RightClick

விவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய முளைப்பாரித் திருவிழா!!!


ஒரு நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே இருக்கிறது;உலக வரலாற்றை வாசித்துப் பார்த்தால்,எந்த நாட்டில் விவசாயம் செழிப்பாக இருக்கிறதோ,அந்த நாடுதான் பொருளாதார பலத்தோடு இருக்கும்;இதை உணர்ந்தே நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை பலவிதமான சூழ்ச்சிகள்,சதிகள் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களும்,வல்லரசுகளும் கடந்த 200 ஆண்டுகளாக படிப்படியாக அழிக்கத் துவங்கினர்.1947 இல் இந்தியா முழுக்க ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தன;தற்போது நான்கு லட்சம் கிராமங்களே இருக்கின்றன.இதில் 50,000 கிராமங்கள் மனிதர்களே இல்லாமல் வெறிச்சிடத் துவங்கியிருக்கின்றன.
காலம் காலமாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி:ஆடிப் பட்டம் தேடி விதை என்பதே!


மனிதன் நாகரீகமடைந்து,கூடி வாழ ஆரம்பித்தது முதல் தகவல் யுகத்தை மனித குலத்துக்குக் கொண்டு வந்த கணினியுகம் வரையிலும் மனிதர்களிடையே ஒற்றுமையை வளர்க்க உருவாக்கப்பட்டவையே திருவிழாக்கள் ஆகும்.
முற்காலத்தில் விவசாயம்,நெசவு,தச்சுத்தொழில் போன்றவை அடிப்படைத் தொழில்களாக இருந்தன;இதன் அடிப்படையிலேயே ஜாதிகளை நமது முன்னோர்கள் உருவாக்கினர்.இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் ஜாதி அமைப்பை அரசியல் கண்ணோட்டத்தோடு கையாள ஆரம்பித்தான்;அதன் விளைவுதான் இன்று ஜாதி  மோதல்களாக பரிணமித்திருக்கின்றன.பிரிக்கும் வேலையை கிறிஸ்தவ ஆங்கிலேயன் திட்டமிட்டே செய்தான்;


ஆனால்,நமது முன்னோர்கள் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ திருவிழாக்களை ஒரு உணர்வுபூர்வமான கருவியாக பயன்படுத்தினர்.நெசவாளர்களைப் பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தால் நெசவு செய்யவதில் சுணக்கம் ஏற்படும்;இருந்தாலும்,விவசாயம் செழிப்பதற்காக நெசவாளர் சமூகத்தால் உருவாக்கப்பட்ட திருவிழாவே முளைக்கொட்டுத் திருவிழா ஆகும்.
முளைப்பாரி வளர்த்து அதை கங்கையில்(கிணறு அல்லது ஆறு) விடுவது ஆகும்.ஒவ்வொரு தெருவிலும் மூத்த பெண்(பாட்டி) ஒருவர் சுமாராக பத்து நாட்கள் வரையிலும் தனது வீட்டிற்குக் கூடச் செல்லாமல் தெருவில் இருக்கும் அம்மன் கோவிலிலேயே தங்கி விரதம் இருப்பார்;அவருக்கு என்று பிரத்யேகமாக உணவு தயார் செய்யப்பட்டு அதை மட்டுமே ஒருவேளை சாப்பிடுவார்;அந்த பத்துநாளில் நவதானியங்களை படத்தில் இருப்பது போல வளர்ப்பார்;பத்தாவது நாள் அந்தத் தெருவினை வலம் வந்து ஊருக்கு வெளியே இருக்கும் ஆற்றங்கரை அல்லது கிணறு அல்லது குளத்தங்கரையில் ஊர் தலைவர்கள் முன்னிலையில் ஊர்ச் சமுதாயமே கரைக்கும்;அவ்வாறு கரைக்க மாலை ஏழு மணி ஆகிவிடும்;அப்படி கரைக்கும் முன்பே மழை வந்துவிடும்;


ஊருக்கு நெசவின் மூலமாக ஆடைகள் தயார் செய்து மானத்தை வழங்கும் நெசவாளர் சமுதாயம்,தனது தொழில் தற்காலிகமாக நலிந்தாலும் சமுதாயத்தை வாழ வைக்க,மனித குலத்திற்கு உணவு தயார் செய்யும் விவசாயம் செழிப்பதற்காக இந்த முளைப்பாரித்திருவிழாவை பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்;இந்த திருவிழா நாளில் நெசவு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த தொழிலுக்கு மாறியிருந்தாலும்,வெளியூரில் பஞ்சம் பிழைக்கச் சென்றாலும் ஒன்று கூடுவர்;
இது போன்ற இந்து சமுதாய ஒற்றுமை விழாக்களால் தான் இன்றும் இந்து தர்மம் தழைத்தோங்கிக் கொண்டு இருக்கிறது.போட்டோக்கள் விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதைச் சுற்றிலும் இருக்கும் கிராமப்பகுதிகளில் நிகழ்ந்த முளைப்பாரியம்மன் திருவிழாக்களில் கடந்த ஒரு மாதத்தில் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டவை;இதைப்போல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமுதாய மக்களால் ஆடி மாதம் தோறும் முளைப்பாரித் திருவிழா நடைபெற்று வருகிறது.

ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ