RightClick

நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தின் வரலாறு!!!
ஜோதிட ரீதியாக நோக்கினால் நவக்கிரகங்களில் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களுமே பாம்புக் கிரகங்கள் என்றும்,நிழல் கிரகங்கள் என்றும் அறியப்பட்டு வருகிறது.இன்றைய கணிப்பொறி,செல்போன்,செயற்கைக்கோள்,உளவுப்பணி,ஒற்றர்கள்,வேவு பார்த்தல்,ஹேக்கிங்,முறையற்ற உறவுகள்,நெட்வொர்க்குகள்(கேபிள் டிவி,இணையம்,செல்போன்,தீவிரவாதம்,தகவல்தொடர்பு)அளவற்ற காம இச்சை,விதவைகள்,ஒரு சிலரை மட்டும் மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக்கும் மல்டிலெவல் மார்க்கெட்டிங்,கமிஷன் கிடைக்கும் தொழில்கள்,விஷப் பொருட்கள்,இன்றைய அலோபதி மாத்திரைகள் மற்றும் மருந்துகள்,வெளிநாட்டு கலப்பு,காம அரசியல்,சர்வதேச உளவு அமைப்புகள் போன்றவைகளுக்கு ராகுவே காரகத்துவம் ஆகிறார்.ஞானம் தரும் தியானம்,தவம்,மந்திர உச்சாடனம்,கணினி சார்ந்த பழுதுபார்த்தல்,பித்துப்பிடித்தல்,மனநிலை பாதிக்குமளவுக்கு அனைவராலும் ஒதுக்கப்படுதல்,சூட்சுமரீதியான பயணம்,உடலைவிட்டு உயிர் மட்டும் பிரிந்து வேறு உலகங்களுக்கும்,வேறு மனித உடலுக்குள்ளும் சென்று வருதல்,குரு தரிசனம்,கோவில்கள்,கோவில்கள் பற்றிய அடிப்படை ஞானம்,மந்திர உபதேசம் போன்றவைகளுக்கு கேதுவே அதிபதி ஆகும்.


ராகுவின் நட்சத்திரங்களாக திருவாதிரை,சுவாதி,சதயம் இருக்கின்றன;கேதுவின் நட்சத்திரங்களான அசுபதி/அசுவினி,மகம்,மூலம் வருகின்றன.இவைகளைத் தவிர இன்னொரு பாம்பு நட்சத்திரமாக ஆயில்யம் இருக்கிறது.பூமிக்குக் கீழே ஆறாவது மற்றும் ஏழாவது உலகங்களாக நாக லோகங்கள் இருக்கின்றன.காம இச்சையில் முழுமையான எல்லையைத் தொட்டப் பின்னரே ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.அந்த விதத்தில் பார்த்தால்,இல்லறமில்லாமல் துறவறம் இல்லை;இல்லறத்தில் முழுமையாக அனுபவிக்காமல் துறவறத்துக்கு வந்தால் அது அவமானத்தில் அல்லது குற்ற உணர்ச்சியில் வாழ்க்கையே முடிந்துவிடும்.எனவே,காமம் சார்ந்த ஆசைகளே அறவே இல்லாமல் நீக்கிட ஸ்ரீகால பைரவர் வழிபாடு அவசியம்.அந்த கால பைரவ வழிபாடு துவங்கிட இந்த நாகராஜர் கோவிலுக்குச் சென்று வருவது அவசியம்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமது மன உறுதியைக் கைவிடமாட்டார்கள்;எப்பேர்ப்பட்ட எதிரான சூழ்நிலையிலும் தாம் நினைத்ததைச் சாதிக்கும் மன வலிமையைக் கொண்டவர்கள் ஆவர்;ஆழ்ந்த மன ஆற்றலும்,எதையும் உடனடியாகப் புரிந்துகொள்ளும் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்;இருப்பினும் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற பொய் பழமொழியால் பலருக்கு திருமணத்தாமதம் ஆகிறது;சிலருக்கோ திருமணம் ஆனப் பின்னர் குழந்தை பிறப்பு தாமதம் ஆகிறது.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல;ராகு திசை நடப்பில் இருப்பவர்கள்,கணவன் மனைவி பிரச்னை உள்ளவர்கள்,நிம்மதியான குடும்ப வாழ்க்கையை விரும்புபவர்கள் அனைவருமே ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் இங்கே வந்து இந்த ஆலயத்தின் முகப்பில் அமைந்திருக்கும் நாகர்கள் பீடத்தின் மீது மஞ்சள் பொடி தூவி,உடன் பால் ஊற்றி மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.பிறகு,நாகராஜருக்கு காலை நேர அபிஷேகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.அப்போதும் மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.பிறகு வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமல் நமது வீடு திரும்ப வேண்டும்.


நாகராஜர் கோவிலின் வரலாறு:

இந்த ஆலயத்திற்கு வருகை தருபவர்களை உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகங்களின் படமெடுத்த கோலத்தில் அமைந்த சிலைகள் கவரும்;அவற்றுள் ஒன்றின் படத்தின் அடியில் சுற்றி வளையம் போல் அமைந்த அதன் உடற்பகுதியின் மேல் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருக்கின்ற உருவம் சமண தீர்த்தங்கரரான பார்சுவநாதர்தான் என்று கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் இணையாக வாழ்ந்த இரு பாம்புகள் மகிபாலன் என்ற் கொடியவன் ஒருவனால் கொல்லப்பட்டன;இறக்கும் தருவாயில் பார்சுவநாதரின் மந்திர ஒலிகளைக் கேட்டுக் கொண்டே கிடந்ததால் மீண்டும் அவை கீழுலகில் பாம்புகளின் அரசனாகவும்,அரசியாகவும் பிறந்தன.

ஒரு நாள் பார்சுவநாதர் ஆழ்ந்த தியானத்தில் இருந்துகொண்டு இருக்கும் போது அவரது தியானத்தின் மூலம் வெளியான அலைகளின் சக்தி வானத்தில் சென்று கொண்டிருந்த சம்வரன் என்ற கந்தர்வனின் போக்கினைத் தடுத்து நிறுத்தியது.இதனால் கோபமடைந்த சம்வரன் ஏராளமான மழையை பெய்வித்து அவரது தவத்தைக் கலைக்க முற்பட்டான்.தியானத்தில் அமர்ந்திருந்த பார்சுவநாதரைச் சுற்றிலும் வெள்ளம் பெருகத் துவங்கியது;

இவரைப் பாதுகாக்க வேண்டி பாம்பின் அரசன் தர்னேந்திரன் படமெடுத்து பார்சுவநாதரின் மேல் மழைநீர் படாமல் குடையாக நின்றான்.தண்ணீர் மேலும் உயரவே பாம்புகளின் அரசியான பத்மாவதி தாமரை மலரொன்றை அவரது அடியில் தோன்றச் செய்து காப்பாற்றினார்கள்.இவ்வாறு பார்சுவநாதரின் தவத்தை அழிக்கின்ற முயற்சியில் சம்வரன் தோல்வியுற நேர்ந்தது.இது சமணநூல் உத்திரபுரானம் கூறுகின்ற கதை.இதைத் தான் பாம்பின் இரு உருவங்களும் சித்தரிக்கின்றன.இந்தக் கதையின் அடிப்படையில் தெற்கே காணப்படும் பாம்பு தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்பதும்,வடக்கே காணப்படும் பாம்பு பத்மாவதி என்ற நாகராணி என்பதும் வெளிப்படுகின்றது.

ஆதாரம்:நாக வழிபாடும்,நாகராஜர் ஆலயமும்

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ