RightClick

அழிவிலிருந்து உலகைக் காக்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தலைமையில் கூட்டு பிரார்த்தனை!!!

19.8.2013 முதல் 8.10.2013 வரை பூமிக்காரகனாகிய செவ்வாய் கடகராசியில் நீசமாகி,நான்காம் பார்வையாக உச்சம் பெற்ற சனியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்;அதே தேதிவரையிலும் உச்சம் பெற்ற சனி தனது முழுப்பார்வையான பத்தாம்பார்வையாக கடகராசியையும்,கடகராசியில் இருக்கும் நீசச் செவ்வாயையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.இதனால்,உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மனிதர்கள் அனைவருக்குமே இந்த கால கட்டத்தில் கவனக்குறைவு,குடும்பத்தில் குழப்பம்,அலுவலத்தில் தேவையற்ற சச்சரவு,நாடுகளிடையே அனாவசியமான போர்ச் சூழல் என்று தடுமாற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதன் விளைவாக இந்த 2013க்குள் உலகத்தில் பிரளயம் ஏற்படும் சூழ்நிலையை கிரகநிலைகள் உருவாக்கியிருக்கின்றன.


உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நலன் கருதி,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் இந்த விஜய வருடத்தின் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (21.9.2013 அன்று) விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் அமைந்திருக்கும் நரிப்பாறைக்கு வருகை தந்தார்கள்.

இந்த நரிப்பாறையானது,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் வடமேற்குப்பகுதியில் இருக்கும் திருவண்ணான்மலை ஸ்ரீநினிவாஸப்பெருமாள் கோவிலுக்கு அருகே அமைந்திருக்கிறது.இங்கிருந்து சதுரகிரிக்கு ஒரு சுரங்கப்பாதை செல்கிறதாம்.ஏராளமான சித்தர்கள் அடிக்கடி இங்கே வந்து தவம் செய்வதுண்டு;இங்கே இருக்கும் குகைப்பகுதிக்கு முற்காலத்தில் ஆதிசங்கரர் வருகை தந்து சிவலிங்கத்தை நிறுவி சில காலம் வழிபட்டிருக்கிறார்.இப்பேர்ப்பட்ட பகுதியில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் உலகநலன் வேண்டி மாலை 4.30 முதல் 6 மணி வரை கூட்டு ஜபம் நடைபெற்றது.முடிவில் அனைவருக்கும் சித்தர்களின் ஆசிகள் கிட்டின.


இந்த புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இங்கே வந்து பிரார்த்தனை செய்பவர்களுக்கு அவர்களின் நீண்டகால பிரச்னைகளுக்குத் தீர்வு சித்தர்களின் அருளாசியால் கிட்டும்;இங்கே வரும்போது,ரோஜாப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாலை,குறைந்தது அரைக்கிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்புத் திராட்சை அரைக்கிலோ(தற்போது கிடைப்பது அரிது;கிடைக்காவிடில் வருந்த வேண்டாம்);விதைநீக்கப்பட்ட பேரீட்சைம் பழ பாக்கெட்,இரண்டு நெய்தீபங்கள்,ஆறு மஞ்சள் நிற வாழைப்பழங்கள்,வெற்றிலையும் கொட்டைப்பாக்குகளும் கொண்டு வந்து பத்து நிமிடம் பிரார்த்தனை செய்தாலே போதும்.பிரார்த்தனையின் முடிவில் இவைகளில் பழங்கள்,கல்கண்டு இவைகளை மட்டும் பாதியை இங்கேயே விட்டுவிடவேண்டும்;மீதியை எடுத்துக் கொண்டு அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;வீட்டிற்குக் கொண்டு சென்று அனைவருக்கும் பகிர்ந்து தரலாம்;

புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகள் பட்டியல்:
28.9.2013 திருவாதிரையும் சனிக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது.
5.10.2013
12.10.2013

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வாகன வசதிகள் எப்போதும் இருக்கின்றன;நரிப்பாறைப்பகுதியில் அடிக்கடி மனித நடமாட்டம் கிடையாது.எனவே,போதுமான முன்னேற்பாடுகளுடன் வந்து பிரார்த்தனை செய்வது நன்று.

பின்குறிப்பு:ஒருவேளை புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகளுக்கு வந்து பிரார்த்தனையைத் துவக்க இயலாதவர்கள் எந்த சனிக்கிழமைகளிலும் வந்து பிரார்த்தனை செய்யலாம்;தொடர்ந்து ஆறு சனிக்கிழமைகளுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்;அவ்வாறு வந்து பிரார்த்தித்தால், அவர்களுடைய எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் நிச்சயமாக அடுத்த 90 நாட்களுக்குள் தீர்ந்துவிடும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ