RightClick

நீரின்றி அமையாது உலகு என்பதன் அர்த்தம் என்ன?

கி.பி.1990 வரையிலும் உலக வரலாற்றில் இரு பெரும் வல்லரசு நாடுகள் சர்வதேச அரசியலை இயக்கிக் கொண்டிருந்தன;இதனால்,உலக நாடுகள் ஒவ்வொன்றும் இந்த இரண்டு வல்லரசுநாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் பின்னால் நிற்கும் சூழ்நிலையில் இருந்து வந்தது;ஒன்று முதலாளித்துவத்தை தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்த அமெரிக்கா;மற்றது தொழிலாளித்துவத்தை பின்பற்றிய சோவியத் யூனியன் என்ற ரஷ்யா! நம்ம இந்தியாவோ அணிசேரா நாடுகள் என்று ஒரு அமைப்பை தோற்றுவித்து, ‘நாங்கள் நடுநிலையாளர்கள்’ என்று காட்டிக் கொண்டு நமது இந்தியாவின் தேசிய அரசியலில் ‘மூன்றாவது அணி’ போல செயல்பட்டுவந்தது.

தொழிலாளித்துவம் என்றால் என்ன?

ரஷ்யா,சீனா,க்யூபா மற்றும் சில நாடுகள் தொழிலாளித்துவம் என்ற கம்யூனிஸத்தை தமது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டுவருபவை;இங்கே அரசாங்கம் மட்டுமே முதலாளி! அனைவரும் தொழிலாளி.பெரும்பாலும் ஒரு கட்சி ஆட்சி முறையே உண்டு;தனது நாட்டிற்கு என்னென்ன தேவை என்பதை மத்திய அரசாங்கமே தீர்மானிக்கும்;ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை உறுதி;ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய ராணுவப்பயிற்சி உண்டு;குறிப்பிட்ட வருடங்கள் வரை ராணுவத்தில் ‘தேச சேவை’ ஆற்ற வேண்டும்.கம்யூனிஸம் எனப்படும் தொழிலாளித்துவம் இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் இருக்கும் அனைத்து    ஜமீன் தார்கள்,நிலப்பிரபுக்களின் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன;எல்லோருக்கும் எல்லாமே உண்டு;ஆனால்,மறைமுகமாக ஆள்வோர்கள் சர்வாதிகாரிகளாகவும்,நிழல் முதலாளித்துவத்தையும் பின்பற்றிவந்ததால் இந்த நாடுகள் காலத்துக்கேற்ப தாக்குப்பிடிக்கவில்லை;கூடவே,சோவியத் ரஷ்யாவின் ‘கொள்கை வகுப்பாளர்கள்’ குழுவுக்குள் முதலாளித்துவ உளவாளிகள் ஊடுருவினர்;உலகெங்கும் இருக்கும் சோவியத் ரஷ்யாவின் உளவாளிகள் செயல்படாமல் தடுக்கப்பட்டனர்;எந்த ஒரு நாடாக இருந்தாலும்,அந்த நாட்டின் முதுகெலும்பாக இருப்பதும்,ஆணிவேராகச் செயல்படுவதும் உளவுத்துறையும்,நீதித்துறையுமே! இரண்டையும் முதலாளித்துவ நாடுகள் வசப்படுத்திவிட்டன;சோவியத் யூனியன் 22 நாடுகளாகச் சிதைந்து போனது;

முதலாளித்துவம் என்றால் என்ன? 

உங்களுக்கு ஒரு பிஸினஸ் ஐடியா தெரிந்தால்,அதைச் செயல்படுத்தி ஒரு நிறுவனமாக்கி அதன் மூலமாக ஒருசில வருடங்களில் நீங்கள் கோடீஸ்வரனாகிவிடமுடியும்.அதற்குரிய வர்த்தக சேவை அமைப்புகள் முதலாளித்துவ நாட்டில் உண்டு.இதற்கு வென்ச்சர் கேப்பிடல் என்று பெயர்.

முதலாளித்துவ நாட்டின் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவருமே சொந்த வாழ்க்கையில் பலகோடிகளுக்கு அதிபதிகளாகவும்,ஏதாவது ஒரு தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர்களாகவும் இருந்துவருகிறார்கள்.ஒரு தொழிலதிபர்,ஒரு நாட்டின் அமைச்சராக வந்தால் தனது தொழிலுக்கு ‘இடைஞ்சல்’ வராமல் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்;அதாவது,அவர் அமைச்சரானதும்,தான் செய்யும் தொழிலை முன்னேறவிடாமல்,விரிவுபடுத்த விடாமல் செய்யும் தனது நாட்டின் சட்ட திட்டங்களை நீக்கிவிடப் பார்ப்பார்;அல்லது தனது தொழிலுக்கு வசதியாக அதில் சட்டத்திருத்தங்களை மாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்;
அமெரிக்கா,பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜெர்மனி,இத்தாலி,கனடா போன்றவை வல்லரசு நாடுகள் ஆகும்.போனால் போகுதுனு ஆசியாவில் இருந்து ஜப்பானையும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.அவ்வாறு ஜப்பானைச் சேர்த்ததால்,ஜப்பான் அந்த ‘வல்லரசு அந்தஸ்தை’ தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

இந்த நாடுகளில் ஏழை விவசாயி என்றால் அவரிடம் 5000 ஏக்கர்கள் இருக்கும்;பணக்கார விவசாயி என்றால் அவரிடம் குறைந்தது 1,00,000 ஏக்கர்களில் விவசாயம் செய்வார்;
இந்த நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ஜனநாயத்தின் மதிப்பு என்னவென்று தெரியும்.தனது நாட்டின் அமைச்சர்கள் ஊழல் செய்து,அது மீடியாக்களில் வெளிவந்தால் அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார்;சட்டப்படி அனைத்தையும் எதிர்கொண்டு ‘தவறு செய்திருந்தால்’ தண்டனையையும் ஏற்றுக் கொள்வார்.இந்த நாடுகளில் ஜனத்தொகை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் வெகு எளிதாக ‘செய்திப் பரவல்’ டிவி,இணையம்,வானொலி,தினசரிச் செய்தித்தாள்கள் மூலமாக அனைவரையும் சென்றடைந்துவிடும்.ஜனநாயகத்தைக் காப்பதில் இந்த வல்லரசு நாடுகளில் ஒவ்வொருவருமே பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வர்.
ஆனால்,இவ்வளவு நன்மைகள் இந்த முதலாளித்துவநாடுகளில் இருந்தாலும்,இங்கே ‘குடும்பம் என்ற அமைப்பு’ சிறிதும் கிடையாது;எனவே,இங்கே இருந்து செயல்படும் பன்னாட்டுநிறுவனங்களுக்கு திறமையான ஆட்கள் வேலைக்கு கிடைக்கவில்லை;ஆசிய நாடுகளான இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்றவற்றிலிருந்தும்,பிரேசில்,தென் ஆப்ரிக்கா,இந்தோனோஷியாவில் இருந்தும் வல்லரசு நாடுகளுக்கு வேலையாட்களை எடுக்கத் துவங்கின;ஒரு கட்டத்தில் வல்லரசு நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகமான ஆசியர்களை இங்கே வேலைக்கு அழைத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தின;ஏனெனில்,இப்படித்தான் தாம் வியாபாரம் செய்யச் சென்று காலனியாதிக்க நாடுகளை பிடிக்க முடிந்தது;அதுவே உல்டாவானால் எப்படி வல்லரசுகளால் ஏற்றுக் கொள்ள முடியும்?

எனவே,பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா,பாகிஸ்தான்,பிரேசில்,தென் ஆப்ரிக்கா,இந்தோனோஷியாவில் கிளைகள் திறக்கத் துவங்கின.இதன் மூலம் இந்தியாவில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் சாதாரண ஊழியர்கள் என்ற நிலைக்கு உள்ளானார்கள்;பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிடவும்,ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆகிடவும் அரசாங்கமே சட்டதிட்டங்களைத் திருத்தத் துவங்கியது.இந்தத் திருத்தங்கள் 1995 முதல் உலகமயமாக்கல் என்ற பெயரில் துவங்கியது.

இந்த சூழலில் ஐ.நா.சபையில் தண்ணீர் ஒவ்வொரு நாட்டு மக்களின் சொத்து என்று இருந்த ஷரத்தை மாற்றி,தண்ணீர் என்பது வர்த்தகப் பொருள் என்று மாற்றிவிட்டன பன்னாட்டு வர்த்தகபூதங்கள்.
இதன்மூலம் குடிதண்ணீர் ‘சுத்திகரிக்கப்பட்டு’ பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.நிஜத்தில் அவையெல்லாம் மினரல் வாட்டர்தான் என்று  டிவி விளம்பரங்கள் மூலம் நம்மிடம் நம்பிக்கையை விதைத்தன.ஆனால்,உண்மை எப்போதும் மாறாது.மினரல் வாட்டர் வரும் முன்பே,நாமெல்லாம் ஆரோக்கியமாகவே 20,00,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.கேவலம் பணம் சம்பாதிப்பதற்காக பன்னாட்டு வர்த்தக பூதங்கள் இவ்வாறு பொய்யை நம்மிடையே பரப்பி நமது உழைப்பை உறிஞ்ச ஆரம்பித்தன.

நமது ஊர் நகராட்சி/மாநகராட்சி நமக்கு வழங்கும் குடிநீரே அதிகபட்சமாக மூன்று நாட்களில் கெட்டுப் போய்விடும்;தண்ணீரில் நல்ல உயிர்களும்,கெட்ட உயிர்களும் இருக்கத்தான் செய்யும்.நமது உடலோ அதை சரியான விதத்தில் வடிகட்டி நம்மையும்,நமது ஆரோக்கியத்தையும் பாதுகாத்து வருகிறது.மினரல் வாட்டர் எனப்படும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரில் கிரிமிகளை( நல்ல மற்றும் தீய) கொன்று அவைகளை நீக்கிவிட்டே விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.ஆக,நாம் கடைகளில் விலைக்கு வாங்கும் தண்ணீரானது செத்த தண்ணீர் ஆகும்.செத்த தண்ணீரானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.அருந்தினாலும் உடலுக்கு நன்மை தராது.
பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை அப்படியே காப்பியடித்து உள்ளூரிலும் குப்பனும்,சுப்பனும் பாகெட்டுகள்,பாட்டில்களில் தண்ணீரை அடைத்துவிற்க அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையான தண்ணீர் குறையத் துவங்கிவிட்டது.தமிழ்நாட்டில் பல ஊர்களில் ஐநூறு முதல் ஆயிரம் அடிக்கும் கீழே நிலத்தடி நீர் போய்விட்டது.சென்னை,கோவை,திருச்சி,மதுரை போன்ற நகரங்களில் காலையில் குளிக்கவே நண்பர்களின் அறைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகிவிட்டது.இதுபற்றி நமது தலைவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை;இந்த துர்பாக்கியமான சூழ்நிலையை உருவாக்கிடக் காரணம் WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் என்பதை இன்னும் நம்மை ஆள்பவர்கள் உணரவில்லை;

இது தொடர்பாக ஜீனியர் விகடனில் தற்போது ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது.பாரதி தம்பி என்பவர் தவிக்குதே. . . தவிக்குதே என்ற பெயரில் தண்ணீர்ப்பஞ்சம் எப்படி உண்டாகியிருக்கிறது? இதன் எதிர்கால நிலை என்ன? இதை நமது அரசியல்வாதிகள் எப்படி எதிர்கொள்கின்றனர்? என்பதை விளக்கமாக விவரித்திருக்கிறார்.ஆளும் கட்சி,எதிர்க்கட்சி,குட்டிக் கட்சி,கூட்டணிக்கட்சி என்பதையெல்லாம் கடந்து நமது நாட்டு மக்கள் என்ற எண்ணத்துடன் நமது அரசியல் தலைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தண்ணீர்ப்பிரச்னையைத் தீர்க்க முடியும்.ஆனால்,அப்படியா நமது தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்!!!?

தண்ணீர்ப்பஞ்சம் தொடர்பாக ஒருவர் இயக்கி வெளியிட்டிருக்கும் குறும்படத்தைஇங்கே பார்க்கவும்.இதன் மூலம் நாம் ஒவ்வொருவருமே தினமும் ஒரு மரக்கன்றை நடவேண்டும்;இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும்;இந்த குறும்படம் தண்ணீர்ப் பஞ்சம் பற்றிய விழிப்புணர்வை நம்மிடையே உருவாக்குகிறது.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ