RightClick

நடராஜரே நாத சக்தி!!!
“தாண்டவம்” என்றால் என்ன? அதிலும் “நாதாந்தத் தாண்டவம்” என்றால் என்ன? சங்கீதம் கேட்கிறோம்;அதில் சைனாக்காரன்,இந்தியன்,பிரஞ்சுக்காரன் கீதம் என்று வித்தியாசம் பாராட்டுகிறோமா? காதுக்கு இனிமையாயிருப்பது கீதம்=நாதம்,எவ்வளவு தடவை தெருவில் செல்லும் போதும் இந்திப் பாடல்களைக் கேட்டு,தம்மை அறியாமல் நம் உதடுகள் அக்கீதத்தை முணுமுணுக்கின்றன;இதைத் தான் நம் இந்து சைவ சமயம் போதிக்கிறது;அதற்கு ஒரு தெய்வத்தைக் கற்பித்து நடராஜர் என்ற நாமத்தையும் அளித்தது. நடராஜர் நடனம் மட்டுமே ஆடுவதில்லை;அவர் கையில் ஒரு இசைக்கருவி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்; அதுதான் ‘உடுக்கை’. ஏன் உடுக்கை?

சப்த ஸ்வரங்களையும் இழைக்கவல்லது உடுக்கை ஒன்று மட்டுமே!!! வீணை கூட அதற்கு அடுத்தபடிதான். அதனால் தான் நடராஜரின் தாண்டவத்திற்கு நாதாந்தத் தாண்டவம் என்ற பெயர் ஏற்பட்டது. நாத பிரம்மம்,நாதோபாசனை என்ற பெயர்கள் எழுந்தன.நாத உபாசனை கொண்டு பரப்ரும்மத்தை அடையலாம் என்பது கருத்து.

இது புராணக் கதை தானே! விஞ்ஞான ரீதியாக ஒத்துக் கொள்ள முடியுமா? என்றால் முடியும்.
ஆனந்த குமாரசுவாமி எழுதுகிறார்:=இயற்கை அசேதனம்.(அழிவில்லாதது).சிவனின்றி ஒரு அணுவும் அசையாது;சிவன் ஆணையால் அணுக்கள் எழும்பி நடனமாடி அசேதனப்பொருட்களை சேதனப் பொருட்களாக மாற்றுகின்றன;இது நாத வெள்ளத்தால் ஏற்பட்ட மாற்றம்.இது வெறும் கதை அல்ல;விஞ்ஞானம்!!!

முதலில் நியூட்டன் சில பரிமாணங்களைக் கண்டுபிடித்தார்;வெகு காலத்திற்குப் பிறகு ஐன்ஸ்டீன் நான்காவது பரிணாமத்தைக் கண்டுபிடித்தார்;அதுதான் காலம்!சில ஆண்டுகள் நகர்ந்தன;ஐந்தாவது பரிணாமம் கண்டுபிடிக்கப்பட்டது.அணுவின் அசையும் தன்மை பற்றியது அது.இப்பிரபஞ்சம் நிலையானது அல்ல.முடிவற்ற ஆட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்றது.

நம் நடராஜ தத்துவமே அதுதான்.நாத சக்தி அவர்.ஆதிசிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு;இந்த ஐந்து முகங்களும் ஒவ்வொரு செயலைச் செய்து வருகின்றன;அவை ஆக்கல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்.ஆக்கலை அந்த ஐந்து முகத்தில் இருக்கும் பிரம்ம முகமும்,கையில் இருக்கும் உடுக்கையும்; காத்தல் தொழிலை விஷ்ணு முகமும்,அபயமளிக்கும் திருக்கரமும்;அழித்தல் செயலை ருத்திர முகமும்,கையில் இருக்கும் நெருப்பும்;முயலகன் என்னும் பூதத்தின் மீது அமர்ந்த கால் மறைத்தலையும்,தூக்கிய கால் முக்தியையும்,அருள்புரிதலையும் கோடானு கோடி யுகங்களாக நிகழ்த்திவருகின்றன;

இந்த ஐந்து தொழில்களைச் செயல்படுத்திட நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் உறுதுணையாக இருக்கின்றன.இதையே திருமூலர்,
“காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவயைத் தேயாடி
நீடிய நீர் தீகால் நீள்வா னிடையாடி
நாளூற அம்பலத் தேயாடும் நாதனே”
என்று தில்லை அம்பலவாணனை எண்ணிப் பாடியுள்ளார்.

ருத்ரன் அழித்தல் தொழிலுக்குரியகடவுள். சுடலையை விரும்புபவர்; ருத்ரன் எதை அழிக்கிறார்? விண்ணுலகையும்,மண்ணுலகையும் யுகத்தின் முடிவிலே அழிக்கவில்லை;ஒவ்வொரு உயிரின் உள்ளத்திலும் மறைந்து நிற்கும் பாசத்தை அழிக்கிறார்.இவர் நடனமாடும் இடம்,நம் உடலைத் தீக்கிடும் சுடுகாடன்று.பாசத்தைப் பொசுக்கிய பக்தரின் உள்ளக்காடே.உயிர்களின் உள்ளக் கிடக்கையிலே உள்ள அகந்தையை,மடமையைப் போக்குவித்தலே இவர் செய்யும் எரித்தல் தொழிலாகும்.இதுவே சுடுகாடாகும்.எனவேதான் ருத்ரனை(நம்மைப் பொறுத்தவரையில் சிவனை) சுடலையார் எனக் கூறுகிறோம்.

சிவபிரானின் திருநடனத்தை மற்றொரு வகையில் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிப்பதாகும்.
திருவடி ‘ந’கரத்தையும்
உதரம் ‘ம’கரத்தையும்
வளர்தோள் ‘சி’கரத்தையும்
முகம் ‘வா’வையும்
முடியை ‘ய’வையும் என்கிறது உண்மை விளக்கம்.இதனைக் கொண்டு ஐந்தெழுத்தே ஆண்டவனின் வடிவம் எனவும் கூறுவர்.இதனை விளக்குவது:=
ஓங்கார மேநல் திருவாசி யுற்றதனின்
நீங்கா வெழுத்தே நிறைசுடராம்- ஆங்காரம்
அற்றால் அறிவரணி யம்பலத்தா னாடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்

என்னும் உண்மை விளக்கப்பாடல்.

சித்சபையில் விளங்கும் நடராஜப் பெருமானின் திருவுருவம்,விஞ்ஞானம்,சமயம்,கலை ஆகிய அனைத்தையும் ஒன்றாக்கி விளக்கும் ஓர் உண்மை ஒளியாகும்.சோழப் பேரரர் ராஜராஜன் காலத்தில் தான் இத்திருவுருவம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிபு.அதன் பின்னரே அனைத்து சிவாலயங்களிலும் இத்திருவுருவம் அமையலாயிற்று.

நமது பூமியின் மையப்புள்ளி சிதம்பரம் நடராஜரின் நடனத்திருவுருவச் சிலையின் கால் பெருவிரலே என்பதை மேல்நாட்டு புவியியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
மேல்நாடுகளில் அணுத்துகள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நுட்பமான ஆய்வுக்கூடத்தில் தில்லை நடராஜரின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் சிவனின்றி அணு கூட அசையாது என்பதற்கு ஆதாரம்!!!

நன்றி:ஜோதிட பூமி,பக்கம் 43,வெளியீடு ஜீலை 2013

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ