RightClick

நமது கடன்கள்,எதிர்ப்புகளை நீக்கும் வாத்தியாரய்யா (முத்துவடுகர்)கோவில்,சிங்கம்புணரி

 இந்தியாவின் தென்பகுதில்  உள்ள தமிழகத்தில்  சிவகங்கை   மாவட்டத்தில்  சிங்கம்புணரி என்ற  ஊரில் சீவ சமாதி  அடைந்தசித்தர்   பெருமானின்  சிறப்புதனை பற்றி எழுதுகின்றேன்.

அருள் சுரக்கும் நாடு நம் பாரதநாடு.. இந்த பாரதநாட்டில் எத்தனையோ, மகான்கள் ,முனிவர்கள்,சித்தர்கள், தோன்றி உலகமக்களுக்கு நல்லாசிவழங்கி மக்களை  காத்து. வருகின்றனர்.அவர்களில் பதினெட்டாம் நுர்ரண்டில் நம் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிஇல் சீவசமாதி
 அடைந்து அருள்பாலிக்கும்  சித்தர் முத்து  வடுக சுவாமி களின் சரிதம் பற்றி எழுதுகின்றேன்.    
பிறப்பு:
  நாயக்கர் மன்னர் காலத்தில் ராமநாதபுரத்தை சீரபடுத்துவதர்க்காக மதுரை நாயக்கர் , சடைக்கத் தேவரை நிர்வாகபொறுப்பை சீர்படுத்த நியமித்தார்.அவரை சேதுபதி என்று அழைப்பர்.சேதுபதிசீமையை முத்துவிஜய ரகுநாத மன்னர் ஆட்சிசெய்துகொண்டுவந்தர்.அவர் நாட்டின் வளத்திற்காக செம்பிநாட்டை ஆள்வதற்கு பூவழத்தேவரை நியமித்தார்.பூவழத்தேவரீன் மனைவிகுமராஇ  ஆவார். அவர்களுடைய
 தவப்புதல்வன் முதுவடுகேசர் கிபி 1737 ஆம் ஆண்டு பிறந்தார்.
திருப்புவனம்
தந்தையின் மரணத்திர்க்குப்பின் சூ ழ்ட்சியின் காரணமாக  மகனை காப்பர்ற்ற  திருப்புவனம் வந்தனர்.

திருப்புவனத்தில்(மதுரைசெக்கநாத பிள்ளை  அவர்கள் அடைக்கலம் தந்தார் . ,அவருடைய வயல்களில் வேலை  செய்து வந்தனர் .

சிறுவனின் சித்து
வயலில் எருமை மாடு உழு காமல் படுத்துக்கிடந்தது ..ஒரு வெண்பா பாடி +
" எருமை இரண்டு  விழுந்தே படுத்துராமல்
உரிமையனார் மேழிதொட்டு உழாமல்
அவிழ்க்கும் வரை  வரச்செய் அம்மே
இவ்வூர் கத்து நிற்கும் காமாட்சி அம்மே"

பாடலை பாடிய உடனே எருமை எழுந்ததது. உழுதது.

பாம்பை தலையனையாக்கிய காட்சி
வயலில்   தூங்கும்  போது  நல்ல பாம்பினை தலையனையாக்கிய  காட்சி ஊரெங்கும் பரவியது. .

  பள்ளியில்  விளையாடுதல்  
ஆசிரியர் சாமிநாத செட்டியார் ,செக்கநாதரிடம் சிறுவன் படிபதில்லைஎன்றார். இவ்வூர்  வினாயகபெருமானை பற்றி ஒரு வெண்பா பாட முடியுமா
என்றவுடன்
"பள்ளிக்குள்ளே யான்  பயில்வதேன்னே நீயடியேன்
உள்ளத்துள்ளே   வாழ்ந்துரும்போதுபிள்ளையா
ரேசாமி  நாதசெட்டிஎன்பாநுண்  முன்னிலேனக்
காசா லெனல்பழிப்பேயாம்"  

ராஜபிளவை மறைத்தவன்  
செக்கனாதர் பிள்ளைக்கு நாடு முதுகில் ஒரு ராஜபிளவை உண்டானது. .வைத்தியர்கள் குணப்படுத்த முடியாததை  "உடைக்கவா?துடைக்கவா?" என்று கேட்டுக் கொண்டு   ராஜபிளவை இருந்த இடத்தை தொட்டான். .உடனே மறைந்துவிட்டது. உதாரணமாக எச்சில் சோற்றில்  நோயை குணப்படுத்திய  திருவாரூரில் சீவசமாதி அடைந்த சுவாமி தெட்சிணாமூர்த்தி சித்தரே  போதும்.

பாலாலய சுவாமின் தரிசனம்
மதுரை,அழகர் கோவிலில் உள்ள பழமுதிர்சோலையில்   சீவசமாதி அடைந்த சுவாமி பாலயசித்தரை தரிசிக்க தன  தாய் குமராயுடன் வந்தார்.
அவரின் ஆசியுடன் பட்டுர் சென்றார்.அங்கு மக்களுக்கு நல்லது செய்து வந்தார்.
பட்டுரின்  ஆசிரியர்
அழகர் கோவிலில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் ஒரு ஆலமரத்தில் சித்தர் மக்களுக்க்குநல்லதை புகட்டி  தவமமிருந்து வந்தார். அதனால் மக்கள் அவரை  "பட்டுர் வாத்தியார்"  என்று அழைத்தனர்.
சிங்கை சித்தன்
சிங்கம்புணரி கடையேழு  வள்ளல்களிலஒருவரான பாரி மலை ஆண்ட ,முல்லைக்கு தேர் கொடுத்த  பாரிவள்ளளுக்கு  சொந்தமான ஊர். இது  பாலை ஆர்ற்றங்கரையில் உள்ளது.

இங்கு சேவுகப்பெருமாள் ஐயனார்  கோவிலில்ஆண்டுதோறும்  வைகாசி மாதம் பத்து தினங்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும். இந்த கோவிலில் பிடாரியம்மன் 
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். . சித்தன் .ஐயனாரின் அருளலால் தவவலிமை  பெற்று (பீதாம்பர பீதாம்பரமந்திரவாதிகள் )   வம்பர்  கூட்டத்தை ஒழித்தார்.மக்கள்   அவரை  அன்போடு   வாத்தியாரய்யா என்றழைத்தனர்
.
பாம்பை இரும்பாக்குதல்
சிகம்புனரிக்கு அருகிலுள்ள கூவன்னா மலைக்குச் சென்று நீராடுவார். அழகுனாசியம்மன் கோவிலில் வழிபாடு செய்வார். ஒருநாள் நல்ல பாம்பு ஓன்று அவரை நோக்கி  வந்தது  
அதை தன்னுடன்  உயிர் த்தானதுடன் கவ்வச் செய்து தன்னிருப்பிடத்திர்க்கு எடுத்து வந்து பூஜை அறையில்  வைத்து இரும்பாக்கினார்.
வராகி அம்மன் துணை
சித்தன் தினமும் வராகி அம்மனை தொழுவதற்கு  மண்டையோடு,மதுபானங்கள்,இறைச்சி முதலானவற்றை படைத்து வழிபடுவார்.

சித்தர்கள்  அழிவதில்லை. சிங்கை  மக்களில்  ஒரு வஞ்சகன்  அவரை அவமானப்பட்த்துவதற்காக எண்ணி படுகுழியில்  ,அவரை
 கட்டிப்போட்டுமிளகாயுடன்  முள்ளுச்  சேர்த்து   குழியினை மூடி விட்டனர்.  ஏசுநாதர்  எவ்வாறு உய்ர்த்தெழுந்து வந்தாரோ ,அவரைப்போல் வந்தார்.

சினம்  கொண்டு  சேவுகப்பெருமாள் இருக்கும் திசை  நோக்கி
"தொட்டெனது கரம்பினைத்துத்தொடுகுழிபிற்ற அள்ளி நெடுந்சூரை முள்மேல்
இட்டு மிளகாய்ப்  புகயுளி   இட்டு எனை  இவ்வஊறவர் களிடுக்கன்  செய்ய
விட்டு நீயார்க்கோ வந்து விருந்
குழாந்தாபுரி மன்னன்   மகனை காத்தல்
சிவகங்கை மன்னன்  மகன் தேர்  சககரத்தில்  அடிபட்டதால்  சுயநினைவு  இழந்தவனை  சிடர் அவர்கள் காத்து அருள்ளியுள்ளார்.
சீவசமாதி அடைதல்
கலியுகம் 4934 ஆம் ஆண்டு ரோகினி நட்சத்திரம ,விஜயவருடம் ,ஆடி மாதம்  28  சனிக்கிழமை  18.8.1833
ஆண்டு சீவசமாதி அடைந்தார்
ஆண்டுதோறும்  சித்திரா  பௌர்ணமி  அன்று திருவிழா  மிக  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சித்தருக்கு படி பூஜையும் அமாவாசை பூஜையும் பௌர்ணமி பூஜையும் மிக மிக  சிறப்பாக எல்லா   மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது