RightClick

கர்வம் என்ற தலைபாரத்திற்கு மருந்து!!
கர்வம் மனிதனை  ஆட்டிப்படைத்து வருகிறது; தலைக்கனம் என்று சொல்லப்படுவது உடல் சார்ந்த வியாதி மட்டுமல்ல,மனம் சார்ந்த வியாதியுமாகும்.சரியோ தவறோ,தேவையானதோ தேவையற்றதோ உங்களது தலையில் எண்ணற்ற எண்ணங்கள் குவிந்து கிடக்கின்றன.இந்தக் குவியலால் உங்களுக்குப் பிரச்னை தான்.உங்களது ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.


அன்பைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்குப் போதுமான ஆற்றல்,இந்த தலைக்கனத்தால் கிடைக்காமல் போய்விடுகிறது.ஆனால்,நீங்கள் உங்களது இதயத்துக்கு எப்போது முக்கியத்துவம் அளிக்கத் தொடங்குகிறீர்களோ அப்போதே தலைக்கனம் குறையத் தொடங்கிவிடுகிறது.தலையிலிருந்து இதயம் நோக்கி ஆற்றல் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.99% எண்ணங்கள் பயனற்றவை என்று மனோதத்துவ ஆய்வின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட அநாவசியமான சிந்தனைகளை நிறுத்திவிடுவதால் உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை.அவ்வாறு நிறுத்திவிட ஒரு சுலபமான வழியே ஒவ்வொருநாளும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை (அதிகபட்சம் 60 நிமிடங்கள் வரை) ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்துவருவது; அல்லது தினமும் பைரவ சஷ்டிக்கவசம் மனதுக்குள் பாடுவதன் மூலமாக நமது எண்ணச்சுழல்களும் நின்றுவிடும்;கடுமையான கர்மவினைகளும் கரையத் துவங்கும்;ஒரு வருடம் தொடர்ந்து இவ்வாறு ஜபித்து வருவதன் மூலமாக சில தெய்வீக சக்திகள் நம்மைத் தேடி வரும்;அதன் மூலமாக இந்த ஜன்மம் முழுவதும் நமது வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்ள முடியும்.
நீங்கள் அமைதியாக இருந்தால் கூட ஏதேனும் ஒரு சிந்தனை சுழன்று கொண்டே இருக்கும்.உங்களது தலைக்குள் ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகளின் ஓசையை கேட்டிருக்கிறீர்களா? பெரும்பாலான எண்ணங்கள் உங்களது வளர்ச்சிக்கு உதவக்கூடியது அல்ல.அற்பமான சிந்தனைகள் உங்களது ஆற்றலை உறிஞ்சிக்கொள்கின்றன.மனோதத்துவ விஞ்ஞானிகளும்,உடலியல் விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து இது குறித்து ஆய்வு நடத்தியபோது ஒரு முக்கிய விஷயம் கண்டறியப்பட்டது.


நீங்கள் ஒரு மணிநேரம் செலவிட்டு ஒரு குழியை தோண்டினால் எவ்வளவு ஆற்றல் செலவாகுமோ,அதற்குச் சமமான ஆற்றல் கால் மணிநேரம் தேவையற்றதை பற்றியெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தால் செலவாகிவிடுகிறது என்பதுதான் அந்த கண்டுபிடிப்பு!எனவே,இதிலிருந்து உடல் சார்ந்த உழைப்பைவிட தலைசார்ந்த சிந்தனையே அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கிறது.ஏறத்தாழ 4 மடங்கு ஆற்றலை இது எடுத்துக்கொள்கிறது என்பது அதிர்ச்சிகரமானதாக இருந்தாலும் அதுதான் உண்மை.


தற்போது மனிதர்களின் உடல் உழைப்பு குறைந்துவிட்டது.ஆனால்,தேவையற்றதையெல்லாம் சிந்தித்து சிந்தித்து நாம் மன உளைச்சல் அடைகிறோம்.நமது தலை நம்மை சோர்வடைய வைக்கிறது.எல்லா ஆற்றலையும் தலையே எடுத்துக் கொள்கிறது.ஆனால்,இதயம் மிகவும் மென்மையானது.அது பொறுமையாகக் காத்திருக்கிறது.இதயம் யாரையும் காயப்படுத்த விரும்புவதில்லை.மழைக்காக காத்திருக்கும் பாலைவனத்தைப் போல இதயம் பொறுமையாகக் காத்திருக்கிறது.அன்பு,இதயத்தில் விதையாகப் படிந்துள்ளது.அதன் மீது மழை பொழிந்தவுடன் அது செடியாக வளர்கிறது.அந்தச் செடி உரிய காலத்தில் பூக்களை மலர்விக்கிறது.
கர்வம் மறைந்துவிட்டால் தலை பாரமற்றுப் போய்விடுகிறது.அப்போது அன்புச்செடி தழைத்தோங்க தொங்குகிறது.தலைபாரத்தை அகற்றினால் தான் அன்பு மலர் பூக்க முடியும்.அன்புவித்தின் மீது தலை பாரம் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருக்கிறது.எனவே,தலைபாரத்தை முதலில் அகற்ற வேண்டும்.

அன்பு மேகம் மழையாய் பொழிகிறது;
நெஞ்சை நனைக்கிறது;
மனவனத்தை பசுமையாக்குகிறது;

என்று கபீர் பாடியுள்ளார்.வார்த்தை மேகங்களால் எந்தப் பயனுமில்லை;மழையைத் தருகின்ற ஆற்றல் வார்த்தை மேகங்களுக்குக் கிடையாது.நீங்கள் மரங்களை ஏமாற்றமுடியாது.வார்த்தை மழை,மரத்தைக் குளிர்விக்காது;உண்மையான மழையால் தான் மரத்தைக்குளிர்விக்க முடியும்.தலை பாரத்தை நீங்கள் அகற்றியவுடன் உங்களுக்குள் அன்புமழை பொழியத் துவங்கிவிடும்.உங்கள் மீது அன்பு மேகங்கள் சுழன்றுகொண்டே இருக்கின்றன.அன்பு மேகங்கள் உங்களை ஒருபோதும் மறந்ததில்லை;ஏனெனில்,உண்மையான மனித சுபாவம் அன்பு தான்.அதுதான் ஆத்மாவின் உள்ளீடாகும்.அதை வெளியே இருந்து நீங்கள் பெற முடியாது.