அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் திரு.சி.தியாகராஜ
சுவாமிகள்.இவர் ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகே பாளையனேந்தல் கிராமத்தில் சித்தர்களின்
தலைவரும்,தமிழ் மொழியை பூமியில் பரப்பியவருமாகிய அகத்தியருக்கு ஒரு ஆலயம் அமைத்து,தினமும்
மூன்று வேளைகளும் அன்னதானம் செய்து வருகிறார்;கி.பி.2006 ஆம் ஆண்டுமுதல் இந்த நித்திய
அன்னதானம் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து 16 கி.மீ.தூரத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு
பாரத நாடு முழுவதும் இருந்து கன்னியாக்குமரி,திருச்செந்தூர் வழியாக பாதயாத்திரையாய்
வரும் சாதுக்கள்,துறவிகள்,முனிவர்கள் இங்கே தங்கி உணவருந்தி பாதயாத்திரையைத் தொடர்கிறார்கள்;கோவிலின்
சுற்றுச்சுவற்றில் 18 சித்தர்களின் ஓவியமும்,கோவிலின் மேற்புறத்தில் நான்கு திசைகளிலும்
அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,திருநாவுக்கரசர் திருவுருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன;
ஒவ்வொரு அமாவாசை,கிருத்திகை,பவுர்ணமி நாட்களிலும் இங்கே வடை,பாயாசத்துடன்
அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 25,வெளியீடு 22.6.12
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ