RightClick

நமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்!!!தினசரி வாழ்க்கை இந்த கலியுகத்தில் நம் ஒவ்வொருவருக்குமே நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது.மந்திரத்தில் மாங்காயை வரவழைக்க முடியாது;ஆனால்,மனத்திறம் என்ற மந்திரத்தால் மாமரத்தையே வளர வைக்கமுடியும்;அந்த மாமரத்தில் ஏராளமான மாம்பழங்களை காய்க்க வைத்து,அவைகளை நாமே பறித்து சாப்பிட முடியும்.
எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால்,அதற்குப் பெயர் உபாசனை என்று பெயர்.உபாசனையை முழுமையாக நிறைவேற்றினால்,நாம் விடாமல் வழிபடும் அந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்;அந்த தெய்வத்தை நேரில் சந்திக்கும் பாக்கியமும் கிடைக்கும்;நமது ஒட்டுமொத்த கர்மவினைகளும் அடியோடு தகர்ந்துவிடும்;உபாசனை செய்வதற்கு நிறைய பூர்வபுண்ணியம் வேண்டும்;கோடியில் ஒரு மனிதருக்கே இப்படிப்பட்ட பூர்வபுண்ணியம் இருக்கும்.அந்த கோடியில் ஒருவருக்கே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.

உபாசனை செய்வதற்கு மூன்று விஷயங்கள் கைகொடுக்கும்;ஒன்று: மந்திரம் இரண்டு:யந்திரம் மூன்று: தந்திரம்
மந்திரம் என்றால்,ஒரு சொல்லை அல்லது சில வரிகளை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லுதல்;அப்படி சொல்வதால் அது நமது உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் உருவேறுகிறது; “உரு ஏறத் திரு ஏறும்” என்பது திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் சித்தரின் வாக்கு!!!

எந்த ஒரு மந்திரத்தையும் உருவேற்றத் துவங்கிட ஒரு குறிப்பிட்ட காலம் தேவை;அதன்பிறகு ஒவ்வொருநாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விடாமல் உருவேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்;ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் அமாவாசை,பவுர்ணமி,கிரகணம்,ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் குறிப்பிட்ட நாளில் வரும் அமிர்த நேரத்தில் ஜபித்து வர வேண்டும்.இப்படி விடாப்பிடியாக சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஜபித்துவந்தால்,அந்த மந்திரமானது நமது உடலில் இருக்கும் 72,600 நாடிகளிலும்,21,400 சுவாசங்களிலும்,6000 சூட்சும மையங்களிலும் ஒருமுறை பதிய வேண்டும்;அதற்காகத் தான் ஒரு லட்சம் தடவை  மந்திரத்தை ஜபிக்கச் சொல்லி வலியுறுத்துகிறோம்;
மஞ்சள் துண்டின் மீது(வசதியிருந்தால் மஞ்சள் பட்டுத்துண்டு) அமர்ந்து ஜபிக்கும்போது மந்திரத்தின் சக்தி அந்த மஞ்சள் துண்டிலும் பதிவாகிக்கொண்டு வரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்தவாறு ஜபித்துவந்தால்,நாம் ஜபித்துவருவதற்கான பலன் வெகு விரைவில் நம்மை வந்து சேரும்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சம் வைத்து ஜபித்தால்,அந்த ருத்ராட்சங்களிலும் மந்திர சக்தி பதிவாகிவரும்;தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும்,ஒரே இடத்திலும் ஜபித்து வந்தால் அந்த இடமே மந்திர சக்தியை வசீகரிக்கும் புள்ளியாக மாறிவிடும்.இத்துடன் புருவ அஞ்சனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜபித்தால்,நாம் இந்த கலியுகத்தில் எந்த ஒரு எதிர்மறை சக்தியாலும் பாதிக்கப்பட மாட்டோம்;நமது தொழில் அல்லது வேலை சார்ந்த குழப்பங்களும் நம்மை ஒருபோதும் அண்டாது;நமது வருமான அளவு படிப்படியாக, ஆனால் உறுதியாக வளர்ந்துகொண்டே செல்லும்;நமது கடன்களை விரைவாக தீர்த்துவிடலாம்;நமது குடும்பத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிவிடலாம்;ஒரே ஒரு நிபந்தனை: இப்படி புருவ அஞ்சனத்தை நாம் பயன்படுத்தி வருவதை நமது நட்பு வட்டம்,உறவு வட்டம்,தொழில் வட்டம்,உடன் பணிபுரியும் வட்டம் இவர்களிடம் இதை பெருமையடிக்கக்கூடாது;ஏன் சிறிதுகூட காட்டிக்கொள்ளக் கூடாது;மீறிச் சொன்னால்,இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது அல்லது வீணாகிவிடுகிறது.அந்த அளவுக்கு பிறரின் பொறாமை நமது உளறல்கள் மூலமாக நமது முன்னேற்றத்துக்கு உதவும் காரியங்களை தடுத்துவிடுகிறது;
புருவஅஞ்சனத்தைப் பற்றி கடந்த ஓராண்டாக ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்:
சென்னையில் இருக்கும் அவர் எனது ஜோதிட வாடிக்கையாளர்;ஒரு வருடத்துக்கு சுமார் ஐந்து முறையாவது ஜோதிடம் பார்ப்பவர்;சிறு குடும்பம்;இரண்டு குழந்தைகள்;மூத்தவன் ஏழாம் வகுப்பு,அடுத்தவள் மூன்றாம் வகுப்பு.ஒரு சிறுதொழில் கூடம் நடத்தி வருகிறார்;சுமார் ஒன்பது பேர்கள் அவரிடம் பணிபுரிந்து வருகிறார்கள்;கடந்த ஐந்து வருடங்களில் தொழிலில் போதிய வளர்ச்சி இல்லை;வரவுக்கும் செலவுக்கும்,குடும்பத்தை நடத்துவதற்கும் போதுமான அளவுக்கு அவரது சிறுதொழில் கூடம் செயல்பட்டுவந்தது;ஜாப் ஒர்க் எடுத்துச் செய்து வந்தார்;கடந்த ஓராண்டில் அவரது தொழிலில் போட்டி அதிகமானதாலும்,ஜாப் ஒர்க் அதிகமாக கிடைக்காததாலும்,பணியாளர்களின் எண்ணிக்கை மூன்றாகி,ஒன்றாகி,தொழில் கூடத்துக்கான வாடகை பாக்கி மூன்று மாதங்களாக நீண்டுவிட்டன.ஆனால்,ஒரு வருடத்துக்கு முன்பே இதை இவரது ஜாதகப்படி கணித்து,அதை நிவர்த்தி செய்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவைத் தந்து,வழிபாடு செய்ய நேரடியாகச் சென்று சொல்லிக்கொடுத்தோம்;பிறகு,தொடர்ந்து சில மாதங்கள் இவர்கள் விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்து வருகிறார்களா? என்பதை கண்காணித்தும் வந்தோம்;ஆனால்,இவர்கள் வீட்டில் அந்த சில மாதங்களுக்குப்பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு தொடர்ந்து நடைபெறவில்லை;
இதை கவனித்து வந்த இடத்துக்கு உரிமைப்பட்ட முதலாளி, இவரிடம் “மூன்று மாத வாடகையை கொடுத்துவிட்டு,உனது தொழில் கூடத்தைத் திறந்து கொள்” என்று திட்டிவிட்டு,தொழில் கூடத்தினை பூட்டு போட்டு பூட்டிவிட்டு, இவரது சாவியை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்; இவர் சுமார் ஒரு மாதம் வரையிலும் அவரிடம் தினமும் கெஞ்சியும் அவர் மசியவில்லை;அந்த ஒரு மாதமும் அடமானம் வைத்து,குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்;(நகையைத்  தான்!)இந்த சூழ்நிலையில் எம்மிடம் வந்தார்.
அவரிடம் அசைவம் ஒரு போதும் இனி சாப்பிடக் கூடாது என்று உறுதிமொழி கேட்டேன்;அதற்கு ஒப்புக்கொண்டார்;ஏனெனில்,இந்த புருவ அஞ்சனமானது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே சிறப்பாக செயல்படும்;அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அவ்வளவாக செயல்பட வில்லை;மது பானம் அருந்துபவர்களுக்கு சிறிதும் செயல்பட வில்லை;புருவ அஞ்சனத்தை வாங்கிக்  கொண்டு சென்றார்.
பதினைந்தாம் நாளில் போன் செய்தார்;அவரது தொழில் கூடத்தினை வாடகைக்கு விட்டிருக்கும் முதலாளியானவர் இவரைத் தேடி வந்தார்: “சாவியைக் கொடுங்க;சாவியைக் கொடுங்கன்னு சொன்னியே! இந்தத் தொழிலை வைத்துதான் குடும்பம் நடத்துறேன்னு சொன்னியாப்பா? இந்த சாவி!! நீ மூணு மாதத்து வாடகையைத் தர வேண்டாம்;ஒரு மாதத்து வாடகையைக் கொடு;அது போதும்;அதுவும் உடனே தர வேண்டாம்; ஒரு  மாதம் கழிச்சு கொடு;அது போதும்.என்னால ஒரு குடும்பம் நடுத்தெருவுக்கு வர வேண்டாம்” என்று உருக்கமாகப் பேசிவிட்டு, கொஞ்சம் பணத்தையும் வட்டியில்லாமல் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.இதை அவர் சொல்லும்போதே அவரது குரலில் நன்றியுணர்ச்சி தெரிந்தது;
அவர் மேலும் சொன்னது;இதுவரை கடந்த பத்து வருடத்தில் அந்த இடத்துக்காரர் யாரிடமும் இப்படி இரக்கப்பட்டதே இல்லை;பணம்,பணம்னு பணக்கொள்கையோடுதான் இருப்பார்;அவர் போனப்பின்னரும் என்னால் இதை நம்பமுடியவில்லை;என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அவர் நமது வாசகர்!ஒரு மில்லில் ஒப்பந்தப்பணிகளுக்கு ஆட்களை திரட்டி அனுப்புவது அவரது பணி;பலமுறை நிர்வாகம் சொன்ன சம்பளத்தை,சொன்ன தேதியில் தராது;தாம் அனுப்பும் வேலையாட்களை சமாளிப்பதே இவருக்கு பெரும்பாடு ஆகிவிட்டது;தனது கமிஷன் தொகையினையும் சேர்த்து தான் அனுப்பும் பணியாளர்களுக்கு தான் சொன்ன சம்பளத்தை கொடுத்து,மாதக் கடைசியில் திண்டாடுவதும்;கடன் வாங்குவதும் இவரது சுபாவமாகிவிட்டது; மில்லில் சொன்ன சம்பளத்தை இவர்  கேட்டால் சாமர்த்தியமாக இவரை சமாளித்து வந்திருக்கின்றார்கள்;அதையும் மீறி நிர்வாகத்திடம் சண்டை போட்டால்,இவரை மிரட்டவும்,இவரது ஒப்பந்தத்தையே கேன்சல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்;இதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று வேறு வேறு மில்களுக்கு தனது ஆட்களை மாற்றி மாற்றி அனுப்பியிருக்கிறார்;சில மாதங்களில் அவர்களும் இதே போல மாறிவிட,இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்.இந்த சூழ்நிலையில் தான் இவரை புருவ அஞ்சனம் சென்றடைந்தது;
இத்தனைக்கும் இவர் தினமும் ஓரு மணி நேரம் வீதம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்துவருபவர்!!!நேர்மையாக இனிமேல் வாழவே முடியாதோ? என்ற முடிவுக்கு வந்தவுடனே புருவ நெய்யை வைத்தவாறு தினமும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்;ஜபிக்க ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து இவரது புருவத்தில் சில நொடிகள் லேசான அரிப்பு(செயல்பட ஆரம்பித்தமைக்கான அடையாளம்!!!) ஏற்பட்டிருக்கிறது.அன்று முதல் இவரது ஒப்பந்தப்பணிகளுக்கு ஆட்கள் அனுப்புவதில் இவர் என்ன விரும்புகிறாரோ,அது மட்டுமே நிகழ ஆரம்பித்திருக்கிறது;மில் நிர்வாகம் சரியான தேதியில் சம்பளம் தர ஆரம்பித்தது;இவரது பணியாட்கள் இவரை மரியாதையோடு பேசவும்,பழகவும் ஆரம்பித்தார்கள்;இவரது பேச்சுக்கு மறு பேச்சின்றி ஒத்துழைக்க ஆரம்பிக்க,இவரது வருமானம் இப்போது இவரது கடன்களை அடைக்கக் காரணமாகிவிட்டது.பொதுவாக நேர்மையை தனது குணமாக வைத்திருப்பவர்கள்,இதை நம்பாமல் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்;சகலவிதமான பிராடுத்தனமும் செய்பவர்கள் வசதியாக வாழ்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்;எமது இருபது வருட ஜோதிட வாழ்க்கை இதை எமக்கு புரிய வைத்திருக்கிறது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அந்த அம்மாவுக்கு மூன்று குழந்தைகள்;கோவில்,ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் இவரது கணவர்,போதுமான வெரிபிக்கேஷனுக்குப் பிறகு,எங்கேயும் அனுப்புவது தனது மனைவியை அனுப்புவது வழக்கம்;இந்த அம்மாவும் கடந்த ஏழு வருடங்களாக எம்மிடம் ஜோதிடம் பார்த்து அதன்படி பின்பற்றிவருபவர்;இவரது ஒரே ஒரு குறையை எம்மால் தீர்க்க இயலாமல் இருந்தது;கூட்டுக்குடும்பமான இந்த அம்மா,தனது மாமனார்,மாமியாரையும் பராமரித்து வருகிறார்;இவரது கணவருக்கு இரண்டு அண்ணன்களும்,ஒரு அக்காவும்,ஒரு தங்கையும் இருப்பதால்,அடிக்கடி பிற மகன் மற்றும் மகள் வீடுகளுக்கு இவரது மாமனாரும்,மாமியாரும் செல்வது வழக்கம்.அப்படிச் சென்றால்,இந்த அம்மாவின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்;ஏனெனில்,இவருக்கு வாய்ந்த கணவன்,மாமனார்,மாமியார் எல்லோரும் நல்லவர்கள்;சுயமரியாதையோடு இவரை நடத்தி வருபவர்;ஆனால்,இவரது மாமனாரும்,மாமியாரும் வெளியூர் போய்விட்டால்,திரும்பி வர சில மாதங்களாவது ஆகும்.அந்த சில மாதங்களில் இவரை இவரது கணவர்(தனித்திருக்கும் போது) கெட்ட வார்த்தைகளால் திட்டுவது உண்டு.இது இவருக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும்,பிறகு பழகிப்போனது;இருந்தாலும்,இவரது மாமனார்,மாமியாரிடம் இதைச் சொல்ல முடியவில்லை;சொன்னாலும் அவர்கள் இதை நம்பப்போவதில்லை;இவரது கணவரின் பிறந்த ஜாதகமும் இதை உறுதிப்படுத்தியது;
ஒவ்வொரு முறையும் இவர் ஜாதகம் பார்க்க வரும்போதும் இவரை ஆறுதல் படுத்தி அனுப்புவது எமக்கு அயர்ச்சியைத் தந்தது;இருப்பினும்,அது எமது கடமையல்லவா?இப்போது இந்த அம்மா தினமும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்து வருகிறார்.இந்த ஜபமானது,இவரது மாமனார்,மாமியாரை வெளியூர் அடிக்கடி செல்லவிடாமல் தடுத்து வைத்தது;
இந்த சூழலில் புருவ அஞ்சனத்தை வாங்கினார்;அது இவரது ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திர ஜபத்தின் ஆகர்ஷணத்தை அதிகப்படுத்தியது;அடுத்த சில நாட்களில் இந்த அம்மாவின் வாழ்க்கையில் நடக்கவிருப்பதை இவருக்கு கனவு மூலமாக உணர்த்தியது;ஆனால்,எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சக்தியை எட்டிட இவர் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதை இவரது பிறந்த ஜாதகம் உணர்த்தியது;புருவ அஞ்சனத்தைப் பயன்படுத்தத் துவங்கிய சில வாரங்களில் இவரது கணவர் இவரை திட்டுவது நின்றுபோனது;இவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;ஏதோ எம்மால் முடிந்த மக்கள் சேவையை புருவ அஞ்சனத்தின் மூலமாகவும் செய்ய முடிகிறதே! இந்த வாய்ப்பை எமக்கு அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவருக்கும்,அண்ணாமலையாருக்கும் கூகுள் நன்றிகள்!!!
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ