நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஒவ்வொரு வருடமும்,பள்ளிகள்
திறந்த ஒரு மாதத்திற்குள் சுமார் நூறு ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விதானம் செய்து வருகிறார்.கடந்த
25 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும்
மாணவ,மாணவிகளுக்கு தமது சொந்தச் செலவில் நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும்
வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த வருடம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நகரம் என்ற
கிராமத்தில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு
பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள்
புடைசூழ 15.8.2013 சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;ஒவ்வொரு ஆண்டும் ஜீன்,ஜீலை மாதங்களில் இவர்களுக்குத்
தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார்.
தவிர,ஒவ்வொரு அமாவாசையன்றும் இரண்டு ஜீவசமாதிகளிலும்,ஒரு அனாதை இல்லத்திலும்
அன்னதானம் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ