RightClick

மார்க்ஸின் சிந்தனை சுயமானது அல்ல!!! முக்கிய அறிவிப்பு:இந்தக் கட்டுரையானது எந்த ஒரு தினசரியிலும்,வார மற்றும் மாத இதழிலும் வெளிவராத கட்டுரை ஆகும்.இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உண்மை! பட்டப்படிப்பு முடிப்பவர்கள் தமது நேர்முகத்தேர்வில் குழு விவாதத்திற்கும்(Group Discussion),பொருளாதாரம் பற்றிய அடிப்படையை அறிந்தவர்களுக்கும்,நமது நாட்டின் பொருளாதாரம் ஏன் தள்ளாடுகிறது? என்பதை அறிய விரும்புபவர்களுக்கு மட்டுமே புரியும்.


பொருளாதாரம் என்பதே  என்னவென்று தெரியாத காலத்தில்,கிறிஸ்துவ மதத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வே கம்யூனிஸத்தின் தோற்றம் என்பது பலபேருக்குத் தெரியாது. 1532 இல் மேற்கு பெயிலிபா என்ற இடத்தில் அனபாப்டிஸ்ட் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தனர்.கிறிஸ்துவர்கள் ஒழுக்கம் கெட்டு இருப்பதனால்தான் இயேசு திரும்ப வர மறுக்கிறார்.அவர் திரும்ப வந்தப் பின்னர்தான் உலகில் தூய நிலை உருவாகும்.அவ்வாறான நிலை ஏற்படாததற்கு கிறிஸ்துவத்தில் புனிதம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள்.


ஆட்சியைப் பிடித்தவுடன் அவர்கள் பைபிளைத் தவிர பிற நூல்களை எல்லாம் எடுத்துவிட்டார்கள்.தனிப்பட்ட சொத்துரிமையைத் தடை செய்தார்கள்.பெண்கள் எல்லோரும் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும் என்றார்கள்.கார்ல் மார்க்ஸ்,லெனின்,ஸ்டாலின்,மாசேதுங் ஆகியோர் இந்த அனபாப்டிஸ்ட் புரட்சியாளர்களின் கொள்கைகளை கருத்துக்களை மார்க்ஸிசமாக பின்னாளில் உருவாக்கினர்.


ஆசையை ஒழிக்க வேண்டும் என்பது கிறிஸ்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.அந்தத் தத்துவத்தின் வெளிப்பாடுதான் கார்ல்மார்க்ஸின் சிந்தனை.முதலாளித்துவம் என்பது மனித வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டட்ம் என்கிறார் மார்க்ஸ்.பின்னாளில் முதலாளித்துவத்தில் லாபம் சம்பாதிக்கும் போக்கினால் அது அழிந்து உலகில் உழைப்பாளர்களின் புரட்சி ஏற்படும் என்றும் கூறினார்.


பெரும்பாலோர்,மார்க்ஸ் இவற்றையெல்லாம் சுயமாக சிந்தித்தார் என நினைக்கின்றனர்.ஆனால்,அவருக்கு முன் இருந்த ஹெகல் என்பவரது சிந்தனை மூலம் தான் மார்க்ஸிசம் உருவாகியது.
இதற்கெல்லாம் காரணம்,கம்யூனிசமும் முதலாளித்துவமும் உருவாகக் காரணமாக இருந்த ஆன்மீகம் இல்லாத கலாச்சாரம் அங்கு நிலவியதே.மதம் என்பது Church என்ற முறையில்,விஸ்வரூபம் எடுத்து மக்களை அடிமைப்படுத்தியதால் அதனை எதிர்த்து போராடுவதற்கு தனி நபர் சுதந்திரத்திற்கு ஒரு மகத்துவம் ஏற்பட்டது.அதன் பின்னர் ஜனநாயக உலகம் மற்றும் பிற உலகங்களுக்கான போராட்டங்கள் எல்லாம் ஏற்பட்டன.இவற்றை உலகத்திற்கான முன்னோடியாக நாம் நினைக்கிறோம்.


ஆனால்,அமெரிக்காவில் தனி நபர் சுதந்திரத்தினால் சமுதாயமும் குடும்பங்களும் அழிக்கப்பட்டன.51% குடும்பங்களில் அம்மா+அப்பா சேர்ந்து வாழ்வதில்லை;இதனால் அரசாங்கம் குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் அங்கு பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.


பொறுப்புள்ள குடும்பங்களில் தான் சேமிப்பு இருக்க முடியும்.அதனால்,சேமிப்பு என்பது இல்லாமலேயே ஒரு நாடு இயங்க முடியும் என்று கூற ஆரம்பித்தனர்.சேமிப்பே இல்லாத காரணத்தால் என்ன நடக்கிறது?
அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர்களையும்,ஐரோப்பா 2 டிரில்லியன் ஈரோக்களையும்,ஜப்பான் 1.4 டிரில்லியன் யூரோக்களையும் அச்சடித்துள்ளனர்.அந்நாடுகளில் உழைத்துச் சம்பாதித்து சேமித்த சொத்துக்களாக இல்லாமல்,வெறும் அச்சடித்த கரன்சிகளாக அக்கரன்சிகள் வெளிநாடுகளுக்கு முதலீடுகளாகச் செல்கின்றன.(விரைவில் இத்துடன் கணினியில் தோற்றுவிக்கப்படும் பிட் காயின்களும் சேர இருக்கின்றன)
சென்ற வாரம் புதுடெல்லியிருந்து வரும் பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை வந்திருந்தது. நம் நாட்டில் விவாகரத்து அதிகமாக,அதிகமாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.அமெரிக்காவிலும் இப்படித்தான் விவாகரத்துக்களினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
நம் நாட்டு வரலாறு,ஆன்மிகம்,கலாச்சாரம்,குடும்பப் பாங்கு இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சரிந்து கொண்டிருக்கும் நாடுகளை உதாரணம் காட்டி வக்கிரக்கருத்துக்களினால் இவர்கள் எந்த அளவிற்கு ஞான சூன்யமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நமது நாட்டில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு காரணம் குடும்பச் சேமிப்பே! நமது தேவையில் 1.2% அளவிற்குத் தான் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது.


நம் நாட்டுப் பொருளாதாரம் அரசமரத்தடி பொருளாதாரம் என்பது தத்துவார்த்தமாக நூலில்(மறைந்து போன மார்க்ஸியமும்,மங்கிவரும் மார்கெட்டும்=வெளியீடு :கிழக்குப் பதிப்பகம்) குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிகழ்வு அஜ்மீர் என்ற நகரில் நடைபெற்ற சம்பவம், அங்குதான் அரசமரத்தடியில் வியாபாரம் செய்ய வணிகர்கள் மறுத்துவிட்டனர்.வியாபாரத்தில் பொய் சொல்வார்கள்;அரசமரத்தடியில் பொய் சொல்லக்கூடாது;அதனால்தான் கோவில்,வீடு போன்ற இடங்களில் வியாபாரம் பேச மாட்டார்கள்;ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய வணிகம் நம்முடையது.அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு:=

2003 இல் தொழில்கள் நசித்திருந்த காலத்தில் கோவையைச் சேர்ந்த கோடீஸ்வரரான திரு.எஸ்.வி.பாலசுப்பிரமணியம் என்பவரிடம், “உங்களிடம் உள்ள பணத்தை வைத்து பல தொழிற்சாலைகளை வாங்கிப் போடலாமே?”என்று கேட்டேன்.அவர் உடனே, “சமூகத்தில் பேர் கெட்டுவிடும்” என்றார். “உங்கள் சமூகம் தொழிற்சாலைகள் இல்லை என்றால் நாயுடு சமூகத்தினரின் தொழிற்சாலைகளை வாங்கிப் போடலாமே?” என்று மீண்டும் கேட்ட போது, “இரண்டு சமூகங்களுக்கு இடையில் சச்சரவு வந்துவிடும்” என்றார் அவர்.இதே கேள்வியை வேறொரு சமூகத்தை சேர்ந்த திரு.ஜெயவர்த்தன வேலு என்பவரிடம் கேட்டேன்.அவரும் இதே பதிலைத் தான் சொன்னார். இதுதான் அரசமரத்தடி வணிகம்.சமூகத்திற்கு மரியாதை கொடுப்பது,பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, தாய் தந்தையருக்கு மரியாதை கொடுப்பது= இதுதான் நமது பண்பாட்டு,கலாச்சார,குடும்ப ஆன்மீக வழிமுறை.


இது கம்யூனிஸத்திலும் இல்லை;முதலாளித்துவத்திலும் இல்லை;ஆனால், இந்நடைமுறை நம் நாட்டில் இருக்கிறது.எல்லாவிதமான மதம்,சாதியைச் சார்ந்தவர்களாலும் பின்பற்றப்படுகிறது.இதை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.


வெளிநாடுகளின் பழக்க வழக்கங்களும் கலாச்சாரம் நம் நாட்டு பழக்க வழக்கங்கள்,கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை உணர்ந்து நமக்குப் பொருத்தமான வழிமுறைகளை கடைபிடிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்;அத்தகைய சிந்தனை உடையவர்களையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு பேசியவர் ஆடிட்டர் குருமூர்த்தி.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 23,24,வெளியீடு ஜீலை 2013.