RightClick

சுவாசப் பயிற்சியால் உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்!!!

உங்களுக்கு சுவாசிக்கத் தெரியுமா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்.சுவாசிப்பதில் என்ன இருக்கிறது? எல்லோரும் சுவாசிக்கிறார்கள்;நானும் சுவாசிக்கிறேன் என்று சொல்வீர்கள்.அது மிகவும் தவறு.நீங்கள் அனைவரும் சுவாசிக்கப் பழகவில்லை என்றுதான் நான் சொல்லுவேன்.மூச்சுவிடும் முறைகளில் நாம் இன்னும் குழந்தைகளாகத்தான் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை.

இந்தப் பிரபஞ்சத்தில் வெற்றி பெற்ற தற்காப்புக் கலைகளில்(கராத்தே,குங்ஃபூ,நோக்கு வர்மம்,வர்மசிகிச்சை முறையான நியூரோதெரபி) மூச்சுப் பயிற்சி முறைகள் தான் முதன் முதலில் அடிப்படை விஷயமாக வைக்கப்பட்டு பின்பு தற்காப்பு கலைப் பயிற்சி முறைகளாக பயிற்றுவிக்கப்பட்டுவந்தன.
நம் உடலை சரியான வழிமுறையில் இயக்குவதற்கு நாம் முறையான மூச்சுப் பயிற்சிகளில் பழக வேண்டும் என்று சொன்னால் அனைவரும் நம்ப மறுப்பார்கள்.ஆனால்,அதுதான் உண்மையும் கூட.தான் கற்ற கல்வியின் பயன் மனிதனை மாமனிதனாக்குவதே.இப்போதுள்ள கல்வி பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதை மட்டும் தான் போதிக்கிறது.
பெரும்பான்மையான மக்கள் தங்களின் மேல் சுமத்தப்பட கல்வியறிவின்படி வாழ்வதாலேயே நாட்டின் பெருமளவு குற்றங்கள் ஏற்படுகின்றன.ஆகவே தான் கல்விமுறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.பருவவயது முதற்கொண்டு கல்லூரிப்படிப்பு வரை யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியையும் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.இப்பயிற்சி முறைகளை முறையாக கற்றுவந்தாலே நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் அவர்கள் விரும்பும் கலைகளில் மிகச் சிறந்தவர்களாக சாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்;ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்கும் திறன் உருவாகிவிடும்;தனி மனித ஒழுக்கம் ஒவ்வொருவருக்கும் உருவாகிவிடும்;யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் எந்த ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல;மனித குலம்முழுவதற்கும் சொந்தமானது;கண்டுபிடித்தவர்கள் நமது முன்னோர்கள் என்ற பெருமை மட்டுமே கொள்ளலாம்;


உலகமே தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் யோகக்கல்வியை ஏன் இதுவரை யாரும் யோகா உருவான நமது நாட்டில் ப்ராக்டிகல் கல்வியாக கொண்டு வரவில்லை;கொண்டு வர எடுக்கும் முயற்சிகளை அந்நிய சக்திகள் தனது மாயக்கரங்களால் தடுத்து வருகின்றன என்பதே உண்மை!!!ஆனால்,அதே அந்நிய சக்திகள் தனது நாட்டில் அதை பரப்பிக்கொண்டும் இருக்கின்றன;தமிழ்நாட்டில் யோகாவை ஒரு பட்டப்படிப்பாக ஒரே ஒரு கல்லூரி/தனியார் பல்கலைக்கழகத்தில் கூட வைக்க வில்லை.ஆனால்,யோகக்கலையின் பிதாமகர் பதஞ்சலி பிறந்ததும்,வாழ்ந்ததும்,போதித்ததும் நமது தமிழ்நாட்டில்தான்!!!


இன்னொரு நம்ப முடியாத உண்மையை உங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறோம்.உலக மக்களாகிய,சித்தர்களின் வழித்தோன்றல்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் தினசரி முறையான மூச்சுப்பயிற்சி+யோகக்கலையைப் பின்பற்றினாலே வானில் நம்மைப் பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க முடியும்;வலுப்படுத்த முடியும்;கி.பி.2007 ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது;நாம் ஒரு நாளுக்கு அரை மணி நேரம் வீதம் ஒரு வருடம் மட்டும் இந்த பயிற்சியைப் பின்பற்றினால் அந்த ஓட்டையை அடைக்க முடியும்.அப்பேர்ப்பட்ட ஆத்மசக்தி நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது;வீடு தோறும் அக்னிஹோத்ரம் செய்து வந்தாலே நமது காற்று மண்டலத்தை சீரழிக்கும் அசுத்த காற்றுக்களை சுத்தம் மிக்கதாக மாற்றிவிட முடியும்.

முயலுவோமா?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ