! - புதுவை விவசாயி சாதனை

மிளகாயில் நெய்யின் மணத்தைப் புகுத்தி புதுவை விவசாயி வெங்கடபதி சாதனை படைத்துள்ளார். இவர் வேளாண் துறையில் செய்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். புதுவகையான இந்த மிளகாய் தொடர்பாக அவரது மகள் ஸ்ரீலட்சுமி  கூறியதாவது: 

மிளகாய் வகைகளில் பரமக்குடி, சிவகாசி, நாட்டு ரகம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் உள்ளன. தற்போது நெய் மணம் கமழும் மிளகாயை உருவாக்கியுள்ளோம். சாம்பார், ரசம், குழம்பு வைக்கும்போது இந்த வகை மிளகாய் ஒன்றை நான்காக பிளந்து சேர்த்தால், கொதி நிலையில் நெய்மணத்தை நன்கு உணரலாம். 

இந்த சிறப்பு இயல்பை இதர மிளகாய் இனங்களிலும் புகுத்த ஆராய்ச்சி செய்துவருகிறோம். நெய்மணம் கமழும் மிளகாய் விதைகளில் காமா கதிர்வீச்சு செய்ய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் அனுமதி தந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் மிளகாயின் நிறம், இலை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரலாம். மஞ்சள், பச்சை, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் மிளகாயை உருவாக்க முடியும் என ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை உருவாக்க முயற்சிப்போம். 

தமிழக, புதுவை மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக இந்த மிளகாயை தரும் எண்ணம் உள்ளது. தொடர் ஆராய்ச்சியின் மூலம் அதிகளவு மிளகாய் செடிகளை வளர்த்து வருகிறோம். மேலும் சமையலில் குழம்பு வைக்கும்போது இந்த மிளகாயை பயன்படுத்தினால், மிளகாய் தூளை குறைத்துப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டார். 

இதுதொடர்பாக வெங்கடபதி கூறுகையில், "மலை மீதுதான் இவ்வகை மிளகாய்கள் வளரும். ஆனால், சாதாரணப் பகுதிகளிலேயே தற்போது இந்த மிளகாய் விளைகிறது. முதலில் இந்த மிளகாய் மனிதர்களுக்கு உகந்ததா என பலவித ஆராய்ச்சிகள் செய்து, நாங்கள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்" என்றார்.

பொறுப்புள்ள தலைமுறையாக ஏழை மாணவர்களை உருவாக்குவது அரசுப் பள்ளியே!!!

'ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?'
பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன்.
"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள்.
அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன்.
அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட்.
"எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம்.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது.
எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி.
சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்க http://youtu.be/HioD6RKgPe4
ஃபேஸ்புக் என்பது ’பொழுது போக்கு’ அல்ல... ’பொழுது ஆக்கம்’மும் கூட, என்பதை உணர்த்தும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம், இப்போதெல்லாம் யாராவது அவரது பணி மற்றும் பள்ளியைப் பற்றி கிண்டல்செய்தால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் ஃபேஸ்புக் பக்க முகவரி https://www.facebook.com/nallambakkampums

இறைவழிபாட்டில் திருவிளக்கின் முக்கியத்துவம்


1379539893817
vallalaar
8225171454_b7a6018ee4_b
09-1352457054-flower-diya-60020121129_CHI_0945Deepavali1Nacathira_Deepam.183234021_std

திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது.  இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…!  தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன.  கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது.  தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை.  தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை.  ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.

விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:
மண் அகல் விளக்கு பீடைகள் விலகும்.
வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும்.
பஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்.
வெங்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும்.
இரும்பு விளக்கு சனி தோஷம் விலக்கும்.

விளக்கின் வகைகள்:
1. குத்து விளக்கு
உலோகத்தினால் செய்யப்பட்டது.
2. அகல் விளக்கு மண்ணால் செய்யப்பட்டது.
3. காமாட்சி விளக்கு உலோகத்தினால் செய்யப்பட்டது.
4. கிலியஞ்சட்டி விளக்கு மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு.
5. செடி விளக்கு உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது.
6. சர விளக்கு உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது.
 
திருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)
தீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர்.  தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும்.  இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர். 
எனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.  பூவால் குளிர்விக்கலாம்.  தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.  வாயால் ஊதி அணைக்கக்கூடாது.  அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும். 
குத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.  தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும்.  ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர்.  இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும். 
உயரம் அதிகமாக உள்ளதாக  நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர்.  இதுவும் தவறாகும்.  இது திருமாலை அவமதிப்பதாகும்.  பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர்.  அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 
தீபங்கள் ஏற்றும் இடங்கள்:
வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
 
தீபங்கள் 16 வகைப்படும். அவை…
 1. தூபம்
 2. தீபம்
 3. அலங்கார தீபம்
 4. நாகதீபம்
 5. விருஷ தீபம்
 6. புருஷா மிருக தீபம்
 7. சூலதீபம்
 8. கமடதி (ஆமை) தீபம்
 9. கஜ (யானை) தீபம்
 10. வியக்ர (புலி) தீபம்
 11. சிம்ஹ தீபம்
 12. துவஜ (பொடி) தீபம்
 13. மயூர (மயில்)தீபம்
 14. பூரண கும்ப (5 தட்டு) தீபம்
 15. நட்சத்திர தீபம்
 16. மேரு தீபம்

விளக்கேற்றும் காலம்:
வேளை நேரம்
காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்)
மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.  நமது கர்ம வினைகள் நீங்கும்.  தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும்.  நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும்.  தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும்.  தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும்.  ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும்.  குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும்.  குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)
ஒரு முகம்
நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.  துன்பங்கள் நீங்கும்.  நன்மதிப்பு உண்டாகும்.
இரண்டு முகம்
கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.
மூன்று முகம்
புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.
நான்கு முகம்
அனைத்து பீடைகளும் நீங்கும்.  அனைத்து செல்வங்களும் கிட்டும்.
ஐந்து முகம்
எல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும்.  குடும்ப ஒற்றுமை உண்டாகும்.  திருமணத்தடை நீங்கும்.  புண்ணியம் பெருகும்.

விளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)
கிழக்கு
இந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும்.  அனைத்து துன்பங்களும் நீங்கும்.  குடும்பம் செழிப்புறும்.  பீடைகள் நீங்கும். 
மேற்கு
கடன் தொல்லை நீங்கும்.  சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.  சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  பங்காளிப்பகை நீங்கும்.
வடக்கு
திருமணத்தடை நீங்கும்.  சர்வ மங்கலமும் உண்டாகும்.  பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும்.  சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.
தெற்கு
மரணபயம் உண்டாகும்.  துன்பங்கள் வந்து சேரும்.  பாவம் வந்து சேரும்.  கடன் உண்டாகும்.
விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:
1. நெய் கடன் தீரும்.  வருமானம் அதிகரிக்கும்.  நினைத்தது நடக்கும்.  கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.
2. நல்லெண்ணெய் நோய்கள் நீங்கும்.  ஆரோக்கியம் அதிகரிக்கும்.  நவகிரகங்களின் அருள் உண்டாகும்.  தாம்பத்ய உறவு சிறக்கும்.  அனைத்து பீடைகளும் விலகும்.
3. தேங்காய் எண்ணெய் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்.  துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.
4. விளக்கெண்ணெய் புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும்.  தேவதை வசியம் உண்டாக்கும்.  அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
5. வேப்ப எண்ணெய் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.  மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.
6. இலுப்பை எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.
7. வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.
8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் செல்வம் சேரும்.  குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது. 
9.
விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்
பராசக்தி அருள் உண்டாக்கும்.  மந்திர சித்தி தரும்.  கிரகதோஷம் நீக்கும். 
குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.  மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.  

தெய்வங்களும் அவற்றிற்குரிய எண்ணெய்களும்:
விநாயகர் தேங்காய் எண்ணெய்
திருமகள், முருகன் நெய்
குலதெய்வம் வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய்
பைரவர் நல்லெண்ணெய்
சக்தியின் வடிவங்கள் விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய்  எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய்
ருத்ர தெய்வங்கள் இலுப்பை எண்ணெய்
எல்லா தெய்வங்கள் நல்லெண்ணெய்
நாராயணன் நல்லெண்ணெய்
விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:
இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.
தாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும்.  செல்வம் சேரும்.  திருமகள் அருள் உண்டாகும்.
வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும்.  மன அமைதி உண்டாகும்.  குடும்ப அமைதி உண்டாகும்.  தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும்.  குழந்தைப்பேறு உண்டாகும்.
வெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும்.  ஆயுள் நீடிக்கும்.  குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.
பருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும்.  வம்சம் விருத்தியாகும்.
வெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.
சிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும்.  மக்கட் பேறு உண்டாகும்.
மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.  அம்பிகையின் அருள் உண்டாகும்.  வியாதிகள் நீங்கும்.  செய்வினை நீங்கும்.  எதிரிகள் பயம் நீங்கும்.  தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்.  மங்களம் உண்டாகும்.
பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.


செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

முன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:
வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.
பொதுவான விதிமுறைகள்:
 • விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.  குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
 • பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
 • விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
 • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.  இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.
 • ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
 • தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’


விளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

இப்பதிவினை எழுத தூண்டிய அருட்பெரும்சோதி கண்ட வள்ளல் ராமலிங்க அடிகளின் பாதம் பணிந்து அவருக்கு இப்பதிவு சமர்ப்பிக்கப் படுகிறது.

அகர தீபமோ குகநாதம்
உகர தீபமோ கணநாதம்
மகர தீபமோ பூதநாதம்
மகா தீபமோ சிவநாதம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
நன்றி:ஆன்மீகச்சுடர் வலைப்பூ(ஒவ்வொரு நாளும் வரும் குரு ஓரையில் இந்த வலைப்பூவில் இருந்து புதிய பதிவுகள் வெளிவருகின்றன;இதை சில வாரங்கள் கவனித்தப் பின்னரே இதை வெளியிடுகிறோம்.)இவரது ஆன்மீகச் சேவை  உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!

தெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்!!!


Lingam
வ.எண்
வழிபட்ட தெய்வம் வணங்கிய தலம்
1. திரிமூர்த்தி திரயம்பகேஸ்வரம் (மகாராஷ்டிரம்), பேறு (அமெரிக்கா)
2. பிரம்மா திருவிரிஞ்சிபுரம், சீர்காழி, அயனீச்சுரம்(அயனாவரம்), பர்மா
3. திருமால் திருமாற்பேறு, பேறு (அமெரிக்கா), திருவீழிமிழலை, சிதம்பரம், சக்கரப்பள்ளி, காசி, திருவாஞ்சியம்
4. ருத்திரன் ருத்திர ப்ரயாகை, ருத்ர கோடி, ரோம் (இத்தாலி)
5. பராசக்தி திருவண்ணாமலை, திருச்சத்தி முற்றம், காஞ்சி, மதுரை, மயிலை, காசி, திருவாவடுதுறை, கிரானேஸ்வரம், அம்பா சமுத்திரம், அம்பர்சிக் (ரஷ்யா)
6. முருகன் சேய்ஞ்ஞலூர், திருமுருகன் பூண்டி, சிக்கல், திருச்செந்தூர்
7. விநாயகர் திருச்செங்காட்டங்குடி கணபதீச்சுரம், திருக்கச்சி அனேகதங்காவதம்
8. ஐயப்பன் சாத்தமங்கை, சாத்தனூர்
9. காளி உஜ்ஜயினி மாகாளம், திருவாலங்காடு, அம்பர் மாகாளம், இரும்பை மாகாளம்
10. கலைமகள் திருநெய்த்தானம் (தில்லைத்தானம்), சீர்காழி, திருக்கச்சபேசம், திருமெய்ஞானம் (கடவூர் மயானம்), வாணியம்பாடி
11. திருமகள் ஸ்ரீசைலம், திருநின்றவூர், திருவேட்களம், திருத்தெங்கூர்
12. இந்திரன் மதுரை, இந்திர நீலப்பருப்பதம், கண்ணார்க்கோயில், திருவெறும்பூர்
13. அனுமன் குரங்காடுதுறை, திருக்குரக்குக்கா, திருவலிதாயம் (பாடி - சென்னை), இராமேஸ்வரம், திருவுசாத்தானம்
14. நாகராசன் முதலிய நாக தெய்வங்கள் நாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்), நாகளேச்சுரம் (நாகாலாந்து), நாகர் கோவில், திருப்பாம்புரம்
15. காலன் (யமன்) தருமபுரம், திருக்கடவூர்
16. மாரியம்மன் திருவேற்காடு
17. சூரியன் கும்பகோணம், சூரியனார் கோவில், பரிதி நியமம், பரிதியூர்
18. சந்திரன் திங்களூர், சோமேஸ்வரம் (சோமநாதர் கோவில் – குஜராத்)
19. செவ்வாய் உஜ்ஜயினி, வைத்தீஸ்வரன் கோவில்
20. புதன் திருவெண்காடு
21. வியாழன் ஆலங்குடி, திருவலிதாயம்(பாடி - சென்னை)கும்பகோணம்
22. சுக்கிரன் திருமயிலை (மயிலாபுரி - மயிலாப்பூர் – சென்னை)
23. சனி திருநள்ளாறு
24. ராகு சீர்காழி, திருநாகேஸ்வரம், திருக்காளத்தி
25. கேது சீர்காழி, கீழ்பெரும்பள்ளம், திருக்காளத்தி
26. வராகமூர்த்தி திருக்கச்சி, கச்சூர், திருச்சிவபுரம்
27. வாமனமூர்த்தி மாணிக்குழி, கண்ணார்க் கோயில்
28. நரசிம்மமூர்த்தி சிங்கபுரி (சிங்கப்பூர்)
29. பரசுராமர் திருவஞ்சைக்களம் (சேரநாடு - சேரளம் – கேரளா), திருநின்றவூர்
30. ராமன் இராமேஸ்வரம், திருவுசாத்தானம், திருக்காளத்தி, பாலைத்துறை, இராமனதீச்சுரம், திருமறைக்காடு
31. கண்ணன் கிருஷ்ணகிரி
குறிப்பு: எமது அறிவுகெட்டியவரை தெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்களை தெரிவித்துள்ளேன்.  வாசக அன்பர்களுக்கு தெரிந்த தெய்வங்கள் சிவனை வழிபாடு செய்த தலங்களை கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.  அது இந்த பதிவினை மேலும் செம்மைபடுத்த உதவும்.  மிக்க நன்றி…!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!