RightClick

கருவூரார் சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கும் ஊர் கரூர்! கோவில் அருள்மிகு பசுபதிநாதர் கோவில்!!!
சோழர்களின் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர் கருவூர் சித்தர்! அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கு ராஜராஜசோழனின் அப்பா தங்கத்தால் பசு ஒன்றை தானமாக வழங்கினார் என்று வரலாறு தெரிவிக்கிறது;அதன் பலனாக,உலகம் முழுவதையும் ஆட்சி செய்வதற்காகவே பிறந்தவர் ராஜராஜசோழன்!(அலெக்ஸாண்டர் உலகை கைப்பற்றுவதற்கு முன்பே உலகை ஆண்டவர் நமது மன்னர் ராஜராஜசோழன்! சித்தர் கருவூராரின் ஆசியும்,வழிகாட்டுதலுமே இதற்குக்காரணம்!!!

ராஜராஜ சோழ மன்னர் காலத்தில் அவரது அரசியல் ஆலோசகராக அறிமுகமாகி,அவரது ஆன்மீக மற்றும் வாழ்க்கை குருவாக உயர்ந்தவர் கருவூர் சித்தர்! இது தொடர்பான வரலாற்று நாவல்கள் மிக மிகக் குறைவு.ஆனால்,ஆதாரங்களோ பழமையான நூலகங்களில் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன;இவைகளைத் தொகுத்தாலே ஒரு கோடி பக்கங்கள் கொண்ட சிவ என்சைக்ளோபீடியா ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கும்;அத்தனைத் தகவல்கள் தமிழ்நாடு,டெல்லியிலும், இத்தாலி,ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஏராளமான புராதனத் தகவல்கள் ஓலைச்சுவடிகளில் நிரம்பியிருக்கின்றன;

அப்பாவி மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கியவர் கருவூரார்.அரசுப் பணியில் இருந்தவாறே ஏராளமானவர்களுக்கு இறைவழிபாடு பற்றிய அடிப்படை எண்ணங்களைத் தோற்றுவித்தவர்,தீராத பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்தவர்.கிறிஸ்தவ ஆங்கிலேயனால் நமது நாட்டின் கல்வித்துறையில் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வித்திட்டமானது நமது முன்னோர்களின் பெருமைகளைக்கூட நாம் அறிந்து கொள்ளாத அளவுக்கு நம்மை அடிமுட்டாளாக்கி வைத்திருக்கிறது.அதனால் தான் தன் முனைப்பு(Ego) கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கி நமது தேசமானது அண்டைநாடுகளின் வம்புகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் இன்றைய காலகட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்கள் இன்றும் நிம்மதியாக வளர்ந்து வரக் காரணம் அந்தந்த நகரங்களில் மறைந்து நின்று நம்மை வழிநடத்தும் சித்தர்களும்,மகான்களுமே! இவர்களின் ஜீவசமாதிகளின் ஆற்றலால் மாநகரங்கள் பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது.இந்து தர்மத்தின் ஆணிவேர்களான ஆழ்ந்த தெய்வபக்தியும்,சகிப்புத் தன்மையும்,அரசு சட்டதிட்டங்களையும் மீறிய மனித நேயமும் கொண்ட இன்றைய ஒரு சில அரசு அதிகாரிகள் மூலமாக இம்மாதிரியான நகரங்களை முறைப்படி வளரச் செய்து கொண்டிருக்கிறது.

கரூரில் அமைந்திருக்கும் பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்குள்ளே அமைந்திருக்கும் கருவூர் சித்தரின் ஜீவசமாதி இதே மாதிரியானது;இந்தியாவில் முதன் முதலில் பேருந்து கட்டுமானம் மற்றும் வடிவமைப்புத் தொழில் மும்பையில் துவங்கியது;பிறகு,தொழில் நெரிசலால் அந்தத் தொழில் புனேவுக்கு இடப்பெயர்ச்சி ஆனது; அங்கிருந்து இந்தியாவின் தெற்குப்பகுதிக்கு பெயர்ச்சி ஆன போது,அந்தத் தொழில் கரூருக்கே வந்தது;இந்த வருகைக்குப் பின்னால் கருவூர் சித்தரின் அருளாசியே செயல்பட்டு வருகிறது.

நீங்கள் செய்யும் தொழில் மென் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமா? 


நீங்கள் இரண்டே இரண்டு சித்தவிதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.முதல் சித்தவிதி: நீங்கள் ஒரு போதும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ அசைவம் சாப்பிடக் கூடாது;முட்டையும்,செயற்கையான கருத்தரித்தல் மூலமாக உருவாகும் முட்டையும் முழு அசைவமே! மது அருந்தினால்,மூளை இயல்பாக சிந்திக்கும் திறனை இழந்துவிடும்;எனவே,மதுவை விடுவதும் அவசியம்.


இரண்டாவது விதி முறை:பின்வரும் பொருட்களுடன் கரூர் நகரில் அமைந்திருக்கும் அருள்சிவநிறை பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் வர வேண்டும்.மூலவரையும்,அம்பாளையும் வழிபட்டுவிட்டு,கருவூராரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதிக்கு வர வேண்டும்.

முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,
குறைந்தது இரண்டு நெய்தீபங்கள்
விதையில்லாத திராட்சை குறைந்தது அரைக்கிலோ(குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும்;மற்ற நாட்களில் கிடைக்காது;கிடைக்காவிடில்,பரவாயில்லை;இதற்குப் பதிலாக வேறு எதுவும் வாங்க வேண்டாம்)
விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழ பாக்கெட் ஒன்று
டயமண்டு கல்கண்டு ஒரு கிலோ
வெற்றிலையும்,கொட்டைப்பாக்கும்
ஆறு நாட்டு வாழைப்பழங்கள்
தரமான பத்தி பாக்கெட் ஒன்று,தேங்காய் ஒன்று(மணமாகி,மனைவி கர்ப்பிணியாக இருந்தால் தேங்காய் வாங்கக்கூடாது)

பூசாரியிடம் இந்தப் பொருட்களை ஒவ்வொன்றாகத் தர வேண்டும்;நமது பெயருக்கும்,நமது நிறுவனத்தின் பெயருக்கும் அர்ச்சனை ஒன்று செய்ய வேண்டும்.அர்ச்சனையின் முடிவில் பூசாரிக்கு ரூ.101/-தட்சிணை தர வேண்டும்.தட்சிணை பெற்றப்பின்னர்,குறைந்தது 30 நிமிடம் வரை நமது நியாயமான தொழில் கோரிக்கைகளை மனதுக்குள் நினைத்து கருவூர் சித்தரிடம் வேண்ட வேண்டும்.பிறகு,திராட்சை,பேரீட்சை,டயமண்டு கல்கண்டு,வாழைப்பழங்கள் இவைகளில் பாதியை திரும்பப் பெற வேண்டும்.

 வாங்கியவைகளில் பாதியை அங்கே வருபவர்களுக்கு பிரசாதமாகத் தர வேண்டும்.மீதியை நமது வீட்டுக்கு/தொழில் நிறுவனத்துக்கு எடுத்துச் சென்று நமது குடும்ப உறுப்பினர்களுக்குத் தர வேண்டும்.தொழிலாளர்களுக்கும் தரலாம்.நாமும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு இதே போல வழிபாடு செய்ய வேண்டும்.சிலபல காரணங்களால் தொடர்ச்சியாக எட்டு சனிக்கிழமைகள் இவ்வாறு ஜீவசமாதி வழிபட முடியாமல் போனாலும்,விட்டுவிட்டாவது எட்டு சனிக்கிழமைகள் வழிபாடு செய்து முடிக்க வேண்டும்;எட்டாவது சனிக்கிழமையில் இருந்து 90 நாட்களுக்குள் நிச்சயமாக நமது தொழில் அபார வளர்ச்சியை அடைய ஆரம்பிக்கும்;


இந்த முறைப்படி வழிபாடு செய்வதன் மூலமாக கரூவூர் சித்தரின் அருள் நமக்கும்,நமது தொழிலுக்கும் நிரந்தரமாகக்கிட்டும்;அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டால்,இந்த அருளாற்றல் நமது ஆயுள் முழுமைக்கும் நமது தொழிலை படிப்படியாக வளர வைத்து,நமது சாதனை தொழிலதிபராக்கும்!!!கரூர் நகரமும் இந்தியாவின் முன்னணி மாநகரமாக மாறிவிடும்.

இந்த அரிய வழிபாட்டு முறையை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(செல் எண்:-9677696967) அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!

ஓம் கருவூர் சித்தர் நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ