RightClick

கண்ணதாசனை ஆன்மீகவாதியாக்கிய திருப்புமுனைச் சம்பவம்!!!ஒருமுறை தி.மு.க., கம்பராமாயணம் எரிப்புப் போராட்டத்தை தமிழ்நாட்டில் ஓரிடத்தில் நடத்தியது;அங்கே கவியரசு கண்ணதாசனும் கலந்து கொண்டார்;கலந்து கொண்ட சில நிமிடங்களில் அவர் மனதில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது;எனவே,அவர் தான் கொண்டு வந்திருந்த கம்பராமாயணம் புத்தகத்தைக் கட்டியணைத்தவாறு போராட்டத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்;

நமது முன்னோர்களில் மிகச் சிறந்த படைப்பாளர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்! அவர் ராமாயணத்தை எழுதியிருக்கிறார் எனில்,அதில் ஏதோ இருக்கிறது. அது என்னவென்று பார்க்காமல் நாம் இப்படி ஒரு முட்டாள்த்தனமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்பதே அந்த உந்துதல் ஆகும்.தினமும் ஏதாவது ஒரு புத்தகம்/தினசரி செய்தித் தாள்/தரமான வலைப்பூ வாசிப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள்;அதே போன்ற சிந்தனைத் தாக்கம் கவியரசு கண்ணதாசனுக்குள்ளும் அந்த போராட்டக்களத்தில் தோன்றியது. நமது முன்னோர்களை அவமதிப்பதுதான் அரசியலா? என்ற எண்ணம்கூட அவருக்குள் ஓடியது.

வீடு திரும்பியதும்,முதல் வேலையாக கவிச்சக்கரவர்த்தி கம்பர் எழுதிய அந்த கம்பராமாயணத்தை முழுவதும் வாசித்து முடித்தார்;அன்று முழுவதும் அவர் தூங்கவே இல்லை;அந்த இரவோடு அவர் தி.மு.க.வை தூக்கியெறிந்தார்.சேலம் நகரில் திராவிடக் கழகத்தினர் ஸ்ரீராமன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும்,விநாயகர் கோவில்களை உடைத்தும் நடத்திய ஊர்வலம் இந்துக்கள் மனதை நோகடித்தது;இது பற்றிய செய்திகளைக் கேட்டறிந்த நாத்திக கண்ணதாசன் மனது துடித்தார்;இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, ‘நமது மூதாதையர்கள் முட்டாள்கள் அல்லர்’ என்ற தலைப்பில் துக்ளக் பத்திரிகையில் கட்டுரை எழுதினார்.மீண்டும் அதே பத்திரிகையில் ‘ நான் ஒரு வைதீக இந்து’ என்ற கட்டுரையையும் தன்னிலை விளக்கமாக எழுதினார்.
அப்போது தினமணிக்கதிர் ஆசிரியர் ‘சாவி’ அவர்கள், “எங்கள் பத்திரிகைக்கெல்லாம் எழுத மாட்டீர்களா?” என்று கேட்டார்.
அந்தக் கணத்தில் நாத்திகம் என்ற பெயரில் தெய்வத்தமிழகத்தை பித்துக்குளி தமிழகமாக மாற்றிவருதைத் தடுக்கும் விதமாக தனது அனுபவங்களை எழுத ஆரம்பித்தார்.
அந்தத் தொடரே ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நெடுந்தொடராக வளர்ந்தது;அந்த நெடுந்தொடர் நாத்திகம் என்ற கிரகணத்தில் இருந்து ஆன்மீகத் தமிழ்நாட்டை விடுபட வைத்தது;உலகமெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு மீண்டும் ஆன்மீகச் சிந்தனைகளில் மறுமலர்ச்சியை உருவாக்கியது;
இந்த நெடுந்தொடர் பின் நாட்களில் புத்தகமாக வெளிவந்தது;ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மீண்டும் மீண்டும் அடுத்த பதிப்புகளாக வெளிவந்து ஆன்மீகப் பேரொளியை தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் பரப்பிக் கொண்டே இருக்கிறது.
மதமாற்றும் கும்பல்களின் சதிவேலைகள் இதனால் தகர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது உண்மை.
அப்பேர்ப்பட்ட கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள்:=ஜீன் 24 ஆகும்.

ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 19,வெளியீடு 22.6.12
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ