RightClick

அடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்!!!


கடந்த நான்கு வருடங்களாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் நமக்கு பல அரிய,அபூர்வமான ஆன்மீக ரகசியங்களைத் தெரிவித்து வருகிறார்.அவர் நமக்குத் தெரிவிக்கும் அபூர்வ ரகசியங்களை எளிமையான நடையில் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்.
2011 ஆம் ஆண்டில்  வந்த பவுர்ணமியானது அரிய அபூர்வமான பவுர்ணமி என்பதை தமது ஆத்மபலத்தால் கண்டறிந்து நமக்குத்தெரிவித்திருந்தார்.அதன்படி,8.1.2012ஞாயிற்றுக்கிழமை அன்று கழுகுமலையில் சித்தர்கள் கிரிவலம் ஏற்பாடாகியிருந்தது.

1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மார்கழி மாத பவுர்ணமி வரும் நாளில் 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு வருவார்கள்;வந்து கழுகாசலமூர்த்தியை வழிபட்டு விட்டு கிரிவலம் செல்வார்கள் என்பதே அந்த அரிய ஆன்மீக ரகசியம்! 

முதல் வருடமான 8.1.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் வந்திருந்தார்கள்;பலருக்கு கிரிவலம் செல்லும்போதே அவரவர்களின் முன்னோர்களாகிய சித்தர்களின் தரிசனம் கிடைத்தன;சிலருக்கு வீட்டுக்குச் சென்றதும்,இரவு தூங்கும்போது கிடைத்தன;இந்த கிரிவலத்தில் கலந்துகொண்ட பலரது கர்மாக்கள் கரைந்து,பலவிதமான நன்மைகள் ஏற்பட்டன;

ஒரு விபத்தில் அந்த மனிதர் தனது கால்களை இழந்துவிட்டார்;இதனால்,அவரால் சுயமாக எந்த ஒருவேலையையும் செய்ய முடியவில்லை;எனவே,அவரது மனைவிதான் அவரை பக்கபலமாக கவனித்துக் கொண்டார்;உபாதைகளைக் கூட முகம் சுளிக்காமல் பார்த்து கவனித்துக்கொண்டார்;கால்களில் ப்ளேட் பொருத்தப்பட்டப் பின்னரும் கூட,அவர் தமது அன்பு மனைவியால் காலத்தை நகர்த்தினார்;அவருக்கு அடிக்கடி இதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது;இந்த சூழ்நிலையில் அவர் இணையத்தில் மூழ்கத்துவங்கினார்;நமது ஆன்மீகக்கடலில் நாம் வெளியிட்டிருந்த அபூர்வமான கழுகுமலை கிரிவல அறிவிப்பை பார்த்துவிட்டு,தமது மனைவியை இதில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தார்;கிரிவலத்தில் கலந்துகொண்டு,மனப்பூர்வமாக கழுகாச்சலமூர்த்தியிடம் பிரார்த்தித்தப் பின்னர்,தமது வீட்டிற்குத் திரும்பினார்.


அடுத்த சில நாட்களிலேயே அவரது கணவரின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம் தெரிந்தது.ஆமாம்! கால்களில் ப்ளேட் பொருத்தியிருந்தாலும்,மனைவியின் துணையுடனேயே தனது உபாதை முதலான பலவேலைகளைச் செய்து வந்தவர்,தாமாகவே செய்யத் துவங்கினார்.அவருக்கும்,அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும்,நன்றியுணர்ச்சிக்கும் அளவே இல்லை;சித்தர்களின் ஆசி அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தித்து ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

இன்னொரு அன்பருக்கு,16 ஆண்டுகளாக பூர்வீகச் சொத்துப் பிரச்னை இருந்தது;இந்தப் பிரச்னை தீர இதுவரை சுமாராக 90 பேர்களை (16 ஆண்டுகளில்)சந்தித்து,ஏராளமான பரிகாரங்களைச் செய்திருக்கிறார்;பல ஆலயங்களுக்குச் சென்றுமுறைப்படி பூஜை செய்திருக்கிறார்;கிடைத்த சொத்துக்களைக் கொண்டு தற்போது சுயதொழில் ஒன்று துவங்கி சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.பலன் கிட்டவில்லை;பலன் கிடைப்பதற்கான ஒரு அடையாளமும் தெரியவில்லை;சரி முயன்றுதான் பார்ப்போமே என்று கழுகுமலை கிரிவலத்திற்கு வந்து கலந்துகொண்டார்;அடுத்த சில வாரங்களிலேயே சுமுகமாக பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வந்தது;இவர் எதிர்ப்பார்த்த சொத்துக்கள் இவருக்கு முழுமையாகக் கிடைத்துவிட்டது;தற்போது,அதைக் கொண்டு சுயதொழில் ஆரம்பித்து நடத்தி வருகிறார்;

பலருக்கு தமது மகன்/மகளுக்கு தகுந்த வரன் அமையாமல்  பல வருடங்களாக சலித்துப் போனவர்கள் கழுகுமலை கிரிவலத்திற்கு வந்திருந்தார்கள்; அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடுத்து வந்த தை,மாசி மாதங்களிலேயே சிறப்பான மற்றும் பொருத்தமான மருமகள்/மருமகன் அமைந்துவிட்டது;


வீடு,குடும்பம்,சொத்து,வேலை/தொழில் என்று இருப்பவர்கள் பலர் இந்த கழுகுமலை கிரிவலத்திற்கு வருகை தந்தனர்;அவர்களது நோக்கம் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதே! அவர்கள் அனைவருமே தமது முன்னோர்களாகிய சித்தர் ஒருவரின் தரிசனத்தையும்,ஆசியையும் கழுகுமலை கிரிவலத்திலேயே பெற்றனர்;அந்த பட்டியல் மிகவும் பெரியது;தமிழ்நாட்டில் பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு சித்தரின் வழித்தோன்றல்கள் தான்! நாம் எந்த சித்தரின் வழித்தோன்றல் என்பதை அறிய விரும்பியவர்களும் இந்த கழுகுமலை கிரிவலத்திற்கு வந்திருந்தனர்;அவர்கள் ஒவ்வொருவருமே தமது முன்னோர்களாகிய அந்தந்த சித்தரின் ஆசிகளையும் தரிசனைத்தையும் பெற்றனர்.தர்மபுரி முதல் கன்னியாக்குமரி வரை ஏராளமான ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் வந்து கலந்து கொண்டனர்.

இந்த சம்பவங்களால்,அடுத்த வருடமான 2012 இல் கழுகுமலை கிரிவலத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்தது;2012 கழுகுமலை கிரிவலத்தில் பங்குகொண்டதால்,கிட்டிய சித்தர்கள் அருளாசிகளை தொகுத்து வருகிறோம்;சுமாராக நூறுபதிவுகள் அளவுக்கு ஏராளமானவர்களுக்கு தீர்க்கவே முடியாத சிக்கல்கள் தீர்ந்திருக்கின்றன.இந்த விஜயவருடம்,கழுகுமலை கிரிவலம் 16.12.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது.இந்த கிரிவலத்துடன் கழுகுமலை சித்தர் கிரிவலம் நிறைவடைகிறது.மீண்டும் இதே கிரிவலம் வர நாம் 1500 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்;அதாவது கி.பி.3513 ஆம் ஆண்டில் தான் இந்த கழுகுமலைக்கு 18 சித்தர்களும் ஒன்றாக வருகை தந்து கிரிவலம் செல்வார்கள்;எனவே,இந்த பொன்னான,இல்லையில்லை; ப்ளாட்டினமான வாய்ப்பை பயன்படுத்தி நமது கடுமையான பிரச்னைகளிலிருந்து மீண்டு கொள்வோம்;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நமது முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் எழுதப்படாத கடமை ஆகும்.அப்பாவின் அப்பா,அப்பாவின் அம்மா,அம்மாவின் அப்பா,அம்மாவின் அம்மா என்று நம்முடைய தாத்தா பாட்டிகளே நான்கு பேர்கள் இருக்கிறார்கள்;நமது கணவன்/மனைவியின் தாத்தாபாட்டிகளும் சேர்த்தால் எட்டுபேர்கள் வருவார்கள்.இவர்களுக்கு மட்டும் நாம் பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்பினால்,நாம் ஒரு வருடத்தில் எட்டு நாட்களுக்கு ராமேஸ்வரம்,பாபநாசம்,காசி முதலான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.தவிர,இவர்கள் சிவனடி சேர்ந்த திதியை ஒவ்வொரு வருடமும் தகுந்த ஜோதிடரிடம் கேட்டு,அந்த நாளில் விடுப்பு எடுத்து,வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று,தர்ப்பணம் செய்வது சுலபமான காரியமா?

எனவே தான் நமது முன்னோர்கள் ஒரு சுலபவழிமுறையை உருவாக்கியிருக்கிறார்கள்.அது ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்யலாம் என்பதே அந்த சுலபவழி! 

இந்த மூன்று அமாவாசைகளிலும் தர்ப்பணம் செய்ய முடியாத அளவுக்கு பிஸியாகத்தான் நாம் ஒவ்வொருவருமே இருக்கிறோம்.எனவே,அதையும் சுருக்கி ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தாலே நமது முன்னோர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு தர்ப்பணம் செய்த பலன்களைப் பெறலாம்.நமது தினசரி வாழ்க்கை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கக் காரணம் என்ன?

பூர்வீகச் சொத்துப்பிரச்னை,குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் இருப்பது,கணவன் மனைவிக்குள் ஒற்றுமையின்றி இருப்பது;தொழில் வளர்ச்சியின்றி இருப்பது;வேலையில் முழுத்திறமையை வெளிப்படுத்தியும் பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது;திருமணத் தாமதம் அல்லது குழந்தை பிறப்பு தாமதம்;அதனால் வாழ்ந்து வரும் தெருவில் பிறரின் ஏச்சுக்கும்,கேலிக்கும் ஆளாகுதல்;தீராத மன உளைச்சலால் தூங்க முடியாமல் தவிப்பது;சொத்துக்கள் பெரிய அளவில் இருந்தும் சிறு அளவு கடன்களை தீர்க்க முடியாமல் தவிப்பது;செய்யாத தவறுக்கு பழியும்,அவமானமும் அடைவது;குலதெய்வ அருள் கிட்டாமல் தவிப்பது;

இவைகள் அனைத்திற்கும் காரணம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் இருப்பதுதான்!

.நாம் ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று தர்ப்பணம் செய்தாலே 12 X365=4380 நாட்களுக்கு தர்ப்பணம் செய்தமைக்கான பலன்கள் நம்மை வந்து சேரும்.இந்த உண்மையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் ஐயா அவர்கள் தமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்து,நமது நலன்களுக்காக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய வருடத்தின் புரட்டாசி அமாவாசையானது 4.10.2013 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.இந்த பதிவினை வாசிக்கும் ஒவ்வொரு ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளையும் கழுகுமலையில் நடைபெற இருக்கும் முன்னோர் தர்ப்பணத்திற்காக அழைக்கிறோம்;இதில் கலந்து கொள்வதன் மூலமாக,நமது ஆன்மீக குருவின் தலைமையில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் நாம் செய்கிறோம்;இதனால்,மேலே கூறிய மற்றும் கூறாமல் விடுபட்டிருக்கும் அனைத்துச் சிக்கல்களும் அன்றே தீர்ந்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.


தமிழ்நாட்டிற்கு வடக்கே இருந்து வருபவர்கள் மதுரை வந்து,திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்(ரயில் மார்க்கமாகவும் வரலாம்) பயணித்து கோவில்பட்டிக்கு முதல்நாளான 3.10.13 வியாழக்கிழமையன்றே வந்து தங்கிக்கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டிற்கு தெற்கே இருந்து வருபவர்கள்,திருநெல்வேலி டூ ராஜபாளையம் சாலையில் பயணித்து முதல் நாளே சங்கரன்கோவிலுக்கு வந்துவிடவேண்டும்.(சென்னையில் இருந்து வருபவர்கள் பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்து சங்கரன்கோவில் வந்துவிடுவது நன்று)அங்கே தங்கி,மறுநாள் காலையில் 9 மணிக்குள் கழுகுமலைக்கு வந்துவிட வேண்டும்.இதன் மூலமாக,16.12.13 மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்தில் கலந்து கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.
முக்கிய அறிவிப்பு: ஐயாவை கடந்த ஒரு மாதமாக நேரில் வந்து சந்தித்தவர்களுக்கு அவர்களின் மின் அஞ்சல் மூலமாக பதில் 6.10.13 முதல் 16.10.13க்குள் அனுப்பப்படும்;
ஐயாவை கடந்த ஒரு மாதத்தில் நேரில் சந்தித்த அனைவரும் இந்த கழுகுமலை அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.இதன் மூலமாக தங்களின் வாழ்க்கையில் சோகங்கள்,சிரமங்கள்,அவமானங்கள் அடியோடு விலகிவிடும்;
கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் நடுவே(கோவில்பட்டிக்கு மிக அருகில்) கழுகுமலை அமைந்திருக்கிறது.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சகல சவுபாக்கியங்களையும் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண கிரிவலம்!!!

 30.11.2013 சனிக்கிழமை அன்று சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும்,துவாதசி திதியும் சேர்ந்து வருகிறது.துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் அண்ணாமலையில் காலையில் கிரிவலம் சென்று,மாலையில் நந்தி தரிசனம் செய்துவிட்டு,அண்ணாமலையாரை இரவில் தரிசனம் செய்தால் அதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண கிரிவலம் என்று பெயர்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்  ஐயா தெரிவித்துள்ளார்.

29.11.2013 வெள்ளிக்கிழமை அன்று நாம் அண்ணாமலைக்கு வந்துவிட வேண்டும்.வருபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மறுநாள் சாதுக்களுக்கு போஜனதானம் செய்ய சமையல் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்;ஒவ்வொருவரும் தலா மூன்று இட்லிகளும்,அதற்குரிய துணை உணவுப்பொருட்களையும் தானம் செய்யத் தேவையான அளவுக்கு சமையல் பொருட்களை வாங்கினால் போதுமானது;இந்தப் பொருட்களைக் கொண்டு,மறுநாள் 30.11.13 சனிக்கிழமை காலை 5 மணி முதல் 7 மணிக்குள் நாமே இட்லிதானம் செய்ய கூட்டு சமையல் செய்ய இருக்கிறோம்.காலை 7 மணிக்கு நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலத்தைத் துவக்குகிறோம்.


இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் பிங்க் நிற ஆடையை அணிந்துகொள்ள வேண்டும்.இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொள்ள வேண்டும்;கொண்டு வரும் தோள்பையில் குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டுகளையும் வைத்திருக்க வேண்டும்;இவைகளை கிரிவலப் பயணத்தின் போது கிரிவலப்பாதையில் தூவ வேண்டும்.கிரிவலத்தை பூத நாராயணப் பெருமாள் சன்னதியில் நிறைவு செய்ய வேண்டும்.

மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இங்கே நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.6 மணிக்குப் பிறகு ஏழு மணிக்குள் மூலவரான அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்;பின்னர்,இரவு 9மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.பிறகு,வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இதன்மூலமாக,
நமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் முழுமையாக நமக்குக் கிட்டும்;

தொலை தூரத்தில் வாழ்ந்து வரும் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இந்த ஆன்மீக சம்பவங்களில் (முன்னேற்பாடுகளுடன்)கலந்து கொள்வதற்காகவே இந்த பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.

4.10.13 வெள்ளிக்கிழமை = கழுகுமலையில் அன்னதானம்

30.11.13 சனிக்கிழமை   = அண்ணாமலையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண கிரிவலம்

16.12.13 திங்கட்கிழமை   = கழுகுமலையில் 1500 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரும் மார்கழி பவுர்ணமியில் கடைசி கிரிவலம்.

இம்மூன்று நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதால் உங்களுடைய வாழ்க்கையில் மகத்தான மாற்றங்கள் வரும் என்பது பைரவ சங்கல்பம்! இந்த நாட்களுக்கு முதல் நாளே இந்த ஊர்/அருகில் இருக்கும் ஊர்களுக்கு வந்து தங்கிக்கொள்ளவும்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ


தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 10


கோவில் அல்லது துறவிகள் இருக்கும் மடாலயம் செல்கிறோம்;நமது கஷ்டங்கள் தீர அவர்களின் ஆசியை வாங்குகிறோம்;அப்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்: துறவி/ஆன்மீக குருவின் காலில் விழுந்து வணங்கும்போது நமது கைகளோ,கை விரல்களோ ஒருபோது குருவின்/துறவியின் கால்கள் மீது படவே கூடாது.ஏனெனில்,அவர்களின் ஆத்ம சக்தி அளவற்று இருக்கும்;நாமே சராசரி மனித வாழ்க்கையாக இல்லறவாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.நமது கையோ,கைவிரல்களோ அவரது கால்கள் மீது படும்போது அவரது ஆத்மசக்தி நமது உடலுக்குள் உடனே புகுந்துவிடும்;ஆனால்,அது நமக்கு ஏற்புடையதல்ல;%%%%%%


பரிகாரங்களில் பல வகைகள் உண்டு;சில பரிகாரங்களை நாம் மட்டுமே செய்ய வேண்டும்;அவ்வாறு நாம் மட்டுமே செய்தால் மட்டுமே நமது தோஷம் அல்லது கர்மா நம்மை விட்டு நீங்கும்;அதுவும் எப்போது நீங்கும்? அந்த தோஷத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு,அதற்குரிய பரிகாரம் இதுதானா என்பதை உறுதி செய்து கொண்டு,நமது மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்;அவ்வாறு செய்தால் மட்டுமே பலன் தரும்.உதாரணமாக,பித்ரு தோஷம் இருந்தால்,அதை நாம் மட்டுமே நேரடியாக வந்து தகுந்த குரு/ஜோதிடர் மூலமாக அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

திருமணம் ஆகாத ஆண்/பெண்ணாக இருந்தால் பெற்றோருடன் வந்து பித்ரு தோஷ நிவாரணமான நவகலசயாகம் செய்யலாம்;ஒருவேளை பெற்றோருக்கு இதில் உடன்பாடு இல்லையெனில்,நமது சகோதர,சகோதரியுடன் வந்து நவகலசயாகம் செய்யலாம்;அவர்களுக்கும் உடன்பாடு இல்லை என்றோ நம்முடன் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லையென்று இருந்தாலோ நாம் மட்டுமே வந்து செய்யலாம்;

மணமானவர்களாக இருந்தால் தனது வாழ்க்கைத்துணையுடன் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும்.தனியாகச் செய்யும் பரிகாரம் பலன்களைத் தராது.இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.பிரிந்திருக்கும் தனது வாழ்க்கைத்துணை தன்னோடு சேர தனியாகத் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.சிலருடைய வாழ்க்கைத் துணைகள் நோயாலோ வேறு பல காரணங்களாலோ பரிகாரம் செய்யக்கூடிய இடத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.அப்போது மட்டும் தனியாக செய்யலாம்;அப்போதும் தனது வாழ்க்கைத்துணையின் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்த பின்னரே பரிகாரம் செய்ய வேண்டும்.வெகு அபூர்வமாக ஒரு சில தம்பதிகளுக்கு மட்டும் தனியாக கணவன் மட்டும் அல்லது மனைவி மட்டும் பரிகாரம் செய்யும் பாக்கியமும் உண்டு.*********


நீங்கள் பெறும் ஆன்மீக முன்னேற்றம் பற்றியோ,பரவசநிலையைப் பற்றியோ அல்லது ஆன்மீக முன்னேற்றத்தின் விளைவாக உங்களுக்குக் கிடைத்த சில அபூர்வ சக்திகள் அல்லது அனுபவங்களை உங்களது ஆன்மீக குருவைத் தவிர வேறு எவரிடமும் எப்போதும் பகிர்ந்து கொள்ளக் கூடாது;அதை பெருமையாக நினைத்தாலே அடுத்த கட்ட ஆன்மீக முன்னேற்றத்துக்குச் செல்ல முடியாமல் போய்விடும்;ஆனால்,நடைமுறையில் பலர் தமது ஆன்மீக முன்னேற்றத்தை பத்திரிகைகளிலும்,வலைப்பூக்களிலும் எழுதிக்குவிக்கிறார்கள்;அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அதை ‘எடுத்து’க்கொள்வதால்,கேலி மற்றும் கிண்டலான காமெண்டுகளை எதிர்கொள்கிறார்கள்;#############


ஆன்மீகக்கடல் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன;இதுவரை சுமாராக 3500 பதிவுகள் வெளியிட்டிருக்கிறோம்.இதில் தாற்காலிகப்பதிவுகள் மட்டுமே 1000 வரும்;இந்த தாற்காலிகப் பதிவுகள் குறைந்தது ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை மட்டுமே வெளியிடப்பட்டு பிறகு நீக்கப்பட்டிருக்கிறது.புதிய ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் சில பதிவுகளை மட்டும் வாசித்துவிட்டு உடனே ஐயாவுக்கு போன் செய்கிறார்கள்;அவர்கள் கேட்கும் ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்களுக்கு,பைரவர் தொடர்பான சந்தேகங்களுக்கு ஏற்கனவே பதிவுகளாக வெளியிட்டுவிட்டோம்;அதை வாசிக்கும் வரை பொறுமையில்லை;உடனே சந்தேகம் நிவர்த்தியாகும் விதமாக கேள்விகளை செல்போன் மூலமாக கேட்டுவிடுகிறார்கள்.வலைப்பூ நடத்தும் பலருக்கும் இதே சூழ்நிலைதான்!

பல பழமையான ஆன்மீக சுவடிகள்,ஆன்மீக வெளியீடுகள்,ஆண்டு மலர்கள்,புத்தகங்கள் என்று தேனீ போலத்தேடி தேடி அவைகளை வகுத்து,எளிமைப்படுத்தி வைக்கிறோம்.பிறகு,நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களிடம் அது தொடர்பான சந்தேகங்களை கேட்டு மேலும் எளிமைப்படுத்தி அனைவருக்கும் புரியும் விதமாக பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.நீங்கள் ஆன்மீகக்கடல் பதிவுகளை வாசித்துவிட்டு,உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரே ஒரு பதிவின் படி பின்பற்றினாலே போதும்;உங்களுடைய எப்பேர்ப்பட்ட சிரமங்களும்,கஷ்டங்களும்,அவமானங்களும் உங்களை விட்டு படிப்படியாக நீங்கி நிம்மதியான,வளமான வாழ்க்கையைப் பெறுவீர்கள். ஆன்மீகக்கடல் பதிவுகள் அனைத்தையும் வாசித்துவிட்டு,அதன்பிறகு சந்தேகங்கள் கேட்கும்படி வேண்டுகிறோம்.^^^^^^^

ஒருவர் இந்து தர்மத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறிவிட்டால்,இந்துக்களின் ஜனத்தொகை ஒன்று குறைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல;இந்து தர்மத்தை,இந்து தர்மத்தின் பெருமைகளை,இந்து தர்மத்தின் சாதனைகளை கெடுக்க ஒரு எதிரி அதிகமாகிவிட்டதாக அர்த்தம்.மதமாற்றம் மூலமாக பல நாடுகள் தனது தனித்தன்மையையும்,பண்பாட்டையும் இழந்துவிட்டன;பல நாட்டு அப்பாவி மக்கள் நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக இழந்துவிட்டனர்; ஆங்கில மீடியம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும்,மிஷனரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் தாமாகவே நமது இந்து தர்மத்தின் அடிச்சுவட்டிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.இதனால்,வெறும் எழுபது ஆண்டுகளில் இந்தியாவிலேயே இந்து தர்மத்தை அழித்தொழிக்கும் வேலையை இந்தியர்களே செய்யத் துவங்குவார்கள்;இதை 1890 களிலேயே திரும்பத் திரும்பச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்!!!
.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்!!!

 
சிவமயம்
1.       இலிங்க மூர்த்தி
2.       இலிங்கோற்பவ மூர்த்தி
3.       முகலிங்க மூர்த்தி
4.       சதாசிவ மூர்த்தி
5.       மகா சதாசிவ மூர்த்தி
6.       உமா மகேச்வர மூர்த்தி
7.       சுகாசந மூர்த்தி
8.       உமேச மூர்த்தி
9.       சோமஸ்கந்த மூர்த்தி
10.   சந்திரசேகர மூர்த்தி
11.   விருசபாருட மூர்த்தி
12.   விருசபாந்திக மூர்த்தி
13.   புஜங்களித மூர்த்தி
14.   புஜங்கத்ராச மூர்த்தி
15.   சந்தியாநிரந்த மூர்த்தி
16.   சதாநிருத்த மூர்த்தி
17.   காளிதாண்டவ மூர்த்தி
18.   கங்காதர மூர்த்தி
19.   கங்காவிசர்ஜன மூர்த்தி
20.   திரிபரந்தக மூர்த்தி
21.   கல்யாண சுந்தர மூர்த்தி
22.   அர்த்தநாரீசுர மூர்த்தி
23.   கஜயுத்த மூர்த்தி
24.   ஜ்வராபக்ந மூர்த்தி
25.   சார்த்தூலஹர மூர்த்தி
26.   பாசுபத மூர்த்தி
27.   கங்காள மூர்த்தி
28.   கேசவார்த்த மூர்த்தி
29.   பாஷாடந மூர்த்தி
30.   ஸிம்ஹக்த மூர்த்தி
31.   சண்டேசாநுக்ர மூர்த்தி
32.   தக்ஷிணா மூர்த்தி
33.   யோக தக்ஷிணா மூர்த்தி
34.   வீணா தக்ஷிணா மூர்த்தி
35.   காலாந்தக மூர்த்தி
36.   காமதகன மூர்த்தி
37.   லகுளீசுவர மூர்த்தி
38.   பைரவ மூர்த்தி
39.   ஆபதோத்தாரண மூர்த்தி
40.   வடுக மூர்த்தி
41.   சேத்திரபாலக மூர்த்தி
42.   வீரபத்திர மூர்த்தி
43.   அகோரஸ்திர மூர்த்தி
44.   தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி
45.   கிராத மூர்த்தி
46.   குரு மூர்த்தி
47.   அசுவாருட மூர்த்தி
48.   கஜாந்திக மூர்த்தி
49.   ஜலந்தரவத மூர்த்தி
50.   ஏகபாதத்ரி மூர்த்தி
51.   த்ரிபாதத்ரி மூர்த்தி
52.   ஏணீதபாத மூர்த்தி
53.   கௌரீவரப்ரத மூர்த்தி
54.   சக்ரதாநஸ்வரூப மூர்த்தி
55.   கௌரிலீலாசம்நவித மூர்த்தி
56.   விஷாபஹரண மூர்த்தி
57.   கருடாந்திக மூர்த்தி
58.   ப்ரஹ்மசிரச்சேத மூர்த்தி
59.   கூர்மசம்ஹார மூர்த்தி
60.   மச்சசம்ஹார மூர்த்தி
61.   வராஹசம்ஹார மூர்த்தி
62.   ப்ரார்தநா மூர்த்தி
63.   ரக்தபிக்ஷாப்ரதாந மூர்த்தி
64.   சிஷ்யப்ரவ மூர்த்தி
திருச்சிற்றம்பலம்
ஓம் பரமபதயே நமஹ
தேவ முனி ப்ரவார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
சஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி விஜயாபதி லிங்கம்
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ