RightClick

ஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா கோவில்,நாகர்கோவில்!!!ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாம் இடம்,பனிரெண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஸர்ப்ப கிரகபாதிப்பு இல்லை என்று அர்த்தம்.ராகு பகவான் நமது உடலில் ஆதிக்கம் செலுத்தும் இடம்,அடுத்த தலைமுறையை உருவாக்கக் காரணமாக இருக்கும் உறுப்பு ஆகும்.கேது பகவான் நமது உடலில் ஆதிக்கம் செலுத்தும் இடம் அந்த உறுப்புக்கு நேர் பின்புறம் இருக்கும் இடம் ஆகும்.கலியுகத்தில் ராகுவின் ஆட்சியே சனி மற்றும் செவ்வாயின் உதவி/பக்கபலத்தோடு நடைபெற்றுவருகிறது.


குறைந்த காலத்துக்குள் மிக பரந்த தூரத்துக்குள் பாதிப்பை உருவாக்குவது;வதந்தியைப் பரப்புவது; ஒற்றர்வேலைகள் மற்றும் ஊடுருவுதல்;முறையற்ற உறவுகள்;பொருந்தாத உறவுகள்;செயற்கைக்கோள்களின் இயக்கம்;ஏவுகணைகள் மற்றும் ஏவுகலன்களின் செயல்பாடுகள்;விஷப்பொருட்கள் மற்றும் அலோபதி மருந்துகள்;செல்போன் மற்றும் செல்போன் இயக்கம்;இணையம் மற்றும் கணினிச் செயல்பாடுகள்;இன்றைய கலியுகத்தில் வெளிநாட்டுக்கலப்புக்கு அதிபதி;இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர்;மாந்திரீகம்;மாந்திரீகத்தால் ஏமாறுதல்;திடீரென மிகப்பெரிய செல்வந்தராகுதல்;சட்டபூர்வமான சூதாட்டம்;சட்டத்தால் கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள்;மனித இனத்தை விருத்தி செய்ய வைக்கும் விந்து;அந்த விந்துக்குள் இருக்கும் உயிரணுக்கள்;நாகங்கள்;நெட்வொர்க்குகள்;காமரீதியான அவமானங்கள்;திடீரென கலவரத்தை உருவாக்குதல்;திடீரென அரசியல் மகத்தான தலைவனாகுதல்; பெரும் செல்வந்தராக இருந்து திடீரென மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்தல்;அதிரடியாகச் சோதனை செய்யும் அதிகாரிகள்;உளவுப்பணிகள்(சி.ஐ.ஏ;என்.ஐ.ஏ.,ஐ.பி;ரா அமைப்புகள்);இணைய உளவுப்பணிகள்(ஹேக்கிங்,ஸ்பைவேர்,மால்வேர்);மல்டிலெவல் மார்கெட்டிங்;ஆன்லைன் வணிகம்;ஆன்லைன் சூதாட்டம்;ஆன்லைன் பங்குச்சந்தைச் செயல்பாடுகள்;ஆன்லைன் உணவுப்பொருள் வர்த்தகம் போன்ற அனைத்திற்கும் ராகுவே பொறுப்பாகிறார்.


யாருடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்துக்கு பதினோராம் இடத்தில் அல்லது ஒன்பதாம் இடத்தில் ராகு இருக்கிறாரோ அவருக்கு மட்டுமே மல்டிலெவல் மார்கெட்டிங்,ஆன்லைன் சூதாட்டம்,ஆன்லைன் பங்குச்சந்தை போன்றவை அளவற்ற செல்வச் செழிப்பைத் தரும்.அதே சமயம் லக்னத்துக்கு பதினோராம் இடத்தில் ராகு இருந்தால் அதற்கு ஏழாம் வீடான ஐந்தாம் இடத்தில் கேது இருக்கும்;லக்னத்துக்கு ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் அதற்கு நேர் ஏழாம் வீடான மூன்றாம் வீட்டில் கேது இருக்கும்;இவ்வாறு இருந்து ராகு அல்லது கேது மஹாதிசை நடந்தாலே அவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது;அந்த பித்ரு தோஷத்தை இப்பிறவியிலேயே அந்த ஜாதகர் நீக்க வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்துகிறது என்று அர்த்தம்.அவ்வாறு நீக்காவிடில்,ராகு மஹா திசை முழுமையான கோடீஸ்வர யோகத்தைத் தராது.


ராகு மஹாதிசை காலமான 18 ஆண்டுகளில் முதல் பாதியான ஒன்பது ஆண்டுகள் நிலையில்லாத வேலை/தொழிலைத் தரும்;நாம் வாழ்ந்து வரும் இந்தக் காலத்தில் பல இளைஞர்களுக்கும்,இளம்பெண்களுக்கும் இராகு மஹாதிசையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அடுத்த பாதியான ஒன்பது ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தைத் தரும்.இந்த பதினெட்டு ஆண்டுகளும் ஒழுக்கத்திற்குச் சோதனைகள் வந்துகொண்டே இருக்கும்.அவ்வாறு வராமல் இருக்க தினமும் உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகவும்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்,முதலியார்பட்டித்தெருவில் இருக்கும் அருள்நிறை பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி பூஜைக்கும் வருவதையும் வழக்கமாக்கிக் கொள்வது அவசியம்.அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான அம்மன்கோவில்களில் நடைபெறும் பவுர்ணமி பூஜைகளில் தொடர்ந்து கலந்து கொண்டே வந்தால்,ராகுவினால் ஏற்படும்,ஏற்பட இருக்கும் பாதிப்புகள் படிப்படியாகக்குறைந்து கொண்டே வரும்;இவர்களுக்கு விஷ ஜந்துக்களால் பெரும்பாலும் பிரச்னை வராது.லக்னத்துக்கு எட்டில் ராகு நின்று திசை நடத்தினால்(குரு பார்வை இல்லாமல் இருந்தால்)மட்டும் அவர்களுக்கு பாம்பு/தேள்/பூரானால் உயிராபத்து வரும்;


கேது மஹா திசை ஏழு ஆண்டுகள் ஆகும்.இதில் முதல் பாதியான மூன்றரை ஆண்டுகளுக்கு வாழ்க்கை மீதான அக்கறையே போய் எதிலும் விரக்தியில் கொண்டுபோய்விடும்.இரண்டாம் பாதி துவங்கும் போது மகான்கள்,சித்தர்கள்,சாதுக்கள்,பழமையான வழிபாட்டு முறைகளோடு இணைந்து வாழ வைக்கும்;ஆன்மிக ஞானத்தைத் தரும்;கேதுவின் பாதிப்பு நீங்கிட தினமும் விநாயகர் வழிபாடும்,ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்வதும் செய்ய வேண்டும்.முடிந்தால்,நாமே ஒரு விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை நடத்திவருவது மிகுந்த நன்மைகளைத் தரும்;தீமைகளைக் குறைக்கும்;


பலர் ராகு அல்லது கேது மஹாதிசையால் படாத பாடு பட்டு வருகின்றனர்.அவர்களுக்கு அந்த சிரமங்களில் இருந்து நீங்கிட நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஒரு எளிய அதே சமயம் சக்திவாய்ந்த பரிகாரம் ஒன்றை போதித்திருக்கிறார்.அதை உங்களுக்கு வழங்குவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.நமக்குப்போதித்த நமது ஆன்மீக குருவுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்;
தமிழ்நாட்டின் தெற்கே இருக்கும் இறுதி மாநகராட்சி நாகர்கோவில் ஆகும்.இந்த ஊரில் மையப்பகுதியில் நாகராஜ திருக்கோவில் அமைந்திருக்கிறது.மிகவும் பழமையான,மித மிஞ்சிய ஆன்மீக அதிர்வுகள் கொண்ட ஆலயம் இந்த ஆலயம்!இந்த ஆலயத்தினால் தான் நாகர்கோவில் என்ற நகரமே உருவானது;


இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து 6 ஆயில்யம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் வருகை தரவேண்டும்.கோவிலுக்கு வெளியே இருக்கும் குளத்தில் குளிக்க வேண்டும்.குளித்துவிட்டு,நமது ஆடையில் ஏதாவது ஒரு பகுதியை இந்த குளத்தினுள் விட்டுவிட வேண்டும்.இந்த குளத்திற்கு நாகசுனை என்று பெயர்.கோவிலுக்கு வெளியே இருக்கும் நாகர்களின் பீடத்தில் முதலில் மஞ்சளாலும்,பிறகு பாலாலும் சுய அபிஷேகம் செய்ய வேண்டும்.இறுதியில் கோவிலின் குளத்தை ஒட்டிய இடத்தில் முட்டைகளை வைத்துவிட்டு,மூலவரை உச்சிகால பூஜையில் வழிபட வேண்டும்.பிறகு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

விஜய வருடத்தின் ஆயில்யம் நட்சத்திரநாள் பட்டியல்:

7.8.2013 புதன்
3.9.2013 செவ்வாய்
30.9.2013 திங்கட்கிழமை காலை 11.25 முதல் 1.10.2013 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 வரை
28.10.2013 திங்கட்கிழமை
24.11.2013 ஞாயிறு
21.12.2013 சனிக்கிழமை காலை 8.40 முதல் 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.58 வரை
17.1.2014 வெள்ளிக்கிழமை மதியம் 3.51 முதல் 18.1.2014 சனிக்கிழமை மாலை 6.12 வரை
14.2.2014 வெள்ளிக்கிழமை(பவுர்ணமி)
13.3.2014 வியாழக்கிழமை காலை 6.23 முதல் 14.3.2014 வெள்ளிக்கிழமை காலை 8.50 வரை
9.4.2014 புதன்கிழமை மதியம் 1.42 முதல் 10.4.2014 வியாழக்கிழமை மாலை 4.13 வரை

இந்த நாட்களில் ராகு மஹாதிசை,கேது மஹாதிசை நடைபெறும் ஜாதகர்கள் தான் இங்கே சென்று வழிபடவேண்டும் என்பது மட்டுமல்ல;ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பலருக்கு நீண்டகாலமாக திருமணம் அல்லது குழந்தைப்பேறு கிட்டாமல் இருக்கலாம்;அவர்கள் செல்லலாம்;ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை,சுவாதி,சதயம் நடத்திரத்தில் பிறந்தவர்களும்;கேதுவின் நட்சத்திரங்களான அசுபதி/அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;ராகு சார நட்சத்திரத்தில் எந்த ஒரு கிரகம் நின்று திசை நடத்தினாலும்;கேது சார நட்சத்திரத்தில் எந்த ஒரு கிரகம் நின்று திசை நடத்தினாலும் அவர்களும் சென்று மேலே உள்ளபடி வழிபாடு செய்யலாம்.


இந்தக் கோவிலை சூட்சுமமாக நாகங்கள் பாதுகாப்பதாக கோவில் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த தெய்வீக ரகசியம் அறிந்து வந்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நாமும் செல்வோம்;நமது வேதனைகள்,கஷ்டங்களை நீக்கும் விதமாக மனப்பூர்வமாக வழிபாடு செய்வோம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ