வில்லிபுத்தூராருக்கும் அருணகிரிநாதருக்கும் வாதம் நடைபெற்றது.முதலில்
வில்லிபுத்தூரார் பாடல்களுக்கு அருணகிரிநாதர் அர்த்தம் சொன்னார்.பிறகு அருணகிரிநாதர்
பாட,வில்லிபுத்தூரார் அர்த்தம் சொன்னார்.வில்லிபுத்தூரார் அருணகிரிநாதர் பாடிய 54 வது பாடலுக்குத் திணறினார்.
. .திகைத்தார்.அவரையே திகைக்க வைத்த பாடல் இதுதான்:
திதத் தத்தத் தித்தத திதிதாதை தாதுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து தித்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாதுத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே
இதற்கு அர்த்தமே கிடையாது;இது பாடலே அல்ல;என்று வில்லிபுத்தூரார் அருணகிரிநாதரிடம் கூறினார்.அதற்கு அருணகிரிநாதர் பொறுமையாக, "
திதத்த ததத்த என்னும் தாள லயங்களில் சிவனும் நான்முகனும் தயிரை உண்டு பாற்கடலில் ஆதிசேஷனைப்
பாயாகக் கொண்டு உறங்குகின்ற திருமாலும் வணங்குகின்ற முதல்வனே தெய்வானைத் தாஸனே ஜனன
மரணத்திற்கு உட்பட்ட எலும்பு முதலான தாதுக்கள் நிறைந்த பொலிவில்லாத உடல் தீயினால் வேகும்
போது உன்னையே துதிக்கும்படி என் புத்தியை உன் பாதங்களுக்கு ஆட்கொள்ள வேண்டும்" என விளக்கம்
அளித்தார்.
இதைக் கேட்டதும் தோல்வியை ஒப்புக்கொண்டார் வில்லிபுத்தூரார்.
இதுபோன்ற தமிழ் இலக்கணமும் இலக்கியமும் சார்ந்த வாதங்கள் பல நூற்றாண்டுகளாக நம் தமிழ்நாட்டில் நடைபெற்று இருக்கின்றன.தமிழ்மொழி ஒரு மந்திரமொழி!!! தமிழனாகப் பிறந்து,சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ளாமலும்,ஆராயாமலும் இருப்பது வாழ்நாள் தவறு.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ